Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
எல்லாம் உன்னால் உனக்கு சமர்ப்பணம்
எல்லாம் உன்னால் உனக்கு சமர்ப்பணம்
பத்து விரல் மீட்ட
பாடுதடி வீணை – உன்
பா வாடை போல
ஆடுதடி மேடை
தட்டி தாளம் போட – நீரில்
தாமரையும் ஆட
வற்ற வைக்க வானம்
வந்து வெயில் போட
கச்சேரி நடக்குது – இங்கு
காதல் ஒண்ணு பிறக்குது
உள்ளம் எல்லாம் மகிழ
உருண்டு வாயு பாடுது
எனக்கு பிடிச்ச மெட்டை – நீ
எடுத்து இங்கு பாட
பூமி அதிருது – இந்த
பூ கோளம் சூளறுது
நல்ல வரி போட
நாவும் எழுந்து பாட
ஆடுதிங்கு மேடை
உன் பா வாடை போல …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-07-2022
கோபம் தவிர்
கோபம் தவிர்
என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?
உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே
எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே
உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா
ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே
கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022
உன்னை தா எனக்கு
உன்னை தா எனக்கு
உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு
நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
இதயமதை ஓடி வந்து தந்துவிடு
நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
மூச்சிழக்க பேசும் உன் உதடு
முத்தமிட நீ எனக்கு தந்துவிடு
உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-07-2022
நீயே என் கவிதை
நீயே என் கவிதை
இன்றொரு கவிதை கண்டேன்
இதயம் மகிழ்ந்து நின்றேன்
நுண்ணுயிர் போல நுழையும் – உன்
நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்
விண்ணது எழுந்து ஆடும்- உன்
வீரிய குரலது கண்டால்
பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
பொடி படும் தமிழது கண்டால்
பாவையர் கூடி வந்தால் – அட
பாவும் உனக்குள் மோதும்
பாவையர் கூடி பாடின் – அட
பகலும் உனக்குள் இருளும்
வைர முத்து குரலோ
வந்து காதில் வீழ்ந்தால்
துள்ளி ஆடும் புல்லும் – மழை
துளியை தூவும் வானம்
கவியின் அழகும் நீதான் – அந்த
கடலின் அலையும் நீதான்
மொழியின் மலர்வு நீதான் – உன்னை
மொழிந்தேன் இன்று நான்தான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-07-2022
வன்னி மைந்தன் கவிதைகள்
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
ஆணி வேர் ஒன்று அறுந்தது
ஆணி வேர் ஒன்று அறுந்தது
உன் மக்கள் அவை காக்க
உரமேறி நின்றவா
தம் மக்கள் உனை காக்க
தவறியது ஏன் நண்பா
பின்னிருந்து இரு குண்டு
பிய்த்து நெஞ்சுடைக்க
மூச்சிழந்து போனாயே
முகவரி தொலைத்தாயே
காட்சிகள் இது ஒன்றாய்
காணொளியில் நீ இருக்க
வீச்சிழந்து போனவனே
வித்துடல் ஆனாயே
பேச்சிழந்து போவதற்கா
பேராசை நீ கொண்டாய்
அறுபத்தெட்டு அகவையில
ஆறடியில் ஏன் உறைந்தாய்
உன் துயரில் உலகெல்லாம்
உனை எண்ணி அழுகுதடா
உதயமாய் ஒளித்தவனே
உறக்கத்தில் ஏன் ஒளிந்தாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-07-2022
வன்னி மைந்தன் கவிதைகள்
08-07-2022 ஜப்பான் முன்னாள் பிரதமர் shinzo Ape சுட்டு கொலை செய்யப்பட்ட துயரில் வடித்தவை
நீ தான் மனிதன்
நீ தான் மனிதன்
ஏதென்ஸ் நகரின் கடற்கரையும்
எழுந்து நடக்கிறதே
எடுத்தெறிந்த வாய்கல் எல்லாம்
ஏறி உன்னை போற்றுதே
சாதனையின் நாயகனாய்
சக்கரடீஸ் ஆனவனே
சாவின் இறுதி நொடியிலும்
சாதனைகள் படைத்தவனே
நஞ்சந்த கோப்பையில
நா வந்து நனைக்கையில
அஞ்சாது குடித்தவனே
ஆயுளை முடித்தவனே
எழுதவோ படிக்கவோ
ஏதறியா நீ தானே
புரட்சியின் காவலனாய்
புகலிடத்தில் நீ அமர்ந்தாய்
நீ தான் மனிதன்
வீரத்தை விதைத்தவனே
வீழ்ந்தின்று போனவனே
நான் உன்னை படிக்கையில
நான் பார்க்க நீ இல்லை
உன் வீரம் எனக்கிருக்கு
உன் உள்ள செருக்கிருக்கு
நீதிக்காய் நிற்பவரை
நீசகர் கொல்வாரம்
இறக்கையில ஏதும் இல்லை – நீ
எடுத்தேதும் போகவில்லை
நீதியின் தத்துவத்தை
நீயுரைத்தாய் மறக்கவில்லை
வாழ்ந்தாலும் உன் போல
வாழ்ந்திங்கு மடியனும்
வளர் பிறையாய் அறிவுதன்னை
வளர்த்திங்கு இறக்கணும் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-06-2022
வன்னி மைந்தன் கவிதைகள்
கிரேக்க புரட்சியாளன் சக்கரடீஸ் வரலாறு படித்து கண் கலங்கிய போது
( உலக சரித்திரம் படைத்த சாதனைகள் -10 பேர் வரலாறு படித்தால் உனக்கு பெறுபேறு )
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
ஊரும் கதற உறவும் கதற
உன்னை தேடுறேன் – நீ
உள்ளம் தந்தால் போதும் நானும்
உயிரே வாழுவேன்
ஆசை உன்னில் வைத்து விட்டேன்
அதனால் பாவமே – என்
ஆயூள் முடிவை நீயே சொல்வாய்
அன்பே தாங்குவேன்
நீரை போல ஓடி வரும்
நீளம் தாண்டுவேன்
நீயும் வந்தால் போதும் – இந்த
நிலவை வாங்குவேன்
காடும் மலை கடந்து வந்தால்
காட்சி காணலாம்
கடைசி வரை வாழும் வாழ்வில்
நீட்சி பேணலாம்
உன்னில் ஒன்றை மட்டும் தானே
உயிரே கேட்க்கிறேன்
உன் உள்ளம் தந்தால் போதும்
உன்னை தாங்குவேன் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2022
உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!
உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!
இன்றைய பொழுதில் எம் நிகழ்வு
இதயமே உனக்கு தெரிகிறதா
இன்றைய நாளில் இணைந்தோம்
இன்றந்த நாள் புரிகிறதா
ஆண்டுகள் நூறு கழிந்தாலும்
அதுபோல் சுகமொன்று மீள்வருமா
அத்தனை ஆனந்தம் அதிலிருக்கு
அன்பே உனக்கு தெரிகிறதா
துளியாய் கழிந்த நிமிடங்களை
தூசி தட்டி பார்த்திடுவாய் – கண்
தூரிகையால் எனை வரைந்த
துடிப்பை நீயும் புரிந்திடுவாய்
கொட்டிய கண்ணீர் துளிகளையே – ஒரு
கொள்கலன் கொண்டு நிரப்பிடலாம்
கொண்டை கலைந்த நிமிடங்களை
கொட்டி சேதி சொல்லிடலாம்
பக்கத்தில் நீ இருந்த நிமிடங்களோ – ஒரு
பட்டி பொங்கல் போலிருக்கும் – இன்று
பக்கங்கள் திறந்து பார்க்கையிலே
பார்விழி இரண்டில் நீர் இருக்கும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-06-2022
இவளுடன் வாழ விடு ..!
இவளுடன் வாழ விடு ..!
காத்திருந்தேன் நேற்று வரை
காணவில்லை நீ மயிலே
கண் விழித்து நானெழுந்தேன்
கண்ணெதிரே நீ குயிலே
முந்தினத்து கற்பனைகள்
முத்த மழை பொலிந்து விட
வெட்கத்தில நீ தவித்தாய்
வேர்வையில உடல் குளித்தாய்
பக்கத்தில நீ இருக்க
பகலிரவு தெரியவில்லை
சொர்க்க மதாய் நீ விளங்க
சோகமதை காணவில்லை
இறக்கும் வரை உன்னுடனே
இதயமே இருக்க வேண்டும்
இத்தனை நாள் வேண்டுதலை
இறைவா நீ தர வேண்டும் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2022
தமிழன் அழிந்த நாள் ….!
தமிழன் அழிந்த நாள் ….!
நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா
ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு
வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு
படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ
ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ
முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022
நினைவில் வைத்து கொள் …!
நினைவில் வைத்து கொள் …!
தீயும் ஒருநாள் எரியும் எரியும்
தீங்கு அதில் பொரியும் பொரியும்
வாழ்வு தந்தார் வாசல் வரும்
வாழ் வழித்தார் வீதி வரும்
காலமதில் காட்சி விழும்
கண்கள் அது பூத்து விழும்
வாய் இருந்தால் சிரித்து விடு
வார்த்தை இரண்டை ஒடித்து விடு
வேர் மறைத்து நீர் நடந்தால் – ஆணி
வேர் பிடித்து முளை எழும்
ஆணவத்தை தலையில் வைத்தால்
ஆயூள் விரைவினிலே வாசல் வரும்
கண்ணிருந்தும் பார்வையிலா
காலமதில் முடங்கி இருப்பாய்
கனி மரத்து தோப்பறிந்து
கால மெல்லாம் அழுதிருப்பாய்
ஏதுமில்லை என்ர றிந்து
எவரையும் நீ ஏறிந்திடாதே
ஏற்றமது முளைத்து விட்டால்
ஏணி அவர் மறந்திடாதே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-04-2022
இன்றே இறந்து விடு ….!
இன்றே இறந்து விடு ….!
குண்டு வீசி குருதி குடித்தாய்
குரல் வளை நடுங்கிறதா – உன்
குலமே அழிகிறதா
கூண்டு சிரிக்கிறதா
பயந்தார் என்றே
பகிடிகள் செய்தாய்
பழிகள் துரத்திறதா – இன்று
பகமை விரட்டிறதா
கெஞ்சி அழுதார்
கேளிக்கை செய்தாய்
கேடு தெரிகிறதா – இன்று
கோட்டை சரிகிறதா
ஆடிய காவடி
அத்தனை மாறினர்
அடடா இரத்தம் கொதிக்கிறதா – இன்று
அடக்க முடியலையா
வாலை ஆட்டியே
வாசல் வந்தவர்
வாயில் மிதிக்கிறதா – அட
வார்த்தை தெறிக்கிறதா
கொள்ளை அடித்தவர்
கோட்டை பிடித்தவர்
அரியணை சாய்கிறதே
அவலம் தெரிகிறதே
இதுவரை விதைத்த
இன்னல் துரத்திட
இன்றேன் அழுகின்றாய் – ஏன்
இறந்திட மறுக்கிறாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2022
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
சிறகை ஒடித்தேன்
சிறையில் அடைத்தாய்
ஏது செய்தேன்
என்று என்னை இழிந்தாய்
வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
உறவை எண்ணி வெந்து தணிந்தேன்
உந்தன் திட்டம் இங்கு வென்றது
உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
காதல் ஒன்று முடிவு கண்டது
காலம் ஆறா காயம் தந்தது
நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
உன்னை போல உன்னை வதைக்க
உள்ளம் என்னால் இன்று முடியும்
பழிகள் வாங்கும் நிலையில் இந்த
பாவி மனம் முனையவில்லை
செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்
வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2022
இப்போ ஏன் அழுகிறாய் ..?
இப்போ ஏன் அழுகிறாய் ..?
அப்பன் பேர் தெரியா
அநாதை என்றவனே
ஓப்பாரி வைக்குதடா- ஊர்
ஓடி ஓளிவதென்ன
தப்பேதும் இல்லாமல்
தாராளம் ஒதுக்கியவா
பிச்சை எடுக்கிறாயே– நாட்டை
பிச்சை ஆக்கினாயே
ஆள்தல் புரியாது
ஆள வந்தவேன
கேடு பார்த்தாயா
கேவலம் கெட்டாயே
ஓடி ஓளிந்திடத்தான்
ஓடி வந்தாயோ
நாட்டை விற்றிடத்தான்
நாடு வந்தாயோ
சந்தி சிரிக்குதடா
சகலகலா வல்லமையே
பொந்து இருக்கென்று
போய் நுழைய கூடாது
வம்பு இதுவென்றே
வாழ்தல் கூடாது
பந்தி இருக்கென்று
பல் இழிக்க கூடாது
அந்தி மலரும்
அது மறத்தல் கூடாது
தொண்டு செய்தபின்
சொல் திரிதல் கூடாது
பல் துளக்கா விடின்
பகலும் விடியாது
சிந்தை துளக்காவிடின்
சிகரம் எட்டாது
பார்த்தாயா நீ இன்று
படை திரளும் கோலத்தை
அதர்மத்தின் கோலனே
அழிந்திடடா நீ இன்று …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-04-2022
ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
அடக்கி ஒடுக்கி
அன்றாடம் கசக்கி
மகிழ்ந்து திரிந்தவர்
மாளிகை அழுகிறது
கக்கி துப்பி
கழிந்து திரிந்தவர் -தலை
வெட்கி குனியும்
வேளை சிரிக்கிறது
ஆடி பாடி
அன்று மகிழ்ந்த
நாளை கொன்று
நரகம் எறிந்தவர்
கால்கள் நடுங்கும்
காலம் மகிழ்கிறது
வெடித்து ஒழிக்க
வேங்கை வருகிறது
நடித்து திரிந்தாரும்
நாடகம் போட்டாரும்
அடித்து வீசும்
அக்காலம் வந்தது
கடித்து குதறும்
கந்தக துகள்கள்
வெடித்து பறக்கும்
வேளை பிறந்தது
அதர்மம் ஒன்று
அழியும் நாளில்
நீதி ஒன்று
நிமிர்ந்து சிரிக்கிறது
முள்ளி வாய்க்காலின்
முன் எழுந்த அவலத்தின்
கண்ணீர் துளியில்
கரைகிறது அரசு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2022
இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
வீழ்ந்தவர்கள் நாமென்று
விலாசம் தந்தவர்கள்
வீழ்கின்ற காலமிது
வீசுது காற்று நன்று
உலகோடி தினம் அன்று
ஊதி திரிந்தவர்கள்
ஊர் திரண்டு விரட்டும் காலம்
ஊடகத்தில் தினம் இன்று
நடித்து வெடித்து
நகைச்சுவை குழைத்து
கழித்து திரிந்தார்
காலடியில் கல்லடி
படித்து முடித்தார்
பக்குவம் தொலைத்தார்
மன்றில் ஏறி
மறைகழண்று வீழ்ந்தார்
அடித்து பிடித்து
ஆட்சி அமைத்தார்
அந்தோ பார் – இன்று
ஆட்சி கவிழ்கிறது
வென்றவர் தாமென்று
வெறியோடு அலைந்தால்
காற்சட்டை கிழியும்
கல்லறை அழைக்கும்
விதைக்கும் முன் விதையின்
விளைச்சல் தெரிந்தால்
வாழ்வு செழிக்கும்
வழியெங்கும் மணம் வீசும்
இன்று பார்த்தாயா
இராவணன் வருகிறான்
துட்டகை முணுக்களே
தூரே ஓடிவிடும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-04-2022
கத்திகள் எழுகிறது …!
கத்திகள் எழுகிறது …!
வன்னி மைந்தன் கவிதைகள்
திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்
பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்
இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்
ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்
கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022
பெண் உலாவும் இரவு வரும் ..!
பெண் உலாவும் இரவு வரும் ..!
ஆமி பொலிஸ் வீதியில
அன்றாடம் நிற்கையில
வாள் வெட்டு நடக்குதாம்
வம்புகள் வெடிக்குதாம்
தலை பா கட்டிகளும்
தலை தெறிக்க ஓடுதாம்
வெள்ளை வெட்டிகளோ
வெறியோடு சிரிக்குதாம்
குண்டி விழும் காற்சட்டை
குமரிகள் முன் விழ
பொக்கை வாய் பாட்டிகளும்
பொல்லெறிந்து சிரிக்குதாம்
தன் பதவி தான் காக்க
தமிழருக்குள் சில்லறைகள்
நேர்ந்து விட்டதுகள்
நெடுகிலும் ஆக்கினைகள்
குடல் பிடுங்கி வெளி எறிந்து
குரல் ஒடுங்கி சாகடிக்க
ஆள் இல்லா நிலையின்றோ
அதனாலோ ஆடுகிறார்
விடிகின்ற ஆதவனின்
விடியலின் ஒளியிலே
காவாலி கரை சேரும்
கால் தடம் மாறும்
இரவு வெளிச்சத்தில்
இளம் மாது உலாவும்
காலம் அது மலரும்
கரிகாலன் வருவான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-03-2022
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
குப்பையில மிதக்குதடா குளிர் பானம்
குளிரூட்டி இல்லாது இவை காணம்
குசினியில சமையலது பெண் பாவம்
குழாயில காஸ்இல்லா அவை சாபம்
விறகெரிந்த காலமது மறந்தாச்சு – இன்று
வீடெல்லாம் மீள இவை வந்தாச்சு
ஆடம்பர வீடெல்லாம் அவிழ்ந்தாச்சு
அவை சேர்த்த பொருள் எல்லாம் வீணாச்சு
கோட்டையிலே ஆண்டவரும் வீழ்ந்தாச்சு
கொடும்பாவி எரியும் நிலை வாந்தாச்சு
வீதியில மக்கள் எல்லாம் கூடியாச்சு
விதி மறந்தார் சதிக்குள்ளே வீழ்ந்தாச்சு
வாசல் படி கூட்டுமாறு வந்தாச்சு
வாய்க்கரிசி போட வந்தான் சொன்னாச்சு
தன் பலத்தில் வாழ்வேன் என்றார் என்னாச்சு
தமிழர் பலம் வேண்டும் நிலை என்றாச்சு
நாறடித்தான் ஆட்சி இவன் என்றாச்சு
நாட்டை விட்டு ஓடும் நிலை என்றாச்சு
நம் நாட்டை நாம் காக்க தீர்வு வேண்டும்
நாம் தமிழர் வந்தால் மட்டும் நாடு எழும்
நீர் மூலம் ஆக்கினாய் தமிழரைத் தான்
நிர்வாணமாய் ஆனாய் நீ கேவலம் தான்
சிங்களவர் தமிழர் எல்லாம் ஓர் இனம் தான்
சிறை வைத்தான் ஆட்ச்சியாளன் கொடியவன்தான்
ஏறி அன்று ஆட்டம் போட்டாய் ஏன் ராசா – இன்று
எமன் வந்தான் வாசலிலே ஏன் ராசா
நாடு விற்றாய் சீனாவிடம் ஏன் ராசா
நாட்டை விட்டு ஓட வைப்பான் பார் ராசா
பிரபாகரன் ஆண்ட காலம் பொற்காலம்
பிடரி பட சொல்லுதடா இக்காலம்
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
பட்டியணியால் சாக வேண்டாம் நாங்க தாங்க ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-03-2022
கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
பக்கத்தில நீ இருந்தும்
பாய் விரிக்க நேரமில்லை
பகலிரவு வேலையால
பார்க்க மனம் கூடவில்லை
உனக்கொரு முத்தமதை
உதட்டினில எழுதிவிட
ஆள் மனசு துடிக்கிறது
ஆனாலும் நேரமில்லை
பட்ட கடன் பாதியில
பாதிவழி துரைத்தையில
பாய்க்கின்று விடுமுறை தான்
பாவியுனக்கு கொடும் துயர்தான்
சொர்க்கத்தில வாழ்வென்று
சொல்லி வைத்த திருமணமோ
சொகமிழந்து வாடுறது
சோகமதில் தேய்கிறது
சிக்கனத்தை சிறைபிடிக்க
சீதேவி மறந்ததினால்
விழியிரண்டில் நீராச்சு
விழுந்து உடல் ஒடிந்தாச்சு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2022











