Posted in உலக செய்திகள்

கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு

கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு

கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்

பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்

சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்

மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்

இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

கனடா Ontario யோவில்
கனடா Ontario யோவில்
Posted in இலங்கை செய்திகள்

இன்று இலங்கையில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை இது

இன்று இலங்கையில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை இது

நாளைய தினம் (11) ஆரம்பமாகவுள்ள மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளை ஆரம்பித்தல், போக்குவரத்து சேவை

மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பான பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:

கொவிட் 19 வைரசு தொற்றை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்

நாடு முழுவதிலும் கொவிட் 19 வைரசு பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் சூழ்நிலைக்கு அமைவான வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை 2020.05.11 ஆம்

திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.

• மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்

  1. தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைத்து அரச நிறுவனம் அல்லது அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  2. இவ்வாறு வரும் ஊழியர்களின் சேவை அடையாள அட்டையை அல்லது நிறுவனத்தின் கடிதமொன்றை அல்லது அந்த கடிதத்தின் இலத்திரனியல் பிரதியொன்றை அவசரகால
  3. அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்த முடியும் இதில் மாவட்ட எல்லையைக் கடந்து கடமைக்கான இடத்திற்கு வருதல் அல்லது
  4. வெளியே செல்லும் ஊழியர்களுக்காக வைத்திய அதிகாரியின் MHO சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியமல்ல

அரச நிறுவனத்திற்கு தனிப்பட்ட வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் அர ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கு முன்னர் அலுவலக

இடத்திற்கு சமூகமளித்து, கடமையை பூர்த்தி செய்து மணித்தியாளம் 15.00 இற்கும் 16.00 மணித்தியாலத்திற்குமான காலப்பகுதியில் வெளியேறுவது அவசியமாகும். அவ்வாறு இருத்த

போதிலும் அரசாங்கத்தின் தொழிற்சாலைக்காகவும் சேவை அடிப்படை ரீதியில் முன்னெடுக்கப்படும் அரச நிறுவனத்திற்கு கால நேரம் பொருந்தாது.

தனியார் நிறுவனம் ஃ அலுவலகங்களில் தொழிலுக்காக தனியார் வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கும்

மணித்தியாளம் 10.00 இற்கும் இடையிலான காலப்பகுதியில் தமது சேவை இடத்திற்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடமையை நிறைவு செய்து ஊழியர்களை அழைத்துச் செல்லும்

வாகனம் மணித்தியாலம் 16.00 இற்கும் மணித்தியாளம் 17.00 இடையிலான காலப்பகுதியில் புறப்பட வேண்டும்.

  1. பொதுப் போக்குவரத்து சேவை (ரயில் மற்றும் பஸ்)
    பயணிகளின் போக்குவரத்தில் சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர், சாரதிகள்
  2. நடத்துனர்கள் செயல்பட வேண்டும்.
  3. அத்தியாவசிய பொதுமக்கள் சேவையை வழங்கும் பொழுது மற்றும் உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை
  4. மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை
  5. நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட
  6. இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
  7. மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது தாம்
  8. பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும்.
  9. பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00
  10. இற்கு இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு வெளியே தனியான
  11. நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்;ற

தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும்.

இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0

சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு ஃ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய

அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.

  1. சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
  2. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில் காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.
  3. தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம் (னுநடiஎநசல ளநசஎiஉந) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.
  4. சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு
  5. விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
  6. முச்சக்கர வண்டிகளில் ஆகக் கூடியவகையில் பயணிக்க முடிகின்றமை சாரதியைத் தவிர இருவர் மாத்திரமே ஆகும். இதே போன்று வாடகைக்கார் (ருடிநசஇ Piஉமஅந போன்றவை)
  7. வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன் இதில்
  8. பயணிப்பதற்கு சாரதியைத் தவிர ஆகக் கூடிய வகையில் 3
  9. பேருக்கு மாத்திரமே ஆகும். இதன் போது சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக ஊழியர்களை அழைத்து வரும் பஸ் உள்ளிட்ட ஏனைய வாகனங்களில், ஊழியர்களை அழைத்து வரும்

பொழுது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்ப விதிமுறைகளை (அதாவது முகக்கவசம் அணிதல், கிருமிஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் , உடல் வெப்பம்

பரிசோதனை செய்தல் ) உரிய முறையில் கடைபிடித்து வாகனத்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

  1. சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறந்து முன்னெடுக்க முடிவதுடன் இதில் அடிப்படையாக இந்த நிலையங்களினால் அவ்வாறு முன்னெடுப்பதற்காக பிரதேச வைத்திய
  2. அதிகாரிகளின் சான்றிதழை பெற்றக் கொள்ள வேண்டும். மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு
  3. அமைவாக செயல்படுவது சம்பந்தப்பட்ட நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
  4. தனியார் வைத்திய மத்திய நிலையங்களை திறந்து
  5. முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் நிறுவனத்தினால் அவ்வாறு முன்னெடுப்பதற்கு பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழைப் பெற்றுக்
  6. கொள்வதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறிக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது நிறுவனங்களின்
  7. உரிமையானர்களினதும் ஊழியர்களினதும் பொறுப்பாகும்.
  8. சுற்றுலா ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இருப்பினம் இந்த ஹோட்டல்களில்
  9. ரெஸ்டுரண்டுகளை திறத்தல் மீள அறிவிக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்படும் அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை
  10. அமைச்சினால் 2020.04.17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள COVID 19 இற்கான பதிலளித்தல் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டிதொகுப்பு மற்றும் அதற்கமைவாக அடிக்கடி
  11. வெளியடப்படும் அறிவுறுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது அத்தியாவசியமாகும்.
  12. பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளடங்கலாக
  13. கொழும்பு மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட மொத்த வர்த்தகத்திற்கான சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களை முன்னெடுப்பதற்கு தொற்று நீக்கு விதிகளுக்கு அமைவாகவும்
  14. சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்கு அமைவாகவும் செயல்படுவதற்கு அனுமதி கிடைக்கின்றது.
  15. அனைத்து நிர்மாணப்பணிகளுக்கும் அனுமதி
  16. வழங்கப்படுவதுடன் நிர்மாண தொழிற்துறைக்கான பொருட்களை (கல்,மணல்,ஓடு, செங்கல் முதலானவை) ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடைக்கின்றது. இருப்பினும்
  17. நிர்மாணப்பணிகள் இடம்பெறும் வேலைத்தளத்திற்கு அவசியம் தேவையான ஊழியர்கள் சிலறை மாத்திரம் அழைப்பது சம்பந்தப்பட்ட முகாமையாளரின்
  18. பொறுப்பாவதுடன் அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியாக கடிதங்களை வழங்குவது அவசியமாகும்.
  19. கீழ்கண்ட நிறுவனம் ஃ இடங்கள் மீள அறிவிக்கும் வரையில் திறப்பதற்கும் ,திறந்து முன்னெடுப்பதற்கும் அனுமதியில்லை

a. வாராந்த சந்தை, நாளாந்த சந்தை முதலான கூட்டு ரீதியில் வர்த்தகம் இடம்பெறும் இடங்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கூடும் கூட்டு வர்த்தக சந்தை (மஹாரகம, பமுனுவ போன்றவை)

b. உடற்பயிற்சி மத்திய நிலையங்கள்

c. Spa நிலையங்கள்

d . கிளப்

e . சூதாட்ட நிலையங்கள் (புக்கி)

Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நாளை நினைவேந்த தயாராவோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

முள்ளிவாய்க்கால் நாளை நினைவேந்த தயாராவோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

கறுப்புபட்டி அணிதல்
சுடரேற்றல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி


உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை
மரக்கன்றுகள் வழங்குதல்

தமிழர் வரலாற்றில் முக்கியமான ஒர் கூட்டு நினைவாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின், தமிழீழத்; தேசிய துக்க நாளினை நினைவேந்திக் கொள்ள நாம் தயாராவோம் என

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
கறுப்புபட்டி அணிதல், சுடரேற்றல், முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை, மரக்கன்றுகள் வழங்குதல்

என தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் செயற்பாடுகளுடன், இந்நாளில் சிறப்பாக உலகளாவிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்றினையும்

இணையவழியூடாக ஏற்பாடு செய்துள்ளது. தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்று உலகெங்கும் உள்ள தமிழர்

தலைவர்கள், அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றுகூடி இதில் நினைவேந்துகின்றனர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுமையான விபரம் :

ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக விளங்கும் முள்ளிவாய்க்கால், உலகில் வாழும்

அனைத்துத் தமிழர்களின் கூட்டுநினைவிலும் நிலைத்து நிற்கும் நாளாக அமைகிறது.

உலகளாவியரீதியில் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால், மக்கள் ஒன்றுகூடுகின்ற பொதுநிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் ஒரு

சூழலில், முள்ளியவாக்கால் இனவழிப்பின் 11வது ஆண்டு நினைவினை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் நேரடியாக ஒன்றுகூடி நினைவு கூர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி

நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய

துக்க நாளாக அனுட்டிப்பது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த

நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு நினைவேந்துவோம்.

இந் நாளில் பின்வரும் நினைவேந்தல் செயன்முறைகளுக்கு நம்மைத் தயராக்கிக் கொள்வோம்.

  1. மே 18ம் நாள் திங்கட்கிழமை எமது வீடுகளில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலை குடும்பமாக நினைவேந்திக் கொள்வோம்.
  2. இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய
  3. தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.
  4. ‘இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை
  5. நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி
  6. என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து
  7. அன்றை தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்;
  8. அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும்
  9. முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம்.
  10. இந்நாளில் உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இணையவழியே (அமெரிக்கா) நியூ யோர்க் காலை 8 மணி, ஐரோப்பா மதியம் 14 மணி, இந்தியா,
  11. இலங்கை மாலை 5:30 மணிக்கு இடம்பெற இருக்கின்றது. இதில் தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்று உலகெங்கும்
  12. உள்ள தமிழர் தலைவர்கள், அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றுகூடி நினைவேந்துகின்றனர். இந்த இணையவழி நிகழ்வினை தமிழர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும்
  13. காணலாம்.
  14. இந்நாளில் ஆண்டுதோறும் உலக ஆளுமைகள் பங்கு கொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையும் சிறப்புற இணையவழி மூலமாக உலகத்தமிழர்கள் காணும் வகையில்
  15. இடம்பெற இருக்கின்றது.
  16. இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மே12ம் நாள் முதல் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகளை தமிழர் தாயகத்தில் வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ
  17. அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருவதோடு, வழமைபோல் நாடுகடந்த தமிழீழ அரசாங்னத்தின் அரசவை கூடி
  18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக தொடங்கி வைக்க இருக்கின்றது.

முள்ளிவாயக்கால் இனவழிப்பின் தம்முயிர் ஈந்தவர்கள் நினைவுடன் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது

உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா

அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி US Vice President Mike Pence கிக்கு தற்போது

கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளார் .

ஜனாதிபதி டிரம்பின் மகளுக்கு கொரனோ தொற்றியுள்ள நிலையில்

தற்பொழுது இவருக்கும் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
மேலும்

ஒரு முக்கிய டிரம்பின் அலோகர் ஒருவரும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளார்

24 மனைத்தியாலத்தில் முக்கிய மூவர் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


,இத்தனை அடுத்து டிரம்பும் இந்த நோயினால் பிடிக்க பட்டு இருக்கலாமெனவும் ,அவர் அதனை மறைத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா துணை
அமெரிக்கா துணை
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயால் -மனநலம் பாதிக்க பட்ட நிலையில் -மருத்துவர் சத்தியமூர்த்தி

கொரனோ நோயால் -மனநலம் பாதிக்க பட்ட நிலையில் -மருத்துவர் சத்தியமூர்த்தி

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் நகர்வாவில் இலங்கை இராணுவத்தினர் தீவிர முன் மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் ,

இவர்களின் வேகமான செயல் பாட்டின் காரணமாக நோயினை தடுத்து நிறுத்தியுள்ளதாக முப்படை தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நகர்வில் இவ்வாறு ஈடுபட்டு கொண்டிருக்க ,மறு முனையில் சுகாதார பிரிவினரும் தமது பணிகளை முன்னகர்த்தி வருகின்றனர் .

கொரனோ நோயால் பாதிக்க பட்ட கடல் படை இராணுவ அதிகாரி ஒருவருக்கு எலி காய்ச்சல் நோயினால் பிடிக்க பட்டு இறந்தார் என

வெற்றிகரமான செய்தியை இலங்கை இராணுவம் அறிவித்து சாதனை படைத்தனர்

தற்போது யாழ்ப்பாண போதனா மருத்துவ மனையில் கொரனோ நோயாளர்கள் எவரும் பாதிக்க படவில்லை என இவ்

வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் கவுரவ மேதகு ,மேன்மை மருத்துவ நிபுணர் சத்திய மூர்த்தி தெரிவித்து இருந்தார்

இவ்விதம் அவர் முன்னர் கூறிய நிலையில் யாழ்ப்பாணம் கொரனோ நோயற்ற நகரமாக காட்சி அளித்துள்ளதாக ,காட்சி ஊடகங்களில் வர்ண பேச்சுக்களை வீசி இருந்தார்

இவ்வாறன நிலையில் தற்போது 38 பேருக்கு மேலானவர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டு இருந்தனர் எனவும் ,அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ,தெரிவித்துள்ளார்

இவரது இந்த முன் பின் முரனான பேச்சுக்கள் ,இவர் மன நிலை குழம்பிய நிலையில் ,முன்னர் சொன்னதை மறந்து இவ்விதம்

தெரிவித்து வருவதாக மக்களை சிந்திக்க வைத்துள்ளது

கொரனோ நோயாளர்களை பராமரித்து வந்த நிலையில் அவர்களது நோயானது இவருக்கு பரவி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

அதனால் தற்போது இவர் தனிமை படுத்தலுக்கு உள்ளக நேரிட கூடும் என அஞ்ச படுகிறது,இதே மருத்துவமனையில் இறந்த

நபர்கள் சிலர் கொரனோ முறைப்படி உடல் நல்லடக்கம் செய்ய பட்டதக தெரிய வருகிறது .

Posted in உலக செய்திகள்

லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு video

லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு

ஜூன் ஓரம் திகதி வரை அடித்து பூட்டு – அன்றே பாடசாலைகள் ஆரம்பம் -ஜோன்சன் அறிவிப்பு

பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி பலநூறு மக்கள் நல்தோறும் பலியாகி வருகின்றனர் .


இவ்வேளையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை பிரிட்டன் அடித்து பூட்டும் கால எல்லை நீடிக்க பட்டுள்ளது

ஜூன் முதலாம் திகதி வரை பாடசாலைகள் ஆரம்பிக்க படும் என பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

மக்கள் பொது பாவனைகளை தவிர்க்குமாறு வேண்டுதல் விடுத்துள்ளார்


பேரூந்துகள் ,ரயில்கள்,மற்றும் டாக்சிகள் என்பனவற்றை அவர் தவிர்க்குமாறு கருதப்பட தெரிவித்துள்ளார்

மக்களை வீட்டுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார் ,

நாளை திங்கள்ட கிழமை தடை மீள் எடுக்கப்படும் என எதிர்வு கூற பட்ட நிலையில் இந்த முடிவு


அறிவிக்க பட்டுள்ளது ,மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த நிலைக்கு இவர் சென்றுள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

சிரியாவில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் இடம் பெற்ற

மோதல்களில் கிளர்ச்சி படைகளை சேர்ந்த முப்பத்தி ஐந்து பேர் பலியாகியும்

அறுபதுக்கு மேற்பட்டவர்கள் படு காய மடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

சிரியாவின் Al-Manarah பகுதியில் இடம்பெற்று வெவ்வேறு தாக்குதல்களில்

இரண்டுக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை சேர்ந்தவர்களே இவ்விதம் அரச

இராணுவ தாக்குதலில் பலியாகியுள்ளனர் ,பரஸ்பர மோட்டார் ,எறிகணை தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை ரசியாவின் விமானம் தளம் மீதும் துருக்கிய ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சிரியாவில் கடும் மோதல்
சிரியாவில் கடும் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மலேசியாவில் சிக்கி தவித்த 178 பேர் இலங்கை வந்தடைந்தனர்

மலேசியாவில் சிக்கி தவித்த 178 பேர் இலங்கை வந்தடைந்தனர்

கொரனோ நோயின் காரணாமாக இலங்கை விமான பயணங்கள் இரத்து

செய்ய பட்டது ,இவ்வேளை மலேசியாவுக்கு பயணித்த இலங்கையர்கள் விமானங்கள் ஏதும் இன்றி தவித்து வந்தனர்

அதனை அடுத்து இலங்கை அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம்

ஒன்று மலேசிய சென்று அங்கு தவித்து கொண்டிருந்த சுமார் 178 இலங்கையர்களை

காவியபடி ,கட்டுநாயக்க விமான தளம் வந்தடைந்துள்ளது
UL 315 என்ற இலங்கை விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

எனினும் சுகாதார பொறிமுறை பாதுகாப்பை கருத்தில் கொண்டு 14 நாட்கள்

தனிமை படுத்தல் முகாமில் தங்க வைக்க படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது

தேர்தலை கருத்தில் கொண்டு ,அரசு இவ்வாறான செயல்பாடுகளை தீவிர படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

மலேசியாவில் சிக்கி
மலேசியாவில் சிக்கி
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்கமுடியாது -சுமந்திரன் முழக்கம் – வீடியோ

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்கமுடியாது -சுமந்திரன் முழக்கம் – வீடியோ

தமிழீழ தேசிய தலைவர் பிரபகாரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெறிவித்துள்ளார்

பிரபாகரன் வேலையில்லாது ஆயுதத்தை ஏந்தியது தவறு என முழங்கியுள்ளார் .சுமந்திரனின் இந்த கள்ள தனமான பேச்சு ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது

இவருக்கு வெளிநாடுகளில் ஈழ தமிழர்கள் செருப்படி வழங்கியது இங்கே

குறிப்பிட தக்கதுடன் லண்டன் வந்து மக்களை சந்திக்காது அஞ்கை ஓட்டம் பிடித்தவர் இந்த எட்டப்பன் சுமந்திரன் என்பதும்

புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பை இல்லாது ஒழிக்க வேண்டும்

என்ற கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல் பட்டு ,தமிழ் மக்கள்

வாக்கினை சிதறடித்து அந்த கட்சியை காணாமல் ஆக்கும் தீவிர செயல் பாடுகளில் சுமந்திரன் ஈடுபட்டு வருவதன் கபட நோக்கமே இதுவாகும்

சுமந்திரன் போட்டியிடும் பகுதியில் தமிழர்கள் இவரை ஒட்டு போடாது

விரட்டியடிக்க வேண்டும் என்பது வேண்டுதல் ,ஆனாலும் தேசியபட்டியல் மூலம் இவர் எம்பி ஆவர் என்பது தான் கேவலான நிலையாக உள்ளது

பிரபாகரன் ஆயுதம்
பிரபாகரன் ஆயுதம்
https://www.youtube.com/watch?v=smc5KdIMZpw&feature=youtu.be

Posted in முக்கிய செய்திகள்

11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்

வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து

போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்

அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது

எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை

ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக

சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்

இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு

    இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ

    வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

    11 தமிழ் இளம்
    11 தமிழ் இளம்
    Posted in உலக செய்திகள்

    கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை

    கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை

    கொரானோ கிருமிகள் சீனாவின் குவாம் மானிலத்தில் இருந்தே உலகம் முழுவதும் பரவியதாக
    அமெரிக்கா குற்றம் சுமத்தியது ,

    இதனை அடுத்து அமெரிக்காவே உலகில் அதிகம் நோயாளர்களை கொண்ட நாடாக உருமாற்றம் பெற்றுள்ளது ,

    இந்த நோயானதை தமது நாட்டுக்கு சீனாவே பரப்பியது எனவும் ,அதனால் சீனா பல பில்லியன் டொலர்களை இழப்பீடாக தரவேண்டும் என அமெரிக்கா கோரியதுடன் ,

    சீனாவுக்கு எதிரான 13 பிராதன பொய்களை கூறி உலகில் பரப்புரை புரிந்து வந்துள்ளதாக சீனா தெரிவித்து


    A for 30-page பக்கத்தில் 11,000-word சொற்கள் அடங்கிய மிக பெரும் மறுப்பு அறிவிப்பை ,நெத்தியடி விளக்கத்தையும் வழங்கியுள்ளது

    இந்த கொரானாவுடன் அமெரிக்கா பொருளாதாரம் அழிவு நிலைக்குச செல்லும் நிலையில் உள்ளது


    ஆனால் சீனாவோ வழமை போலவே தனது நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது

    சீனாவின் பொருட்கள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ,இலத்திரணியல் பொருள்களை வரை இரட்டிப்பு விலையாக உயரந்துள்ளன

    அமெரிக்காவின் பதின் மூன்று பொய்களுக்கு சீனா வெளியுறவு மையம் வழங்கியுள்ள இந்த நீண்ட பதில் மறுப்பு தெளிவு அமெரிக்காவை கதி கலங்க வைத்துள்ளது

    இவற்றை டிரம்ப் படித்து நிமிர எத்தனை நாள் பிடிக்குமோ ..? கொரனோ விவகாரம் கோழி சண்டை விவகாரமாக இப்போது மாறியுள்ளது

    கொரனோ பொய்க்கு
    கொரனோ பொய்க்கு
    Posted in இலங்கை செய்திகள்

    சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

    சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

    இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்த்தில்


    நமக்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்
    மேலும்

    இவருடன் கூடி நின்ற சகோதரன் பலத்த காயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

    கைவிடப் பட்ட பழைய மண் வீடு ஒன்றை சிறுவன் கடந்து செல்லும் பொழுதே,

    இவன் மீது அந்த மண் சுவர் இடிந்து வீழ்ந்து உயிரை பறித்துள்ளது ,பெற்றவர்களின்

    அலட்சிய போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

    சுவர் இடிந்து வீழ்ந்து
    சுவர் இடிந்து வீழ்ந்து
    Posted in இலங்கை செய்திகள்

    அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு

    அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு

    சகல அதிவேக வீதி கட்டபைப்பும் திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்பட

    விருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்

    நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.

    அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு –

    கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும்

    கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    அதிவேக வீதிகள்
    அதிவேக வீதிகள்
    Posted in இலங்கை செய்திகள்

    மலையகத்தில் கொரனோவால் எவரும் பாதிக்க படவில்லை – முழங்கிய அரசியல்வாதி

    பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா நோயாளி எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனவே சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி அவர்களுக்கு

    ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ‘கொரோனா’ பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

    ‘கொரோனா’ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடு நடவடிக்கையாக நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ, பத்தனை, நுவரெலியா ஆகிய

    பகுதிகளில் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிகிச்சைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையும் தயார் நிலையிலேயே இருக்கின்றது.

    இந்நிலையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து நோய் காவுவண்டி சாரதிகள்,

    தோட்ட நலன்புரி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வும், விளக்கமும் வழங்கும் நிகழ்வு அமைச்சர் தொண்டமான் தலைமையில் இன்று (10.05.2020) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

    பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தொண்டமான் மேலும் கூறுகையில்,

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அதிகாரிகள் இரவு, பகல் பாராது சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    பெருந்தோட்டத்துறையில் இன்றும் எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்படவில்லை.

    ஏற்கனவே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலையகத்துக்கு வந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் ஆயிரத்து 500 பேர் வரை வரவுள்ளனர்.

    அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கமையவே இவர்கள் வருகின்றனர். குறித்த ஆயிரத்து 500 பேரும் ஏற்கனவே 14 நாட்களுக்கு மேலாக

    கொழும்பில் தனிமையில் இருந்த நிலையிலேயே வருகின்றனர். ஆகவே எமக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என நம்புகின்றேன்.

    தோட்டங்களைப் பொறுத்தவரையில் சுகாதார அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு தோட்டமாக செல்வது கடினம். எனவே தான் அவர்கள் உங்கள் உதவியை நாடியுள்ளனர்.

    அவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி செயற்பட்டால் நாம் மக்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    இப்பணியை முன்னெடுக்க பயப்படதேவையில்லை. அதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும் நாம் செய்துகொடுப்போம்.

    தோட்ட மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக நிற்கின்றது. எதிர்வரும் 12 ஆம் திகதி சுகாதார அமைச்சர் இங்கு வருகிறார். சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும்

    ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களை உரியவகையில் பின்பற்றினாலேயே எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    எனவே, தயவு செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேவையான அனைத்து வசதிகளையும் எனது அமைச்சு மூலம் வழங்குவேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    Posted in உலக செய்திகள்

    கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

    கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

    கொரனோ நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிக்கி தவிக்கும் டுபாய் நாட்டில் ,அந்த நோயாளர்களை பராமரிப்பதற்கு என இந்தியாவில்

    இருந்து அறுபது ஆண் ,பெண் அடங்கிய தாதியர் குழு ஒன்று வந்தடைந்துள்ளது

    இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் துபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் ,சிறப்பு விடுதி ஒன்றில் தங்க வைக்க பட்டுள்ளனர்

      கொரனோ நோயின் அபாயம் நீங்கும் வரை இவர்கள் ள் இங்கு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

      ஆபத்தான நோயாளர்களை பரமரிப்பதற்கு ,தம் உயிரை பணயம் வைத்து வந்துள்ள இவர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாக்க பட வேண்டியவர்கள்

      அரேபியர்கள் எவ்வாறான மனோநிலை கொண்டவர்கள் என்பதனை

      இங்கு பணிபுரியும் காலத்தில் இவர்கள் ,புரிந்து கொள்வார்கள் என்பதை இங்கே அடித்து கூறலாம்

      கொரனோவில் தவிக்கும்
      கொரனோவில் தவிக்கும்

      Error: View 87c99e2ghc may not exist

          Posted in உலக செய்திகள்

          லாப் பழுது – 50,000 ஆயிரம் கொரனோ நோயார் இரத்த மாதிரிகளை -அமெரிக்காவுக்கு அனுப்பிய லண்டன்

          லாப் பழுது – 50,000 ஆயிரம் கொரனோ நோயார் இரத்த மாதிரிகளை -அமெரிக்காவுக்கு அனுப்பிய லண்டன்

          லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்த நோயாளர்களின் இரத்த

          மாதிரிகளை சோதனை செய்யு லாப் ,ஆராய்ச்சி கூடம் பழுதடைந்த நிலையில் தற்பொழுது பிரிட்டன் ஐம்பதாயிரம் நோயாளர்களின்

          இரத்த மாதிரிகளை சோதனை செய்திட அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது

          மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிகாவில் பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி

          வருகின்ற நிலையில் ,அவர்களை பராமரிக்க முடியாத நிலையில் அமெரிக்கா திணறி வருகிறது

          இவ்வாறான வேளையில் லண்டன் அரசு புரிந்துள்ள இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

            நாளை மீளவும் லக்கடவுன் நீக்க பட்டு மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பிட அரசு முயன்று வரும் வேளையில் ,உயிர் பலிகள்

            அதிகரித்து சென்ற வண்னம் உள்ளது ,இவ்வாறான நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள்து

            லண்டனில் லாப் பழுது
            லண்டனில் லாப் பழுது
            Posted in இலங்கை செய்திகள்

            அவுஸ்ரேலியாவில் தவித்த 272 பேர் -சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தனர்

            அவுஸ்ரேலியாவில் தவித்த 272 பேர் -சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தனர்

            அவுஸ்ரேலியாவில் சிக்கி தவித்த சுமார் 272 பேர் இலக்கை அரச சிறப்பு விமானத்தில் ,தாய் நாட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்

            இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்கள் 21 நாட்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்


              ,சிறப்பு தனிமை படுத்தல் முகாமில் இவர்கள் தங்க வைக்க பட்டுள்ளனர்

              எதிர்வரும் நாட்களில் நோயின் தாக்கம் இலங்கையில் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தகக்து

              அவுஸ்ரேலியாவில் தவித்த
              அவுஸ்ரேலியாவில் தவித்த
                    Posted in உலக செய்திகள்

                    பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு

                    பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு

                    பிரிட்டனின் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து நாட்டுக்குள்

                    நுழையும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க

                    பட்டு அதன் பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது

                    வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் வந்தடைந்த மக்களினால் காவி வர ப்பட்ட

                    இந்த நோயானது வேகமாக பரவியுள்ளதாக கண்டுபிடிக்க பட்டுள்ள நிலையில்

                    இந்த அதிரடி நகர்விவில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் ,இதே நடைமுறையினை இலங்கை தொடராக பின்பற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    பிரிட்டனுக்குள் நுழையும்
                    பிரிட்டனுக்குள் நுழையும்
                    Posted in உலக செய்திகள்

                    கொரனோ நோயில் சிக்கி 2,லட்சத்து 76 ஆயிரம் பேர் பலி

                    கொரனோ நோயில் சிக்கி 2,லட்சத்து 76 ஆயிரம் பேர் பலி

                    உலக நாடுகளில் வேகமாகி பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

                    தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து 825 பேர் பலியாகியுள்ளனர்

                    மேலும் சுமார் நாப்பது லட்சடகுக்கு மேலான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .


                    இந்த நோயானது அமெரிக்காக்காவில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது

                    இங்கு நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    கொரனோ நோயில்
                    கொரனோ நோயில்
                    Posted in இலங்கை செய்திகள்

                    போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை செலுத்த மேலும் நிவாரணக்காலம்

                    போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை செலுத்த மேலும் நிவாரணக்காலம்

                    கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன,

                    போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பணமின்றி மே மாதம் 29ஆம் திகதி வரை செலுத்துவதற்கு மேலும் நிவாரணக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

                    இதுதொடரபாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஏடக அறிக்கை பின்வருமாறு:.

                    கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதினால் செலுத்த முடியாமல் போன

                    போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப் பணமின்றி செலுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரின் உடன்பாட்டில்

                    நிதியமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் 2020.05.02 வரையில் நிவாரண காலத்தை வழங்குவதற்கு தபால் திணைக்களத்தினால் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

                    இந்த நிவாரண காலத்தில் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்றல் பணி , மேல் மாகாணம்,

                    புத்தளம் மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளுக்காக மூடப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில்

                    தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

                    இருப்பினும் 2020.04.29ஆம் திகதி தொடக்கம் 2020.05.04 வரையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை மற்றும்

                    மேல்மாகாணம் , புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக மூடப்பட்டிருந்த ஃ மூடப்பட்டுள்ள

                    பிரதேசங்களில் உள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை

                      செலுத்துவதற்காக இது வரையில் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டாததால் 2020.05.02 வரையில் வழங்கப்பட்ட நிவாரணக்

                      காலத்திற்காக மேலதிக நிவாரண காலத்தை 2020.05.11 தொடக்கம் 2020.05.29 திகதி வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                      இதற்கமைவாக மார்ச் 01 திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கு நிவாரணக் காலம் உரித்தாகும்.

                      இதேபோன்று 2020.02.16ஆம் திகதி தொடக்கம் 2020.02.29ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் தண்டப்பண

                      கட்டண ஆவண கட்டணத்தை 28 நாட்களுக்குள் செலுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட தண்டப்பணத்துடன் ; போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்பதற்கு நிவாரண கால அவகாசம் கிடைக்கும்.

                      2020.05.11ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் வழமையான நடவடிக்கைளுக்காக திறக்கப்படும் என்பதினால் இதனை தடையின்றி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

                      மேலே குறிப்பிடப்பட்ட ஊடக அறிக்கையை அனைத்து ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கையை

                      மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

                      போக்குவரத்து விதி
                      போக்குவரத்து விதி