ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பெண்வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,யாழ்ப்பாணம் பருத்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கி இருந்த பொன்னியல் நோய் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

பெண் வைத்தியர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவு மயக்க மருந்தை உடலில் செலுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனிப்பட்ட நபர் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக வழங்கப்பட்டது.அதனால் இவர் வேறு வழியின்றி இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன.

முப்பது வயதுடைய இளம் மருத்துவரை இவ்வாறு பலியாகி உள்ளார் .

கனவுகளை சுமந்து மருத்துவராகி

பெற்றவர்களின் கனவுகளை சுமந்து மருத்துவராகி தனது கடமையை பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர் அதிக மன உளைச்சல் மேலதிகாரியினால் வழங்க பட்டதன் காரணமாக தற்கொலைக்கு சென்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பல மருத்துவர்களின் அடக்கு முறையினால் பல தாதிகள் மருத்துவர்கள் சொல்லென இடர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது .

தனிநபர் பழிவாங்குதல்

நிறைவேற்ற பணிப்பாளராக மருத்துவமனைகள் இருக்கும் அதிகாரிகளினால் கீழ் நிலையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாதிகள் மீது கடும் தாக்குதல் தனிநபர் பழிவாங்குதல் மற்றும் சொல்லென இடர்களை அவர்கள் சந்தித்து வருவதாக அங்கு பணி புரிகின்ற பலர் இவ்விதம் குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது

திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது

திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது ,கனடாவில் தமிழர் திரையரங்குக்கு தீ வைத்த நபர்கள் கைது .

கனடா டொரண்டா பகுதியில் அமைந்துள்ள தமிழருடைய பாரம்பரிய மிகப் பெரும் திரையரங்கு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

இதேவேளை அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விடயங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் உள்ளாக்கப்பட்ட வந்தது .

அதனை அடுத்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தை அறிவதற்காக கனடா குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .

இதன் பொழுது பிரசன்னா என்கின்ற நபர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் செயலாற்றியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டாவது சந்தேகம் நபராக கருதப்பட்ட இவர் ,விசாரணை வலயத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும் ,நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என படுகிறது .

கனடிய போலீசார்

எனினும் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வருவதுடன் ,அவருடன் தொடர்புடைய வலயமைப்புகளை கண்டறியும் நோக்குடன் ,விசாரணைகளை கனடிய போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .

கனடாவில் ரவுடி அல்லது குழு நபர் என அழைக்கப்படுகின்றாவராக உள்ளவரே ,கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .

ரவுடி கும்பல்களுடன் தொடர்பு பட்டவர்களாக ,இவர்கள் உள்ளார்கள் என்ற சந்தேகத்தை, கனடிய காவல்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது .

கனடா நாட்டில் தமிழர்கள் அதி உச்ச காவல் துறை அதிகாரிகளாக கூட செயலாற்றி வருகின்றார்கள் .

அவர்களது பணிப்பின் அடிப்படையில் ,இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கனடிய நாட்டில் சாதாரண மக்கள் போன்று தமிழர்கள் கனடிய நாட்டின் உடைய காவல்துறைக்கும் உளவுத்துறைக்குமாக பணியாற்றி வருகின்றனர் .

அவர்கள் ஊடாக நெருக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட, வேளையே இந்த நடவடிக்கையில் இவர் சிக்கியதான புதிய தகவலும் வழியாக உள்ளது.

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

கணவன் உயிரிழப்பு ,அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு ,உறவினர்கள் கண்ணீரில் தவிப்பு .

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் கடை ஒன்றில் கணவர் உயிரிழந்த நிலையில் ,அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்த பொழுது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார் .

அதனை அடுத்து உங்களுடனே வருகிறேன் என கதறி கதறி அழுதிருக்கின்றார்.

மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி

அவ்வேளை மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணித்துவிட்டார் .

கணவன் மனைவி இருவரது சடலங்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

கணவன் மீது அதீத பாசத்தைக் கொண்ட மனைவி நெஞ்சுவலி ஏற்பட்டு கணவனுடன் உடன் கட்டை ஏறிய சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சம்பவம் அந்த கிராம மக்களை கண்ணீரால் அவர்களை குளிர வைத்துள்ளது .

கணவருக்கும் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு

கணவன் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு இதன் ஊடாக வெளிப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்ததாகவும் அந்த மக்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர் .

கணவன் இறந்த நிலையில் மனைவி உடன்கட்டை ஏரியா சம்பவம் ,வாலிபர்களுக்கும் காதலர்களுக்கும் ஒருவிதா புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேஜர் திலகா வான்மதி
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

மேஜர் திலகா / வான்மதி

மேஜர் திலகா /வான்மதி

மேஜர் திலகா /வான்மதி , வீர மண்ணின் நாயகியின் நினைவு நாள் இன்றாகும் .மேஜர் திலகா / வான்மதி
வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை

முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார்.

நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.

திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம்.

முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1

சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சி

987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர்.

இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார்.

சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார்.

குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.

1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள்.

பெண் போராளிகள்

உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர்.

அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.

1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார்.

கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர்.

தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை

1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார்.

ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார்.

கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.

பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்” என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார்.

ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார்.

பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார்.

மனதளவில் அன்பாகப் பழகுவார்

ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.

களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது.

1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.

அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.

மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர்.

(ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)

யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன.

சளைக்காத திலகா அக்கா

எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.

எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும்.

வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின்

வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது.

சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.

1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது

கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார்.

கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி

கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார்.

நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது.

தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார்.

இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.

தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.

ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்கா

ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர்.

ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர்.

விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை.

போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும்.

“எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.

1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள்.

திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார்.

பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்.

திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம்

திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.

அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார்.

ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.

அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.

அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது.

ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது.

இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்.

அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது.

காப்பரணுக்கு துணையாக தாக்குதல்

ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார்.

எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.

திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது.

நெஞ்சுரம் நிமிர்ந்த தோற்றம்

அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார்.

தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.

ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள்.

“போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார்.

திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது.

நெஞ்சிலும குண்டு

உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.

எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார்.

தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.

-நிலா தமிழ்.

(இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் , இலங்கை ஹரஹல்லா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

அத்துமறி நுழைந்த இவர் மீது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோஸ்தர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் .

அதன் பொழுது இந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவு

தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி முறை நுழைந்த பொழுது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வாயில் காவலாளி துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பாதுகாப்பற்ற நாடாக காணப்படுவதையும் அடுத்தடுத்து இடம்பெறுகின்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் ஏற்படுகின்ற படுகொலைகள் காயங்கள் என்பன மீளவும் அடுத்து உரைக்கின்றன.

ஆயுத கலாச்சாரத்தை கட்டுப்படுத்தி நாடு அமைதி வழியில் திரும்பி உள்ளதாக இலங்கை கூறி வருகின்ற பொழுதும் ,இவ்வாறான தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இலங்கை உலுக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி
Posted in இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி இட போவதாக தெரிவிப்பு ,இலங்கையில் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த மறுத்தால் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என யாழ்ப்பாணத்தின் முன்னாள் மாநகர உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி மக்களுக்கு அளப்பெரும் சேவையை ஆற்றிய சிவாஜிலிங்கம் அவர்களே தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம்

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் அனுராதாபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது மீளவும் தான் அவ்வாறு போட்டியிட போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .

பொதுபட்ராக ஒருவரை நிறுத்தி வடபகுதியில் போட்டியிட தயாராகி வருகின்ற நிலையிலேயே தற்பொழுது இந்த அறிவிப்பினை சிவாஜிலிங்கம் விடு த்திருக்கிறார்.

சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல குற்றச்சாட்டு

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிராக சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களுக்கு எதிரான விஷம பரப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அது இலங்கை இறையாண்மைக்கும் தமிழுக்கும் எதிரான ஒட்டுமொத்த சதி நடவடிக்கையின் என அவர் குற்றம் சுமத்தி வருகின்றார் .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் விடுத்திருக்கின்றார்.

தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை

தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை

தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை ,யாழ்ப்பாணம் நெடுந்தி பகுதியில் நபர் ஒருவர் தேயிலைச் சாயத்தை மதுபானதிற்குள் கலந்து அதனை மதுபானமாக விற்பனை செய்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 10 மதுபான போத்தர்கள் போலீசார் பெற்றுக்கொண்டனர் .

அதன் பொழுது அந்த மதுபான போதல்களை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் சில போத்தல்களில் தேயிலை சாயத்தை கலந்து அதனை மதுபானமாக ஏமாற்றி விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்ற காவல்

அவர் நீதிமன்ற காவல் எடுக்கப்பட்டு நீதி விசாரணை உள்ளாக்கப்பட்டார் .

அதனை அடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட மேற்படி விடயத்தினை அடுத்து தற்போது அந்த நபர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகின்றார் .

உணவு பண்டங்களில் கலப்புகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு பல ஆண்டு சிறை தண்டனையும் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான உணர்வு நுகர்வு மோசடிகளில் பலர் ஈடுபட்டு வருவது இதன் ஊடாக மீளவும்அம்பல உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை

பொருளாதார நெருக்கடியில் இலங்கை

பொருளாதார நெருக்கடியில் இலங்கை ,இலங்கைக்கு ஐஎம்எப் கடன் திட்டம் மீளாய்வு .

இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக IMF கடன் திட்டம் தொடர்பாக இரண்டாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது .

IMF வழங்கிய மிக முக்கியமான கொள்கை திட்டங்களை ஏற்றுக் கொண்ட இலங்கை அதன் அடிப்படையில் கடனை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது .

கொரோனா காலப்பகுதியில்

கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பலமாக பாதிக்கப்பட்டிருந்தது .

அந்த பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்டு இலங்கையில் பணம் இழப்பை தடுத்து அந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல வேலை திட்டங்களை காண்பித்திருந்தது .

அதற்கு அமைவாக புதிய கடன் மீளாய்வு மற்றும் பணவீக்கத்தை தடுத்து நாட்டிலே எவ்வாறு கட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற மிக முக்கியமான கோரிக்கைகளையும் அதை விடுத்து இருந்தது .

அதில் வரி உயர்வு மற்றும் தற்சார்பு பொருளாதார உற்பத்தியின் ஊடாக நாட்டை வலுவாக எவ்வாறு கட்டி இழுப்பது என்பது தொடர்பான பல்வேறுப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன .

இலங்கை அரசாங்கம்

அதனை அடுத்து தற்பொழுது அதனை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறை படுத்துவதற்கு தயார் என அறிவித்திருந்தது .

அதனை அடுத்து தற்போது மீளவும் நான்காம் கட்டமாக கடனை வழங்குவதற்கான மீள் ஆய்வு திட்டங்கள் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இந்த கலந்துரையாடல் அடுத்த கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது .

இந்த நிதியினை நான்கு ஆண்டுகளுக்குள் பின்னர் இலங்கை அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு

டக்கிளசின் அதிரடி அறிவிப்பு

டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு ,ஒலுவில் துறைமுகத்தை புனர் நிர்மாணம் விமானம் செய்யப் போகிறேன் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

 கிழக்கு மாகாணத்தில் அமைய பெற்றுள்ள ஒலுவில் துறைமுகத்தை புனர்நிர்மாயம் செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு தெரிவித்துள்ளார் .

துறைமுகம் தற்பொழுது புதிய வகையில்

டக்கிளஸ் தேவானந்தாவின் அமைச்சின் ஊடாக இந்த துறைமுகம் தற்பொழுது புதிய வகையில் வடிவமைக்கப்பட்டு அதனை மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கின்றார் .

அஸ்ரப் கனவையும் அதனுடைய மக்களுடைய கனவையும் நினைவாக்கும் நன்கிணைந்த திட்டமாக இந்த துறைமுகம் வெகு விரைவில் மக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மீனவ அமைச்சராக விளங்கி வருகின்ற அவர் இந்த அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .

தேர்தல் நடைபெறுகின்ற பொழுதுதான் தற்பொழுது அபிவிருத்தி மக்கள் நல்லெண்ண நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்பொழுது துறைமுகத்தினை காண வந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் இந்த வலுவில் துறைமுகம் டக்லஸ் தேவானந்தா கூறுவதுபோன்று புனர்நிமயம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டால் .அது வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் அதேபோல அவ்வாறு செய்தால் அவரை பாராட்ட வேண்டும் எனவும் அந்த மக்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர் .

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மாடுகள் மாடுவெட்டும் கூடத்தில் காவல்துறையால் மீட்பு .

யாழ்ப்பாணம் பருத்துறை துண்ணாலை பகுதியில் சட்டவிரதமாக இயங்கி வந்த மாடு வெட்ட படும் நிலையம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது .

பொலிஸ் திடீர் சுற்றி வளைப்பு

இந்த திடீர் சுற்றி வளைப்பின் பொழுது திருடப்பட்ட பசு மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தின் இதர பகுதியிலிருந்து திருடர்களால் திருடப்பட்ட மாடுகள் சட்டவிரோத மாடு வெட்டும் இடங்களில் விற்கப்பட்டு அவை இறைச்சிக்காக வெட்டப்பட்டு மக்களுக்கு உணவாக விநியோகப்பட்டு வருகிறது.

திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிப்பு

இந்த மாடு மட்டும் நிலையத்தில் மட்டுமே திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

அதில் ஒன்று நிறைமாத கண்டு தாச்சி மாடு என அடையாளம் காணப்பட்டுள்ளது .

திருடர்கள் ஈவ் இரக்கம் இன்றி இவ்வாறான கருத்தரித்த மாடுகளையும் திருடி சென்று இறைச்சிக்காக வெட்டுகின்ற கொடூரம் இடம்பெற்று வருகின்றது .

மாட்டு இறைச்சி பிரியர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள், இவ்வாறான பசு மாடுகளை வெட்டி அவற்றை நீங்கள் உஙகிண்றீர்கள் .

உங்களது உடலையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு பசுக்கள் தமது இரத்தத்தை பாலாக்கி தருகின்றன .

அதே பசு மாடுகளை கொன்று அவர்கள் உங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

நீங்கள் அதனை நல்ல சுவையாக சுவைத்து சாப்பிடுகிறீர்கள் கொஞ்சம் எனினும் விலங்குகள் மீதும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் .

இதன் ஊடாகவே இந்த செய்திகளை நீங்கள் காதில் உள்வாங்க வேண்டும்.

மனிதராக வாழ்வது மட்டுமல்ல விலங்குகள் மீதும் நாங்கள் பாசத்தினை காட்ட வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் வளர்ப்பதற்கும் நீங்கள் வளர்வதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கு, பால் வழங்கிய அதே பசு மாடுகளை, வெட்டுகின்ற இந்த கும்பலை கண்டால் நீங்கள் உடனே போலீசுக்கு தெரிவியுங்கள் மக்களே .

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம் ,இராணுவ வாகன மோதி இரு வாலிபர்கள் காயம் .

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியது .

புன்னாலை கட்டுவான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர்கள் மீது திடீரென இராணுவ வாகனம் மோதியது .

இதன் பொழுது இரு வாலிபர்களும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மோட்டார் சைக்கிள் பலத்த சேதம்

மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வேகமாக பயணித்த இ ராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது ராணுவத்தினுடைய வாகனங்கள் வேகமாக செல்வதும் அதில் பயணிகளுடைய வாகனங்கள் மோதுண்டு மக்கள் இறந்தும் வாகனங்கள் சேதமாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இராணுவத்தினருடைய தேவைகள்

பல வருடங்களாக யுத்த முடிவுற்ற பொழுதும் ,ராணுவத்தினருடைய தேவைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளதாக இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து வருகின்றது.

அவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் மிக வேகமாக பயணிப்பதும் அதனால் வீதி விபத்துக்கள் இடம் பெறுவதும் மக்கள் சொத்துக்களுக்கும் மக்களது உயிரிழக்கும் இந்த ராணுவ வாகனங்களால் ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரு ராணுவ வாகனத்தில் பயணிகள் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து சம்பவம் தொடர்பான விடையங்கள் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு எதிரான எண்ண அலைகளை தூண்டி வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன .

காயங்களுடன் வாலிபன் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காயங்களுடன் வாலிபன் மீட்பு

காயங்களுடன் வாலிபன் மீட்பு

அடி காயங்களுடன் வாலிபன் மீட்பு .வாழைச்சேனை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வாலிபன் ஒருவர் ரத்த காயத்தில் துடித்துக் கொண்டிருந்த பொழுது மீட்கப்பட்டுள்ளார் .

பேருந்து ஒன்றில் பயணித்த பொழுது பேருந்து ஒன்று தரிப்பிடம் ஒன்றில் தடுத்து நின்ற பொழுது அதில் பயணித்த இவருக்கும் சக பயணி ஒருவருக்கு முறையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாய் தர்க்கம் முற்றி அடிதடியில் முடிந்துள்ளது.

கூட வந்த பயணி இவரை கடுமையாக பொல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் .

இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த குறித்த வாலிபனை கண்ட மக்கள் அவரை மீட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .

இந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவத்துக்கான காரணம் உடனடியாக முழுமையாக தெரிய வரவில்லை .

தற்பொழுது காயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இலங்கை காவல்துறை உடனடி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த வன்முறை தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியாத பொழுதும் இவர்கள் இடையில் முன்னர் பகைமை இருந்திருக்க கூடும் என்கின்ற வகையிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்படி சம்பவம் புத்தளம் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் வாள் வெட்டு சம்பவங்கள் இவ்வாறான, தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

பெண் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் வெட்டி படுகொலை

பெண் வெட்டி படுகொலை

உறங்கிய பெண் வெட்டி படுகொலை .ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மற்றும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மறு சகோதரி மர்மநபர் ஒருவரினால் பெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

ஹொரண மீவனபலான சிரில்டன் தோட்டத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் முடித்து வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது .

அவ்வாறானவரை தற்பொழுது தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்த வேளையில் மர்ம நபர் ஒருவரினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

முகமூடி அணிந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இரு சகோதரிகளும் இரு அறையில் எவ்வாறு துவங்குகிறார்கள் என்பது கொலைகாரருக்கு எப்படி தெரியும் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குடும்பத்தினால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா ,அல்லது எதிரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்பது தொடர்பான கோணத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .

இந்த படுகொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடாக உள்ளதினை ,இலங்கை நாடளாவியரீதியில் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான மர்ம படுகொலைகள் கடத்தல்கள் கொள்ளை என்பன எடுத்து காட்டுகின்றன.

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை .இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பறவைகள் மற்றும் விலங்குகள் என்பன நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன.

இவ்வாறு களனி ஆற்றின் கரை பகுதியாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விலங்குகள் கோழிகள் உள்ளிட்டவை சடலங்கலாக மிதந்து வருகின்றன.

இலங்கை நுகர்வு அமைச்சு எச்சரிக்கை

அவ்வாறு வெள்ள நீரில் அடித்து செல்லப்படுகின்ற கோழிகளை எடுத்து சில கும்பல்கள் அதனை சுத்தம் செய்து பொது மக்களுக்கு உணவு பண்டங்களாக விற்பனை செய்து வருவதாக இலங்கை நுகர்வு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோழிகளை உண்பதால் அதில் துர்நாற்றங்கள் வீசுவதாகவும், நோய்க்கிருமிகள் உள்ளதாகவும் எனவே கோழிகளை விரும்பி உண்ணும் மக்கள் ,இவ்வலை மிக அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த கோழிகளை உண்கின்ற பொழுது அதில் இருக்கின்ற தொற்றுநோய் மக்களுக்குள் பரவி உயர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் .

நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோழி விற்பனை

எனவே இவ்வாறான காலப் பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோழிகளை சில கும்பல்கள் விற்பனை செய்து வருவதாகவும் ,அதனால் மக்களுடைய உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது .

இவ்வளோ மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

நாட்டுக் கோழிகளே இவ்வாறு பெரும்பான்மையாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

அதனால் கோழிகள் மற்றும் விலங்குகள் உள்ளிட்டவற்றை உண்பதை மக்கள் தவிர்த்து வருமாறு அதன் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே கோழி பிரியர்கள் மற்றும் விலங்கு பிரியர்களே இக்காலத்தில் மிக அவதானமாக செயல்படுங்கள்.

நீங்கள் உண்ணுகின்ற அந்த உணவில் நோய்கள் காணப்படுகின்றன அவற்றை உண்ணுகின்ற போது உங்கள் உடல் உறுப்புகள் சேதம் அடைந்து உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுகாதார அமைச்சும் நுகர்வோர் அமைச்சும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

கோர விபத்து மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து மக்கள் காயம்

கோர விபத்து மக்கள் காயம்

கொழும்பு வீதியில் கோர விபத்து மக்கள் காயம் ,செவ்வாய்க்கிழமை காலை கட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது .

இந்த வான் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

பேருந்தும் பல சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் கண்டியிலிருந்து கட்டநோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவத்தது .

பேருந்து வான் நேருக்கு நேர் மோதி விபத்து

பேருந்து வான் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதால் கொழும்பு கண்டி பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான வாகன விபத்துகளினால் மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருகின்றனர் .

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பது மிக அபாயகரமான நடவடிக்கை ஒன்றாக காணப்படுகிறது .

தொடரும் பேருந்து விபத்துக்கள்

தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன .

தனியார் பேருந்துக்கும் அரச பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற போட்டி காரணமாக மிக வேகமாக தனியார் பேருந்துகளும் அரச பேருந்துகளும் போட்டி போட்டு பயணிப்பதால் இந்த விபத்து சம்பவங்கள் ஏற்படுவதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர் .

வீதி போக்குவரத்து முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான மீதி விபத்து களில் இருந்த மக்களையும் வாகனங்களையும் பாதசாரிகளையும் காப்பாற்ற முடியும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கட்சி மாறும் முதலைகள்
Posted in இலங்கை செய்திகள்

கட்சி மாறும் முதலைகள்

கட்சி மாறும் முதலை தலைகள்

கட்சி மாறும் முதலைகள் ,சூடு பிடிக்கும் தேர்தல் கட்சி மாறும் முதலைகள் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது கட்சி மாறும் நடவடிக்கையில் பல பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

அந்த வகையில் எதிர்க்கட்சி சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயல்படுவதற்கு டலஸ் அழகு பெருமாள் தயா சிறி உள்ளிட்ட மூவர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த மூவரும் சஜித்துடன் இணைந்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை முன்னெடுத்து செல்வதற்கு தாங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு வார்த்தைகளை நடத்தி அங்கஜனை தமது கட்சி சார்பாக இணைத்திருந்தார்.

அங்கஜன் அதிகமான வாக்குகளை பெற்ற ஒருவராக அங்கு என் யாழ்ப்பாணத்தில் திகழ்ந்து வருகின்றார் .

அதேபோலவே தற்பொழுது இந்த மூன்று பேரும் மிக முக்கியமானவர்களாக கருதப்படுவதால் சஜித்துக்கு மிகப்பெரும் பலம் கிடைக்கப்படும் என கருதப்படுகிறது .

சூடு பிடிக்கும் தேர்தலில் கதிரை மாறும் காட்சிகள் ஆரம்பித்துவிட்டன .

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன் ,பொது வேட்பாளர் கோமாளிக்கூத்து சுமந்திரன் இப்படி அறிவிப்பு. இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதனூடாக தேர்தல் ஒன்றை சந்திப்பதற்கு தமிழ் ஆதரவு காட்சிகள் செயலாற்றி வருகின்றனர்.

மிக முக்கியமான ஒருவர் இந்த பொது வேட்பாளராக நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடியலுக்காகவும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தாங்கள் போராடி வருவதாக தெரிவித்துவரும் எம்.எ சுமந்திரன் அவர்கள் ,தற்பொழுது இந்த கருத்துக்கு எதிராகவும் இந்த நபர்களுக்கு எதிராக தமது கட்சி மிகப் பெரும் போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன் அவர்கள் தலைவராக பதவி ஏற்றத்தை அடுத்து ஸ்ரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் உள்ள கப்போர் உச்சமாக வெடித்து பறக்கிறது .

இந்த வேளையில் தனது ஆதரவு சக்திகளையும் ஆதரவு கட்சி உறுப்பினர்களையும் இல்லாது அழிக்கும் நடவடிக்கையில் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக உள் கட்சி சார்பு வட்டாரங்கள் சிலர் இப்படியும் தெரிவிக்கின்றனர் .

சுமந்திரன் தொடர்ந்து இலங்கை சார்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்களின் விடியலுக்காக அவர் ஒருபோதும் துணை நின்றது இல்லை என அப்பாவி மக்கள் தமது பாமர கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

சுமந்திரன் கட்சிகளை உடைத்து வாக்கு கோட்டைகளை உடைத்து அந்த கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் .

அதனால் ஆளும் வர்க்கங்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது ,தலையில் ஏறி ஆடுவதற்கான வழி வகைகளை ,சுமந்திரனை செய்து கொடுப்பதாகவும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

மோதிய கார் மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோதிய கார் மக்கள் காயம்

மோதிய கார் மக்கள் காயம்

மோதிய கார் மக்கள் காயம் ,மின் கம்பத்துடன் மோதிய கார் பல மக்கள் என போலீசார் தெரிவிப்பு .

மட்டக்களப்பு தாங்குடா பகுதியில் ஆதி சொகுசு கார் ஒன்று மின்கம்பத்துடன் திடீரென மோதி விபத்து சம்பவித்தது .

இந்த விபத்தின் பொழுது காரில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்தாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் பொழுதே மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் சாரதிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

சாரதிகள் வீதி விதிமுறைகளை பின்பற்ற மறந்து அதிகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிக வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வது இதன் ஊடாக இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக இதன் மூலம், அம்பலப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதிகளிலிருந்து ஈக்களில் இருந்து பரவும் ஒரு வித வைரஸ் காரணமாக காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருவதாக மக்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சர் அவசர எச்சரிக்கையுடைய விடுத்துள்ளது.

வெள்ள நீர்கள் வடிந்து வருகின்ற பகுதியில் ஈக்களில் இருந்து புதிதாக குஞ்சுகள் பொரிப்பதாகவும் முதிர்ந்த குஞ்சுகளின் ஊடாக அவை உணர்வுகளை தேடிச் சென்று குப்பைமட்டிலிருந்து உணவுகளை தேடி உண்பதாகவும் அதிலிருந்து வருகின்ற ஒரு விதமான வைரஸ் பரவல் மக்கள் மீது ஏற்படுகிறது .

இதனால் மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவித காய்ச்சல் நோயிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்களை மிக எச்சரிக்கையாக விழிப்புணர்வாகவும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈக்கள் வயிற்று நோய், சத்தி ,வாந்தி பேதி ,தலை சுற்று என்பன அவர்களுக்கு ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது .

அதிகமாக வயிற்றோட்டம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சுகாதாரத் தன்மையற்ற பகுதிகளில் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்கள் தம்மைத்தாமை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

சுற்றுப்புறங்களை மீளவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களே கவனமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு உங்களுக்கு மீளவும் ஒரு முறை அறிவித்துள்ளது.

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு ,தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும் மதுரை ஆதீனம் கருத்தால் பரபரப்பு .

தமிழீழ மக்களுக்கு தமிழீழமே ஒரே தீர்வு என மதுரை ஆதீனம் முழங்கியுள்ளார் .

,இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுடைய இனப்படுகொலை தொடர்பான விடையங்கள் ஆராயப்பட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளது .

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்று கொடுக்க வேண்டும் என மதுரை ஆதீனம் இப்படி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் .

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை அடுத்தம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 40 தொகுதிகளையும் வென்று ஆளுகைக்கு உட்படுத்தியது .

அதனை அடுத்து தமிழர்களை கொலை செய்வதற்கும் அவர்களுடைய இன அழிப்பை மேற்கொள்வதற்கும் ,துணையாக இருந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்கு அளித்தது ,மன வேதனை அளிப்பதாக மதுரை ஆதீனம் குமுறியுள்ளார் .

அதனை அடுத்து இந்தியா பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் அதன் பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் ஈழத்தை வேண்டி கொடுக்கும்படி தான் பேச உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவிக்கின்றார் .

சீமானுடைய கட்சி பாரதிய ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

பணம் கொடுக்காமல் பாரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்பொழுது சீமானுடைய வளர்ச்சி மிகப் பெரும் வளர்ச்சியாக உள்ளது.

அவர்களது நாளை தமிழகத்தை ஆண்டால் அதுவே தமிழ் இனத்தை அமைப்பதற்கான அல்லது தமிழீழ மக்களுக்கான ஒரு விடியலை பெற்றுக் கொடுக்கும் கட்சியாக நாம் தமிழர் மாற்றம் பெற்ற்றுவிடும் .

அதன் பின்னர் இந்தியாவில் ஆளும் பிரதமர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கின்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழ்ஈழத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை ஆதீனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

சூட்சுமமாக பேசப்பட்ட அவரது இந்த பேச்சின் வாயிலாக இனி இந்தியாவில் பேசும் பொருளாக மாற்றம் தமிழீழம் வரப்போகிறது .

அதற்கு நடந்த முடிந்த மக்களவை தொகுதியில் இடம் பெற்ற தேர்தல் வாக்கெடுப்பு முடிவுகள் நாம் தமிழரையும் முன் தள்ளி உள்ளதை இதற்கு காரணம்.

சீமான் நிச்சயமாக எதிர்க்கட்சியாகவோ அல்லது மத்திய அரசின் ஊடாக தமிழகத்தை ஆளுமொரு ஆட்சியை கூடத்தில் அவர் அமர்ந்தால் .

நிச்சயமாக அவர் கூறியதை நடைமுறைப்படுத்தி விடுவார் அதன் பின்னர் தமிழகத்தை பாரதிய ஜனதா கட்சியில் ஆள முடியாது என்கின்ற

நெருக்கடியை ஏற்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது மதுரை ஆதீனம் இப்படி தெரிவித்துள்ளது .

தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழமே தீர்வு என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

அது தவிர மோடியின் உடைய பிரதமர் பங்கேற்பு நிகழ்வில் கூட இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அவசரமாக கலந்து கொண்டதை இங்கே நினைவு கூறத்தக்கது