ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

குண்டு மழை நடுவிலும்
கொள்கையோடு கற்றோம் – உலகம்
கண்டு கொள்ளா நிலையிலும்
கல்வியினைப் பெற்றோம்.

மண்டை பிளக்கும் வெயிலிலும்
மரநிழலில் கற்றோம் – கொடும்
சண்டை நடந்த நேரத்திலும்
சலிக்காமல் கற்றோம்.

பராலைற் வெளிச்சத்திலும்
படிப்பினைத் தொடர்ந்தோம் – வளம்
இராத காலங்களிலும்
வல்லோராய் வந்தோம்.

உயிர்காத்து கற்பித்தோர்க்கு
உயர் மதிப்பைக் கொடுத்தோம் – அன்று
உயிர் துறக்கும் வாழ்வினிலும்
உயர் மதிப்பெண்கள் எடுத்தோம்.

தந்தை தாயின் உதவியின்றித்
தனியாகச் சென்றோம் – நல்ல
சிந்தையுள்ள குருமாரைச்
சந்தித்ததால் வென்றோம்.

அண்டை நாட்டின் சதியினாலும்
அழுதழுது கற்றோம் – என்றும்
அன்றையநாள் கல்வி வாழ்வை
எப்படித் தான் மறப்போம்❗

-பிறேமா(எழில்)-

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!

கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!

பக்கத்தில நீ இருந்தும்
பாய் விரிக்க நேரமில்லை
பகலிரவு வேலையால
பார்க்க மனம் கூடவில்லை

உனக்கொரு முத்தமதை
உதட்டினில எழுதிவிட
ஆள் மனசு துடிக்கிறது
ஆனாலும் நேரமில்லை

பட்ட கடன் பாதியில
பாதிவழி துரைத்தையில
பாய்க்கின்று விடுமுறை தான்
பாவியுனக்கு கொடும் துயர்தான்

சொர்க்கத்தில வாழ்வென்று
சொல்லி வைத்த திருமணமோ
சொகமிழந்து வாடுறது
சோகமதில் தேய்கிறது

சிக்கனத்தை சிறைபிடிக்க
சீதேவி மறந்ததினால்
விழியிரண்டில் நீராச்சு
விழுந்து உடல் ஒடிந்தாச்சு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இது தான் வாழ்வு …!

    இது தான் வாழ்வு …!

    தோளுக்கு மாலையா
    தோட்ட பூவே வாறியா ..?
    வாழை நாரில
    வந்து சிக்கிறியா …?

    கல்யாண பந்தலிலே
    காட்சிக்கு நிக்கிறியா ..?
    கூந்தல் மேவியே
    குலவி ஆடுறியா ..?

    அழகாய் பூத்தாய்
    ஆயூளை பறித்தான் …
    உயிரு போகுமுன்னே
    உலவுறாய் அழகாய் தான் …

    சிரித்து மலர்ந்து
    சிறகு உடைந்து …
    வீழ்ந்து கருகி
    வீழ்ந்தாய் நொந்து ….

    வாசல் பூவே
    வாழ்வு இதுவாச்சு …
    அழகாய் பூத்தென்ன
    ஆயூள் முடிந்தாச்சு …!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -11/03/2019

    Home » வாழ்வு
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    சிரிக்கும் ….வாழ்வு ….!

    சிரிக்கும் ….வாழ்வு ….!

    சந்தன மேனி வெந்தணல் வேக
    சாலையில் போகுதடி ….
    சாளரம் வைத்த சட்டை மாட்டி-
    சர வெடி போடுதடி-

    ஆளை அள்ளும் புயலும் கிள்ள
    அந்தோ நெளியுதடி ….
    ஆடவர் கண்கள் மேனியில் துள்ள
    அடி வாங்கியே மாயுதடி …

    கூடு உடைத்து கறைவைகள் ஓட
    கூடுது வீதிகளே ….
    கூட்டியே அள்ளிட – பார்த்தே
    கூடுது சதிகளே ….

    ஏங்கி சாகும் வேருக்கின்று
    ஏக்கம் புரியாது .
    ஏறி பறக்கும் சீட்டுக்கின்று – இந்த
    ஏக்கம் தெரியாது ….

    அடி வாங்கி நொந்து
    அழுகையில் தானே அவலம் புரிகிறது- இப்போ
    அழுது புலம்பி என் கண்டாய்
    அட வாழ்வு சிரிக்கிறது ….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -24/02/2019