Author: நலன் விரும்பி
லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்
துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட
இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற
தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ
நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்
என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

கொரனோ தமிழ் நோயாளியை வீட்டை வீட்டு வெளியே துரத்திய தமிழர் -லண்டனில் பட்டினியோடு பலியான தமிழ் வாலிபர்
கொரனோ தமிழ் நோயாளியை வீட்டை வீட்டு வெளியே துரத்திய தமிழர் -லண்டனில் பட்டினியோடு பலியான தமிழ் வாலிபர்
லண்டன் கரோ பகுதியில் இந்தியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ நோயில் சிக்கி பாலியாகியுள்ளார் ,இவர் டாக்சி ஊபர் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்
பயணிகளிடம் இருந்து நோய் தொற்று கடத்த பட்டு பாதிக்க பட்ட இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் ,
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் .இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளன.
இவரது இழப்பை அடுத்து குறித்த குடும்பத்திற்கு உதவிட ஆன்லைன் மூலம் பணம் சேகரிக்க படுகிறது ,
இதுவரை பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட பவுண்டுகள் சேர்க்க பட்டுள்ளன ,
அதாவது 13 லட்சம் இந்தியா ரூபாய்கள் மக்கள் வழங்கியுள்ளனர் ,தொடர்ந்து நிதி பங்களிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது
நான்கு மற்றும் ஆறு வயதுடைய அந்த பிள்ளைகள் எதிர்கால வாழ்வை கருதி மக்கள் இந்த நல்லுதவியை புரிந்த வண்ணம் உள்ளனர்
இவருக்கு நோயானது தொற்றியதை அறிந்த வீட்டு உரிமையாளர் அவரை வற்புறுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார் ,
யாருமே இவருக்கு இறுதி வேளையில் உதவிட முன் வரவில்லை
Rajesh was forced out of his apartment in Harrow & was starving in car for a short while before admitting himself to Northwick Park Hospital on 3rd
April. A week later he passed away with no one by his side, neither family nor his friends who were unaware of his situation until the hospital staff reached out during his final hours.
காருக்குள் மூன்று தினங்கள் பட்டினியோடு உறங்கிய அவர் , பின்னர் Northwick Park Hospital மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் ,அங்கேயே பரிதாபகரமாக இறந்தும் விட்டார்
கண்ணீரில் தவிக்கும் குடும்பத்திற்க்கு இந்த உதவிகள் சற்று மன ஆறுதலை தருவிக்கும் படியாக உள்ளது என அவர்களது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்
அந்த உதவிகளை பார்வையிடவோ ,வழங்கவோ விரும்பின் இதில் அழுத்துங்கள்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு 59,419 பேர் காத்திருப்பு
வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு 59,419 பேர் காத்திருப்பு
இலங்கையில் இருந்து வெளி நாடுகளுக்கு வேலை தேடி சென்றவர்களும்
பிற அலுவல்கள் நிமிர்த்தம் சென்றவர்களும் மீள நாடு திரும்பிடும் நோக்குடன்
வெளிநாட்டு தூதராலயங்களில் தமது பெயர்களை பதிவு செய்து காத்துள்ளனர்
இவர்ளை அழைத்து வர இலங்கை விமானங்கள் செல்ல தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
அரேபிய நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்
,தமது மக்களை விரைவில் தாம் தமது நாடு நோக்கி அழைத்து வருவோம் என அரசு மீள உறுதி அளித்துள்ளமை குறிப்பிட தக்கது

வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை
வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தற்கால நிகழ்வை அடுத்து அதனை செலுத்துவது பிற் போடுதல் காலம் வழங்க பட்டுள்ளது
இதற்குரிய வரையறையுடன் இந்த கால அவகாசம் வழங்க படுகிறது
இவ்வாறு கடன் பெற்றவர்கள் கீழ் வரும் உங்கள் பகுதியை தொடர்பு கொண்டு உரையாடி பணத்தினை பிற்போடலாம் என அரசு தெரிவித்துள்ளது
கொவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக கடன் மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்
வங்கி மேற்பார்வைத் திணைக்களம்
0112 477133
0112 477134
0112 477360
0112 477659
0112 398743
0112 398746
0112 398790
0112 398815
0112 398820
0112 398824
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
0112 477500
0112 477504
0112 477258
0112 477562
0112 477573
0112 398786
0112 398806
0112 477380
0112 477340
0112 477495
0112 398774
0112 477026

கொரனோ தொற்றால் 1, 630 பேர் தனிமை படுத்தல் – இராணுவத் தளபதி
கொரனோ தொற்றால் 1, 630 பேர் தனிமை படுத்தல் – இராணுவத் தளபதி
ஆயிரத்து 630 பேர் மத்திய நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மூவாயிரத்து 727 பேர் தனிப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
நாகலகன்வீதி பிரதேசம் தனிப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுதுவெல்ல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்கள் இந்தப்
பிரதேசத்திற்கு வந்திருந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
இலங்கை வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இரவு வேளை வீடடின்
கூரையை கழற்றி திருட வீட்டுக்குள் இறங்கிய நபரை பிடித்த மக்கள்
மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு பின்னர் காவல்துறையினரிடம் அவரை பிடித்து கொடுத்தனர்
திருடன் வருகையை கண்டு கூச்சலிட்ட மக்கள் அயலவர்களும் தகவல் வழங்கி அழைத்துள்ளனர்
அவ்வளவு தான் குவிந்த மக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து வெறி அடங்கும் வரை தாக்கிய பின்னர் காவல்துறையில் ஒப்படைத்தனர்
திருடர்கள் யாக்கிரதை ,மக்கள் உசார் .

அமெரிக்காவில் 4,491 பேர் ஒரே நாளில் பலி -சடலங்கள் வைக்க இடமின்றி அவதி
அமெரிக்காவில் 35,000 பேர் பலி சடலங்கள் வைக்க இடமின்றி அவதி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 667,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களது சடலங்களை வைப்பதற்கு இடமின்றி பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது
ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர்
சடலங்களை பிணங்கள் கட்டும் பைகளில் கட்டி கொண்டேனருக்குள் போட்டு ஏற்றி சென்று அப்படியே புதைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது
எங்கும் மனித உடல்கள் ,நிரம்பி வழிகிறது ,மருத்துவ மனைகளில் தாதிமார் ,மருத்துவர்களினால் யார் யாருக்கு சிகிச்சை வழங்குவது என்ற நெருக்கடியில் உள்ளனர்
மேலும் ஐந்து ஆயிரம் பேர் எதிர்வரும் நாட்களில் பலியாகி கூடும் என எதிர் பார்க்க படுகிறது
தற்பொழுது பதின் மூவாயிரம் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,
மருந்துகள் இன்றி தவிக்கும் அமெரிக்கா சீனாவை தமது நாட்டை சுத்தம் செய்து விட்டு செல்லும் படி மிக கோபத்துடன் டிரம்ப் பேசி இருந்தார்
20 லட்சம் மக்கள் பலியாக கூடுமென எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது ,அது நடந்து விடுமோ என்ற அச்சம் இப்பொழுது மக்கள் மத்தியில் உலவுகிறது
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் வரும் நாட்களில் பலியாக கூடிய அபாயம் உள்ளது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது
அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு click here

கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா கியூபெக் மாநிலத்தின் அதி வேகா சாலையில் திடீரென
இலகு ரக விமானம் ஒன்று தரை இறங்கியது
வாகனங்கள் அவ்வாறே பயணித்து கொண்டிருக்க இந்த விமானம் இவ்விதம் அவசரமாக தரை இறங்கியது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம்
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது ,விமானியின்
சாதுரியத்தால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர்

பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்
குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது
தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கையின் கடல் பகுதி எங்கும் விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் மூலம் சிறப்பு கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்து விடுவார்கள்
என்ற அச்சமும் ,அதன் ஊடாக வைரஸ் நோயானது இலங்கைக்குள் பரப்ப பட்டு
விடும் என அஞ்சும் இலங்கை இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது
சீனாவில் இருந்தே ரசியாவுக்கு இந்த நோயானது தரைவழியாக கடத்த பட்டது
என்ற கருத்து பரவும் நிலையில் இலங்கை அரசும் அதன் முன்னோடி தடுப்பு நகர்வை மேற்கொண்டுள்ளது .

கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஊரடங்கு
பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை மக்கள் நட மாட்டங்கள் மற்றும்
திருடர்கள் கைவரிசையை தடுப்பதற்கு இராணுவத்தின் பீல்ட் பைக் படை பிரிவினர்
சுற்று காவல் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர் ,இவர்களுடன் இராணுவம் ,மற்றும் ;
போலீசாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர
இன்று பத்து மணி நேரம் ஊரடங்கு தளர்த்த பட்ட பொழுதும் அவை மீள நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது


கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் வியாழக்கிழமை
Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .
குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்
அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான
எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்
இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி
பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி
பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 753 பேர் பலியாகியுள்ளனர் .
17,920 பேர் இதுவரை சாவடைந்துள்ளனர்
இந்த நோயின் பாதிப்பில் சிக்கி இதுவரை 147,863 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்
உலகில் அமெரிக்காவே அதிகம் பாதிக்க பட்டுள்ளது ,இங்கு இதுவரை
33,903 பேர் மரணமடைந்துள்ளனர் ,667,572 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
13,369 மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது

லண்டனில் கொரனோவால் புலிகளின் முக்கிய தளபதி மரணம் – கொண்டாடிய எதிரிகள்
லண்டனில் கொரனோவால் புலிகளின் முக்கிய தளபதி மரணம் – கொண்டாடிய எதிரிகள்
ஈழத்தில் விடுதலை புலியின் முக்கிய பொறுப்பு நிலை தளபதியாக விளங்கி லண்டனில் வசித்து வரும் சேரமான் என்பவர் கொரோனா
நோயால் பாதிக்க பட்டார் ,ஆனால் தெய்வாதீனமாக அவர் அந்த கொடிய நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டாராம்
ஆனால் இவரது எதிரிகள் இவர் இறந்து விட்டதாக வாட்ஸாப் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ,அவரது படத்தை பதிவிட்டு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டியதுடன் அவருக்கு கேணல் வரை பதவி உயர்வும் வழங்கியுள்ளனர்
கருத்தியல் ரீதியில் போர்களை எதிர்கொள்ள முடியாது இவ்விதம் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு ஒருவரது தியாகத்தை ,அவர்
சிந்திய குருதி கொடைகளை கேவலமாக சித்தரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது கண்டு பிரபாகரன் நேசத்தின் பாசக்காரர்கள் சினம் கொண்டுள்ளனர்
எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க கற்று கொள் என கற்று கொடுத்த தலைவன் வழி வந்தவர்களே இவ்வாறு செயல் பட்டுள்ளது மானிட மனு நீதி நெஞ்சங்களை கலங்க வைக்கிறது
ஒன்று பட்டு ஓர் அணியில் சேர மறுத்து ,விளையாடல் புரியும் இவர்கள் வெறுக்க பட வேண்டியவர்கள் மறுப்பதற்கு இல்லை
,ஆனால் அவர் உயிரோடு உலாவும் பொழுதே அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அடித்து பரப்ப வேண்டுமா ..?
கொடிய நோயானது மக்களை மிரள வைத்து கொண்டுள்ளது ,பல டசின் தமிழர்கள் லண்டனில் மட்டும் பலியாகியுள்ளனர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
யார் இருப்போம் யார் இறப்பார் என்ற நிலை தொடரும் பொழுது இவ்விதமான கீழ் நிலை அநாகரீகமற்ற செயல் பாடுகள் தேவைதானா …..? என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் .
கருத்தியல் பகைமை ஆகாது ,இன்று மோதி கொண்டவர்கள் நாளை ஒன்று சேரலாம் அப்பொழுது இன்று நீங்கள் புரியும் இந்த விடயங்கள் உங்களை தனிமை படுத்தி விடும் தோழர்களே .
ஈழ விடுதலைக்கு போராடி ,விழிப்புண் அற்ற காவிய நாயகரை நாம் ,அந்த தியாகத்தை கொச்சை படுத்தலாமா ..?
ஒன்றுபடுவீர் ….சிந்தித்து செயல் படுவீர்…!

கொரானோவின் கோரத் தாண்டவம் – தேவாலயத்தில் குவியும் சடலங்கள்
கொரானோவின் கோரத் தாண்டவம் – தேவாலயத்தில் குவியும் சடலங்கள்
ஸ்பெயினில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர் ,
இவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் அவர்கள் மரபு முறை வழி பாடுகள் இடம் பெறுகின்றன.
இவ்வாறு தேவாலயம் ஒன்றுக்கு நாள் தோறும் ஐம்பது சடலங்கள் வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
மேற்படி விடயத்தை அந்த தேவாலயத்தின் பங்கு தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சுடலைகளில் குழிகள் வெட்ட முடியாத நிலையில் ,தமது மரபில் இருந்து மாறி எரிக்கும் நிலைக்கும் மக்கள் சென்றுள்ளனர்,
இவ்வாறான நிலைமைகள் உயிர் பலிகள் அதிகரித்திருக்கும் நாடுகளில் நிலவி வருகின்றது
கொரனோ விடாது மக்கள் உயிர் குடிக்கும் வெறியுடன் அலைகிறது ,தப்பிக்க வழியின்றி மக்கள் இறக்கும் பரிதாபங்கள் தொடர்கிறது .
யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற நிலையில் நாடுகள் தவிக்கிறது .என்று தீரும் இந்த பேரவலம் .இதுவே இன்றைய மக்கள் கேள்வியாகும் .

இலங்கையில் 68 பேர் கொரனோ நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் 68 பேர் கொரனோ நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் பரவிய கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து குணமடைந்து
அறுபத்தி எட்டு பேர் வீடு திரும்பினர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இன்று எவரும் இந்த நோயினால் பாதிக்க படவில்லை என சொல்வ தெல்லாம் உண்மை என்ற விதத்தில் கருத்துரைத்துள்ளனர்
உலக நாடுளை விட தாமே முதன்மையான செயல் பாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என இலங்கை இராணுவ தளபதி புகழ் பாடியுள்ளார்
எனினும் இவர்கள் கூறுவதை விட கள நிலவரங்கள் வேறு மாதிரியானவை
என உள்ளிருக்கும் சுகாதார ஊழியர்கள் வாயிலாக தகவல்கள் கசிகின்றன
கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தாய்,தந்தையரை பறிகொடுத்த
மூன்று பெண் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதான போர்வையில் நடக்கும் வெட்க படும் சம்பவங்களும் ,அதற்கு மேலாக உதயன்
என்ற பத்திரிகை செத்த வீட்டுக்கு காசு தாருங்கள் என கேவல படுத்திய
கொடுமை நிகழ்ந்துள்ளதாக இந்த ஈழ தமிழர் அன்பர் ஒருவர் அழுது அழுது பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
நெஞ்சை பதற வைக்கும் அந்த காணொளியை பாருங்கள்
அதனை மக்களே சற்று நின்று கேளுங்கள் ,இந்த அன்பர் கண்ணீருக்கும் ,அந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ,நாம் செய்ய
வேண்டியது ஒன்று தான் இந்த காணொளி பதிவு செய்தியை வேகமாக share பண்ணுங்கள் .
ஒருவர் இறப்பில் இவ்வாறு செய்வதா..? மனிதம் எங்கே செல்கிறது ..?
கொரனோவால் பெற்றோர் இழந்த 3 பெண் பிள்ளைகளுக்கு 109 ஆயிரம் டொலர் வழங்கிய மக்கள் click here read
நாம் தமிழர், நாம் இருக்கிறோம் கண்ணீர் துடையுங்கள் ..தோழரே

கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம் click here

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என
முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது
இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .
எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்
அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு
வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்
இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்
உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

பிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு
பிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 870 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் இதுவரை 13,729 பேர் பலியாகியுள்ளனர்
மருத்துவ மனைகள் தவிர்த்து அதற்கு வெளியே 1500 பேர் பலியாகியுள்ளதான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன
இதுவரை100,000 திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,.எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாக கூடும் என தெரிவிக்க படுகிறது .
நோயானது வேகமாக பரவி வருவதனால் எதிர்வரும் மாதம் வரை லக்கடவுன் தொடர்கிறது .
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது








