Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர் ,தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள் போர் ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் இடம்பெற்று வருகின்ற தலைவர் பிரபாகரன் அவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற
விளக்கேற்ற நிகழ்வுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் இறந்துவிட்டார் என தெரிவித்து இலங்கை அனுரா அரசின் ஏற்பாட்டில் இவ்வாறான சித்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலைவர் இறந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டும்படி கேட்ட பொழுது அதை காண்பிக்க மறுத்த இந்த கூட்டங்கள் தற்பொழுது இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது .
இதற்கு எதிராக தற்பொழுது சர்வதேச ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.
அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஸ்விஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு முன்பாக கூடிய தமிழர்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அங்கு பெரும் முறுகல் நிலை அடைந்துள்ளதால் போலீசார் மேலதிகமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று ப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த
விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05-08-2025) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை,
அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில்
அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்கும்.
இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் நாளை (02) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட புலின ரணசிங்க,
“முட்டை ஓடு என்பது முழுமையாக மூடப்பட்ட ஒன்றல்ல. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது,
மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே செல்லும்.
முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.
இதன் பொருள் முட்டைகளை சமைக்கும்போது கழுவ வேண்டும் என்பதல்ல.
கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை என்று நினைக்கிறேன். முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி
மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன.
உலகில் சாதாரணமாக முட்டைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை இயந்திரங்களின் ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அவைகள் கழுவி சுத்தப்படுத்தப்படுவதில்லை” என்றார்.
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி
முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளது.
கடற்படை, பொலிஸார்
கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு
ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது ,பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய
பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள்
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது
தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும்
தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்
கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்
கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,
கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும்.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாக உள்ளே நுழைந்து, குறுக்கு வீதியைக் கடந்து யட்டிநுவர வீதிக்குச் சென்று, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் தேவாலயத்திற்கு அருகில் இடதுபுறம் திரும்பி, திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்லலாம்.
கட்டுகஸ்தொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹய்யாவ நோக்கிச் செல்லலாம்.
தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்திக்குச் சென்று எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள
போகம்பரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களும் இடதுபுறமாகவும், கண்டி நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.
அதேபோல ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி வழியாகவும் கண்டி நகரத்திற்குள் நுழையலாம்.
நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்களானது கடிகார கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாகச் சென்று, குயின்
ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜோய் படகு சேவையைக் கடந்து, சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்லலாம்.
மேலும், போகம்பர சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வழியாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர நோக்கிச் செல்லலாம்.
பள்ளிவாசல் வீதி இரு பக்கங்களுக்கும் பயணிக்கும் வகையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் கண்டியிருந்து கொழும்பு நோக்கி வெளியேறும் வாகனங்கள் பழைய பேராதனை வீதி மற்றும் வில்லியம் கோபல்லவ மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.
கண்டி எசல பெரஹெர கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை வீதி ஊர்வலம் இடம்பெறும்.
இதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள்
மற்றும் மக்களைச் சரிபார்த்தல், சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து ,கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை
பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை
பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை ,பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை அமைக்கப் போவதாக ஆளும் அனுர அரசாங்கம் அடித்து விட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை தேர்தலில்
வடக்கு மாகாண சபை தேர்தலில் தாம் வடக்கு மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்கின்ற நோக்கில் இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழுகிற தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தலைவர் பிரபாகரனுக்கு அவரது
உருவச்சிலை அமைக்கப்பட உள்ளதாக அனுரா அரசு இப்படி அடித்து விடுகிறது.
இந்த அவசர அவசரமான செய்தி பகிர்வு தமிழர்களின் வாக்குகளை கொள்ளை அடிப்பதற்கான தந்திரோபாய நிகழ்வின் ஒன்றாக இதனை காண முடிகிறது.
தமிழ் மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம்
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் என்ற போர்வையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து
வைக்கப்பட்டு மிரட்டப்பட்டு வருகிற இவ்வாறான காலப்பகுதியில் இப்பொழுது எவ்விதமான புது கதையை கவிதையாக பாடியுள்ளது அனுரா அரசு.
ஆகவே ஆளுகிற அரசின் இந்த தந்துருபாய உளவியல் சுற்றுமத்து நடவடிக்கையில் தமிழர்கள் சிக்கிக் கொள்ளாது தமது தமிழ் தேசிய
மண்ணுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒருவர் கைது துப்பாக்கியுடன்
ஒருவர் கைது துப்பாக்கியுடன்
ஒருவர் கைது துப்பாக்கியுடன் ,கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரடியனாறு பொலிஸ் அதிகாரி
கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) இரவு முன்னெடுத்த விசேட
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் ,பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம்
ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,
மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில்
பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அப்போது
சிறைக் கதவு கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு
சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும்,
சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ,இந்தாண்டு நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரையான காலப்பகுதியில் 1,341,953 சுற்றுலாப் பயணிகள்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதோடு, அதன் எண்ணிக்கை 274,919 ஆகும்.
பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா
இதற்கு மேலதிகமாக பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த
சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை வழங்கிய தகவல்களுக்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தின் 27 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதோடு, ஜூலை 26 ஆம் திகதியில் மாத்திரம் 7,579 பேர் வருகை தந்துள்ளனர்.
குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு
குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு
குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு ,கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகைதந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் இன்று (31) காலை கண்டி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி கதிர்காம தேவாலயத்தில்
குறித்த நபர் கண்டி கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் பெரஹெர நிகழ்வில் பங்கேற்க அரநாயக்க பகுதியில் இருந்து வந்திருந்தார்.
அவர் யானை பாகன் ஒருவரின் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 28 வயதான அச்சலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்டி தலைமையக பொலிஸார் விசாரணை
இந்த விவகாரம் குறித்து கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதைசெய்யுங்க நாடு முன்னேறும் சஜித்
இதைசெய்யுங்க நாடு முன்னேறும் சஜித்
இதைசெய்யுங்க நாடு முன்னேறும் சஜித் ,நாளாந்தம் மனித – காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம் காட்டு யானை வளங்களும் அழிக்கப்படுகின்றன.
எனவே, உடனடியாக அரசாங்கம் செயல்படுத்தப்பட வேண்டிய பத்து அம்ச வேலைத்திட்டத்தை கீழ்வருமாறு முன்மொழிகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவையாவன,
- முறையானதொரு, விஞ்ஞான பூர்வமானதொரு துல்லியமான காட்டு யானைகள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்துதல்.
- மனித-யானை மோதலைக் குறைப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய செயல் வேலைத்திட்டத்தை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருதல்.
- இந்த வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வேண்டி, ஜனாதிபதியின் தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை தாபித்து, பல்வேறு நிறுவனங்கள், அமைச்சுக்களை ஒருங்கிணைத்து 2020
- செயல் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லல்.
- யானைகளைப் பாதுகாப்பதற்கு விசேட படையணியைத் தாபித்தல்.
நாட்டில் யானைகளின் எண்ணிக்கை
இலங்கை நாட்டில் யானைகளின் எண்ணிக்கையில் 6-7% வரையே தந்தங்களைக் கொண்ட யானைகள் காணப்படுகின்றன.
கென்யாவில் அஹமட் என்ற பெரிய தந்தம் கொண்ட யானையைப் பாதுகாக்க விசேட படையணியொன்று உருவாக்கப்பட்டது போல, நமது நாட்டிலும்
தந்தங்களைக் கொண்ட யானைகளைப் பாதுகாப்பதற்கு விசேட படையணியை தாபித்தல்.
- யானை-மனித மோதலைக் குறைப்பதற்கான முயற்சிகள் தரவுகளை மையமாகக் கொண்டமைதல்.
நமது நாட்டினது பூமி பரப்பில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் தொடர்பான கணக்கெடுப்பின்படி, 5879 யானைகள் காணப்படுகின்றன.
மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் யானை-மனித மோதல் காரணமாகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 131 பிரதேச செயலகங்களில் இந்த மோதல்
காணப்படுகின்றன. 30% யானைகளே சரணாலயங்களிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. மிகுதி 70% யானைகள் மனித நடமாட்டம் கொண்டமைந்த நிலப்பரப்பிலே காணப்படுகின்றன. 30%
யானைகள் காணப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 18% ஆகும். இந்தத் தரவுகளை அடையாளம் கண்டு, வினைதிறனான நடைமுறை ரீதியான வேலைத்திட்டத்தை வகுத்தல்.
- யானை-மனித மோதல் காரணமாக கணிசமான உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் ஏற்படுவதால், முறையான காப்பீடு மற்றும் இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.
- சில வருடங்களுக்கு முன்பு முன்மொழிந்த Project Elephant, Project Leopard, Project Whale போன்ற பல தேசிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- பசுமையை மையமாகக் கொண்ட மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பை மையமாகக் கொண்ட உதவிகளை (நன்கொடை) பெற முடியும் என்பதால், இவற்றின் மீது கவனம் செலுத்தலாம்.
ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விபத்து
ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விபத்துகளால் யானைகள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுப்பதற்கு விசேட தொழிநுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்திட்டங்களை நமது நாட்டிலும் முன்னெடுப்பதற்கு முடியும்.
இதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
காட்டு யானைகள் நோய்வாய்ப்படும்போது சிகிச்சையளித்து அவற்றைப் பராமரிக்க நடமாடும் வைத்தியசாலைத் திட்டத்தை ஆரம்பிக்கலாம்.
இந்தியாவில் அம்பானி அவர்கள் முன்னெடுத்து வரும் திட்டத்தைப் போன்றதொரு திட்டத்தை சர்வதேச உதவியுடன் இங்கும் முன்னெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
09.வனஜீவராசிகள் துறையில் காணப்பட்டு வரும் மனித மற்றும் பௌதீக வளங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல்.
வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களுக்கு உயர் மட்ட பயிற்சிகளை வழங்கி, வனப் பாதுகாப்புத் திட்டத்தை மேல்நிலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் தேசிய மட்டத்தில் அமைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல்.
- சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு குறித்த அறிவைப் பெற்றுத் தரும் நவீன தரத்திலான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுதல்.
ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட பாதுகாப்புத் திட்டங்கள் வாயிலாக சுற்றுலாத் துறையையும் மேம்படுத்துதல்.
மேற்குறிப்பிட்ட விடயங்களின் மீது கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தேர்தல்
பிரச்சாரத்தின் போது வழங்கிய சுற்றுச்சூழல் சார் வாக்குறுதிகளுக்கு மாறாக அரசாங்கம் இன்று நடந்து வருகிறது.
பயிர் சேதம், உயிர் இழப்பு, சொத்து சேதம் மற்றும் யானைகளின் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் துப்பாக்கிகளை விநியோகிப்பது இதற்கு தீர்வாக அமையாது. இவை அனைத்தையும்
பாதுகாக்கக்கூடிய தீர்வொன்றை நோக்கி நாம் நகர வேண்டும். சமூகம் தலைமையிலான, சமூகத்தை மையமாகக் கொண்ட, சமூக பங்கேற்புமனான
திட்டமொன்றின் மீது அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.
யானையொன்றின் மரணம் அல்லது கொலையுடன் தொடர்புடைய சம்பவம், மனித உயிரொன்றை இழக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவ்வப்போது
பேசுபொருளாகும் ஒரு தலைப்பாக இது தொடர்ந்தும் அமையாது, முறையான வேலைத்திட்டமொன்றின் மூலம் இவற்றை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள் ,கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சட்டவிரோதமான முறை
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.
இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொஷேல் அபேகுணவர்தன கைது
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தனவின் கணவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கிய 34பேர் கைது
லஞ்சம் வாங்கிய 34பேர் கைது
லஞ்சம் வாங்கிய 34பேர் கைது ,இந்த ஆண்டின் முதல் பாதியில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் கேட்ட சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 புகார்கள் பெறப்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகள், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகள், சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து வாரியத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகவும் கூறப்பட்டது.
கூடுதலாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கடந்த காலத்தில், இலஞ்ச சம்பவங்கள் தொடர்பாக 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேலும், குறித்த காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இலஞ்சம் தொடர்பான 273 வழக்குகள் தீவு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29 வரை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 122,913 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை
25மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை
25 மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி| காரை சேனாதி 20 | தயாகரன் 05
முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் உதவி திட்டத்தின் கீழ் லண்டனை சேர்ந்த காரை சேனாதி 20 மிதிவண்டிகள் மற்றும்
|வன்னி மைந்தன் சகோதரனான தயாகரன் 05 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார் .இவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
வன்னிமைந்தன் டிக் டாக் தளம்
வன்னிமைந்தன் டிக் டாக் தளம் வழங்கிய ஒரே நேரத்திலான மிக பெரும் எண்ணிக்கை ,உதவி திட்டம் இதுவாகும் .
அள்ளி அள்ளி பெரும் உதவிகளை வழங்குவதில் காரை சேனாதி அவர்கள் முதலிடம் பிடித்து நிற்கிறார் .அதே போன்று எனது சகோதரன் அவர்களும் அவ்விதமான செயல்பாட்டில் விளங்குகிறார் .
மிக பெரும் உதவிகளை வழங்கிய காரை சேனாதி
எனவே இந்த மிக பெரும் உதவிகளை வழங்கிய காரை சேனாதி மற்றும் சகோதரன் தாயகரன் ஆகியோருக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
இந்த மிதிவண்டியை கடையில் பெற்று பாடசாலையில் வழங்கிய நண்ப்ர்களான செந்தீபன் ,மற்றும் நிபுணன் ஆகியோருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
மேலும் இந்த நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து செயலாற்றிய செயல் வீரர் முரசு மோட்டை முருகானந்த கல்லூரியின் அதிபர் பங்கய செல்வன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்
துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்
துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம் ,பாணந்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (30) காலை தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறை
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர், நேற்று (29) இரவு இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை 7:03 மணியளவில், பொலிஸ் அதிகாரி கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்தபோது, தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியைச் சேர்ந்த இவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்ஸ்அப் நிதிமோசடி பொலிஸார் எச்சரிக்கை
வட்ஸ்அப் நிதிமோசடி பொலிஸார் எச்சரிக்கை
வட்ஸ்அப் நிதிமோசடி பொலிஸார் எச்சரிக்கை ,நிதி மோசடி செய்வதற்காக வட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி மோசடி செய்பவர்
நிதி மோசடி செய்பவர்கள் WhatsApp தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும்,
இதன் மூலம் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்வதாகவும் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து WhatsApp OTP-ஐ பெற்று கணக்கைக் கட்டுப்படுத்துவதாகவும் பின்னர், அவர்கள் திருடப்பட்ட
பயனரின் தொடர்புகளுக்கு போலி செய்தி
கணக்கைப் பயன்படுத்தி பயனரின் தொடர்புகளுக்கு போலி செய்திகளை அனுப்புவதாகவும் , இது மோசடியை மேலும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் குறித்து
விழிப்புடன் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய பொலிஸார் ,
தங்கள் OTP-ஐ யாருடனும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆசனபட்டி சட்டத்தை கடுமையாக நடவடிக்கை
ஆசனபட்டி சட்டத்தை கடுமையாக நடவடிக்கை
ஆசனபட்டி சட்டத்தை கடுமையாக நடவடிக்கை ,ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்
என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டத்தை பின்பற்றாத பஸ்களின் உரிமங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஆண்டுதோறும் 2,350 பேர் விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 6,000 பேர் படுகாயமடைவதாகவும் தெரிவித்த அமைச்சர், 2025 மற்றும் 2026ஆம்
வீதி பாதுகாப்பு திட்டம்
ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
2011 முதல் அமுலில் உள்ள ஆசன பட்டி சட்டம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும், பஸ்களில் ஆசன பட்டி இருந்தும் பயணிகள்
அதனை பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சட்டத்தை மதிக்காத பஸ்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது ,சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (29) நடத்தப்பட்ட
குற்றச் செயலில் ஈடுபட்ட தலைவர்
சோதனையில், கொழும்பு ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட தலைவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சோதனையின்போது குற்றக் கும்பலின் தலைவர் வீட்டில் இருந்து தப்பியோடியதாகவும், பின்னர் சிலாபம் பஸ் நிலையம் நோக்கி முச்சக்கர
பொலிஸாரால் கைது
வண்டியில் சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






































