Tag: வன்னி
என் உயிரே நான் வெல்வேன்
என் உயிரே நான் வெல்வேன்
இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே
கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ
விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ
எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்
உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா
விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .
ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம் ,0 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 21,102 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 17,710 வாக்குகள் (1 ஆசனம்)
தமிழன் அழிந்த நாள் ….!
தமிழன் அழிந்த நாள் ….!
நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா
ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு
வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு
படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ
ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ
முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022
நான் வாழ நீ வா ..!
நான் வாழ நீ வா ..!
இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்
நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்
நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா
சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்
எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு
வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது
போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த
இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ
அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,
அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட
இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான
நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை








