Tag: srilanka
தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்
தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்
காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3
பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்
எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்
இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
தம்புள்ள பகுதியில் நேரெதிர் இரு பேரூந்துகள் மோதியதில் அதில் பயணித்த நாற்பது
பொதுமக்கள் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து
காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து
மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற
பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்
வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்
இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இறந்த நிலையில் முஸ்லீம் நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது இறப்பு கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
48 வயதுடைய நபரே இவ்வாறு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். அங்குள்ள யாழ்ப்பாணம்,
அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதுதான் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்தது.
இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை
தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல்
நிறுவனமாக மாறியது. இந்த மாதம்தான் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான
சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும்.
இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம்
நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல்
அளித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி
விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள்,
போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.
இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் – இறுதி போரின் பொழுது இடம்பெற்றது ஒரு இன படுகொலையையே என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி சிவா மோகன்
அவர்கள் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தற்பொழுது இடம்பெற்று
கொண்டிருக்கும் கலை மாலை நிகழ்வில் சிறப்பு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொழுதே இந்த
விடயத்தை தெளிந்த பார்வையுடனும் ,உள்ளார்ந்த மன குமுறலுடனும் பகிர்ந்து கொண்டார் .
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இந்த நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் இவர் ஆற்றிய ,இந்த உரைக்கு பலத்த கரகோஷமும் ,வர வேற்பும் கிடைத்தது
புதுக்குடியிருப்பு மக்களோடு மக்களாக நின்று இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது ,பல இராணுவ
அச்சறுத்தல்கள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுடன் நின்று தனது சமுக பணியை ஆற்றி வருகின்றார் .
இவரை நேரில் பல மக்கள் சந்தித்து,மகிழ்வுற்று , தமது எண்ண கருத்துக்களை பரிமாறி கொண்டதை காண முடிந்தது .
இலங்கையில் இடப்பெற்றது ஒரு இனப்படுகொலையே என
சிறிதரன் எம்பியும் இவரை போன்றே தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .
மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்
மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு திருக்கோவில்
நோக்கி பயணித்து கொண்டிருந்த அரசுக்கு சொந்தமான
பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து
மின்கம்பத்துடன் மோதி சிதறியது .
இதனால் அந்த மின் கம்பம் இரண்டாக உடைந்து பேரூந்து மீது வீழ்ந்தது .
இதில் அதிஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பு
ஏற்படவில்லை ,எனினும் பேரூந்து பலத்த
சேதமடைந்துள்ளதுடன் அந்த சுற்றாடல் பகுதி மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது
மின் விநியோகத்தை சீராக்கும் பணியில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது

பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது
பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது
இலங்கை தென் மாகாணத்தில் இடம்பெற்ற காவல்துறை விசேட தேடுதல் ,சுற்றிவளைப்பில் சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இதில் நீதிமனறினால் தேடப்படும் சுமார் 128 குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களை கைது செய்யும் நோக்கில் நடத்த பட்ட தேடுத்தலின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது
மேலும் வீதி விதிமுறையை பின்பற்றாது சென்றவர்களும் சிக்கியுள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றது .
இதற்கு அடிப்படை காரணம் வீதி விதிகளை உரியமுறையில் கடைபிடிக்காமையே என்பதாகும்

இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் ஆளும் மகிந்தா ஆட்சியில் இலங்கையில் என்றுமில்லாத வேற்று நாட்டு அரசியல் நுழைவுகள் தீவிரம் பெற்றுள்ளன .
அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ,இலங்கை, சீனாவுடன் நல்லுறவு மேற்கொண்டு ஒட்டி கொண்டது .
அதன் வாயிலாக சீனாவின் செல்ல பிள்ளையாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .
இராணுவம் ,பொருளாதரம் ,அரசியல் ,என்ற முக்கூட்டு நகர்வில் இலங்கையை மையம் கொண்டுள்ளது சீனாவின் ஆதிக்க கரங்கள் .
சிங்கள பவுத்த தேசம் இந்தியா ஈழ தமிழர்களை விட்டு விலகி சென்ற நிலையில் ,ராஜீவ் காந்தி படுகொலையுடன் ஆரம்பிக்க பட்ட அந்த சமாச்சாரத்தின் பின் ஈழ தமிழர்கள்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
மீது ஒர வஞ்சகம் சுமத்தி வந்த இந்தியா, வழி தவறி பயணிக்க ,அந்த நேரத்தை சரியாக கணக்கு பார்த்து ,,இலங்கை சீனாவுடன் ஒட்டி கொண்டது
இங்கே மிக இரகசியமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் சாலை போன்ற மாதிரி அமைப்பில் சீனாவின்
இரகசிய அதி நவீன உருமறைப்பு செய்ய பட்ட இராணுவ முகாம் ஒன்று இயங்கி வருகிறது
இலங்கைக்குள் உல்லாச பயணிகள் போல் வருகை தரும் சீனா இராணுவத்தின் முக்கிய முகம் தெரியாத உளவு
அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இங்கே பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
சட் லைட் மூலம் முழு இலங்கையை இவர்கள் கண்காணித்து இலங்கை அரசுக்கு தகவல் வழங்குவது
மட்டுமல்ல இந்தியாவை கண் காணிப்பது போன்ற தீவிர நகர்வில் ஈடுபட்டு வருகின்றது
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் இனவெறி பகுதியில்,காட்டு பகுதி சார்ந்த இடத்தில் இந்த இராணுவ முகாம் நிறுவ பெற்றுள்ளது
,,,இந்த இராணுவ முகாமின் முன் காவலாக பாரிய சிங்கள இராணுவ நிறுவ பெற்றுள்ளது
இந்த இராணுவ முகம் கழிந்த பின்னர் சில மைல்கள் தொலைவில் இந்த இரகசிய முகம் இயங்கி வருகிறது
முக்கிய வட்டாரங்கள் ஊடக இந்த தகவல் மெல்ல கசிந்துள்ளது
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
கொஞ்சம் பின்னோக்கி செல்லுங்கள் ,திருமலையில் நிலத்தடி சுரங்க அறையில் ஐந்தாயிரம் போராளிகளை
தடுத்து வைத்து கோட்டா அரசு கொன்று கடலில் மனித சடலங்களை வீசி வருவதாக கூறி இருந்தோம் அல்லவா .
அது பின்னர் அம்பலமானது ,அதுபோன்றே இந்த விடயமும் அரங்கேற்ற பட்டு வருகிறது .
இது இந்தியாவுக்கு மிக ஆபத்தானது ,
இனியாவது இந்தியா மத்தி , தனது வெளியுறவு கொள்கையை மாற்றி தனது பிராந்தியத்தை சூழ நெருங்கி
வரும் சீனாவின் இரும்பு கரத்தை பலம் பெறும் முன் நொறுக்க வேண்டும்
அதற்கு தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பு கவசம் என்பதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஈரான் ,ஈராக் பகைமை நாடுகள் அதனை மறந்து இன்று ஒன்று சேர்நது போல ,இந்தியா பழைய வரலாறுகளை மறந்து ஒன்று பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது
தவறான அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் கீழ் இந்தியா சுற்றும் எனின் இந்தியா பல நாடுகளாக உடைவதை யராலும் தடுக்க முடியாது .
இந்தியாவின் காவலர்களாக இருந்த புலிகள் அழிவு இந்தியாவுக்கு சொல்லி செல்லும் இந்த பத்து ஆண்டுகளின்
அதிரடி சிங்கள மாற்றங்கள், பலத்தை பலமாக உணர்த்தி இருக்கும் எனலாம்.
கடக்க போகும் நான்கு ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையான ஆடுகளமாக மாற்றம் பெற போகிறது .
,எதிர் வரும் பத்து ஆண்டுகளில் பாரிய தலை கீழ் மாற்றங்கள் இலங்கையை சுற்றி படர போகிறது
அதற்குரிய அறிகுறி நகல்கள் இப்பொழுது தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன ,திசை மாறும் கால கருவியில் ,திசையறிந்து செல்ல வேண்டிய நேரம் இது .
அரசியல் எப்பொழுதும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பது இல்லை என்பதை பவுத்த இனவாதிகள் புரிந்து கொண்டால் சரி . இந்த சொல்லாடல் இலங்கையை சுற்ற போகிறது.
- வன்னி மைந்தன் –

இலங்கைக்கு இந்தியா உதவிகள் வழங்க கூடாது – ராமதாஸ்
இலங்கைக்கு இந்தியா உதவிகள் வழங்க கூடாது – ராமதாஸ்
இலங்கைக்கு இந்திய அரசு எவ்வித உதவிகளையும் வழங்க கூடாது என இந்தியா அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார் .
இவரது இந்த கூற்றை மோடி அரசு ஏற்று செயல் படுமா ..?
பதவிகள் இன்றி தவிக்கும் இவர்களது இந்த கோரிக்கை
செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று இருக்கும் என மக்கள் பேசி கொள்கின்றனர்
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் பரப்பி படரும் நிலையில் ,பிராந்திய போட்டியில் இந்தியா சிக்கி உள்ளது ,இதில் அது காத்திரமான இராய தந்திர நகர்வை
மேற்கொள்ள வேண்டும் அது தவறின் சிக்கலில் இந்தியா அரசு செல்ல வேண்டும் என்பதே இராணுவ ஆய்வாளர்கள் கணிப்பாக உள்ளது
நாயை சுட்டு கொன்ற காவலர் கைது
நாயை சுட்டு கொன்ற காவலர் கைது
இலங்கை – கொபேய்கணே பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் நாய்
ஒன்றினை சுட்டு கொன்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் .
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளாராம்
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்
இலங்கை இராணுவத்தில் இருந்து புலிகளின் கோர தாக்குதலினால் தப்பி ஓடிய சுமார் ஐம்பது லடசத்திற்கு
மேற்பட்ட இராணுவத்தை மீளவும் ,இராணுவத்தில் இணையும் படி சிங்கள அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .
மகிந்த ஆட்சியில் இதே கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்க பட்டு வருகிறது .
பல பொது மன்னிப்பு வழங்க பட்ட பொழுதும் இவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்து கொள்ள பின்னடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்
பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்
குருநாகல் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றும் ,கனரக லொறி ஒன்றும் மோதி கொண்டதில் பேரூந்தில் பயணித்த சுமார் பதினேழு பேர் .படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .போலீசார் துரித விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாது வாகன ஓட்டிகள் செய்லபடுவதே நாள் தோறும் இலங்கையில் விபத்து
ஏற்பட காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது
இலங்கையில் -மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது
இலங்கை -அம்பாறை பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நாங்கள மாணவிகள் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாங்கிட சென்றனர் அப்பொழுது
அந்த நான்கு மாணவிகளுடனும் மருத்துவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டு முன்வைக்க
பட்டுள்ள நிலையில் மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி
வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி
இலங்கை -ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்
கடந்த இரவு இடம்பெற்ற விபத்தில் இவர் பலியாகியுள்ளார்
ஓமந்தையில் இருந்து வவுனியா பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து மாடு ஒன்றுடன்
மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு
இலங்கை -யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (03) காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.
மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.
பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்ட நல்லூர் வளைவு
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில்
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
அந்த நிதிக்கு அமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய
விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .
அதன் வேட்பாளர்களும் கடுமையான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இதில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது கோட்டபாய ராஜபக்ஸே தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்க படும் பொருட்களுக்கு வரி விலக்க படும் என கோட்டபாய வாக்குறுதிகளை அள்ளி விதைத்து வருகின்றார் .
விவசாயிகளுக்கு திடீர் ஐஸ் வைக்கும் கோட்டபாய ராஜபக்ஸே பிரச்சாரா பீரங்கி வேட்டு தாக்குதல் அதிக வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கம் கொண்டவை .
அதனை இலக்கு வைத்தே கோட்டபாய ராஜபக்ஸே தனது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி வருகிறார் .
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு
இலங்கை பூண்டுலோயா பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இவர் எவ்விதம் இந்த இந்த ஆயுதங்கள் பெற்று கொண்டார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் இருந்து இருந்தே பின்புலத்தில் செயல் படும் ஆயுத வியாபார கும்பல் தொடர்பான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .
எதிரிகளை கொலை செய்யும் நோக்குடன் இந்த ஆயுதங்கள் எதிரி குழுவால் வழங்க பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் .
காலி, மாபலகம பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச இவ்விதம் கருத்து தெரிவித்தார்.
இதன் போது வௌ்ள நீரே மாபலகம பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என சஜித் பிரேமதாசா சுட்டிக்காட்டினார்.
இதனால் அரசாங்க பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி இங்கு ஏற்படும் வௌ்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நான் நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தால் பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார் .








