Tag: srilanka
10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி(100 ஆயிரம் கோடி )
10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமராக விளங்கி வரும் மகிந்தாவின்
பத்து மில்லியன் அமெரிக்காடொலர் பணத்தில் உகாண்டாவில் பெரிய நிறுவனம் ஒன்றை மகிந்தா அநடத்தி வருகிறார்
இங்கு பெருமளவில் மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதுடன் அதிக இலாபத்தை ஈட்டி செல்கிறது ,
நாட்டை கொள்ளையடித்து பணத்தை சுருட்டி அதில் ராஜபக்ஸா குடும்பம் பெரும் சுகபோகத்தை அனுபவித்து வருகிறது
தற்போது மகிந்தவின் பணத்தில் அந்த நிறுவனம் உள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் ,பெரும் நெருக்கடியில் மகிந்த குடும்பம் சிக்கியுள்ளது
ஆட்சி கவிழ்க்க பட்டு இவர்கள் நீதிமன்றில் விசாரணைக்கு நிறுத்த பட்டு ,ஊழல் மோசடிகள் அம்பல
படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது
மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022. photo
மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022.
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை
உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள்
நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.
அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத்தேசியக் கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. ரவிகிருஸ்ணா அவர்கள்
ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உரித்துடையவர்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.
நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுமீட்டி நினைவுரையினை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து அண்மையில் தாயகத்தில் அமரத்துவமடைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ்
அவர்களின் நினைவுகளைச்சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையினை செயற்பாட்டாளர் திரு. ரகு அவர்கள் வாசித்தார்.
தொடர்ந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய “நான் கண்ட தமிழீழம் முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் பின்பும்” என்ற நூலின் அறிமுகஉரையை
செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அன்னை பூபதி ஞாபகர்த்தமாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெறும் பொதுஅறிவுப்போட்டி நடைபெற்றது. பொது அறிவுப்போட்டியை பாரதிதமிழ்ப்பள்ளி வளாக முதல்வர்களில் ஒருவரான திரு
சத்தியன் அவர்கள் நெறிப்படுத்தினார். பொதுஅறிவுப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன் அணிகளாக பிரிந்து பங்காற்றியதில், பாண்டியன் அணியினர் வெற்றிபெற்றனர். போட்டியில் பங்கெடுத்த 3 அணிகளைச்
சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், மாமனிதர்களின் குடும்ப உறுப்பினர்களினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பங்கெடுத்த பார்வையாளர்களுக்கிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய 3
உறவுகளுக்கு, அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்தேசியசெயற்பாட்டாளர் சண்முகம் சபேசனின் ”காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்” புத்தகங்கள் பரிசல்களாக
வழங்கப்பட்டதுடன், மெல்பேர்ன் இளையோர் ஒருவர் வரைந்த பூபதி அம்மாவின் வரைபடமும், மண்டப நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, வரயிருக்கும் சமூகநிகழ்வுகளின் அறிவிப்புகளின் பின், தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதிமொழியுடன் இரவு 8.05மணியளவில் 2022-ம் ஆண்டிற்கான தமிழீழ நாட்டுப்பற்றாளர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.


28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!-மனோ கணேசன்
28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!
- தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு
28ம் திகதி நாடு தழுவிய நடைபெறவுள்ள ராஜபக்ச அரச எதிர்ப்பு கூட்டு தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் மலையக தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகள் முழுமையாக கலந்துக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதிதலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கொழும்பிலும், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மலையகத்திலும் நடத்திய விசேட ஊடக சந்திப்புகளில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது,
ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து ராஜபக்ச அரசியல்வாதிகளும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்து வீட்டுக்கு போக
வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டத்தில், மலைநாட்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைக்கும் மக்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.
வேறு எவரையும் விட எமக்கே இதற்கான முழு உரிமை இருக்கிறது. “கோதா-கோ-ஹோம்” என்று இன்று சொல்லப்பட்டாலும் நாம் அன்றே “கோதா-டோன்ட்-கம்” என்று சொன்னவர்கள். அதாவது, “கோதா-வீட்டுக்கு-போங்கள்” என்று இன்று
சொல்லப்பட்டாலும், நாம் அன்றே “கோதா-வர-வேண்டாம்” என்று சொன்னவர்கள். ஆகவே இன்று முழு நாடும் எமது கோசத்தையே எதிரொலிக்கின்றது.
எனவே 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் முழு அளவில் கலந்துக்கொண்டு அமைதியாக எமது எதிர்ப்பை
எடுத்துக்காட்டுமாறு தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அழைக்கின்றோம்.
நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு
நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு
இலங்கையில் பிரதமர் நானே தான் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என
மகிந்தா தெரிவித்துள்ளார்
மக்களோ இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரி 19 தவாது நாளாக போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர்
ஆனால் அதனை செவி சாய்ப்பதாக இவர்கள் இல்லை
தமது சொத்துக்களை காப்பாற்றிட இவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இதனை அடுத்து இவர்கள் ஆட்சியை கவிழ்க்க அணைத்து காட்சிகள் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860
இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860
இலங்கையில் Litro gas ஒன்றின் விலை 4,860 ரூபாவாக விலை அதிகரிக்க பட்டுள்ளது
நாள் தோறும் அதிகாரித்து செல்ல படும் பொருட்களின் விலையினை அடுத்து மக்கள்
கொதித்து போயுள்ளனர்
தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
ஆனால் அதனை செவி மடுக்காது மகிந்தா குடும்பம் ஆட்சியில் உள்ளமை குறிப்பிட தக்கது
மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு
மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு
இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய
பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்
அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன
- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது
இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு
இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு
இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை காப்பற்றி
கொள்ள வரிகளை உயர்த்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
தற்கால சூழலில் அதிக வரிகள் அதிகரிக்க பட்ட நிலையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன
மேலும் அதிகரிக்க பட்டால் ,மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டிய நிலை
ஏற்படும் என்பது மக்களின் நிலையாக உள்ளது ,
மேற்படி விடயத்தினை அரசு செய்தாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
இலங்கையில் வெளி நாட்டவர்கள் மத்திய வங்கியில் ஒரு லட்சம் டொலர் வைப்பு
செய்தால் அவர்களுக்கு உடனே விசா வழங்க படும் என அமைச்சரவை அறிவித்துள்ளது
இதன் மூலம் தமது பொருளாதார நெருக்கடியை தணிக்கலாம் என்பது அரசின்
நிகழ்வாக உள்ளது
நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்
நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்
இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என கோரி
மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன ,
இவ்வேளை அனைத்து காட்சிகள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானமா ஒன்றை
கொண்டுவர உள்ள நிலையில் அதற்கு தானும் , தனது ஆதரவை தெரிவிப்பதாக
விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா
காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா
இலங்கையில் தொடரும் அரசுக்கு எதிரான போராடடம் இன்று 19 தாவது நாளை
எட்டியுள்ள நிலையில் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்
மக்களின் பொருளாதார நெருக்கடியை தணிக்கவும் ,அவர்க்ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
விலகிடவும் மறுத்து வரும் அரசுக்கு எதிரான அவ நம்பிக்கை தீர்மானம் சபைக்கு
வரவுள்ள நிலையில் இடைக்கால கூட்டாட்சி அரசுக்கு தாம் தயார் என கோட்டா அறிவித்துள்ளார்
கட்சிகளும் ,மக்களும் இவர்களை விலகு என தொடந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
இலங்கைக்கு இத்தாலி 125 மில்லியன் கடனுதவி
இலங்கைக்கு இத்தாலி 125 மில்லியன் கடனுதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,அதனை நிவர்த்தி
செய்யும் அவசர உதவி கடனாக 125 மில்லியன் டலரை இத்தாலி இலங்கைக்கு வழங்கியுள்ளது
இவ்வாறான செயல் பாடு தற்காலத்திற்கு உதவியாக உள்ளதாக இலங்கை தெரிவித்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்
கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்
இலங்கை Webada in Weliweriya பகுதியில் கடலுக்கு சென்று திரும்பிய மனைவியை கத்தி
முனையில் கடத்திய கணவன் அவரை வெட்டி கொன்றார் ,மேலும் அவரது சகோதரி
,மற்றும் நண்பி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொட்ரபிள் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு
ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை 11 அரசியல் கட்சிகள்
மற்றும் 42 சுயேச்சை எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 125 எம்பிக்கள் என்சிஎம்முக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இதன் விளைவாக, அரசாங்கம் NCM ஆல் தோற்கடிக்கப்பட்டால், SLPP MP ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார், மேலும் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.
வரைவு NCM SJB, JVP மற்றும் SLPP க்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவர்கள்
ஏற்கனவே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், ”என்று அவர் கூறினார்.
ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு
போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,
அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,
இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிறிலங்காவில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !
சிறிலங்காவில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !
சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள இராஜவந்தான் மலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
அழிக்கப்பட்டு வருவதோடு பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டு தளத்திற்கு சென்ற போது, பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினர் மற்றும்
புலனாய்வாளர்கள் சகதிம் அவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,
சிறிலங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம், 21ம் திருத்தச்சட்டம் என பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் தாயக மக்களையும் தென்னிலங்கை போராட்டத்தோடு பயணிக்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும், தமிழ்மக்கள் மௌனமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மூதூர் சம்பவமானது, பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள தென்னிலங்கை, அதில் இருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்வைத்திருந்தாலும், அதன் அரச இயந்திரம் (கட்டமைப்பு) தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஓயாது என்பதiயே வெளிக்காட்டுகின்றது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதற்கு துணையாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவமே இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள சிங்கள தேசம், இதற்கு முதன்மைக்
காரணமாக உள்ள தனது இராணுவச் செலவீனங்கள் பற்றி மூடிமறைத்து,
தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை கட்டிக்காத்து, தொடர்ந்தும் தமிழர் தேசத்தின்
மீதான ஆக்கிரமிப்பையும், கட்டமைப்புசார் இனஅழிப்பையும் மேற்கொள்ளவே என்பது மூதூர்
சம்பவத்தின் ஊடாக மீண்டும் வெளிப்படுகின்றது என தெரவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் ஆளும் இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ளார்
,இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் ,அதேபோல குடியேற்ற
வாசிகளுக்கு எதிராக கடும் சட்டங்களை அமூல் படுத்தி அவர்களுக்கு எதிரான
பார்ப்புரை மேற்கொண்டு போட்டி போட்ட பெண் வேட்பாளர் பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்
ஆளும் அதிபர் மீளவும் அதிபராக தெரிவு செய்ய பட்ட நிலையில் உலக நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை
தெரிவித்த வண்ணம் உள்ளனர்
இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று அனுராத புரத்தில் இருந்து கொழும்பு
நோக்கி புறப்பட்டது ,இவ்வேளை இந்த பேரூந்து சில்லு அச்சுடன் கழன்று தனியாகவும் ,அதன் பாடி தனியாகவும் ஓடியுள்ளது
இதனால் அதி பயணித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர்
இன்று ஆளும் லஞ்ச ஊழல் பெருச்சாளி கோட்டாவின் ஆட்சியின் அசிங்கத்தில் ஒன்றாக
இது பார்க்க படுகிறது


கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
இலங்கை வெல்லம்பிட்டிய காவல்துறை பகுதியில் இரு பேக்கரி ஊழியர்களுக்கு
இடையில் இடம்பெற்ற சண்டையை அடுத்து ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுளளார்
குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,பகைமை காரணமாக இந்த கொலை
இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
இலங்கை பெலியத்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் சிக்கி 42 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்
ஒருவாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இலங்கையில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருட சிறை
தண்டனை வழங்க படும் என்பது விதியாக உள்ள நிலையிலும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட்ட தக்கது
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக
மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















