Tag: யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் ,உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில்
யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.
பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.
இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது.
ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும்
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும்
1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும்
அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது.
லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை,
பெரு, தென் அமெரிக்கா
யாழ்ப்பாணம், இலங்கை
மெயின், அமெரிக்கா
காடிஸ், ஸ்பெயின்
ரீயூனியன், ஆப்பிரிக்கா
போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா
கார்டஜீனா, கொலம்பியா
பின்லாந்து, ஐரோப்பா
டிப்பரரி, அயர்லாந்து
மெக்சிகோ நகரம்
கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா
பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
சார்டினியா, இத்தாலி
லிபர்டேட், சாவ் பாவ்லோ
யூட்ரெக்ட், நெதர்லாந்து
பார்படாஸ், கரீபியன்
ஜெஜு-டோ, தென் கொரியா
வடக்குத் தீவு, நியூசிலாந்து
தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா
குய் நோன், வியட்நாம்
சீம் ரீப், கம்போடியா
பூக்கெட், தாய்லாந்து
இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா
துனிசியா, ஆப்பிரிக்கா
சாலமன் தீவுகள், ஓசியானியா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.President Anuradha is coming to Jaffna.
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க
தமிழர் வடக்கு பகுதியாக விளங்கும் கலாச்சார பட்டினமாக இருக்கும் யாழ்ப்பாணம் நோக்கி இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க இன்று பயணம் ஆகிறார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழருக்கு ஏதும் செய்யவில்லை.
தவறான வழியில் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஓட்டு அரசியலுக்காக இன்று அவசர அவசரமாக இங்கு வருகிறார் .
மீன்பிடி துறைமுகப் பணி
மீன்பிடி துறைமுகப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இன்று அங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல குடி வரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ,யாழ்ப்பாணம், கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட இரு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது .Jaffna Colombo Air-conditioned Luxury Bus
யாழ், கொழும்பு போக்குவரத்து
யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரே இவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த
நிலையில், இனி அரச தரப்பாலும் சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆடம்பர பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து யாழ் டிப்போவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
பொதுநலவாய மாநாடு
இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன.
குறித்த பஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும் பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

யாழ் மாநகர சபை முதல்வர் யார்
யாழ் மாநகர சபை முதல்வர் யார்
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும்.
இம்முறை எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்
முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

35 ஆண்டுகளின் பின் யாழில் ஆரம்பித்த சேவை
35 ஆண்டுகளின் பின் யாழில் ஆரம்பித்த சேவை
35 ஆண்டுகளின் பின்னர் மீளவும் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவைகள்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை, புகையிரத நிலையத்தில் நூலகம் ஒன்றினையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும்,
தேசிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

யாழில் விபத்து ஒருவர் பலி
யாழில் விபத்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி
விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.
மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்.
இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது
எதிர்த் திசையில் வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில்
மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர் மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி போதை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

யாழில் கடத்தப்பட்ட யுவதி
யாழில் கடத்தப்பட்ட யுவதி
யாழில் கடத்தப்பட்ட யுவதி யாழில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதோடு இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.
இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும்,
இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல் ஒன்று எதிரி இணையத்தினால் கடந்த தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நிகழ்கால நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் வீரம் ,இன்று யாழ்ப்பாணம் இன்று எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது ,என்கின்ற சமூக அக்கறையுடனும் ,வீரத்தினுடைய பறை சாட்டுதலுடன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
எங்களுடைய யாழ்ப்பாணம் மன்னே, வீரமான மண், தலைவர் பிறந்த மண் ,அந்த மண்ணில் தறுதலைகளாக ,கஞ்சா ,போதை தலைவிரித்து ஆடுவதை, இந்த பாடலில், பாடல் ஆசிரியர் ராகவி லண்டனையைச் சேர்ந்தவர் குறிப்பிட்டு பாடலை அசத்தியிருக்கின்றார்.
இந்தப் பாடலுக்கான இசையை ,சிறந்த முறையில் இளங்கோ செல்லப்பாவும், மதுரை குரலோன் எங்கள் அன்பு தம்பி பாவேந்தன் அவர்களும் பாடிய அசத்தியிருக்கிறார்கள்.
பாடல் வெளியான சில நிமிடங்களில், வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதை ஒளிபரப்பப்பட்ட பொழுது ,மக்கள் மத்தியில் இருந்து ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன.
வரிகள் என்பது சடலம் ,இசை என்பது உயிர் ,ஆகவே அதை உயிரோட்டமாக கொடுத்து இருக்கிறார்கள் .பாவேந்தன் அவர்களும் இளங்கோ செல்லப்பா அவர்களும் .
புதிய பாடல் ஆசிரியர்கள் 100 பேரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் வன்னி மைந்தன் டிக் தளம் களமிறங்கியது.
அவ்வாறான அடிப்படையில் வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாகவும் ,எதிரி இணையம் என்பன இணைந்து மூன்றாவது பாடலாசிரியராக, ராகவி அவர்களை இந்த உலக மக்களிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
லண்டன் ராகவி படைத்த யாழ் மண்ணே என்ற பாடலை ,நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
கீழே இணைப்பு உள்ளது இவர் போன்று நீங்களும் பாடல்கள் எழுத விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793
புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இளங்கோ செல்லப்பா ,பாவேந்தன் அவர்கள் இணங்கி இருப்பது பாராட்டுதலுக்கு .உரியது .
நாள்தோறும் புதிய புதிய பாடல்கள் வெளியாக இருக்கின்றன .
அதைக் கேட்க சிறந்த காணொளி காட்சி அமைப்புக்களை பார்க்க மறக்காதீங்க எம் சொந்தங்களே .
பார்வையாளராக உள்ள நீங்களும் இதில் பங்காளியாக மாற இன்றே வாருங்கள்.தமிழை வளர்ப்போம் புதிய புரட்சி படைப்போம் .
எதிரிஇணையம் ,வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் புதிய பாடலாசிரியராக மூன்றாம் இடத்தையும் ,முதலாவது பெண்ணாகவும் ராகவி அவர்கள் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார் .
வாழ்த்துக்கள் ராகவி அவர்களே.மிக்க நன்றி இளங்களோ செல்லப்பா மற்றும் பாவேந்தன் ஆகியோருக்கும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி தமிழினப் படுகொலை நினைவுகூரல் உலகெங்கும் தமிழர்வாழ் பிரதேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனி ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு
இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது நம் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தமை வரலாற்றில் மறக்க முடியாது.
ஒவ்வொரு வருடமும் நினைவேந்திக்கொண்டே இருக்கின்றோம். இம்முறை கனடாவில் இனப்படுகொலை தூபி திறந்து வைக்கப்பட்டமை இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறி உள்ளது.
இனப்படுகொலை நினைவையொட்டி இவ் வாரம் முழுவதும் ஆங்காங்கே முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்படும் காட்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை யாழ்ப்பாணத்தில் தனது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தையை என்னவென சொல்வது.
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு
உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.
குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எத்தனையோ பெற்றோர் குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் இக் காலத்தில் இவ்வாறான தந்தையும் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அதிலும் யாழ்ப்பாணத்தில் என நினைக்கையில் நெஞ்சே பதறுகின்றது.
பொலிஸ் விசாரணையின்போது என்ன நடந்தது என்பதை குடும்பத்தினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
என்னதான் இருந்தாலும் அந்த 6 வயது சிறுமிக்கு ஒரு தந்தை நஞ்சை ஊட்டிவிட எப்படி மனம் வந்தது? அந்த பிள்ளைக்கு என்ன தான் தெரியும் இந்த மழலை வயதில் என பிரதேச மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

யாழ் மேயர் யார்
யாழ் மேயர் யார்
யாழ்ப்பாணத்துக்கான மேயர் யார், மேயரை எப்படி தெரிவு செய்யவேண்டும், மேயர் எப்படியானவராக இருக்க வேண்டும், மேயர் என்ன என்ன செய்ய வேண்டும்
என்ற கேள்விகளோடு யாழ்ப்பாண மேயரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் இது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது.
நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாகச் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள்.
அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
எனவே, மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.
இந்நிலையில் மூத்த போராளி மனோகர் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.
இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் குறிப்பாக மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக யாழ். மேயர் விடயம் கவனத்துக்குரியது. இதனை முன்நிபந்தனைபோன்று வைப்பது ஏற்புடையதல்ல.
சுமந்திரன் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நோகடிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுமந்திரன் தெரிவிக்கையில்,
“யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல,
யாழ். மாநகர சபையின் உறுப்பினராகப் கூடப் பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தால் வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை,
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை,
பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 1 – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 2 – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்.
அதிக எதிர்பார்ப்போடு மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் இருந்தாலும், அநேகமானவர்கள் போட்டியிட்டதால் எந்தக் கட்சியினர் யாழை கைப்பாற்றுவார்கள் என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி 135 ஆசனங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்தியது மாபெரும் வெற்றி என்பதை விட வேறெதுவும் இல்லை.
எட்டப்ப கூட்டங்களால் தேர்தல் காலங்களில் மக்களின் எண்ணக்கருக்களை திசை திருப்பி ஏனைய கட்சிகள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் வசமாக்க பொய்யுரைகளை பரப்பி வந்தனர்.
இருப்பினும், மக்கள் தமக்கான உரிமையை தம் இனத்தினைக் காப்பாற்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து வென்று காட்டியுள்ளமை பெருமைக்குரிய விடயமே.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.
மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.இதன்போது பாராளுமன்ற
உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், விளையாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்
அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்
அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்,பதமாலோஜினி நவரட்ணம் வழங்கிய சிறப்பு செவ்வி .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழுவில் போட்டியிடும் ,உடுப்பிட்டி வெற்றி வேட்பாளர் லொஜி என்றழைக்க படும் பத்மலோஜினி அவர்கள் வழங்கிய அதிரடி தேர்தல் பரப்புரை .
புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் ,புதிய அதிரடி ஆட்டத்தை காண உங்கள் ஓட்டை இவர்களுக்கு போடுங்க ,அரியணையில் ஏற்றுக .
வெற்றி வேட்பாளர் சிறப்பு செவ்விய முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள் .
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல் ,யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றை கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றினை மருத்துவர் ஊடாக கடத்தி வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு வழங்கிய ரகசிய தகவலுடன் ஆதாரங்களுடன் இவை வெளியாகியுள்ளது .
மேற்படி விடயம் விரைவில் எமது எதிரி இணையத்தின் ஊடாகவும் எமது சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உரித்து தொங்க விடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவமனைக்கு தமது குழந்தைகளை பெற்றுக் கொள்ள வந்திருந்த இந்த பெற்றோர்களுக்கு இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகளை கடத்தி விற்பனை செய்கின்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எந்த காலத்தில் எப்படி எப்பொழுது யாரால் எங்கே எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பாகவும் ,அதற்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறுபட்ட நடவடிக்கை தொடர்பாக முழுமையான ஆதாரங்களுடன் இந்த விடயம் சிக்கி இருக்கிறது.
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் பிள்ளைகளை கடத்தி விற்பது மற்றும் அவயவங்கள் உடல் உறுப்புகள் விற்பனை செய்வது, தவறான சிகிச்சை ஊடாக பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அம்பலமாகி வருகின்ற நிலையில் இப்பொழுது இந்த விடயம் சூடு பிடிக்கிறது.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குற்றம் சுமத்துவது எமது நோக்கம் இல்லை, ஆனால் மருத்துவமனை நம்பி வருகின்ற பொழுது மருத்துவர்கள்சிசுவை கடத்தி இந்த குழந்தைகள் விற்கப்படுகின்றது மிகப்பெரும் குற்றமாகும்.
ஆதலால் வரும் சில நாட்களில் அல்லது காலங்களில் மிக முக்கியமான இந்த விடயம் எடுத்துப் பேசப்படும் .
அவை உலக அரங்கின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக எடுத்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவிக்கின்றது.
சிக்கியுள்ள யாழ்ப்பாண மருத்துவமனை மாபியா குழு .பின் [ புலத்தில் மறைந்திருக்கும் அரசியல் .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்
யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்
யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம் ,யாழ்ப்பாண வைத்தியசாலை சிசு மரணம் விசாரணை செய்ய பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பெண் ஒருவர் தான் சிசுவதை பெற்றெடுத்ததாகவும் ஆனால் அந்த சிசுவின் தவறுதலான சிகிச்சை காரணமாக மரணமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சமத்தி வருகின்றனர்.
தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை ஒருவரை பிரசவித்துள்ளார்.
அதன் பொழுதே குழந்தை இறந்துள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது .அது தொடர்பாக இதுவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை எனவும் ,
அந்த சம்பவம் தொடர்பில் மீள் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது டிக் டாக் live இல் கருத்துரைத்த சிலர் இந்த விடயத்தினை தெரிவித்து இருக்கின்றனர் .
அதனை அடுத்து தற்பொழுது இந்த சிசு மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், அல்லது தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட வைத்தியசாலையில் பட்டதாரி இளம் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அது மருத்துவ தவறு காரணமாக இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது .
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சிசு படுகொலையை உரிய விசாரணை நடத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
யார் போதனை வைத்தியசாலையில் அசையாத நிலையான அதிகாரியாக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்க பட்டுள்ளார் .
இவரது தலைமையில் யாழ்ப்பாண மருத்துவமனை வந்ததன் பின்னர் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட படுகொலைகள் மருத்துவ படுகொலை இடம்பெற்றுவது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது.
அதனை அடுத்து தற்போது இந்த தொண்டமான ஆறு தாயின் உடைய குழந்தை படு கொலை செய்யப்பட்டதற்கான விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட தரப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
ஆனால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார் ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று வளமையாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகிற உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவரது இந்த வருகை எடுத்து இவரை கண்டு திரளாக திரண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
முகநூல் பக்கத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது tiktok வாயிலாகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்,.
தனக்கு எதிராக tiktok வலைத்தளத்தில் நடத்தப்படுகின்ற பரப்புரைகளை முறியடிக்க தான் பயன்படுத்தி அதன் ஊடாக மக்கள் மத்தியில் வர உள்ளதான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்த அதிரடியை காட்டிய அர்ஜுன இராமநாதன், தற்பொழுது நிலவும் டிக் டாக்கில் தான் பயணிக்க உள்ளதான இந்த விடயம் மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
15 வருட கால இடைவெளியின் பின்னர் மிகவும் நேர்மையான ஒரு மனிதராக அர்ச்சனா ராமநாதன் காணப்படுவதாகவும் ,இவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சிறந்த ஒரு விழிப்புணர்வையும் ,அல்லது சிறப்புகளையும் செய்வார் என மக்கள் கருதுகின்றனர்.
அதனால் இவருக்கு உலகளாவிய ரீதியில் மக்களது ஆதரவு பல்கிப் பெருகி வருகின்றது.
அந்த ஆதரவினை ஏற்றுக்கொள்ள முடியாத தற்பொழுது இவருக்கு எதிரான கறை பூசல்களை அவதூறு பரப்புகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர் .
ஆனாலும் அது கடந்து அவர் பயணிப்பதாக தற்பொழுது அவரை கண்ணுற்றாலே வெள்ளை வேட்டிகள் வடகிழக்கு பகுதியில் பீதியில் உள்ள தான தகவல்களும் வெளியாகி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு செல்லும் இவர் அங்கு தனது விளையாட்டு போட்டியை முடித்துக்கொண்டு சாவ கச்சேரியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் தங்குவார் எனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு சாவகச்சேரி மருத்துவமனையிலும் மக்கள் குவியல் கூறுகின்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் ,சவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே சிறை கைதிகள் தப்பி ஓடியுள்ள்ளனர் .
திருட்டு குற்ற சாட்டுக்கள் அடைப்படையில் பொலிஸாரால் கைது செய்ய பட்டு ,யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைக்க பட்டவர்களே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு சிறையில் இருந்து தப்பித்தவர்களை தேடிய போலீசார் ,மீள அவர்களை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் .
அவ்வாறு தப்பித்த கைதிகளுக்கு மேலதிக சிறை தண்டனையும் ,குற்ற பணமும் அறவிட பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
Featured
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
குறித்த வன்முறைச் சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.