உன்னை பார்க்கையில
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை பார்க்கையில

உன்னை பார்க்கையில

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி

கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி

இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி

துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே

சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024

உன் நிலை என்ன
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் நிலை என்ன

உன் நிலை என்ன

சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக

மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா

கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ

மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இறந்து போ

இறந்து போ

சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்

வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்

கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே

துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே

இறந்து போ

பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன

கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன

பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே

பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு

வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா

இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஆணி வேர் ஒன்று அறுந்தது

ஆணி வேர் ஒன்று அறுந்தது

உன் மக்கள் அவை காக்க
உரமேறி நின்றவா
தம் மக்கள் உனை காக்க
தவறியது ஏன் நண்பா

பின்னிருந்து இரு குண்டு
பிய்த்து நெஞ்சுடைக்க
மூச்சிழந்து போனாயே
முகவரி தொலைத்தாயே

காட்சிகள் இது ஒன்றாய்
காணொளியில் நீ இருக்க
வீச்சிழந்து போனவனே
வித்துடல் ஆனாயே

பேச்சிழந்து போவதற்கா
பேராசை நீ கொண்டாய்
அறுபத்தெட்டு அகவையில
ஆறடியில் ஏன் உறைந்தாய்

உன் துயரில் உலகெல்லாம்
உனை எண்ணி அழுகுதடா
உதயமாய் ஒளித்தவனே
உறக்கத்தில் ஏன் ஒளிந்தாய் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-07-2022

வன்னி மைந்தன் கவிதைகள்
08-07-2022 ஜப்பான் முன்னாள் பிரதமர் shinzo Ape சுட்டு கொலை செய்யப்பட்ட துயரில் வடித்தவை

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

    இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

    இளமையில உன் ஏக்கம்
    இன்றே தனித்து விடு
    முதுமையில முதலிரவு
    முழு ஏக்கம் தனிக்காது

    வெறுமையில நீ இருந்து
    வெளியேற்றி விட்டவைகள்
    முதுமையில தேறாது
    முதுகெலும்பு தாங்காது

    வறுமை என்ற கூட்டுக்குள்ளே
    நீ தொலைத்த வாழ்விருக்கே
    மீள் எழுச்சி கொள்ளாது
    மீள உன்னை கெஞ்சாது

    வாலிபத்து அகவையில
    வாழ்க்கை பட வேணுமடி
    வரப்புயரும் நீர் போல
    வாழ்வு அமைய வேணுமடி

    கோடி பணம் சேர்த்து வைத்து
    கோட்டையிலே நீ இருந்தும்
    காணப்போவது ஏதுமில்லை
    கண் மலர்ச்சி ஏதுமில்லை

    இளமையில இல்லறத்தை
    இனிதே நீ கலந்து விடு
    இல்லையது தப்பி விடின்
    இறந்தே நீ மாண்டு விடு ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 06-03-2022

    வன்னி மைந்தன் கவிதைங்கள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நீ பிள்ளையா

      நீ பிள்ளையா

      அழகான ஊருக்கும்
      ஐயாறு பிள்ளைக்கும்
      முதலான தந்தை
      முன் என்ன தலை வெட்டு …?

      காதில கம்மலும்
      கரட்டி ஓணான் தாடியும்
      குண்டி காட்டும்
      குளியாத சட்டையும் …..

      உலக அழகு என்று
      ஊர் சுற்றும் காவாலி ….
      போலான பிள்ளைக்கு
      பொறுப்பெங்கே கூடி வரும் ..?

      தான் உண்ணும் வேளையில்
      தான் பெற்றது அழுகுதென்று
      உண்டதை எறிந்தோடி
      உயிர் காத்த அப்பனை …..

      வழி மறந்து போனவனே
      வாழ்ந் தென்ன கண்டாய் ..?
      முதியோர் இல்லத்தில்
      முன் எறிந்து ஏன் போனாய் ..?

      எதிர் காலம் ஒன்றுண்டு
      என்பதை மறந்தின்று …
      உலவி திரிபவரே
      உது போல நிலையுனக்கும் கான் …!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -21/01/2018

      வன்னி மைந்தன் கவிதைகள்