Tag: காத்திரு
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
சிறகை ஒடித்தேன்
சிறையில் அடைத்தாய்
ஏது செய்தேன்
என்று என்னை இழிந்தாய்
வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
உறவை எண்ணி வெந்து தணிந்தேன்
உந்தன் திட்டம் இங்கு வென்றது
உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
காதல் ஒன்று முடிவு கண்டது
காலம் ஆறா காயம் தந்தது
நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
உன்னை போல உன்னை வதைக்க
உள்ளம் என்னால் இன்று முடியும்
பழிகள் வாங்கும் நிலையில் இந்த
பாவி மனம் முனையவில்லை
செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்
வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2022
காலம் வரும் காத்திரு …..!
காலம் வரும் காத்திரு …..!
நதி வீழ்ந்த ஏரியில
நான் போறேன் அழுகையில ….
கை கொடுப்பார் யாருமில்ல
கண் துடைப்பார் எவருமில்லை …
கூடி வந்த உறவெல்லாம்
கூடி தினம் நகைக்குதே ….
கேலிகள் கூத்தாக
கேவலமாய் போனேனே …..
தேடிவந்த வேளையிலே
தேவைகளை தீர்த்தவனை
கால் பந்தாய் அடிப்பதுவோ …?
கடதாசியாய் வீசுவதோ ..?
ஒத்த ரூபா இல்லாம
ஒடிந்து நான் நிக்கையிலே
நித்தம் பல கையேந்தி
நிர்கதியாய் போனானே ….
நாளை ஒரு காலம் ஒன்று
நாடி வரும் வேளை அன்று
காத்திருப்பீர் நல்லவரே
கால் துடைப்பீர் வல்லவரே …
நிகழ்காலம் கூறி விடும்
நிகழ்வுகள் மாறி விடும் …
வாய் எறிந்த சொல்லடிகள்
வாயில் வந்து வாலாட்டும் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/03/2019
காத்திரு
காத்திரு …..!
தேடி வந்த வேளையிலே
தேவையில்லை என்றெரிந்தாய் ..
பாதி மனம் நான் உடைந்து –
பாதியில சாகவில்லை …
தேடுதலை நான் விரித்து
தேவைகளை கூட்டி வைத்தேன் —
ஏறி வந்த எண்ணங்களோ –
ஏற்றி வைத்த ஏணி இன்று …
கூட வந்தார் ஏறி நின்று
கூடி கூடி நகைத்து நின்றார் …
வேதனைகள் தந்து விடும்
வேலிகளை போட்டு நின்றார் ….
வாங்கி வந்த அவமானம் –
வழிகளை செய்து விட —
ஏறி விட்டேன் நேற்று நானும் –
ஏறி வரும் செய்தி கேளு ….
பணம் வைத்து நீ அளக்கும் –
பாசமது எனக்கேனோ …?
நாளை ஒரு வேளையது -உன்
நக்கலது நாவறுக்கும் ……!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/01/2019






