Tag: பொருளாதார
பொருளாதார நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு
பொருளாதார நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு
பொருளாதார நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ,அரசாங்கத்தின் வலுவான ஒப்புதலுக்கு மத்தியில் இலங்கை மேலும் நம்பிக்கையுடன் மாறியுள்ளது என்று வெரிட்டே ஆராய்ச்சி கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
இலங்கை மக்கள் நாட்டின் திசை குறித்து நம்பிக்கை
இலங்கை மக்கள் நாட்டின் திசை குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கத்திற்கான வலுவான ஒப்புதல் மதிப்பீடுகள் மற்றும்
பொருளாதார நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக, வெரிட்டே ஆராய்ச்சி நடத்திய சமீபத்திய “தேசத்தின் மனநிலை”
கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புக்கான கருத்துக் கணிப்பு கூட்டாளியாக வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடெட் இருந்தது.
பிப்ரவரி 2026 தொடக்கத்தில் அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு 65% ஆக இருந்தது. பிழையின் ±3 சதவீத புள்ளி வித்தியாசத்துடன், இது ஒரு வருடம்
முன்பு பதிவு செய்யப்பட்ட 62% இலிருந்து புள்ளிவிவர ரீதியாக நிலையான அதிகரிப்பைக் குறிக்கிறது. பிப்ரவரி 2025 முதல் மறுப்பு மதிப்பீடு குறைவாகவும் பெரும்பாலும் மாறாமலும் இருந்தது.
கருத்துக் கணிப்புகளின் நான்கு ஆண்டு வரலாற்றில்
கருத்துக் கணிப்புகளின் நான்கு ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக, தற்போதைய பொருளாதார நிலைமைகளை “நல்லது” அல்லது “சிறந்தது”
என்று மதிப்பிடும் பதிலளித்தவர்களின் பங்கு, அவர்களை “மோசமானது” என்று விவரித்தவர்களை விட அதிகமாக இருந்தது.
பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளன. பொருளாதாரம் “சிறப்பாகி
வருகிறது” என்று கூறிய பதிலளித்தவர்களின் விகிதம், ஒரு வருடத்திற்கு முன்பு 55% ஆக இருந்தது, 64% ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், பொருளாதாரம்
“மோசமடைந்து வருகிறது” என்று உணர்ந்தவர்கள் பெரும்பாலும் மாறாமல் இருந்தனர். கருத்து இல்லாத பதிலளித்தவர்களின் சதவீதம் குறைந்துள்ளது,
இது நாட்டின் பொருளாதார திசையைப் பற்றி அதிகமான மக்கள் தெளிவான மற்றும் பெருகிய முறையில் நேர்மறையான கருத்துக்களை உருவாக்கியுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
இந்த உணர்வுகள் -100 முதல் +100 வரையிலான பொருளாதார நம்பிக்கைக் குறியீட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பில் +36 ஐப்
பதிவு செய்தது, இது ஒரு வருடம் முன்பு பதிவு செய்யப்பட்ட +14 இலிருந்து கூர்மையான முன்னேற்றம், மேலும் வாக்கெடுப்பின் நான்கு ஆண்டு வரலாற்றில் மிக உயர்ந்த நிலை.
கூடுதலாக, பதிலளித்தவர்களில் 59% பேர் நாட்டில் “விஷயங்கள் நடக்கும் விதத்தில்” திருப்தி அடைவதாகக் கூறினர். நான்கு ஆண்டு வாக்கெடுப்பில் ஒட்டுமொத்த திருப்தி 50% ஐத் தாண்டியது இதுவே முதல் முறை.
கடந்த கால அரசாங்கங்களுக்கு எதிராக தற்போதைய நிர்வாகத்தை மதிப்பிடும்போது, போதைப்பொருள் மற்றும் குற்றங்களைக் குறைப்பதற்கான
முயற்சிகளுக்கு பதிலளித்தவர்கள் மிக உயர்ந்த நேர்மறையான மதிப்பீடுகளை வழங்கினர் – ஊழலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலாகவும் தரவரிசைப்படுத்தினர்.
அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு
அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு ,அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம்
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த அரசாங்கம் எவ்வாறு தலையிட வேண்டும் என்பது குறித்தும் அதற்கு வசதிகள் அளிப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த அரசாங்கங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் பயனுள்ள திட்டங்களுக்குப்
பயன்படுத்தப்படவில்லை எனவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தேசிய திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கடன்களை ஒரு வருடத்திற்குள் வசூலிப்பது குறித்தும் அந்த வர்த்தகர்களிடம் உள்ள அரிசி கையிருப்புகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேல் தளத்தில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.
தற்பொழுது அமுலில் இருக்கும் நிவாரணம் வழங்கும் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை அடையாளங் கண்டு நிவாரணங்கள்
தேவையான சமூகத்தை சரியாக அடையாளம் கண்டு, அந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயத்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு, பிரதி திறைசேரி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும்
வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும்
வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும் ,வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை
அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
அதேபோல் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்குமுறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஒரு சிலருக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு
மாறாக பிரதேச மற்றும் கிராமிய மக்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மேற்படி வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து
இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதோடு, மத்திய அதிவேக வீதியின் மீரிகம – கடவத்தை பகுதியை நிர்மாணிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகும் என்றும், அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குமுறைக்கமைய
திட்டமிடுவதால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது சுற்றாடல் பாதிப்புகள், நிதி பாதிப்புகள், பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பவற்றை கருத்தில் கொண்டு பொது
மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
புகையிரத ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் புகையிர தண்டவாள வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான
சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்திர உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

பொருளாதார நெருக்கடியில் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் இலங்கை ,இலங்கைக்கு ஐஎம்எப் கடன் திட்டம் மீளாய்வு .
இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக IMF கடன் திட்டம் தொடர்பாக இரண்டாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது .
IMF வழங்கிய மிக முக்கியமான கொள்கை திட்டங்களை ஏற்றுக் கொண்ட இலங்கை அதன் அடிப்படையில் கடனை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது .
கொரோனா காலப்பகுதியில்
கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பலமாக பாதிக்கப்பட்டிருந்தது .
அந்த பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்டு இலங்கையில் பணம் இழப்பை தடுத்து அந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல வேலை திட்டங்களை காண்பித்திருந்தது .
அதற்கு அமைவாக புதிய கடன் மீளாய்வு மற்றும் பணவீக்கத்தை தடுத்து நாட்டிலே எவ்வாறு கட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற மிக முக்கியமான கோரிக்கைகளையும் அதை விடுத்து இருந்தது .
அதில் வரி உயர்வு மற்றும் தற்சார்பு பொருளாதார உற்பத்தியின் ஊடாக நாட்டை வலுவாக எவ்வாறு கட்டி இழுப்பது என்பது தொடர்பான பல்வேறுப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன .
இலங்கை அரசாங்கம்
அதனை அடுத்து தற்பொழுது அதனை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறை படுத்துவதற்கு தயார் என அறிவித்திருந்தது .
அதனை அடுத்து தற்போது மீளவும் நான்காம் கட்டமாக கடனை வழங்குவதற்கான மீள் ஆய்வு திட்டங்கள் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த கலந்துரையாடல் அடுத்த கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது .
இந்த நிதியினை நான்கு ஆண்டுகளுக்குள் பின்னர் இலங்கை அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்.
சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்தது. சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
கொழும்பு ஐ.ரி.சி. ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம். அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார்.
அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும் என்றார்.
எதிர் வரும் தேர்தலில் மக்கள் ஆதாராவை பெற்றுக்கொள்ள ரணில் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிட ஹக்கது .
Featured
பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் ஜனாதிபதி ரணில்
பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் ஜனாதிபதி ரணில்
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை
உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற ‘யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்’ உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
‘ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்’ என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்


























