Posted in இலங்கை செய்திகள்

ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு

ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு

ஜோர்டான் நாட்டுக்கு சென்ற இலங்கை பெண் ஒருவர்பரவி வரும்

கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது ,

இதுவரை அந்த நாட்டில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 397 பேர் சிகிச்சை

பெற்று வருவதாகவும் ,அதில் இலங்கை பெண் உள்ளடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது

Jordan
Jordan
Posted in இலங்கை செய்திகள்

புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

இலங்கை புத்தளம் பகுதியில் அதி வேகமாக வீசிய புயலின்

காரணமாக அப்பாவி மக்களின் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன

தமது வீடுகளை இழந்து தற்போது மக்கள் நிர்கதியாக உள்ளனர் ,இவ்வாறு

பாத்திக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உதவிகள் வழங்க படுகின்றன .

மேலும் இந்த வீடுகளின் இழப்பை மதிப்பாய்வு செய்து அதற்குரிய பணம்

அரசினால் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வருகிறது

புத்தளத்தில் 245 வீடுகளை
புத்தளத்தில் 245 வீடுகளை
Posted in இலங்கை செய்திகள்

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்

அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன

இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

மோதி சிதறிய கடற்படை
மோதி சிதறிய கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்

வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்

இலங்கை களுத்துறை பகுதியில் ஆண் ஒருவர்நடந்து சென்றுள்ளார் ,திடீரென உடல்நிலை இயலாது அவ்விடத்தில் குந்தி இருந்துள்ளார் ,

அவச நிலையத்துக்கு அழைக்க பட்டு அவர்கள் அந்த களமுனைக்கு வருவதற்கு முன்பாக அவர் இறந்துள்ளார்

இவருக்கு கொரனோ தொற்றி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ஆடைகள் தீ மூட்டி எரிக்க பட்டன


இவ்வாறு பிரிட்டனிலும் நடந்து சென்றவர்கள் ,மற்றும் வீட்டில் கதிரையில்

அமர்ந்த நிலையில் அறிகுறி ஏதும் இன்றி கோரனோவால் தமிழர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது

தற்போது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

வீதியில் இறந்த நபர்
வீதியில் இறந்த நபர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 7மணியளவி;ல் கைதுசெய்யபபட்ட சந்தேக நபர்களில் முன்னாள்

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இடம்பெற்றிருப்பதாக

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும்

கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குண்டு
இலங்கையில் குண்டு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ ஊழியர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்து

மருத்துவ ஊழியர்களை ஏற்றிசென்ற பேரூந்து விபத்து

இலங்கையில் மருத்துவ ஊழியர்களை காவியபடி படி பயணித்த, பயணிகள்

பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் ,பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது

எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை

இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய

முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு

நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்

எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த

அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக

இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை

தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன்

இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய

அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது

சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடல்பரப்பு
இலங்கை கடல்பரப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை ஏழுபேர் பலியாகியுள்ளனர் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயானது மது மற்றும் புகைத்தல் செய்பவர்கள் மீதே அதிகம் கவனம்

செலுத்தி தாக்கி வருகிறது ,அதனால் இவற்றை செய்வதற்கு இலங்கை ஆயூள் வேத மருத்துவ துறையினர் தடை விதித்துள்ளனர்

இந்த நோயில் இருந்து காப்பாற்ற படுவதற்கு அனைவருக்கும் ஆயூள் வேத

மருத்துவ முறை கடை பிடிக்க படுவதால் இந்த அதிரடி உத்தரவை இலங்கை ஆயூள் வேத மருத்துவத்துறை அறிவித்துள்ளது

மக்களே புகைத்தல் மற்றும் மது அருந்துதலை இந்த நோயின் காலம் முடிவடையும்

வரை தவிர்த்து கொள்ளுங்கள் ,ஒருவரால் அனைவருக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் எழுந்துள்ளது

கொரனோவில் இருந்து
கொரனோவில் இருந்து
Posted in இலங்கை செய்திகள்

குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு

குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு

இலங்கை குருணாகல பகுதியில் உள்ள போதனா வைத்திய சாலையில்

அவசர சிகிச்சை பரிவு மற்றும் ,விபத்துக்கள் பிரிவு என்பன மறு அறிவித்தல்

வரை அடித்து பூட்ட பட்டுள்ளதாக அந்த மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் சுமார் ஒருவர் கொரனோ

நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார்சில நாட்களுக்கு இந்த

சேவை இரத்து செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

குருணாகல மருத்துவமனை
குருணாகல மருத்துவமனை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்-மனோ

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்-மனோ

கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு – மனோ கணேசன்


கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில்

மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில்

நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச

கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு

மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’

கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில்

மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே அவ்வந்த மாவட்ட, பிரதேச பொது

சுகாதார அதிகாரிகள், இவர்களை பொறுப்பேற்று, தத்தமது வீடுகளில் இவர்கள்

தனிமை நிலைமையில் இருப்பதை கண்காணிப்பார்கள்.

இவர்களை இவர்களது வீடுகளில் தனிமை நிலையில் வைக்க முடியாவிட்டால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இப்படி கொழும்பில்

இருந்து வருகின்ற நபர்களுக்கான “கொரோனா தனிமை நிலையங்கள்” அமைக்கப்பட்டு அங்கே இவர்கள் தங்க

வைக்கப்பட்டு, மருத்துவ அனுமதியின் பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என நான் இக்கூட்டத்தில் ஆலோசனை கூறினேன்.

வெளிமாவட்ட மக்கள் கொழும்பிலிருந்து வெளியேறுவது, கொழும்பில் சமூக இடைவெளிக்கு இடையூறாக இருக்கின்ற

நெருக்கடியையும் தணிக்க உதவும். இது கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் எனவும் நான் இக்கூட்டத்தில் கூறினேன்.

இந்த நபர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்கும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும். இதுபற்றி இன்று நடக்கும் அத்தியாவசிய

சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ்

குணவர்தன உறுதியளித்தார். எக்காரணம் கொண்டும் இந்நடவடிக்கை தாமதாமாகும் பட்சத்தில் இந்த பிரிவினருக்கு

கொழும்பிலே வாழ்வதற்கான வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

கொழும்பு மாவட்ட முன்னாள் எம்பீக்களும், மாவட்ட செயலாளர் தலைமையில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அதிகாரிகளும்

கலந்துகொண்ட இந்த ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும்

சனிக்கிழமை நடைபெறும் போது, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் சமர்பிப்பார்.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள்
கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது

இலங்கை நுவரெலியா பகுதியில் வெளி நாட்டு சாராயங்களுடன் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்ய பட்ட இவர்கள் அனைவரும் தீவிர

விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஊரடங்கு வேளையில் சட்ட விரோதமாக இந்த நூறு சாராய போத்தல்களை

விற்பனை புரிவதற்கு வேறு இடத்திற்கு வினியோகத்தில் ஈடுபட

முனைந்த பொழுதே கைது செய்ய பட்டுளள்னர்

Posted in இலங்கை செய்திகள்

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

இலங்கை கபரண பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த

கணவன் மனைவி மீது வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று

மோதி தள்ளியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர் .

கெப் ரக வாகனத்தின் சாரதியின் அலட்சியே போக்கே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


கேப்ரக சாரதி கைது செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இலங்கையில் நாள் தீரும் நால்வர் இவ்வாறான வீதி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கணவன் மனைவியை அடித்து
கணவன் மனைவியை அடித்து
Posted in இலங்கை செய்திகள்

குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது

குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது

கைது இலங்கையில் உள்ள கவ்வி நிறுவனம் ஒன்றில் மாணவர் குழு இரண்டுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது ,இதில் மாணவர்

ஒருவர் கடுமையான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்

அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து ஆறுபேர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .

கல்விய சமூகத்தில் ஏற்பட்டு வரும் இவ்வாறான குழு மோதல்கள் கற்ற சமூகத்தின் மத்தியில் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

குழு மோதலில் ஈடுபட்ட

Posted in இலங்கை செய்திகள்

பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?

பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?

இலங்கை மலையகம் காட்டன் நல்லதண்ணி பகுதி மலை பகுதியில் உள்ள காடுகள் தொடராக பற்றியே எரிந்த வண்ணம் உள்ளது .

விஷம சக்திகள் இந்த தீ பரவலை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருவதாக நம்ப படுகிறது .

மகிந்த குடும்பத்தினர் இலங்கையில் ஆள்கிற பொழுது இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து
செல்வதை அவதானிக்க முடிகிறது

இலங்கையில் இவர்களது ஆட்சியிலேயே கிறிஸ் மனிதர்கள் ,ஆவா குழுக்கள் ,கடத்தல்கள்,கொலைகள் ,மிரட்டல்கள், கப்பம் ,கஞ்சா

என்ற வர்த்தகம் ,மற்றும் குற்ற செயல்கள் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

பற்றி எரியும் மலையக
Posted in இலங்கை செய்திகள்

திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்குங்கள் – மனோ கணேசன்

திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்

தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

அடுத்த பாராளுமன்றம் திருடர்கள் இல்லாத பாராளுமன்றமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆளும்கட்சி, எதிர்கட்சி எல்லா தரப்பிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கட்சி

தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு சிலவேளை “கள்ளர்கள்” என அறியப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டி வரும். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது.

ஆகவே “திருடர்” இல்லாத பாராளுமன்றம் உருவாவது மக்கள் கைகளில்தான் உள்ளது. கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பும் கட்சி சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள்

திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்குங்கள் – மனோ கணேசன்

விருப்பு வாக்கை “திருடர்களுக்கு எதிராக” வழங்குங்கள். யார் நல்லவர், வல்லவர் என அறிந்து, அந்த நல்ல, வல்லவர்களுக்கு மட்டுமே விருப்பு வாக்கை வழங்குங்கள். சிங்கள வாக்காளர்கள்

மத்தியில் இன்று இந்த சிந்தனை வேகமாக ஒரு இயக்கமாகவே பரவி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த சிந்தனை எழுச்சி பெற வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும

மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர், கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் விருப்பு வாக்கை கவனமாக வழங்க வேண்டும் என கோர விரும்புகிறேன். அதாவது “மக்கள் வரிப்பணத்தை தம் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு திருடாத”,

“வெளிநாட்டு முதலீட்டாளர்களை நிர்பந்தித்து கமிசன் பெறாத”, “மதுசாலை பர்மிட் இல்லாத”, “எதனோல் வர்த்தகம் செய்யாத”

வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாத்திரம் தமது விருப்பு வாக்கை மக்கள் வழங்க வேண்டும்.

அதேபோல், “சபையில் பண்புடன் நடந்துக்கொள்கின்ற”, “துணிச்சலுடன் நியாயத்திற்காக குரல் கொடுக்கின்ற”, “விசேடமாக தாய்மார்களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும்

நேசிக்கின்ற”, “எதிர்காலம் பற்றிய தூரப்பார்வை கொண்ட”, “மூன்று மொழிகள் முடியாவிட்டால் குறைந்தபட்சம் இரண்டு தேசிய

மொழிகளையாவது பேசி உண்மை இலங்கையராக தம்மை அடையாளம் காட்டுகின்ற” வேட்பாளர்களுக்கு மாத்திரம் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்குங்கள்.

இந்த விருப்பு வாக்கு புரட்சி மூலம் அடுத்த ஒன்பதாவது பாராளுமன்றம், “திருடர்கள் இல்லாத” பாராளுமன்றமாக அமையட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். கட்சி, சின்னம்

ஆகியவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தாலும் கூட நடைமுறை அரசியல் காரணங்களுக்காக பிழையான நபர்களுக்கு,

வேட்பாளர் நியமனங்களை அழுத்தம் காரணமாக் கட்சிகள், கட்சி தலைவர்கள் வழங்கி விடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆகவே கட்சியை, சின்னத்தை மட்டும் பார்த்து, பிழையான நபர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கி விட்டு, பின் அப்படியானவர்கள் இருக்கும் பாராளுமன்றத்தை கண்டு

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருடர்கள். 225 பேரும் ஒழிய, அழிய வேண்டும் என சாபம் இடுவதில் பயனில்லை.

நல்லவர்களை தெரிவு செய்யத்தான் விருப்பு வாக்கு என்று ஒன்று இருப்பதை மனதில் கொள்ளுங்கள்.

இப்படி திட மனதுடன் சிந்தித்து விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாவிட்டால், என்னை போன்றவர்களுக்கு விடை

கொடுங்கள். சபைக்கு சென்று “திருடர்களுடன்” குடும்பம் நடத்த இனியும் எனக்கு முடியாது.

திருடர்கள் இல்லாத
Posted in இலங்கை செய்திகள்

ஐநா பறந்த இலங்கை அமைச்சர் – தண்டிக்க படுமா இலங்கை ..?

ஐநா பறந்த இலங்கை அமைச்சர் – தண்டிக்க படுமா இலங்கை ..?

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை கூட்ட தொடர் தற்பொழுது இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் கலந்து கொள்ளும் முகமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தனது சிறப்பு அணியுடன் பறந்துள்ளார் .

இம்முறையும் இலங்கை தமிழர் எதிர் பார்க்கும் தீர்ப்பு கிடைக்க பெறாது என நம்ப படுகிறது ,


இந்தியா ,சீன ,ரசியாவுக்கு சுற்று பயணத்தை மேற்கொண்ட மகிந்த ,மற்றும் கோத்தபாய விடுத்த வேண்டுதலுக்கு இணங்க இவர்கள் தமது ஆதரவை இலங்கைக்கு வழங்க உள்ளனர் எனவும் ,

இலங்கை மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வகைக்கெடுப்புக்கு விடப்பட்டால் இவர்கள் அதில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

ஐநா பறந்த இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

இலங்கை கொரன பகுதியில் மரம் ஆயுத தாரியால் நபர் ஒருவர் திடீரென சுட்டு படுகொலை
செய்ய பட்டுள்ளார் ,

மோட்ட சைக்கிளில் பயணித்த இரு ஆயுத தரிகள் அதே வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டோ
மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார் ,காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

ஒருவர் சுட்டுக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

இலங்கை காவல்துறையினர் மீது திடீர் தாக்குதலை நடத்திய நபர் ஒருவரை தாம் கைது
செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பெண் ஒருவரை அவதூறாக தூற்றிய நிலையில் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீதே
இந்த தாக்குதலை குறித்த நபர் மேற்கொண்டுள்ளார்

இதனை அடுத்து இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

காவல்துறை மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நுவரெலியா ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட

பூஜைகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்

பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்

இலங்கையில் பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக்கி வெளியிட்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .

இவ்வாறு கைதுசெய்ய பட்டுள்ள ஏழு பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதுடன் அனைவரும் இருபது வயதுக்கு உள்ளிட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

ஆடைகள் அணிந்த வண்ணம் தமது பக்கங்களில் வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை எடுத்து இவ்வாறு நிர்வாணப் படமாக்கி வெளியிட்டுள்ளனர்

இதற்கு என விசேட தொழில்நுட்பத்தை இவர்கள் பயன் படுத்தியுள்ளது கண்டறிய பட்டுள்ளது

பேஸ்புக்கில் பெண்களின்
பேஸ்புக்கில் பெண்களின்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY