தகரம் வெட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தகரம் வெட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

தகரம் வெட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

தகரம் வெட்டியதில் ஒருவர் உயிரிழப்பு ,யாழ்ப்பாணத்தில் உள்ள இரும்பகம் ஒன்றில் தகர அட்டியை நகர்த்த முற்பட்டபோது தகரம் வெட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை

இவ்வாறு உயிரிழந்தவர் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா தனஸ்குமார் (வயது 36) என்பவராவார்.

கடந்த 14 ஆம் திகதி தகர அட்டியை நகர்த்த முயன்ற போது தகரம் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு ,யாழ். சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில்,

நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு

பெட்டி ஊடாகச் சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே வீழ்ந்து படுகாயமடைந்திருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

அவர் உடனடியாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே
உயிரிழந்துள்ளார்

விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்
Posted in உலக செய்திகள்

விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்

விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்

விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் ,த.வெ.க. நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர்.

கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு

இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக கரூர் நகர பொலிஸ் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார்

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு ,யாழ். ஏழாலை மயிலங்காடு ஞான வைரவர் ஆலய நித்திய பூசகர் ஆலய அர்த்த மண்டபத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன்

இவ்வாறு உயிரிழந்தவர் கோவில் வீதி, சுதுமலை தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்பவராவார்.

குறித்த, பூசகர் இருமல் சளி காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் மறுநாள் சளிக்கு ஆவியும் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்துக்கு பூசைக்கு சென்ற நிலையில், அர்த்தமண்டபத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை

மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனையில் நுரையிரலில் இரத்த அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன்

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கியுள்ளார்.

அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை அறிவிப்பு: இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, குளங்கள் மற்றும் ஆறுகளில் நீராடும்போது பொதுமக்கள், குறிப்பாக

சிறுவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டலமே ஹெடகாரயா" யானை உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு

கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு

கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு ,6 மாதங்களுக்கும் மேலாக கண்டலம ஏரி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த ‘கண்டலமே ஹெடகாரயா’ யானை இன்று (13) பிற்பகல் உயிரிழந்தது.

25 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்த யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியதன் காரணமாக

கடந்த சில மாதங்களாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தது.

மனித-யானை மோதலின் விளைவாக இந்த காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தது.

இந்த யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு வகையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு ,ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததுடன், மற்றொருவர் மீது

தெய்வம் ஆடியவர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி

பெரும் பதற்றம்

நாளான நேற்று (10) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பதற்றம்

இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்த போது, 37 வயதான ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கியதில்

இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக்கொண்டிருந்தவர், இன்னொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

யாழில் விபத்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் விபத்து ஒருவர் பலி

யாழில் விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி

விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.

மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்.

இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது

எதிர்த் திசையில் வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில்

மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர் மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

முல்லைத்தீவில் சிறுவன் உட்பட இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி முல்லைத்தீவில் 10 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதி

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள் முல்லைத்தீவில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை கவலையில் மூழ்கவைத்துள்ளது.

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணி

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்

மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

மாஞ்சோலை வைத்தியசாலை

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கியதில் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.

இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை

மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வெற்றிபெற்றோர் தத்தம் பிரதேசங்களை அன்றாடம் கண்காணித்து, இவ்வாறு வளர்ந்திருக்கும் மரங்கள், தேங்கியிருக்கும் ஆறுகள்,

பழுதடைந்திருக்கும் கிணறுகள், உடைந்திருக்கும் பாலங்கள், வீதிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுத்திருக்க கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

காலிக்கு சென்ற பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலிக்கு சென்ற பஸ் விபத்து

காலிக்கு சென்ற பஸ் விபத்து

மட்டக்களப்பிலிருந்து காலிக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை நாட்களாக வீதி விபத்துக்களும் அதனால் பல உயிரிழப்புக்களும் நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு என்ன நடவடிக்கையில் ஈடுபட்டதென தெரியவில்லை.

இருப்பினும், பஸ்கள் சரியான நிலையில் இருக்கின்றதா என பரிசோதனை செய்த அரசு, அதனை ஓட்டும் சாரதிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என பார்க்க தவறி விடுகின்றனர்.

இதனாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேரிடுகின்றது எனவும் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கின்றனர் ர்னவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலமை எங்க போய் முடியுமோ

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்.

உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நால்வரில் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு, என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொத்மலை பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்தவர்களில் 21 பேர் பலியாகி இருந்தனர் .

தற்பொழுது அதி ஆபத்தில் இருந்த, 21 வயதுடைய வாலிபரம் தற்பொழுது மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

அதனை அடுத்து கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

44 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்தும் இந்த விபத்தில் காயப்பட்டவர்கள் அதிதீவிர சிகிச்சை பெற்ற சிலருக்கு சிகிச்சை பெற்று வருவதால், அவர்களும் ஆபத்தானில் உள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களுக்குள் மூன்று பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு தற்பொழுது மக்கள் பெரும் அச்சத்தில் நுழைந்துள்ளது இந்த விபத்துக்கள் கோடிட்டு காட்டுகின்றன.

அரசும் ,அரச அதிகாரிகள் காவல்துறையின் அலட்சியப் போக்கும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க மறுத்து வரும் செயல்பாடே , இந்த உயிர்ப்பலிக்கு காரணம் என மக்கள் சமூகம் குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கண்டியிலும் பஸ் விபத்து 20 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம் கண்டி, அலதெனிய, யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் , கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,

பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 21க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, ஹட்டன் வீதியில் 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் நேற்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரே பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு வீதி விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு ,கடந்து நிற்கறிகள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 21 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இந்த விபத்தில் பலியானவர்களில், சிறுவர்கள் முதியவர்கள் உள்ளடங்களாக 21 பேர் என இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்தில் சிக்கிய பொழுது .அதில் 70 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் ,அதன் பொழுது இந்த 21 பயணிகள்மரணித்துள்ளதாகவும், பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற .வீதி விபத்தில் நால்வர் பலியாகி .எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டு வருகின்றனர் .

இவ்விதம் நோக்கின் ,மாதம் ஒன்றுக்கு 120க்கு மேற்பட்டவர்கள், வீதி விபத்தில் இலங்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் வருடம் தோறும் 36,000 விபத்துக்கள் ஏற்படுவதாகவும் ,மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது .

இந்த விபத்துக்களை தடுக்க ,அரசு என்ன வழி செய்யப்போகிறது. மக்களை எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு ,மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு ,குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் துறை தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சடலங்கள் இனம் காண முடியாத அளவிற்கு உள்ளன.

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு ,மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்து, ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பேருந்து கல்லடிப்பால சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.