Author: நலன் விரும்பி
கொரனோ தாக்குதலில் சிக்கி 287,293 பேர் பலி
கொரனோ தாக்குதலில் சிக்கி 287,293 பேர் பலி
உலக நாடுகள் பூராக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
2 லட்சத்து 87ஆயிரத்து ,293 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 4,2 லட்சத்து 54ஆயிரத்து ,800 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவிலே அதிகம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கு கிட்ட தட்ட 15
லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நாள் தோறும் உயிர்பலிகள் அதிகரித்த வண்ணமே உள்ளது
4வது தொகுதி மருந்துப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
4வது தொகுதி மருந்துப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
இதுதொடரபாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு:
ஊடக வெளியீடு
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
கொழும்பிலுள்ள இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின்
நான்காவது தொகுதியை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள்
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து இன்று கையளித்தார்.
2020 மே 08 ஆந் திகதி சிறப்பு இந்திய விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 12.5 டொன் எடையுள்ள
மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளடங்கிய இந்தப் பொருட்களின் தொகுதியானது, கோவிட்-19 தொற்றுநோய்க்கு
எதிராகப் போராடும் அண்டை மற்றும் பங்காண்மை நாடுகளுக்கு உதவுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியைக் குறித்து நிற்கின்றது.
இந்தப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அரசியல், வர்த்தகம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் பிராந்திய
விவகாரங்கள் போன்றவற்றிலான இருதரப்பு ஒத்துழைப்பினை மீளாய்வு செய்வதற்கானதொரு சுருக்கமான சந்திப்பிற்கு பிரதி உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரை அழைத்தார்.
பொதுவான சவால்களுக்கு முகங்கொடுக்கும் தற்போதைய காலகட்டத்தில், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட முக்கியமான
வளங்களை நன்கொடைகளாகப் பகிர்ந்து கொள்வதிலான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வெளிநாட்டு உறவுகள்
அமைச்சர் பாராட்டினார். தேசிய ரீதியாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையிலும், இலங்கைப் பிரஜைகளை இந்தியாவிலிருந்து திருப்பி
அனுப்புவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகளுக்காக அமைச்சர் குணவர்தன இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அமேசான் காட்டுக்குள் தேடுதல் நடத்தும் பிரேசில் இராணுவம் – நடப்பது என்ன ..?
அமேசான் காட்டுக்குள் தேடுதல் நடத்தும் பிரேசில் இராணுவம் – நடப்பது என்ன ..?
உலகில் புகழ் பெற்றதும், நீண்ட பழமை வாய்ந்ததுமான, அமேசன் காட்டுக்குக்குள்
பிரேசில் நாட்டு இராணுவத்தினர் ,தரை மற்றும் வான்வழி ஊடாக திடீர் தேடுதலில் ஈடு பட்டுள்ளனர் .
இந்த காடானது விஷமிகளினால் தீவைதி எரியூட்ட பட்டது ,பல லட்சம்
உயிரினங்கள் படுகொலை செய்யப்பட்டன ,ஆதிவாசிகள் கூட எரிந்து பலியாகின
இதனை அடுத்து மேற்படி காட்டு பகுதிக்குள் திடீரென பிரேசில் இராணுவம் நுழைந்துள்ளது
இந்த திடீர் முற்றுகை ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்
சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்
சிரியாவின் எல்லைப் பகுதிக்குள் துருக்கிய இராணுவத்தினர்
மேலதிக படையினர் நுழைந்துள்ளனர்
சுமார் மூவாயிரத்து நூற்றி ஐம்பது இராணுவ வாகனகளுடன் இவர்கள்
உள்நுளைந்துள்ளனர் .தொடர்ந்தும் குறித்த பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவத்தின் ,
இந்த ஆக்கிரமிப்பு நகர்வு இடம்பெற்று வருகிறது குறிப்பிட தக்கது

வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய
நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்
இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது
இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது
அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது
எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை
வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
இலங்கையில் எதிர்வரும் யூன் மாதம் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டும் என அடம் பிடிக்கிறார் கோட்டபாய .
அதற்கு இவர் வகுத்துள்ள நீண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழர் தரப்பாக விளங்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதைக்க வேண்டும்
அதற்கு என்ன செய்திட வேண்டும் என்ற திட்டமிடல் அடிப் படையில் சுமந்திரனை வைத்து இந்த நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்க மக்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க சுமந்திரனை வைத்தே கோத்தபாய விளையாடல்களை ஆரம்பித்தார் ,
இவர் கக்கிய சிங்கள பவுத்த இனவாத தூண்டுதலே ஒன்றுபட்டு சிங்கள மக்கள் வாக்குக்களை அள்ளி வீச காரணமாயிற்று
அவ்வாறே இம்முறையும் அதே பாணியில் கோட்டா வென்றிட இந்த நாரதர் சுமந்திரனை இவ்வாறு தமது நிருபர் ஒருவர் ஊடாக எழுதி கொடுக்க பட்ட கேள்விகளுக்கு இவ்விதம் பதில் வழங்கி ,
சிங்கள மக்களை உசுப்பேற்றுவது ,மறுபுறத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவது ,ஒரு
எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் நோக்கிலேயே சுமந்திரன் இந்த செயலை ஆற்றியுள்ளார்
இருந்து பாருங்கள் வரும் நாட்களில் அவர் இன்னுமொரு மறுப்பு பேட்டி வழங்குவார் அதில் பவுத்த சிங்கள பெரும்பான்மையை தூண்டி விடும் ,புலி எதிர்ப்பு வாதத்தை கக்குவார்
,அவை நடக்கும் ,அதை தான் யானை கட்சியின் வெற்றியை உடைத்து ,அதனை கவிழ்க்க கோட்டபாயவுடன் இரகசியாமாக
,எழுது முனை ஒன்றின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திய இவர் பல கோடிகளை வாங்கி கொண்டு இந்த ஏப்பம் இடலை புரிந்தார்
அதுபலவே இம்முறை நடக்கிறது, இதில் தமிழர்கள் உசாராக வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் ,
ஆனால் ,சம்பந்தன் ,சுமந்திரனை அந்த கட்சியின் பதவிகளில் இருந்து அகற்றும் வேலைகளை புலம் பெயர் மக்கள் ,மற்றும்
,இலங்கை வாழ் தமிழ் மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் ,அழுத்தம் கொடுக்க வேண்டும் .
சுமந்திரனின் இந்த நயவஞ்ச செயலை இனம் கண்டு இவரை விரட்ட வேண்டும் ,தேர்தலில் தோற்றாலும் தான் தேசிய பட்டியல் மூலம்
ஆட்சியில் அமர்வேன் என்ற திமிர் தான் ,சுமந்திரன் இவ்விதம் புரிந்திட காரணம் .
தமிழ் தேசியம் ,அதன் உணர்வு அற்ற இந்த சிங்கள கலவை, இழி செயலானை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் ,மிக நிதானமாக நடைபயில வேண்டும் .
நாம் மேலே சொன்ன இந்த விடயங்களை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து சென்று மீள் பார்வை செய்யுங்கள் ,அப்டியே இவரது அப்பட்ட சித்து விளையாடல்கள் புரியும் மக்களே .
நாம் தமிழராய் நிமிர் வோம் ,நமது எதிர்ப்பை ஒன்றித்து காட்டி வெல்வோம் .கயவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றுவோம் .
- வன்னி மைந்தன் –
இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை
இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை
இலங்கையில் தமிழின படுகொலையாளிகள் ஆட்சியில் ஏறினர் ,ஒன்று பட்ட நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி
,புலிகளினால் அடக்கி ஒடுக்க பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்திகளை
புரிந்து அவர்தம் வாழ்வில் ஒளியேற்றுவோம் என முழங்கினார்
அதற்காக இன ,மத பேதம் இன்றி மக்கள் ஆட்சி தொடரும் என சிவப்பு சால்வைகள் முழக்கமிட்டன ,
இவர்கள் பேச்சுக்களை மக்களும் நம்பிடத்தான் செய்தனர்
ஆனால் நடந்தது என்ன …? மக்கள் வீடுகள் முன்பாக சிங்கள உளவுத்துறையின்
நாடமாட்டம் ,வீடு சென்றே மிரட்டல் ,வெளியில் சொன்னால் கொலை
என தொடரும் சிங்கள இராணுவ வன்கொடுமை , அடக்குமுறைக்குள் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .
செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள் ,அவர்தம் ஆதரவாளர்கள் ,முன்னாள்
புலிப் போராளிகள் ,அவர்தம் தொடர்பாளர்கள் எனநீண்டு செல்கிறது பட்டியல்
அதுமட்டுமா ,,ஆளும் மக்கள் ஜனநாயக கட்டமைப்புக்குள் சிங்கள இராணுவ
அதிகாரிகள் நியமனம் ,இவை எதனை குறிக்கிறது ..?
மக்கள்
ஆட்சி தத்துவத்தை ஏற்றுள்ள இலங்கைக்குள் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன …?
கேள்வி கேட்பவன் கடத்த படுகிறார் ,அடக்க படுகிறான் ,அவன் கடத்தி முடக்க
படுகிறான் ,தொடரும் இந்த பவுத்த பேரினவாத சிந்தனைக்குள் சிக்கியுள்ள
கோத்தபாயவின் கொலை வெறி விரோதம் ,வஞ்சத்துடனேயே தமிழர்களை துரத்திய வண்ணம் உள்ளது
இதற்கு முடிவு கட்டுவது யார் ..?வாக்கு வங்கிகளை தமது பக்கம் வைத்துள்ள
மக்கள் தான் ,முடிவெடுங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களை தோற்டியுங்கள் என்பதே நமது வாதமாகும் ,

காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
சீனா பெண் ஒருவர் தனது காரில் இருந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,
இவர் காரை துரத்துகிறார் ,அதுவோ இவரை விட்டு தாறுமாறாக ஓடி மோதிக்கொள்கிறது
இந்த காட்சியினை ஒருவர் படம் பிடித்து அப்படியே போட்டுள்ளார் ,
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்
இவ்வாறான வேளை உடனே கதவை வேகமாக திறந்து துள்ளி குதித்து ஏறிவிட வேண்டும் .
அல்லது விபத்து ஏற்படும் போகிறது என தெரிந்தால் கியாரால் காரைமறிக்க
தெரிய வேண்டும் ஒருதடவை பலமாக குலுக்கும் ,அவ்வளவு தான் கார் சொன்ன இடத்தில நிற்கும் .
இதனை இந்த பெண் இங்கே கையாளவில்லை

தொலை பேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை
தொலை பேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை
கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை
பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம்
பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்;பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
ஏழு அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செயலாளர்களின் பெயர்களும் அமைச்சுக்களும் வருமாறு
- திருமதி எஸ்.எம். மொஹம்மட்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு - திரு. ஜே.ஜே ரத்னசிறி
பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு- திரு. எஸ். ஹெட்டியாரச்சி
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு - திரு. எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு - திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன
உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சு - மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா
மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு - மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு

கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்துள்ளனர்- அரசு அறிவிப்பு
கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்துள்ளனர்- அரசு அறிவிப்பு
கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட
புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை என்று அரசாங்க தகல் திணைக்களம்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 511 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தில் இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863ஆகும்.
நேற்றைய தினத்தில் (2020.05.10) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின்
எண்ணிக்கை 1282 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங்காணப்பட்ட
நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆகும்.என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்
Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்
எமன் நாட்டின் நான்குகிற்கு மேற்பட்ட பகுதியில் சவுதி நாட்டு போர் விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளன .
சுமார் இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 48 வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,
இதில் ஏற்பட்ட உயிரிழப்பு
தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
எண்ணெய் கிடங்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளதாகவும்
மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ,ஏமான் நாட்டின் படைகளிற்கு ஈரான் நாடு பின்புல உதவிகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே

கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்ற மனைவி – சிசுவை தின்ற நாய்
கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்ற மனைவி – சிசுவை தின்ற நாய்
மட்டக்களப்பு பகுதியில் பிள்ளையை பெற்று வீசி விட்டு ஓடிய தாய் ஒருவர் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
நான்கு பிள்ளையின் தாய் ஒருவர் கள்ள காதல் உறவின் ஊடாக கர்ப்பமான நிலையில் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார் .
கள்ள காதலனுக்கு பிள்ளை பிறந்துள்ளது ,வந்து உன் பிள்ளையை எடுத்து செல் என குறித்த பெண் கைபேசியில் கூறியுள்ளார் ஆனால்
அவர் எடுத்து செல்ல மறுத்த நிலையில் பாழடைந்த வீடொன்றில் சிசுவை விட்டு சென்றுள்ளார் .
அந்த சிசு கதறி அழுது இறந்து போனது ,சிசு சடலத்தை நாய் ஒன்று தின்று ..பின்னர் இழுத்து சென்றுள்ளது ,இதனை கண்ணுற்ற நபர் ஒருவர்
காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் துண்டுகளாக கிடந்த சிசு சடலத்தை மீட்டு சென்றனர்
போலீசார் நடத்திய விசாரணையில் பெண் சிக்கினார் ,அவரது கள்ள காதலனும் சிக்கினார் ,இவரது இந்த இழிநிலை செயலினால்
நான்கு பிள்ளைகள் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் கணவர் இவரை கைவிட வேண்டிய நிலைக்குச சென்றுள்ளார்
சமுகத்தில் இவ்வாறான சீரழிவுகளை ஏற்படுத்துவது யார் ..? இதற்குறிய அடிப்படை காரணம் ,மோகத்தின்செயலும் அதனை
தடுப்பதற்கு உரிய செயல் பகிர்வுகளை இவர்கள் கையாள மறந்ததும் தான் இந்த குற்றவியல் நிகழ்வுக்கு காரணமாகிறது
புத்தி சாலி என நினைத்து தன்னை தனே ஏமாற்றி இன்று வாழ்வை தொலைத்து வீதியில் நிற்கும் பெண் .
,இன்று ஒரு குடும்பமே சீரழிந்து போகும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது
எங்கே செல்கிறது எமது தமிழினம் ..?

மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு
மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு
அமெரிக்கா Texas park பகுதியில் கொரனோ வைரஸ் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அறுநூறு மக்கள் கலந்து கொண்டனர் .
இந்த மக்கள் மீது அங்கு வந்த ஆயுததாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை
நடத்தினார் ,இதில் சம்பவ இடத்தில ஐவர் பலியாகினர் ,மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் .
மக்கள் இடைவெளி கடை பிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால்
பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
ஆயுத தாரி முப்பது ரவைகளை சுட்டு தள்ளினார்
இந்த கொலை வெறி தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்
தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்
இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர் தம் விடுதலை போராளிகளை
முற்றாக அழித்திட காரணமாக விளங்கியவர் மன்மோகன்சிங் ஆகும் .
அவ்வாறான தமிழின படு கொலையாளி தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவருக்கு தற்போது 87 வயதாகிறது,சோனியாவுடன் ஆட்சியில் அமர்ந்து ,
பொம்மைபோல தலையாட்டி அப்பாவி மக்களை சிங்கள அரசுடன் இணைந்து ஈவ் இரக்கமற்று கொன்று குவித்தவர்
அவ்வாறான நபரே தற்பொழுது இறக்கும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
கொழும்பு கம்பஹாவில் வாகன நெரிசல் – பஸ்களில் மக்களை காணவில்லை photo
கொழும்பு கம்பஹாவில் வாகன நெரிசல் – பஸ்களில் மக்களை காணவில்லை photo
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (11) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கொழும்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளில் இன்று காலை வாகன நெரிசல் காணப்பட்டது. தனியார் வாகனங்களே இவ்வாறு காணப்பட்டன
பொது போக்குவரத்து பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே காணப்பட்டனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்; ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் நிறுவன செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் அத்தியாவசிய பொதுமக்கள்
சேவையை வழங்கும் பொழுது உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் மா அதிபர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும்
பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை
கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக
நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும் என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு
இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு
வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல்
உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்ற
தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும்.
இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0
சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய
அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.
சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில்
காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.
தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம்
(Delivery Service ) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.
சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின்
பொறுப்பாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு
அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23
மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கம்பஹாவில் 
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மீது கத்தி வெட்டு தாக்குதல்
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மீது கத்தி வெட்டு தாக்குதல்
இலங்கை Weerawila, Hambantota பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது அகோர கத்தி வெட்டு
தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது ,தாய் ,தந்தை மகள் ,மற்றும்
உறவினர் ஒருவர் மீதே இந்த அகோர தாக்குதல் இடம்பெற்றுள்ளது
பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான இவர்கள் உடனடியாக திச மகரம மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி
அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று காலை 10 ஆம் திகதி நடைபெற்றது..
சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும்,
இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர்
அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
நேற்று முன்தினம்; 9 ஆம் திகதி தொற்றுக்குள்ளான 10 கடற்படையினர் மற்றும் ஏனைய இரண்டு பேர் அடையாளங்காணப்பட்னர். அவர்கள் இரண்டு பேரும்
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாவர். கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி மொதமாக
578பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினறனர். தற்பொழுது தொற்றுக்குள்ளானவர்களில் 259 பேர் குணமடைந்து
தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மெல்போனில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக 274 பேர் இன்று 10 ஆம் திகதி காலை 10 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால்
நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மற்றைய ஒரு குழுவினர் மலேசியாவில் இருந்து இன்று 10 ஆம் திகதி மாலை இலங்கை வரவுள்ளனர்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை சேவைகள் புதிதாக வகுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை (10) க்குள், ஜனாதிபதி செயலகம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவுகளை அறிவிக்கும். முன்னதாக, அந்தந்த பணியிடங்களில்
1ஃ3 ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பணியைத்
தொடங்குவது அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சுகாதார வழிகாட்டுதல்கள், சமூக இடைவெளி மற்றும் போக்குவரத்து திட்டம் போன்றவை
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு நேரம் நடைமுறையில் இருந்த மாவட்டங்களில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, தனிப்பட்ட
தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டியவர்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கு ஏற்ப வழங்கப்பட்ட
வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நேரம் வழக்கம் போல் தொடரும்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து கிடைக்கப்பெற்றுள்ளதால், பொது மக்கள்
அத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கடந்த சில வாரங்களில், அனைத்து இலங்கையர்களும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது பங்களிப்பினை
வழங்கினர் . ஆதேநேரம் குறித்த கோவிட்-19 வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் பொலிஸ், ஆயுதப்
படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு துறையினர் ஆகியோரின் கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவது
ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவில் பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி
அவுஸ்ரேலியாவில்பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி
அவுஸ்ரேலியா தலை நகர் சிட்னி மேற்கு பகுதியில் சாலையில் பயணித்து
கொண்டிருந்த போலீசார் காரின் கூரை மீது பாய்ந்த 24 வயது
வாலிபர் ஒருவர் சரமாரியாக ,இரு பொலிசார் மீது துப்பியுள்ளார் .
சுதாகரித்து கொண்ட பொலிசார் அவரை காரில் இருந்து தள்ளி விழுத்தி கைது செய்துளளனர்
குறித்த நபர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என
கருத படுகிறது .இதுபோல முன்னரும் சில சம்பவங்கள் இதே நாட்டில் பதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது

இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியா இராணுவத்தினர் பதினெட்டு பேர் புதிதாக பரவி வரும் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது
இதற்கு முன்னர் 22 பேர் பாதிக்க பட்ட நிலையில் தற்பொழுது
மேலும் 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
இதுவரை எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது








