கணவன் மனைவி கொலை ஆயுத தாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

கணவன் மனைவி கொலை ஆயுத தாரி கைது

கணவன் மனைவி கொலை ஆயுத தாரி கைது

கணவன் மனைவி கொலை ஆயுத தாரி கைது ,அக்குரேகொடவில் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில்

ஒருவர் மற்றும் அவர்களை அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய

தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினார்.

“குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றத்திற்கு துப்பாக்கிகளை வழங்க

பயன்படுத்தப்பட்ட மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. குற்றம் நடப்பதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு

நடத்தியவர்களை அவர்களின் விடுதிக்கு கொண்டு சென்ற வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,

மேலும் அதன் உரிமையாளர் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர்

துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர் ருக்ஹவில, மீவல, பன்சல வீதியைச் சேர்ந்த ராபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நபரைக் கைது செய்ய விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

“குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அவர்களது தங்குமிடத்திற்கு கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட

வாகனத்தின் உரிமையாளர் காலி, அத்கந்துர, பழைய காலனி, ‘ரசிக நிவாச’ பகுதியைச் சேர்ந்த வன்னியார்ச்சிகே சிஹின தில்சாரா என்றும் தகவல்கள்

தெரிவிக்கின்றன. சந்தேக நபரையும் தொடர்புடைய வாகனத்தையும் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

மனைவி மாமியாரை வெட்டியா கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவி மாமியாரை வெட்டியா கணவன்

மனைவி மாமியாரை வெட்டியா கணவன்

மனைவி மாமியாரை வெட்டியா கணவன் வவுனியா சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் அவரது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா சமயபுரம் பகுதியில்

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இன்று இரவு வருகைதந்த உயிரிழந்த நபர் வீட்டில்

இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டையும் தீ வைத்து கொழுத்தியுள்ளார்.

காயமடைந்த இரு பெண்

இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருட காலமாக சமயபுரம்

பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

சம்பவத்தில் வசந்தி வயது 30, அவரது தாயாரான இந்திரா வயது 69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன் சரண்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண் ,மனைவியின் தலையை அறுத்து பொட்டலம்கட்டி பொலிஸில் சரண்டைந்த கணவனால் வவுனியா பரபரப்பாகியுள்ளது.

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்து சென்ற கணவன்

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

கள்ள காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.

பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்
Posted in உலக செய்திகள்

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடிய மாவட்டத்தில் உள்ள 35 வயது ஆண் இளம் பெண் 9 வருடங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரை திருமணம் செய்தார்.

இவ்வாறு திருமணம் செய்தவர்களுக்கு 8 வயது மகள் ஒருவரும் உள்ளார்.

மனைவி அழகில் மூக்கை கடித்த கணவன்

அவர் மனைவியினுடைய அழகை விவரித்து வந்துள்ளார், உன் மூக்கு ரொம்ப அழகா இருக்கு ஒரு நாளைக்கு நான் சாப்பிட்டு விடுவேன் என கூறி வந்துள்ளார் .

இதனை நகைச்சுவையாக எண்ணிய மனைவி .அதனை கடந்து சென்று விட்டார்.

ஆனால் போதையில் வந்த கணவர் சொன்னது போன்று அன்றைய நாள் மனைவியுடைய மூக்கை கடித்து சாப்பிட்டு விட்டார்.

போதையில் மனைவியை மூக்கை கடித்து சாப்பிட்ட கணவர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடித்து திணற நிலையில் பலமான வலியில் துடித்த மனைவி வைத்தியசாலை எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுது கணவன் தன்னை கொலை செய்ய தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார்

நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார். மிகுதி பாகங்கள் தப்பிவிட்டதாக நெட்டிசன்கள் இப்படியும் கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

மனைவிமார்களே கவனமாக இருங்கள். அத்தான்ன்மார் உங்கள் மூக்க இப்படியும் கடித்து விடலாம். ஒரு சிலர் அப்படி இருக்கக் கூடும் என்பதாக இந்த தகவல் இருக்கிறது.

அழகை இரசி அதற்காக இப்படியா மூக்கை கடித்து உண்பது என மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிற்கிறது.

அழகு யாரைத்தான் விட்டு வைத்தது என்பது இதனூடாக தெரிகிறது.

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
Posted in இலங்கை செய்திகள்

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன், செயல் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மாதத்திற்கு முன்னதாக 27 வயதுடைய உடுவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ,டென்மார்க்கில் இருந்த 41 வயது நபர் திருமணம் செய்தார்.

மனைவியிடம் பிரியாணி செய்யும்படி கேட்டதை எடுத்து ,அவர் அதை செய்ய முடியாது என தெரிவித்து இருக்கின்றார்.

இதனை அடுத்து சமைக்கத் தெரியாத பெண்ணை நான் ஏன் மணம் முடித்தேன் என விரக்தி கொண்ட அவர், தற்பொழுது நீதிமன்றத்தில் விவகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்.

பிரியாணி சமைக்கத் தெரியாத ,பெண்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பது, இந்த விவகாரத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது .

ஆகவே இதன் ஊடாக சொல்லப்படுகிற செய்தி எதுவாக இருக்கிறது .சமைக்கத் தெரியாத பெண்களை இனி ஆண் மக்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதாக காணப்படுகிறது.

ஆகவே திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் நீங்கள் தாலி கட்டி வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்வதை நிறுத்துவதை விட்டு.

தற்பொழுது சமையலை கற்றுவிட்டு திருமணத்துக்கு செல்லுங்கள் என்பதாக இந்த செய்தி கூறுகிறதா ,என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

ஆகவே வாய்க்கு சுவையாக சமையல் செய்ய முடியாத பெண்கள் எதற்கு வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய வருகின்றீர்கள் .

என்ற கேள்வியைத்தான் இந்த பிரியாணி செய்யத் தெரியாத மனைவி யை விவகாரத்தை பெற்றுள்ள சம்பவம் காட்டுகிறது .

ஆகவே மீளவும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்ள முன்னர் .

இலங்கை பெண்களே பிரியாணி செய்ய தெரியாவிட்டால், தயவு செய்து தாலி கட்டி விடாதீர்கள், என்பதாகவே இதன் ஊடாக தகவல் கடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.

பாவம் அந்த பெண்ணுக்கு அட்டமத்து சனி போல .

மனைவியை கொன்ற கணவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது ,மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை கைது செய்துள்ளதாக கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் தாயான ஆறுமுகன் அம்பிகா (வயது 57) என்பவரே பலியாகியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான அவரது 22 வயது மகனும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸார் பிரிவில் உள்ள மோதர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் சந்தேக நபரால் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் காயமடைந்த அவரது மகன்

மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு அறையில் தரையில் மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மூத்த மகனும் சந்தேக நபரும் அடுத்த அறையில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேக நபர், தனது மனைவி தூங்கும் இடத்திற்கு வந்து, வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

சம்பவத்தைத் தடுக்க தலையிட்ட தனது மகனையும் சந்தேக நபர் கத்தியால் குத்திவிட்டு, பின்னர் தப்பிச் சென்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி ,யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் ,கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் ,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை.

விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.

விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, ​​குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்.

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன் ,புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில்

வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை

விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன்

தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.

மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால்

நான்கு பிள்ளைகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.

தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்,

ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப்

பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில்

கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் நேற்று (17)

காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு

பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியால் தேட படும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியால் தேட படும் கணவன்

மனைவியால் தேட படும் கணவன்

மனைவியால் தேட படும் கணவன் ,கணவனை காணவில்லை தேடும் மனைவி இலங்கை கொழும்பு கொழும்பெண்டலா பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபர் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

தனது கணவன் கடந்த எட்டு மாதங்களாக காணாமல் போய்விடும் இவரை தேடி கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

இவர் எவ்வாறு காணாமல் போனார் எப்படி காணாமல் போனார் என்பது தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து இருக்கிறது.

இலங்கையில் பல்வேறுபட்ட கடத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கை வீதிகளில் சடலங்கள் மிதக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது .

அவர்களில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் எனது கணவன் காணாமல் போய்ுள்ளதாகவும் அவர் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரும்படியும் மனைவி தற்பொழுது காவல்துறையே உதவிய நாடி இருக்கின்றார் .

இலங்கை ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்பதையும் தொடராக இடம் பெற்று வரும் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இது திட்டமிடப்பட்ட அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இடம்பெறுகின்ற கடத்தல் சம்பவம் என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

கணவனை காணாது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் தத்தளித்து வருகின்றனர் .

இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பான விடயங்கள் தற்பொழுது பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

காணாமல் போன பிறகு தற்போது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்போது குடும்பத்தினர் ஒரு வித பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
Posted in உலக செய்திகள்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

கர்ப்பிணி மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன பிள்ளை, என்பதை பார்க்க இவ்வாறு அவர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது .

இந்திய உத்தரபிரதேச பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை ,ஆணா பெண்ணா என அறிய ,ஆசை பட்ட கணவன் மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் .

ஆண் குழந்தை வெட்டி கொலை

இவருக்கு முன்னதாக ஐந்து பெண் பிள்ளைகள் தொடராக பிறந்த நிலையில் ,ஆண் குழந்தை இல்லை என வீரக்தி உற்ற கணவன் ,ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு இப்பொழுது மனைவியை கர்ப்பம் ஆக்கியுள்ளார் .

அதனை அடுத்தே எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்,குழந்தையை பார்க்க முனைந்துள்ளார் .

அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் ,கணவன் அரிவாள் வெட்டில் வயிற்றில் உள்ள சிசு ,இறந்துள்ளது

மனைவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .

ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,பொலிஸாரினால் ,கணவன் கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

பிள்ளை வரம் என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும் ,அதனை யாரும் தட்டி கழிக்க முடியாது .

பெண் பிள்ளைகள் பெற்ற பல குடும்பங்கள் அதே பெண் பிள்ளைகளினால் , அந்த குடும்பம் கொண்டாட படும் நிலைக்கு உள்ளான சம்பவங்களும் ,இந்த உலகில் பதிவாகியுள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த கணவன் புரிந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இப்படியும் முரட்டு கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இவை ஒரு உதாரணமாக உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்

மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்

மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மொனராகலை பகுதியில் மாமி மற்றும் மனைவி மீது கணவன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார் .

கணவனின் தாக்குதலில் மாமியார் சம்பவ இடத்தில் .பலியானார் ,பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி ,சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளார் .

குடும்ப தகராறு

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி மற்றும் மாமியாருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வந்துள்ளது .

அவ்வேளை சீற்றம் அடைந்த கணவன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .

கணவன் நடத்திய தாக்குதலில் ,தாய் ,மகள் பலியான சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

கூட்டு குடும்பம்

கூட்டு குடும்பமாக வாழும் இக்காலத்தில் ,ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்ல வேண்டும் .

அவை இல்லாத பட்சத்தில் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாது என சமூக நல மனோவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .

அதிகரித்த படுகொலைகள்

இலங்கையில் வழமைக்கு மாறாக தற்போது ,இவ்விதமான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

அவ்வாறான கொலைகளை விசாரிப்பதற்கே தனி விசாரணை படைகளை இலங்கை காவல்துறை அமைக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ள பட்டுள்ளது .

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மாமி மற்றும் மனைவி மீதான தாக்குதலும் நீண்ட நாள் வன்மத்தின் உச்சமே காரணம் என ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர் .

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் இவ்வாறான கொலைகள் ,இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது .

இலங்கையில் எற்பட்டடுள்ள பொருளாதார சீர்கேடு ,அதனால் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாகவும் ,இவ்விதமான கொலைகள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது .

அரசும் அதன் நிர்வாகமமுமே ,மக்கள் வாழ்வியல் சுமைகளை குறைத்தால் இவ்விதமான விடயங்கள் நீர்த்து போகும் எனப்படுகிறது .

கோபத்தின் விளைவு இன்று தாய் ,மகள் மரணம் ,கொலை குற்றத்தில் கணவன் தற்பொழுது சிறை சென்றுள்ளார் .

இவர்களது பெற்ற பிள்ளைகள் அனாதைகளாக மாற்றம் பெற்றுள்ளனர் .

எதை எங்கு யாரிடம் சொல்லவேண்டும் ,எதை சொல்லக்கூடாது என்ற விடயம் இல்லாது ,தாங்களே புத்தியீவிகள் என்ற கணக்கில் ,கட்டவிழ்த்து விட படும் கதைகளும் .புனைவுகளும் இந்த கொலைகளுக்கு காரணமாக மற்றம் பெற்றுள்ளதை காணமுடிகிறது .

கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை ,கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் நெடுங்கேணியில் இடம்பெற்றுள்ளது .

மாரடைப்பால் கணவன் மரணம்

நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் 49 வயதுடைய கணவன் மாரடைப்பால் மரணமானார் .

கணவன் இறந்த செய்தி மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .

பிள்ளைகள் அனாதை

இறந்தவர்களுக்கு 18மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .

தந்தை தாய் இல்லா நிலையில் ,இரு பெண் பிள்ளைகளும் இப்பொழுது அனாதையாக உள்ளனர் .

மனைவி கணவன் மீது அதீத நேசம் வைத்த காரணத்தினால் ,பிள்ளைகளை மறந்து ,உணர்ச்சிக்கு அடிமையாகி இவ்விதமான முடிவை எடுத்துள்ள செயலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உடன்கட்டை ஏறிய மனைவி

உடன்கட்டை ஏறிய மனைவி எடுத்த தவறான முடிவினால் தற்போது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என மக்கள் பேசிக்கொள்கின்றனர் .

அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வாழ்க்கை பட்ட கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்து என்கின்ற அச்ச நிலை தோன்றியதால் கூட இவ்விதமான முடிவை ,துணைவியார் எடுத்து இருக்கலாமென மக்கள் பேசி கொள்கின்றனர் .

மனைவியை வெட்டி கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் கந்தேநுவர, ஹுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது,மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டத்தை அடுத்து ஆத்திரம் கொண்ட கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்தியும் வெட்டி கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

கொலைக்குற்ற சாட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த கொலை வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்
Posted in உலக செய்திகள்

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியான சம்பவமொன்றே கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது,

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவரது மனைவி ரமாவள்ளி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவுகாரணமான கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலன் இன்றி வௌ்ளிக்கிழமை (05) பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.

கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தன்னுயிரை மாய்க்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் சனிக்கிழமை (06) அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நடுவீரப்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ
Posted in இலங்கை செய்திகள்

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ

குவைட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தனது முதலாளி மற்றும் சாரதியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவ்விருவரும் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியும் உள்ளனர்.

இதனால், மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. கடும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த கணவன், மனைவியை தாக்கியுள்ளார். சனிக்கிழமை (30) வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குவைட் முதலாளி, அவருடைய சாரதி கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான கணவரின் தந்தையின் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி, வெலிபோதாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 வயதுடைய இந்தப் பெண், குவைத்தில் பணிபுரிந்து வந்த தனது முதலாளியான 80 வயதான அப்துல் சைட் ஆலபல்லாயன் மற்றும் அவரது சாரதி கே.கே.நாமல் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதற்கு முன் பலமுறை அவ்விருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.இதுகுறித்து கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (30) கடும் கோபமடைந்த கணவன், மனைவியை தாக்கி அவருடன் வந்த குவைத் நாட்டவர் மற்றும் டிரைவரை தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

குவைத் நாட்டைச் சேர்ந்தவர், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கிருந்த 70 வயது சுகயீமடைந்திருந்த கணவரின் தந்தையான திஸ்ஸ ஹெட்டியாராச்சி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை பிபில பதில் நீதவான் திரு.சரத் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) நடைபெறவிருந்தது.

கணவன்தான் வீட்டுக்கு தீ வைத்தாரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவைட் நாட்டைச் சேர்ந்தவரை விசாரிப்பதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி பெறப்பட உள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்

மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ள நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க (54வயது) என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் இன்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் ஆவார்.

உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள், இந்த நாட்டை விட்டு அனுப்பியவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.

இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .

இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்

மனைவியை கொன்ற கணவன்

அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த மனைவியை, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவம், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மகைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

43 வயதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.