கிண்ணியா வை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

கிண்ணியா வை காணவில்லை

கிண்ணியா வை காணவில்லை

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வைகைபுயல் வடிவேல் ஒரு படைத்தில், கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தார். அந்த நகைச்சுவை வைரலாகியது. அதேபோன்ற சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா- தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட ‘கிண்ணியா’ எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை

கிண்ணியா வை காணவில்லை

சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகை இன்மையால், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியை இனங்கண்டுக்கொள்வதில், வெளியில் இருந்து வரும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நடப்பட்ட குறித்த பெயர் பலகை பலமாத காலமாக காணாமல் போயுள்ளது.

இது தவிர புதிதாக அமைக்கப்பட்ட பல காபட் வீதிகளுக்கான முறையான பெயர் பலகையும் அமைக்கப்படவில்லை. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பாதசாரிகள் வீதிகளை தேடியும் அங்கும் இங்கும் அலைகின்றனர். எனவே, இது தொடர்பில் உரிய சபை நடவடிக்கை எடுத்து வீதிகளுக்கான பெயர் பலகைகளை நடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்த்தில்


நமக்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்
மேலும்

இவருடன் கூடி நின்ற சகோதரன் பலத்த காயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

கைவிடப் பட்ட பழைய மண் வீடு ஒன்றை சிறுவன் கடந்து செல்லும் பொழுதே,

இவன் மீது அந்த மண் சுவர் இடிந்து வீழ்ந்து உயிரை பறித்துள்ளது ,பெற்றவர்களின்

அலட்சிய போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

சுவர் இடிந்து வீழ்ந்து
சுவர் இடிந்து வீழ்ந்து