Tag: காலிமுகத்திடல்
காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது.
கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும் இந்த பகுதிக்கு சென்று இவற்றை பார்வையிட்டதுடன் போராட்டக்காரர்களுக்கு இது குறித்து அறிவித்தனர்.
அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை
கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல்
போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்
இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது
13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,
அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,
இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.
இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது
இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்
இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது
ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன
முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .
- வன்னி மைந்தன் –



காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா
காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா
இலங்கையில் தொடரும் அரசுக்கு எதிரான போராடடம் இன்று 19 தாவது நாளை
எட்டியுள்ள நிலையில் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்
மக்களின் பொருளாதார நெருக்கடியை தணிக்கவும் ,அவர்க்ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
விலகிடவும் மறுத்து வரும் அரசுக்கு எதிரான அவ நம்பிக்கை தீர்மானம் சபைக்கு
வரவுள்ள நிலையில் இடைக்கால கூட்டாட்சி அரசுக்கு தாம் தயார் என கோட்டா அறிவித்துள்ளார்
கட்சிகளும் ,மக்களும் இவர்களை விலகு என தொடந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு
ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதி இறங்கி போராடி வருகின்றனர்
இவர்களின் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகிட ஆளும் ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்
இவ்வாறான நிலையில்மக்கள் தன்னெழுச்சி வெடித்து பறக்கும் வேளையில் ,காலிமுக திடலை சுற்றி பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
அப்பகுதியில் பணி புரியும் பணியாளர்கள் வாகனங்கள் யாவும் தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்ட பின்னர் அனுமதிக்க படுகின்றனர்
இது மேலும் மக்களை சீற்றம் உற வைத்துள்ளது
கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்
கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்
இலங்கை அளவும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பிரதமர் மகிந்த சுள்ளிட்டா ராஜபக்ஸ
குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என
அங்குகூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்
மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து பதவி விலக மறுத்து வரும் கோட்டாவுக்கு
எதிராக நாளுக்கு நாள் மக்கள்
போராட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது







