Author: நலன் விரும்பி
சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது
கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,
தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,
இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்
உதாரணமாக உள்ளன .
மக்களே விழிப்பாக இருங்கள்
இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு
பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றனர்
இவ்விதம் பிரான்ஸ் விமான தங்கி கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் ,1,767 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்
இந்த கொடிய நோயால் இவ்விதம் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மீள் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து வர பட்டுள்ளனர்
இவ்வாறு மீள் வந்தவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்
உள்ளனர் ,அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கடந்த தினம் மட்டும் கிட்ட தட்ட 1,500 க்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான இராணுவ MiG-29 போர் விமானம் விபத்தில் சிக்கி சேதமாகியுள்ளது
விமானியால் மேற்கொள்ள பட்ட இந்த தரை இறக்கத்தின் பொழுது ,பேண படும் விதி முறைகளை
வன்முறை தரும் வகையில் பாவித்து விமானத்தை விமானி தரை இறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
விமானம் பலத்த சேதமடைந்துள்ளது ,விமானத்தின் சக்கரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளது , கொக்பிட் ,இயந்திர பகுதியும் சேதமடைந்துள்ளது
விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளளார் என தெரிவிக்க
பட்டுள்ளது ,எனினும் இது தொடர்பான முழுமையான விபரத்தை விமான படையினர் வெளியிட மறுத்து விட்டனர்


மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை
மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை
தமிழர் தாயகமாக விளங்கும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரச மருத்துவ மனைகளில் பணி புரியும் தாதிமார் ,மற்றும்
மருத்துவர்களை அதன் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது
மாதத்தில் பதின் ஐந்து நாட்கள் பணிபுரிந்தால் ,ஏனைய நாட்கள் பணிபுரிய தேவை இல்லை என்ற வகையில் இந்த நகர்வு நகர்த்த படுகிறது ,
இதனால் மேலதிக நோயாளர் பராமரிப்பு வேலையை புரிந்தவர்கள் வேலைக்கும் ஆப்பு அடிக்க பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க
படுகின்றனர் ,ஊரடங்கு வேளையை பயன் படுத்தி மக்கள் மருத்துவ மனைகளுக்கு வந்திட மாட்டார்கள் என்ற நிலையை மேற்கோள் காட்டி தாதிமார்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்
ஓசை படாமல் உள்ளகத்தே நடக்கும் இந்த விளையாட்டு சுகாதார அமைச்சர் ,கோட்டாவின் நேரடி கட்டு பாட்டில் ,அரச பணத்தை மீத
படுத்தி கொடுக்கும் நடவடிக்கையின் முன் மாதிரி செயலாக இது பார்க்க படுகிறது
நோயாளர்கள் உரிய முறையில் கவனிக்க படாமல் உள்ளதும் அம்பல மாகியுள்ளது ,எனினும் இதனை மருத்துவர் சத்திய மூர்த்தி
போன்றவர்கள் மறைத்து வருவதாகவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன .
உதாரணமாக இன்று வேலை செய்தால் நாளை கட்டாய விடுப்பு வழங்க படுகிறது ,அதற்கு அளிக்க படும் விளக்கம் இந்த நோயில்
இருந்து தாதிமார்களை ,மருத்துவர்களை காப்பாற்றி கொள்ளும் நடவடிக்கையாம் .
நேரடி பார்வைக்கு இது சரியான ஒன்றாக இருக்கும் ,ஆனால் உள்ளகத்தே பணத்தை மீத படுத்தி அரசை காப்பாற்றும் தந்திர நகர்வு என பாதிக்க பட்டவர்கள் கருத்துரைக்கின்றனர்
கொரனோ நோயை முதன்மை படுத்தி ,இந்த ஓசை படாத கழுத்தறுப்பு நிகழ்வு இடம்பெற்று வருகிறது ,இதனை ஊடங்கள்
வெளியிடாத வண்ணம் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

ரிச்சர்ட் பதியூதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணை
ரிச்சர்ட் பதியயூதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு
பட்டார் என்ற குற்றஞ் சாட்டில் முஸ்லீம் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட்
பதியுதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணைகள் இடம் பெற்றுள்ளன
குற்ற புலானய்வு துறையினர் இவரை அழைத்து இந்த விசாரணைகளை
முன்னெடுத்தனர் ,இவரது சகோதரர் கைது செய்ய பட நிலையில்
இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு
ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு
ஜோர்டான் நாட்டுக்கு சென்ற இலங்கை பெண் ஒருவர்பரவி வரும்
கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது ,
இதுவரை அந்த நாட்டில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 397 பேர் சிகிச்சை
பெற்று வருவதாகவும் ,அதில் இலங்கை பெண் உள்ளடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது

கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி
கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி
இலங்கையில் வைரஸ் நோயின் பரவலை தடுக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,
மக்கள் நலன் கருதி முன்னெடுக்க பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் இருக்க
,இதற்குள் கள்ள சந்தை வியாபாரம் ஊடாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க குறுக்கு மூலைகள் முயன்று வருகின்றன
மலிந்த விலையில் சாராயத்தை கொள்முதல் செய்து அதிக விலைக்கு கொட்டல் ஒன்றில் விற்பனை செய்து வந்த ஓனர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார் ,இவருக்கு இந்த கள்ள சந்தை வழியாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்
குறுக்கு வழியில் பயணிப்பவர்கள் ஒருநாள் சிக்க வேண்டி வரும் ,அன்று சம்பாதித்த அனைத்தும் இழக்க நேரிடும் என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணமாக உள்ளதை அவதானிக்க .

அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விடுக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது அத்து மீறி வெளியில் உலாவிய 1,599 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்களுக்கு ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட
பட்டுள்ளதுடன் அவர்கள் போக்குவரத்திற்கு பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
மேலும் 14 நாட்களுக்குள் குற்ற பணம் செலுத்த பட வேண்டும், தவறின்
நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார்கள் என குறிப்பிட பட்டுள்ளது

இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு
இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு
இலங்கை மத்திய வங்கியானது மக்கள் நலன் கருதி தற்பொழுது வட்டி வீதத்தை பத்து வீதமாக குறைத்துள்ளது
இதனால் பயனாளர்கள் குஷியில் உறைந்துள்ளனர் ,கொரனோ நோயின்
காரணமாக அவசர கால நிகழ்வின் ஊடாக இந்த அதிரடி குறைப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்
வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது
கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய
முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது
மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து
கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை
திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது
கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்
மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்
இலங்கை கல்பிட்டி பகுதியில் கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்து கணவன் வெட்டி கொன்றுள்ளார்
இவர்களுக்கு 17 வயதுடைய மகன் மேலும் அதன் கீழாக இருவர் உள்ளனர்
மனைவியை கொன்ற கணவன் தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் ,
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிள்ளைகள் பெற்றவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கின்றனர்
கோபம் செய்த பாவம் , ஒரு குடும்பம் சீரழிந்து போனது ,விட்டு கொடுப்பும்
சகிப்பு தன்மை இழந்து போவதால் இந்த விடயங்கள் ஏற்படுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது

முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்
முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்
இலங்கை முல்லைதீவிவு பகுதியில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் தமிழீழ
விடுதலை புலிகளினால் மறைத்து வைக்க பட்ட இரண்டு கைகுண்டுகள் ,
02 RPG எறிகணைகள் , 05 60mm mortar குண்டுகள் , and 02 81mm மோட்டார் குண்டுகள்
என்பனவற்றை விசேட இராணுவ அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது
தேர்தல் நெருங்குவதை அடுத்து புலி பீதியை சிங்களவர்கள் மத்தியில்
கிளப்பிட இப்பொழுது இராணுவம் ஆரம்பித்துள்ளதை இந்த ஆயுத மீட்பு விடயங்கள் காண்பிக்கின்றன

இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு
நேற்றைய தினம் (2020.04.15) கொரோனா வைரசு நோயாளிகளில் உறுதி செய்யப்பட்ட 5 நோயாளர்கள் பதிவானதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.
நேற்றைய தினம் பதிவான 5 நோயாளர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் ஆவதுடன் இவர்களில்
இருவர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளங் காணப்பட்டார்கள்.
மற்ற நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்
என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை
ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை
இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தற்சமயம் தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும்
யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில்,
பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அமுலுக் வரும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20
திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
இதேவேளை முக கவசத்தை அணியாமல் வருவோர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் பாதசாரிகளுக்கெதிராக கடும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்
மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்
கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற
பயணங்களை தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை
வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு
அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு
கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு
உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது
தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க
பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது
அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
உலக மக்களை கட்டி போட்டுள்ளது ஐ போனாகும் ,இதனை வாங்கிட உடல் உறுப்புக்களை கூட விற்பனை செய்கின்ற மக்களும் உள்ளனர்
இந்த கைபேசி செயல் முறை மக்களை அவ்விதம் கட்டி போட்டுள்ளது
உலக சந்தையில் கை பேசிகளில் இவரே முதல்வன்
அவ்வாறான கைபேசி ஒன்றே தற்பொழுது iPhone SE ஆக வெளியாகியுள்ளது ,இது தற்பொழுது $399 டொலருக்கு மலிவு விலையில் விற்க படுகிறது
அனைத்து மக்களும் பாவனையை பெறும் வகையில், ஆரம்ப கால ஐ போன் வடிவத்தை மாற்றி இந்த கைபேசி அமைக்க பெற்றுள்ளது என்கிறது அந்த நிறுவனம்
காணொளியில் மேலதிக விபரம் பார்த்து ரசியுங்கள் .

புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
இலங்கை புத்தளம் பகுதியில் அதி வேகமாக வீசிய புயலின்
காரணமாக அப்பாவி மக்களின் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன
தமது வீடுகளை இழந்து தற்போது மக்கள் நிர்கதியாக உள்ளனர் ,இவ்வாறு
பாத்திக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உதவிகள் வழங்க படுகின்றன .
மேலும் இந்த வீடுகளின் இழப்பை மதிப்பாய்வு செய்து அதற்குரிய பணம்
அரசினால் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வருகிறது

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்
மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்
இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்
அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது
தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன
இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

கொரனோ நோயில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி
கொரனோ நோயில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
வந்த 106 வயது மூதாட்டி ஒருவர் தற்பொழுது அந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்
1913 ம் ஆண்டு பிறந்த வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தை தன் பக்கம்
வைத்துள்ளார் ,அவ்வாறான இவர் பேர்மிங்காம் மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வந்தார் ,இவ்வாறான மூத்தவரே இந்த கொடிய நோயில்
இருந்து மீண்டு வந்துள்ளார் என்ற மகிழ்வான செய்தி வெளியாகியுள்ளது








