Author: நலன் விரும்பி
சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்தமக்கள் -அரச பஸ்கள் மூலம்அனுப்பி வைப்பு
சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்தமக்கள் -அரச பஸ்கள் மூலம்அனுப்பி வைப்பு
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப
முடியாமலிருந்த மலையக பிரதேசத்தைச்சேர்ந்த பலர் நேற்று தமது சொந்த இடங்களுக்கு பயணமானார்கள்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் ஹட்டன் மற்றும் நுவரெலிய பிரதேசங்களுக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்..
மேல் மாகாணத்தில் பணிபுரிந்த இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் பணியிடங்களில் தங்கியிருந்த இவர்கள்
இரத்மலானை ரயில் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மருத்துவ பரிசோதனைக்குப்பின்னர் பயணமானார்கள் .
இவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தத்திற்கான சான்றிதழை ஹட்டன் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாட நேர அட்டவணையில் மாற்றங்கள் -அதன் பின்னர் -பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானம்
பாட நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொண்ட பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானம்
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடுத வாரத்தில் தீர்மானம்
மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஊடகங்களுக்கு இது குறித்து கருத்து அமைச்சர் பல கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டும் என்றார்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

முதல் கட்டத்தில் கீழ், ஆரம்ப வகுப்பு மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க எதிரபார்க்கவில்லை என்று
தெரிவித்த அமைச்சர் உள்ளுராட்சி மன்றங்களின் உதவிகளை பெற்று சகல பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். இதன்பின்னர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையின் பின்னர் அதாவது
நான்கு நாட்களுக்குப்பின்னர் ஆசிரியரகள் அதிபர்களை அழைத்து பாடங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றங்களை
மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை
கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை
இலங்கை – கண்டி டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் வறிய மக்கள் வசித்து வந்த இருபது வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்தன
இதனால் தமது வீடுகளை இழந்து அதில் வசித்த மக்கள் அகதிகளாக உள்ளனர் ,வறுமையில் வாடிய மக்களுக்கு இடம்பெற்றுள்ள இந்த சோகமான செயல் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

திட்டமிட்டு விசமிகள் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்ற சுமத்த படுகிறது ,தமிழர் பகுதிகளை மைய படுத்தி மர்ம
கொலைகள் இடம்பெற்று வரும் நிலையால் ,காவல்துறையினர் மக்களை தாக்கி வரும் வேளை இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது
கோத்தபாயவின் இனவிரோத செயலை அப்பட்டமாக காட்டுவதாக மனித உரிமை நேயவாதிகள் கருத்துரைக்கின்றனர்
தனக்கு வாக்கு போடாத தமிழர்களை இவ்விதம் பழிவாங்கி வருவதான குற்ற சாட்டுக்கள் ,ஆழமாக தமிழர் மனங்களில் நிலைத்துள்ளன

ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி
ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் பாடசாலைகளை அடித்து பூட்ட பட்டுள்ளன .
இந்த நிலையில் ஆசிரியர்களின் ஒருமாத சம்பளத்தை இலவசமாக அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என கோட்டாபய அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .
இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது ,இதே போலவே சுகாதர அமைச்சேரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் பணத்தை கேட்டுளளார் ,
ஆனால் அது தவிர்க்க பட்ட நிலையில் ,அவர்களது மேலதிக வேலையினை செய்யாது தடுக்க பட்டு ,அந்த பணத்தை வெட்டி அரசுக்கு கொடுக்கும் நிலையில் ஈடுபட்டுள்ளனர் ,
இதே போலவே இராணுவத்தினரிடத்திலும் ஒருவர் ,ஐந்து ஆயிரம் ரூபாய்களை அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என சவேந்திர
சில்வா கோரிக்கை விடுத்தது அவ்வாறு பெற்றுள்ளதும் குறிப்பிட தக்கது
சிவப்பு சால்வைகள் ஆட்சியில் தொடர்ந்து அடாவடியும் ,அடக்குமுறையும் நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு
இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு
இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இந்த வீசாக்களின் கால எல்லையை மே மாதம் 12 ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூன்
11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

வீசா காலத்தை நீடிக்க எதிர்பார்த்திருப்போர் ஜூன் 11ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs என்ற
இணையத்தளத்தில் அதற்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். .
உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

திருடர்களை பிடித்து கட்டி வைத்த மக்கள் – விடுவித்த பொலீஸ்
திருடர்களை பிடித்து கட்டி வைத்த மக்கள் – விடுவித்த பொலீஸ்
6யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கொலையில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை மக்கள் பிடித்து கட்டி வைத்தனர் ,ஊரடங்கு
வேளையில் இரவில் நடமாடிய ட் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர் .
இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கடந்த ஆண்டு அரை நிர்வாணாமாக்க பட்டது அவரை ஊரவலமாக தககியபடி அவரை அழைத்து சென்றனர்
அது போலவே மீள்வும் செய்திட வேண்டும் என கொதித்த மக்கள்தெரிவித்துள்ளனர் ,
பிடிக்க பட்ட இரு திருடர்களும் கட்டி வைக்க பட நபர்களை கவல்த்துறையில் ஒப்படைக்க பட்ட பொழுதும் ,போலீசார்
அவர்களை விடுதலை செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
காவல்துறையினருடன் தொடர்பை பேணிய படி கொள்ளையில் ஈடுபாடும் ,போலீஸ் ஆதரவு பெற்ற நபர்கள் இவர்கள் என்பது இப்பொழுது உறுதியாகியுள்ளது

முள்ளி வாய்க்கால் பகுதியில் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
முள்ளி வாய்க்கால் பகுதியில் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த அசிங்கள காவலதுறையினர் மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்
குறித்த நபர் ஒருவரை தேடி சென்ற போலீசார் அவரை தங்களிடம் பிடித்து
வந்து ஒப்படைக்கும் படி கூறியே அங்கிருந்த அப்பாவி நபர்கள் மூவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தி சென்றுள்ளனர்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இவர்களின் தாக்குதலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான இவர்கள்
தற்போது முல்லைத்தீவு மருத்துவமனையில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் நான்கு இடங்களில் இவ்வாறு மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது

யாழில் தனிமை படுத்த பட்ட 298 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
யாழில் தனிமை படுத்த பட்ட 298 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கை தமிழர் தாயமாக யாழ்ப்பாணம் விடத்தற்பளை பகுதியில் தனிமை
படுத்தல் சிறப்பு முகாமில் தடுத்து வைக்க பட்ட மக்களில் சுமார் 298 பேர் தற் பொழுது
தமது சொந்த இடஙக்ளுக்கு ,தமது குடும்பங்களுடன் மீள் இணையும் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

சிறப்பு பேருந்துகளில் இவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர் .
இலங்கை பாதுகாப்பான நாடு என ஆளும் அதிகாரம் தெரிவித்து வரும் நிலையில் ,
இயற்கை மரணம் என இறந்தவர்களை கொரனோ மரண விதிகளுக்கு உட்படுத்தியமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்த நோயினால் இறந்தவர்களை ,மலேரியா,நிமோனியாவில் இறந்ததாகக் இலங்கை கணக்கு காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

ஊரடங்கை மீறிய 47,784 பேர் கைது – பண வசூல் வேட்டையில் பொலிஸ்
ஊரடங்கை மீறிய 47,784 பேர் கைது – பண வசூல் வேட்டையில் பொலிஸ்
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தை மதிக்காது ,வீதியில் அத்துமீறி உலாவிய 47 ஆயிரத்து 784 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேற்படி நபர்கள் பாவித்த வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளதுடன் தண்டமும் வழங்க பட்டுள்ளது
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இவ்வாறு வழங்க பட்ட தண்டம் எதிரிவரும் 14 நாட்களுக்குள் செலுத்த
பட வேண்டும் தவறின் அதற்கு வட்டி ,குட்டி என ,அதிகரிக்கும்
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வாறு சமன் செய்யும் நிலையில் இலங்கை காவல் துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவு வீடொன்றுக்குள்
புகுந்த சிங்கள காவல்த்துறை காடையர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளனர்
சிங்கள காடையர் காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டதாக கூற படும் வாலிபன்
ஒருவனை கைது செய்து இழுத்து செல்லும் முகமாக அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள படையினர் தேடுதலி நடத்தினர்
அதன் பின்னர் அங்கிருந்த ஆண் பெண்கள் மீது வன்முறை தாக்குதலை
நடத்தியதுடன் ,குறித்த வாலிபனை காவல்துறையில் ஒப்படைக்கும் படி மிரட்டி விட்டு சென்றுள்ளனர்
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளில் தாம் அவ்வாறு ஒருவரை தேடவில்லை என போலீசாரை தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

விவசாய – கடற்றொழிலாளர்களுக்கு மே மாதமும் முதல் ரூபா 5000/= ஓய்வூதியம்
விவசாய – கடற்றொழிலாளர்களுக்கு மே மாதமும் முதல் ரூபா 5000/= ஓய்வூதியம்
சகல விவசாய மற்றும் கடற்றொழிலாளர்களை சார்ந்த ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் ரூபா 5000/= கொடுப்பனவு மே
மாதத்திலும் வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபைத் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா தெரிவித்துள்ளார்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை
சகல விவசாயிகள் / கடற்றொழிலாளர் ஓய்வூதிய பயனாளிகளுக்காக ரூபா 5000/= கொடுப்பனவை 2020 மே மாதத்திற்காக வழங்குதல்
கொவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட பொது மக்களுக்காக அதிமேதகு
ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்படும் ரூபா 5000/=, கொடுப்பனவை சகல விவசாய
ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெரும் பயனாளிகளுக்கும் இம்முறையும் மே
மாதத்திற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல
காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா அவர்கள் பத்திரிகை அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அனைத்து விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெறுவோருக்கு உரித்தான ஓவ்வூதியம் ரூபா 5000/=
என்ற ரீதியில் தமக்குரிய தபால் அலுவலகத்தின் மூலம் மே மாதம் 11, 12 , 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் பெற்றக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைவாக விவசாய ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 1,62,000 பேருக்கும் கடற்றொலாளர்
ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 4907 பேருக்கும் சுமார் 831 மில்லியன் ரூபாவை மே மாதத்திற்காக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய கொடுப்பனவை நாட்டில் உள்ள 4200 தபால் அலுவலகங்கள் மூலம்
செலுத்துவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்வதற்கு தபால் மா அதிபரின் விசேட அனுசரணையின் கீழ் தபால் திணைக்களம்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏதேனும் அல்லது அவசர நிலையின் அடிப்படையில் தமது எல்லைப் பிரதேசத்திற்கான
சம்பந்தப்பட்ட தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தமது ஓய்வூதிய கணக்குப் புத்தகத்தை அவசரகால அனுமதிப்
பத்திரமாக பயன்படுத்த முடியும் என்பதுடன் ,ஏதேனும் அல்லது போக்குவரத்து சிரமங்களினால் ஓய்வூதிய பயனாளிகளுக்குப்
பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகத்தின் மூலம்
பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பொருத்தமான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும் என்றும் கமத்தொழில்
மற்றும் கமநல காப்புறுத்திச் சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேதமசந்திர ஹெப்பா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு
பிரிட்டன் Sandall Road” பகுதியில் நபர் ஒருவர் இறந்த நிலையி சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரது சடலத்தை கண்ணுற்ற பொதுமகன் ஒருவர் காவல் துறையினர்
அவசர கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கியநிலையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர் .
இன்று அதிகாலை 5,30 மணியளவில் இந்த சடலம் மீட்க பட்டது ,இந்த நபரது
மரணம் மர்மமாக உள்ள நிலையிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
மேலும் Weasenham Lane and Railway Road சாலைகள் தற்போது அடித்து
பூட்ட பட்டுள்ளன ,இதுவரை இந்த நபராது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து ,சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எழுபது பேர் சனிக்கிழகை காலை 4.30 மணியளவில் லண்டனுக்குள் உள் நுளைந்துள்ளனர்
ஐந்து படகுகளில் டோவர் பகுதிக்குள் நுழைந்த எழுபது அகதிகள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட் படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு உள் நுழைந்தவர்களில் ஆண் ,பெண்கள் உள்ளடங்கும் ,கொரனோ
வேளையில் இவ்விதம் அகதிகள் நுழைந்துள்ளதால் அவர்கள் 14 முதல் 21
நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என தெரிவிக்க பட்டுள்ளதுடன்
,அனைவருக்கும் கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
மேலும் வெள்ளிகிழமையும் இவ்வாறு நுழைந்துள்ளார் .கடந்த 24 மணித்தியாலத்தில் 140 அகதிகள் நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன

பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்
பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்
பிரிட்டன் -Victoria Park, on Hodsoll Road. பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை
இரண்டு மணியளவில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரி மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இதன் போது மிரண்டு கத்திய பெண்ணின் சத்தம் கேட்டு அவ்வீதி அருகில்
உள்ளவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில்,மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கொரனோ வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்
கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்
இலங்கை போகவண்டலவா தொடத்தில் பணிபுரிந்த பதின் ஐந்து நபர்களை
அங்கு கூடு கட்டி வாழ்ந்த குளவிகள் ஓட ஓடி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளன .
குழவிகளின் பலமான தாக்குதலுக்கு உள்ளான இவர்கள் அதே பகுதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவ்வாறான குளவிகள் தாக்குதல்கள் இந்த பகுதியில் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் மருந்துகள் அனுப்பிய இந்தியா photo
இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் மருந்துகள் அனுப்பிய இந்தியா photo
இலங்கைக்கு 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களை இந்தியா, நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொவிட் 19 தொற்றை தடுப்பதற்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய இந்த பொருட்களை
இலங்கையின் புதிய இந்திய உயர்ஸ் தானிகராக நியமனம்பெற்றுள்ள கோபால் பாக்லே நேற்று இலங்கைக்கு
எடுத்துவந்தார்.இலங்கை வந்தடைந்த புதிய உயர்ஸ்தானிகர் இந்தியாவின்
சார்பில் இலங்கை மக்களுக்கு தனது வெசாக் தின
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அவர் எடுத்துந்த இந்த நன்கொடை மருந்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படும் இந்தியாவின் நான்காவது நன்கொடையாகும்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இணைய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
சர்வதேச தொற்று நோயான கொவிட்-19க்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருந்தார். இதற்கமைய நான்காவது
தடவையாக மேலும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சிறப்பு 
கிளிநொச்சியில் ,இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சியில் ,இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான டிப்போ சந்திமுதல் கரடிபோக்கு சந்தி வரையான ஏ 9 வீதியிலும் வங்கிகள் பேருந்து
நிலையம் மற்றும் தரிப்பிடங்கள் வர்த்தக நிலையங்கள் நடை பாதைகள் மக்கள் கூடும் பகுதிகளிலும் தொற்று நீக்கும்
செயற்திட்டம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.24கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த
குணரட்ணவின் ஆலோசனைக்கமைவாக கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி சில்வாவின்
வழி நடத்தலில் காலாற்படையினரால் குறித்த தொற்று நீக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி பொது
சுகாதார பிரிவினரின் கண்காணிப்பில் தொற்று நீக்கம் கலவைகள் விசிறப்பட்டதுடன் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 

பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி
பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
கடந்த தினத்தில் மட்டும் 640 பேர் இறந்துள்ளனர் ,நாள்தோறும் அதிகரித்து செல்லும் கொரனோவின்
தாக்குதலால் அரசு தெரிவித்ததன் படி படி ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இறக்க கூடும் என அஞ்ச படுகிறது

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும் – மும் மொழிகளிலும் வழிகாட்டல்கள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும் – மும் மொழிகளிலும் வழிகாட்டல்கள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள்
வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கு அமைவாக வைரஸ் தொற்று காலத்துக்கு முன்பு போல் அல்லாமல் அதன் பின்னர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை
நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்த அவர், குறிப்பாக அரச ,அரச சார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்கள்
கைத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் இணையதளத்திலும்,
பிரதமர் அலுவலக இணைய தளத்திலும் அதனை பார்வையிட முடியும். இதனை அறியவில்லை எனக் கூறி தட்டிக்கழிக்க முடியாது
என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களில் தெளிவில்லை என்றால் எமது அதிகாரிகள் குழு அதனை தெளிவுபடுத்த தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகள் தரமற்றவையென
மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது
பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட
நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர் பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல்
செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும்
அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா
வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள்
தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள்
ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில்
அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது.
நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக்
பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம். அதேபோன்று எமது நீண்ட கால
வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்கு உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை
கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

கொரோனா – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா நோயாளிகளில் குணமடைந்து வைத்திய
சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளிகளின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இதேவேளை இன்றைய தினத்தில் (2020.05.08) இதுவரையில் கொரோனா
வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை
என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
நேற்றைய தினத்தில் (2020.05.07) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1553 என்றும் அவர் தெரிவித்தார்.

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை








