நீ தான் மனிதன்

Spread the love

நீ தான் மனிதன்

ஏதென்ஸ் நகரின் கடற்கரையும்
எழுந்து நடக்கிறதே
எடுத்தெறிந்த வாய்கல் எல்லாம்
ஏறி உன்னை போற்றுதே

சாதனையின் நாயகனாய்
சக்கரடீஸ் ஆனவனே
சாவின் இறுதி நொடியிலும்
சாதனைகள் படைத்தவனே

நஞ்சந்த கோப்பையில
நா வந்து நனைக்கையில
அஞ்சாது குடித்தவனே
ஆயுளை முடித்தவனே

எழுதவோ படிக்கவோ
ஏதறியா நீ தானே
புரட்சியின் காவலனாய்
புகலிடத்தில் நீ அமர்ந்தாய்

நீ தான் மனிதன்

வீரத்தை விதைத்தவனே
வீழ்ந்தின்று போனவனே
நான் உன்னை படிக்கையில
நான் பார்க்க நீ இல்லை

உன் வீரம் எனக்கிருக்கு
உன் உள்ள செருக்கிருக்கு
நீதிக்காய் நிற்பவரை
நீசகர் கொல்வாரம்

இறக்கையில ஏதும் இல்லை – நீ
எடுத்தேதும் போகவில்லை
நீதியின் தத்துவத்தை
நீயுரைத்தாய் மறக்கவில்லை

வாழ்ந்தாலும் உன் போல
வாழ்ந்திங்கு மடியனும்
வளர் பிறையாய் அறிவுதன்னை
வளர்த்திங்கு இறக்கணும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-06-2022

வன்னி மைந்தன் கவிதைகள்
கிரேக்க புரட்சியாளன் சக்கரடீஸ் வரலாறு படித்து கண் கலங்கிய போது
( உலக சரித்திரம் படைத்த சாதனைகள் -10 பேர் வரலாறு படித்தால் உனக்கு பெறுபேறு )

    Leave a Reply