Tag: Indian
கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்
கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்
கொரனோ நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிக்கி தவிக்கும் டுபாய் நாட்டில் ,அந்த நோயாளர்களை பராமரிப்பதற்கு என இந்தியாவில்
இருந்து அறுபது ஆண் ,பெண் அடங்கிய தாதியர் குழு ஒன்று வந்தடைந்துள்ளது
இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் துபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் ,சிறப்பு விடுதி ஒன்றில் தங்க வைக்க பட்டுள்ளனர்
கொரனோ நோயின் அபாயம் நீங்கும் வரை இவர்கள் ள் இங்கு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆபத்தான நோயாளர்களை பரமரிப்பதற்கு ,தம் உயிரை பணயம் வைத்து வந்துள்ள இவர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாக்க பட வேண்டியவர்கள்
அரேபியர்கள் எவ்வாறான மனோநிலை கொண்டவர்கள் என்பதனை
இங்கு பணிபுரியும் காலத்தில் இவர்கள் ,புரிந்து கொள்வார்கள் என்பதை இங்கே அடித்து கூறலாம்

இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்
இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்
இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்
உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட
கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்
கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்
இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், திடீரென அப்படத்தில் இருந்து
நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்? – படக்குழு விளக்கம்
கீர்த்தி சுரேஷ்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்,
அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத்
ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து
இந்த படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும்
நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.
கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேசை திடீரென்று நீக்கி விட்டு பிரியாமணியை ஒப்பந்தம்
செய்துள்ளனர். மைதான் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். இதுவே அவர் நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.
இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும்,
ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார்.
ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை
நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






