இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு

நேற்றைய தினம் (2020.04.15) கொரோனா வைரசு நோயாளிகளில் உறுதி செய்யப்பட்ட 5 நோயாளர்கள் பதிவானதாக சுகாதார

சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.


நேற்றைய தினம் பதிவான 5 நோயாளர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் ஆவதுடன் இவர்களில்

இருவர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளங் காணப்பட்டார்கள்.

மற்ற நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்

என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 238 பேர்
இலங்கையில் 238 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *