Tag: தேவையில்லை
அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
உண்மையான அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா அது என்னுடைய கோட்பாடு. சாதாரண அரசியல் அடிமட்டம் போவதாக இருந்தால் அதற்குரிய நிதியை அரசியல்வாதிகள் இதுவரை பிழையான வழியில்
சேகரித்து உள்ளார்கள். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்: அரசியல் செய்வதற்கு அடிப்படையான எனக்கு எந்தவித நிதியும் தேவையில்லை. எனக்கு போதுமான பணத்தை நான் சேர்த்து வைத்துள்ளேன். இதுவரை காலமும் யாரிடமும் கைநீட்டி பணம் கேட்டது
இல்லை. எங்களுடைய அரசியலை செய்வதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. நான் 10 கோடி பெறுமதியான வீடு வைத்திருக்கிறேன். மக்கள் எனக்கு தருகிறார்கள். நான் மக்களுக்கு கொடுப்பேன்.
அநுர குமார திசாநாயக்கவால் யாழில் நடைபெற்ற சந்திப்பின் போது மொழிபெயர்ப்பின் போது பிழையான மொழியாக்கம் பகிரப்பட்டு அநுர குமார திசாநாயக்க தமிழர் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை
இனத்தவர்களில் பங்களிப்பு இல்லாமல் நான் வெல்லுவேன் ஆகவே நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். என்ற கருத்தை பிழையான கருத்தை தமிழ் மக்களிடம் பொருத்தி இருந்தார்கள்.
அரசியலை எப்போது சரியாக பெது மக்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அப்போது தான் உண்மையான அரசியல்வாதி ஆகிறோம். நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீங்கள் ஓட்டை போடுங்கள் என்று சொன்னது பழைய
அரசியில்வாதிகள், நீங்கள் சொல்லுங்கள் அரசியல் நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது படித்த அரசியல் ஆகவே நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவது இல்லை.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

தமிழ் மக்களுக்கு என ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை
தமிழ் மக்களுக்கு என ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை
ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
Featured
இப்போ ஏன் அழுகிறாய் ..?
இப்போ ஏன் அழுகிறாய் ..?
அப்பன் பேர் தெரியா
அநாதை என்றவனே
ஓப்பாரி வைக்குதடா- ஊர்
ஓடி ஓளிவதென்ன
தப்பேதும் இல்லாமல்
தாராளம் ஒதுக்கியவா
பிச்சை எடுக்கிறாயே– நாட்டை
பிச்சை ஆக்கினாயே
ஆள்தல் புரியாது
ஆள வந்தவேன
கேடு பார்த்தாயா
கேவலம் கெட்டாயே
ஓடி ஓளிந்திடத்தான்
ஓடி வந்தாயோ
நாட்டை விற்றிடத்தான்
நாடு வந்தாயோ
சந்தி சிரிக்குதடா
சகலகலா வல்லமையே
பொந்து இருக்கென்று
போய் நுழைய கூடாது
வம்பு இதுவென்றே
வாழ்தல் கூடாது
பந்தி இருக்கென்று
பல் இழிக்க கூடாது
அந்தி மலரும்
அது மறத்தல் கூடாது
தொண்டு செய்தபின்
சொல் திரிதல் கூடாது
பல் துளக்கா விடின்
பகலும் விடியாது
சிந்தை துளக்காவிடின்
சிகரம் எட்டாது
பார்த்தாயா நீ இன்று
படை திரளும் கோலத்தை
அதர்மத்தின் கோலனே
அழிந்திடடா நீ இன்று …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-04-2022















