Tag: வவுனியா
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி செயல்பாடு மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மோட்டார் சைக்கிளில்
மோட்டார் சைக்கிளில் இரு போலீசாரை வீதி போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
அப்பொழுது சிறிய ரக லொறி ஒன்று அந்த இரு காவல்துறையினரை வண்டியால் மோதி தள்ளியது .
இதன் பொழுது அவர்களது மோட்டார் சைக்கிள் சேதமானது ,மேலும் அவர்கள் வீதி அருகில் விழுந்தனர் .
காயங்கள் ஏற்பட்டு இருக்க கூடும் என்பதை காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது .
இலங்கையில் வாகன சாரதிகள் இவ்விதம் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளது மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை காவல்துறை
லஞ்சம் பெற்று ஊறி போன இலங்கை காவல்துறையின் செயல்பாடுகள் காரணமாக வாகன சாரதி கோபம் அடைந்து இவ்விதம் செய்திருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .
குறித்த வானில் பயணித்த பெண்கள் சத்தம் இடுவதையும் ,அதை பதிவு சையது வெளியிட்டுள்ளனர்


வவுனியாவில் பெண் வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வவுனியா பகுதியில்
வவுனியா பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக செய்தி சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது .
மேற்படி சம்பவத்தை கட்டு படுத்த காவல்த்துறை துப்பாக்கி பிரயோகம் செய்தே நிலைமையை கட்டு படுத்தி கொண்டு வந்ததாக தெரிவிக்க படுகிறது .
என்ன நடந்தது
எனினும் அங்கு முழுமையாக என்ன நடந்தது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தகவல்கள் கிடைக்க பெற்றதும் இணைக்க படும் .



- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம்
கோவில்குளம் வித்தியாலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மிதிவண்டியை வவுனியா தோணிக்கல்லை சேர்ந்த கோபிகா ஐந்து வண்டிகளை வழங்கியுள்ளார் .அவருக்கு எமது நன்றிகள்
5 bicycles provided by Kopika – | Vavuniya Temple School Kopika from Vavuniya Dhonikkali has provided five carriages to the students of the Kovilkulam difference. Our thanks to him
வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan
வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan
வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா
வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா ,இது வவுனியா அலைகல்லு போட்ட குளம் ஆரம்ப வித்தியாலயத்தை சார்ந்த ஒரு மாணவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

- 02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை
வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை
வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பாதுகாப்பற்ற விவசாய கிணறு
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த
பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.
யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம்
மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார் ,வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம்
சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார்.
அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்ய சென்றபோது
இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.
பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது.
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்
இளைஞன் கடத்தி தாக்குதல்
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் ,யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய்
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேரூந்து
https://www.youtube.com/@vannimainthanநிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேரூந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயதான இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
, மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா வீட்டில் 9 அடி முதலை
வவுனியா வீட்டில் 9 அடி முதலை
வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண் ,மனைவியின் தலையை அறுத்து பொட்டலம்கட்டி பொலிஸில் சரண்டைந்த கணவனால் வவுனியா பரபரப்பாகியுள்ளது.
மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்து சென்ற கணவன்
மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
கள்ள காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.
ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.
பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.
தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .
குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது ,முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்து அடைந்துள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இனவாத அரசுகளினால் தமிழர்கள் கொன்றளிக்கப்பட்ட 16வது ஆண்டு நினைவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் திலீபன் மன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவுனியாவை வந்து அடைந்துள்ளது.
வலி சுமந்த வாரமாக இருக்கிற இந்த காலத்தில் ,வலி சுமந்த மக்கள் ஊத்தியில் மாலை போட்டு பூக்களை தூவி அஞ்சலித்தனர்.
இவ்வேளை முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் இன்றும் கஞ்சிகள் வழங்கப்படுகின்றன.
இன்று முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் தமிழர்கள் எண்ணங்கள் கரைந்த நாள், சடலங்கலாக எங்கள் உறவுகள் அந்த மண்ணில் விழுந்த நாள்.
இறுதியாக எங்கள் தமிழினம் கழுத்து நெரித்து நசிக்கப்படுகிற அந்த நாள். அது இந்த நாள் .அந்த நாளை முன்னிட்டு இந்த ஊதி இங்கே வந்தது.
மறக்க முடியாத வலிகளையும், மறக்க முடியாத ரணங்களையும், தந்த அந்த நாளை தமிழ் பேசும் மக்கள் மறக்குமா சிங்கள தேசம் இன்னும் சிரிக்குமா.
வேதனையோடு மக்கள் தவிக்கிற அந்த நாளில், இந்த உறுதி திலீபன் முன்றலிலிருந்து வவுனியா வந்தடைந்ததுள்ளது மக்களின் ,மனா குமுறலையும் எழுச்சிகளை காண்பிக்கிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன் ,இலங்கை தமிழர்சு கட்சிக்கும் சங்குக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடினர்.
ஜனநாயகத் தமிழ்த்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான
செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் க.துளசி
மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.
விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.
ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்
எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.
இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.
இனவழிப்பு நடக்கவில்லை
இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.
கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.
நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.
தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு
40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.
தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்
இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.
சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.
அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.
முன்னாள் வடமாகாண சபை
குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.
இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.
இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.
அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.
அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.
முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.
சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.
புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.
அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா ,வவுனியா சமானன் குளம் பகுதியில் , ஒருவேளை உணவின்றி வாடிய குடும்பம் .
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் இதனை கண்ணுற்ற மக்கள் ஓடி உதவியுள்ள செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
முழுமையாக காணொளி பாருங்கள் .
வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
வவுனியா இரட்டை கொலை
வவுனியா இரட்டை கொலை
வவுனியா இரட்டை கொலை ,வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த துடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் புதன்கிழமை (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில்
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா ஆஜராகி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு சமர்ப்பித்தார்.
அதை மறுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட வாதிகளால் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றை கவனம் செலுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள்
முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில் வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரினால் ஒருவர் இந்த நாயை வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மருத்துவமனையின் பிரேத அறையின் அருகே நின்ற நாய் மீது துப்பாக்கி பிரயோகித்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் ஏற்பட்ட நிலையில் வீதியால் மரணித்து ,அதிக இரத்த போக்கின் காரணமாக இறந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.
இது குறித்த விசாரணையே போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய் பிரேத அறைகளுக்கு பக்கத்தில் இருந்ததால் ஆவியாக இருக்கும் என்று அவர் பயந்து இதை சுட்டுக் கொன்று இருக்க கூடும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் , இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு ,வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று
பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








































