கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!
ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!
கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!
உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !
-நிலாதமிழ்
26.11.2023
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு







