Tag: body
பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்
பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்
ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு
பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவிருந்தது.
உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்துடன் சென்ற உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன், வட்டவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்
தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
இலங்கை தர்மபுரம் ,குமாரசாமிபுரம் கிராமத்தில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கிணற்றிக் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது படு கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்
சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து
நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்
முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது
உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட
இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .
மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன
எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்
வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்
இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இறந்த நிலையில் முஸ்லீம் நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது இறப்பு கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
48 வயதுடைய நபரே இவ்வாறு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்
சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்
நெதர்லாந்து – Schiphol சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரது சூட்கேசில்
இருந்து மனித உடல் பாகங்கள் மீட்க பட்டுள்ளன .
இந்த மனித உடல் பாகங்களை ஏன் எடுத்து வந்தார்கள் ,இது யாருடைய சடல பாகம் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .
நெதர்லாந்து நாட்டின் குற்ற புலனாய்வு துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
எனினும் எந்த விமானத்தில் எந்த நாட்டில் இருந்து இந்த மனித சூட்கேஸ் சடலம் வந்துள்ளது என்பது தொடர்பாக
விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்

குப்பை வாளியில் இருந்து மீட்க பட்ட சிசு
குப்பை வாளியில் இருந்து மீட்க பட்ட சிசு
சிங்கப்பூரில் -Aljunied-Hougang Town Council. பகுதியில் குப்பை வாளி ஒன்றுக்குள் பை ஒன்றில் சுற்றப்பட்டு வீச பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்க பட்டுள்ளது .
குப்பை அகற்றும் கிளீனர் ஒருவர் சிசுவை கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சிசு மீட்க பட்டு
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளது
தற்பொழுது குறித்த சிசுவின் தாயாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் video







