Tag: காதலி
நண்பரின் காதலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட நண்பன்
நண்பரின் காதலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட நண்பன்
நண்பரின் காதலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட நண்பன் ,நண்பரின் காதலியின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்ததற்காக ஆறு மாத இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை
தனது நண்பரின் காதலியின் நிர்வாண புகைப்படங்கள்
தனது நண்பரின் காதலியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம்
சாட்டப்பட்ட ஒரு இளைஞனுக்கு, பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத எளிய
சிறைத்தண்டனையை கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம இன்று விதித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ. 75,000 வழங்குமாறும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின்படி
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின்படி, புகார்தாரரும் அவரது காதலனும் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்ட பிறகு, புகார்தாரரும்
சந்தேக நபரும் நீண்ட காலமாக அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில், புகார்தாரர் தனது நிர்வாண புகைப்படங்களை சந்தேக நபருக்கு அனுப்பியுள்ளார்.
சந்தேக நபர் பின்னர் அந்த புகைப்படங்களை தனது நண்பர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்ததும், புகார்தாரர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்தார்.
சந்தேக நபர் சார்பாக ஆஜரான பிரதிவாதி வழக்கறிஞர், சந்தேக நபர் புகார்தாரரை எந்த அச்சுறுத்தலுக்கும் அல்லது தேவையற்ற செல்வாக்கிற்கும்
உட்படுத்தவில்லை என்றும், ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன்படி, மென்மையான தண்டனையை வழங்குமாறு கோரினார் என்றும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட பிறகு, நீதிபதி ஆறு மாத எளிய சிறைத்தண்டனை விதித்து, பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு,
பிரதிவாதிக்கு இழப்பீடாக ரூ. 75,000 வழங்க உத்தரவிட்டார் மற்றும் ரூ. 2,500 அபராதம் விதித்தார்.
பிரதிவாதி வழக்கறிஞர் மேலும் இழப்பீட்டை செலுத்த சந்தேக நபருக்கு ஒரு மாத கால அவகாசம் கோரினார், இது நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன்
ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன்
ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன் ,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல்
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்
நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும், பணய கைதிகள் பலரை ராணுவ நடவடிக்கை, ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் மீட்டது.
இந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு
வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள எஞ்சிய 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.
இதனிடையே, இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம். 2023 அக்டோபர் 7ம் தேதி ரோயி ஷலிவ் தனது காதலி
மபெல் ஆடம் மற்றும் தனது நண்பர் ஹிலி சாலமோனுடன் கிப்ருட்ஸ் பகுதியில் நடைபெற்ற நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த இசை
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல்
நிகழ்ச்சிக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ரோயி ஷலீவ்வின் கண்முன்னே அவரது காதலி
மபெல் ஆடம் கொல்லப்பட்டார். ஹமாஸ் ஆயுதக்குழுவின தாக்குதலில் ரோயி ஷலீவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் காதலி மபெல் ஆடல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் ரோயி ஷலீவ் நேற்று முன் தினம் தற்கொலை
செய்துகொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக ரோயி ஷலீவ் காதலியில் நினைவாகவே இருந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2ம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அன்றுமுதல் ரோயி ஷலீவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (அக்.10) டெல் அவிவ் நகரில் தனது வீட்டின் அருகே காருக்குள் இருந்தவாறு ரோயி ஷலீவ் தன்னுயிரை
மாய்த்துக்கொண்டார். தகவலறிந்து சென்ற பொலிஸார் ரோயி ஷலீவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி மபெல் ஆடம் கொல்லப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள்
கழித்து ரோயி ஷலீவ் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் மபெல் ஆடம் கொல்லப்பட்ட சில நாட்களில் ரோயி ஷலிவ்வின் தாயாரும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.
காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்
காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்
காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார் ,தனது பிரிந்த காதலியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தை பார்த்து .
வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு
பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்ற சம்பவமொன்று கோவிந்தபுரம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், கோவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தம ரிதிகஹவத்தே பகுதியில், கடந்த 11 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
புத்தம ரிதிகஹவத்தயைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் உறவில் இருந்ததாகவும்,
இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டதாகவும் கோவிந்தபுரம் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை
அந்த பெண், தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில்
இருப்பதாக கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், அப்பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டார்.
அந்த பெண், வீதியைக் கடந்து ஆடைத் தொழிற்சாலையில் பேருந்தை பிடிக்க தனது வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்த போது, அவளை சுட முயன்றார்.
அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
கோவிந்தபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம். கருணா சாந்த, அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன் ,அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது
காதலனால் கழுத்தறுத்து கொலை
காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும்
வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப்
பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப்
பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப் ,விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய தனது காதலியை தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார்.
தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், ப்ளு ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கி விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ப்ளூ ஆர்ஜின் என்ற ராக்கெட்டும், 6 பேர் பயணம் செய்யும் வகையில் ‘நியூ செபார்ட்’ என்ற விண்கலமும் உருவாக்கப்பட்டது.
இதில் பிரபல பாப் பாடகி கெட்டி பெர்ரி, தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ், சி.பி.எஸ் டி.வி. தொகுப்பாளர் கேல் கிங் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவே, விஞ்ஞானி அமாண்டா இங்குயென், திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் திங்கட்கிழமை(14)பயணம் செய்தனர்.
நியூ செபார்ட் விண்கலத்துடன், ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டது. புவியின் வளிமண்டலத்தை கடந்து விண்வெளிக்குள் நுழைந்ததும், விண்கல குழுவினர் புவியீர்ப்பு விசை இன்மை, உடல் எடை குறைவு ஆகியவற்றை உணர்ந்தனர். விண்வெளியிலிருந்து அவர்கள் பூமியை பார்த்து ரசித்தனர்.
அப்போது பாடகி பெர்ரி, ‘வாட் எ வொண்டர்ஃபுல் வேர்ல்ட்’ என்ற பாடலை பாடினார். அவர் தன்னுடன் டெய்சி மலரை எடுத்துச் சென்றார். மகள் ‘டெய்சி’ யின் நினைவாக அவர் அதை எடுத்துச் சென்றார்.
சுமார் 11 நிமிடங்கள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, நியூ செபார்ட் விண்கலம் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கியது. அப்போது பாடகி பெர்ரி டெய்சி மலரை முத்தமிட்டபடி விண்கலத்திலிருந்து இறங்கினார். தனது காதலி லாரன் சான்செஸ் விண்கலத்தை விட்டு வெளியேறும் போது அவரை ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார்.
இதற்கு முன் கடந்த 1963 ஆம் ஆண்டு ரஷ்ய விண்வெளிப் பெண் வேலன்டினா டெரஸ்கோவா, விண்கலத்தின் தனியாக 3 நாள் விண்வெளியில் சுற்றிவிட்டு பூமி திரும்பினார். அதன்பின் தற்போதுதான் முழுவதும் பெண்களுடன் நியூ செபார்ட் விண்கலம் விண்வெளிப் பயணத்தை முடித்து பூமி திரும்பியுள்ளது.
விண்வெளி சுற்றுலா செல்ல விண்கலத்தில் ஒரு இருக்கைக்கான கட்டணம் எவ்வளவு என்பதை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் விண்வெளி பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் திருப்பி செலுத்தக்கூடிய டெபாசிட்டாக, 1,50,000 டாலர் செலுத்த வேண்டும் என அதன் இணையளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, விண்வெளி பயணத்துக்கான ‘நியூ செபார்ட்’ விண்கல கட்டணம் அதிகபட்சம் 28 மில்லியன் டாலரை வரை ஏலம் போனதாக ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவித்தது
காதலியை கடத்திய காதலன் கைது
காதலியை கடத்திய காதலன் கைது
காதலியை கடத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை மொனராகலை காவல்துறை பிரிவில் வசிக்கும் 14 வயது காதலியை 33 வயது காதலன் கடத்தி சென்ற பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார் .
காதலியுடன் காதலன் ஒன்றாக தங்கி வாசித்த நிலையை அடுத்து தற்போது காதலி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
சிறுமியை கடத்தினார் என்கின்ற குற்ற சட்டத்தில் இவர் மீது வழக்கு பைஅத்துள்ளது குறிப்பிட தக்கது .
காதலியை கொன்று சரணடைந்த காதலன்
காதலியை கொன்று சரணடைந்த காதலன்
காதலியை கொன்று சரணடைந்த காதலன் ,தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் , இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என தனது காதலனிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன் ,29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த இவர் , தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.
நிராகரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தங்கள் மகன் ஒரு உறவில் இருந்ததாகவும், காதலர் தினத் திட்டங்களை காதலி மறுத்தது மட்டுமல்லாமல், அவரைத் திட்டியதால் மனம் உடைந்ததாகவும் பெற்றோர் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
காதலியால் கம்பி எண்ணும் காதலன்
காதலியால் கம்பி எண்ணும் காதலன்
காதலியால் கம்பி எண்ணும் காதலன், காதலியால் கம்பு என்னும் காதலன் கைத்தலும் சேர்ந்த களவாடி காதலுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளார் .
நுவரெலியா நீதிமன்ற களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒன்று திடீரென காணாமல் போனது .
அதனை அடுத்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்ட பொழுது அங்கு பணிபுரிந்த பெண் அந்த களஞ்சிய சாலையிலிருந்து அந்த போனை திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடப்பட்டபோனை தனது காதலனுக்கு அவர் வழங்கி இருக்கின்றார் .
காதலன் அந்த போனை பயன்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவரை தேடிச் சென்ற போலீசார் தற்பொழுது அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர் .
மேற்படி செய்தியானது தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியது போலதமிழர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது .
இதனால் காதலன் காதலி மிகப் பெரும் தலை குனிவுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை ,காதலியிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனமுடைந்த காதலன் அவருக்கு வீடியோ அலைபேசியை ஏற்படுத்தி ,
அதன் ஊடாக தான் மரணம் அடைகிறேன் என்பதை காண்பித்து அவர் தற்பொழுது தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழச்சேனை ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபனே இவ்வாறு தனது காதலிக்கு தொலைபேசியை அழைத்து அதில் கமரா மூலமாக ,தனது தற்கொலையை காண்பித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலியுடன் ஏன் முரண்பட்டார் எதற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது தொடர்பாக ,
பொலிஸ் விசாரணை
காதலியை தற்பொழுது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு துயரை ஏற்படுத்தியிருக்கின்றது.
18 வயதில் வருகின்ற காதல் காதலா அல்லது மோகம் காதலா என்பதை இதுவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
காதலி எதற்காக முரண்பட்டார் ஏன் அவரை ஏற்க மறுத்தாள் அல்லது ஏற்றுக் கொண்டவள் எதற்காக அவரிடம் முரண்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக தற்பொழுது கேள்வி பதிலாக ஏழு ஆரம்பித்திருக்கின்றது.
வாலிபர்களின் வாலிபத்தில் ஏற்படுகின்ற இந்த காதலினால் வாலிபங்கள் தமது வாழ்வைச் சீரழித்து அதிலிருந்து அவர்கள் தமிழ் தாமரை அழைத்துக் கொள்கின்ற நிலையானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
காதலியால் காதலன் உயிரை மாய்த்துக் கொண்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறான காதலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் இது ஒரு முன் எச்சரிக்கை ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

காதலனை கொன்ற காதலி கைது
காதலனை கொன்ற காதலி கைது
காதலனை கொன்ற காதலி கைது ,குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.
காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காதலனை கொன்ற காதலியின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
Featured
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
தன்னுடன் பேச மறுத்த காதலிக்கு காதலன் கத்தி வெட்டு .காதலி மீது காதலன் தீடிர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இருவரும், நீண்ட நாட்களகள பேசி பழகி வந்துள்ளனர் .
அந்த பழக்கம் நெருக்கமாக நெருங்கி உறவாடியும் வந்துள்ளனர் .இதுவே காதலனுக்கு பெண் மீது காதல் பொங்கி வழிந்துள்ளது .
ஒரு தலை காதல்
ஆனால் பெண்ணுக்கோ இவர் மீது காதல் ஏற்படவில்லை .இதை பெண்ணிடம் காதலன் கூறியுள்ளார் .
ஆனால் காதலியோ இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .காதலன் தொடர்ந்து தொல்லை தரவே சமூக வலைத்தளங்களில் இருந்து அவரை தடை செய்துள்ளார் .
இதனால் சீற்றம் உற்ற காதலன் ,காதலியை தேடி கண்டு பிடித்து மீளவும் தன்னை கல்யாணம் பண்ணிக்கும் படி கூறியுள்ளார் .
ஆனால் அதனை காதலி ஏற்க மறுத்து விலகி சென்றுள்ளார் .
திட்டம் போட்டு காதலியை வெட்டிய காதலன்
தன்னை விட்டு விலகி செல்வதை நன்கறிந்து கொண்ட காதலன், ஒரு நாள் இவரை கண்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த காதலன் ,என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சியுள்ளார் .
அனால் இதனை கண்ணுற்ற காதலி அவரை திட்டியுள்ளார் .கோபம் கொண்ட காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ,காதலியின் தலை மற்றும் உடல் எங்கும் பத்து தடவை குத்தியுள்ளார் .
காதலனின் மரண குத்தில் பலமான வெட்டு காயங்களுக்கு உள்ளான காதலி , தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .ஆமா இதுக்கு பேரு தான் காதலா ..?
காதலியுடன் சென்ற மாணவனை காணவில்லை
காதலியுடன் சென்ற மாணவனை காணவில்லை
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ள போதும் உறவினர்கள் அது தொடர்பில் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
காலி, வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 17 வயதான சேனுக அன்று மாலையில் காதலியுடன் காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்தது.
ஜங்கள் கடற்கரையில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அததெரண மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி
கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி
தனது காதலியுடன் விடுமுறையை கழிப்பதற்கு பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞனொருவர் விடுதிக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை பஸ் நிலையத்தில் யுவதியை இருக்குமாறு தெரிவித்து நகரின் பிரபல மொத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த இளைஞன் பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி
அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இளைஞனுடன் சென்ற யுவதியை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
பல வருட காதலை தவிர்க்க முயன்ற 22 வயது காதலனை கத்தியால் குத்திய 19 வயது காதலியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலதா உத்தரவிட்டார்.
கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கம்பளை நகரில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
சிறிது காலத்திற்கு பின்னர் குறித்த இளைஞன் தன்னை கைவிடுவதாக உணர்ந்தர் அவர், இதுபற்றி காதலனிடம் கேட்டாலும், அவனது முடிவு மாறாது என்பதை அறிந்து, அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அந்த யுவதி.
காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், முகநூலில் இருந்து புகைப்படங்களை அகற்றுமாறு கூறி, அவரை தாக்கியுள்ளார், இதனை அறிந்த அவரது தாயும் சகோதரரும் சம்பவத்தில் தலையிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த இளைஞன் வியாபாரம் செய்யும் கம்பளை பொதுச் சந்தைக்கு யுவதியின் தாயும் சகோதரனும் சென்று இது குறித்து கேட்டபோது, குறித்த இளைஞன் காதலியின் சகோதரனை தாக்கியுள்ளார்.
அங்கு தாக்கப்பட்ட மகனை மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றுள்ள நிலையில், அந்த யுவதி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த காதலன் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலின் பின்னர் அங்கிருந்த ஏனையவர்கள் யுவதியை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார்.
மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் கன்யூசை கைது செய்தனர்.
காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
இந்த வழக்கில் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் கூட முடியவில்லை. ஆனால் அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார்.
மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நவ.3ம் திகதிய உத்தரவுப்படி தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டார்.
இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்தியபடி கன்யூஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா, ‘இது எனக்கு ஓர் அடி
. கொடூரமான கொலைகாரனுக்கு எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? எந்த நேரத்திலும் நம்மில் யாரையும், பாதிக்கப்பட்டவர்களையும், பழிவாங்கும் நோக்கில் கொல்லலாம்’ என்றார்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி
- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா
- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி
பணத்திற்காக காதலியை விற்ற காதலன்
பணத்திற்காக காதலியை விற்ற காதலன்
காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் குறித்த பெண்ணை அறையில் தடுத்து வைத்து நால்வருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள விடுதி ஒன்றின் முகாமையாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் காதலன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அகலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணத்திற்காக காதலியை விற்ற காதலன்
பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பணத்திற்காக தனிநபர்களுக்கு விற்கப்படுவதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதன்படி, சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு அதிகாரிகளும் இணைந்து குறித்த பெண்ணை பொறுப்பேற்றதையடுத்து விடுதியின் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், அவர் தற்போது வைத்தியபரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்
காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்
தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே திங்கட்கிழமை (16) தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் காதலி திருமண வயதை அடைந்திருக்காத நிலையில் இரு வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரிந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
அந்நிலையில் ” என்னை உடனே திருமணம் செய். இல்லையென்றால் நான் சாகிறேன் ” என காதலி காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை பார்வையிட்ட காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
அதிருப்தியடைந்த காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் இருந்து சிறுமியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவை பெரிதாக்கப்பட்டு
திருத்தப்பட்டுள்ளன. மேலும் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடிகணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
23 வயதுடைய முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேக நபருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெஸ்பேவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காதலியுடன் தான் வந்துள்ளீர்களா
காதலியுடன் தான் வந்துள்ளீர்களா
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (03) இலங்கையை வந்தடைந்த கிரிக்கெட் வீரர், சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று கிரிக்கெட் வீரர் கூறினார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்றும், அதன் மூலம் அவர் தனது விசாரணையின் போது தனது சட்டத் தேவைகளுக்காக செலவழித்த பணத்திற்காக இழப்பீடு கோரலாம் என்றும் குணதிலக தெரிவித்தார்.
காதலியுடன் தான் வந்துள்ளீர்களா
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையைத் தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த குணதிலக, கிரிக்கெட்டைத் தொடர்வதற்கு விரைவில் பயிற்சியில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்துடன் காதலியுடன் தான் நீங்கள் இலங்கைக்கு வந்துள்ளீர்களா என்று ஊடகவியலாளர் தனுஷ்கவிடம் கேட்ட போது, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தனுஷ்க வினவினார்.
அதற்கு அவர்கள் நீங்கள் காதலியுடன் தான் வந்துள்ளீர்கள் எனக்கூற, நீங்கள் நினைப்பது போன்றே எடுத்துகொள்வோம் என தனுஷ்க சிரித்தவாறு கூறினார்.






















































