Posted in Uncategorized

யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

தாக்குதல் இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு

    இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு

    இலங்கையில் சீமந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது

    ,தற்போது ஒரு பய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்க படுகிறது

    நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க பட்டு வருவதால் மக்கள் மேலும்


    கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது

      எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது

      இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது

      நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்

      கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

        இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

        இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக

        நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது

        தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது

        இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை

        நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

          இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

          இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த

          முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

          மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை

          ஏற்படும் என தெரிவிக்க படுகிறது

          இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக

          சுட்டி காட்ட பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்

            ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது

            • மனோ கணேசன்
              நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.

            வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு

            மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

            இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

            அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,

            அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.

            அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.

            இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

            ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

            இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.

            இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,

            நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”

            “அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்

            கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.

            எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,

            விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்

            உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.

            13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.

            ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.

            13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,

            சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

            கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக

            கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய

            தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.

            வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்

            கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.

              Posted in இலங்கை செய்திகள்

              ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்

              ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்

              இலங்கை கம்மதாகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் சிக்கி

              ஒருவர் குத்தி கொலை
              செய்ய பட்டுள்ளார்

              கொலையாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                Posted in இலங்கை செய்திகள்

                கஞ்சா விற்ற பெண்கள் கைது

                கஞ்சா விற்ற பெண்கள் கைது

                இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட

                இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்

                மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து

                சென்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ

                  மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ

                  யாழ்ப்பாணம் மிருசில் அரச வைத்தியாசாலை அருகே ரயில் மோதி சிறுமி

                  பலியாகியும் தந்தை மற்றும் சிறுவன் ஆகியோர் மிக ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலியில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                  இந்த சம்பவத்துடன் இருவர் இதே இடத்தில பலி கியுள்ளனர்

                  குறித்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் இது தொடர்பாக

                  எவ்வித அக்கறையும் இல்லாது வசித்து வருவதால் ,பெரும் உயிராபத்தை தடுக்க கோரி மக்கள் டயர்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

                  சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த போரில் குதித்துள்ளனர்

                  தமிழ் பாராளும்னர் உறுப்பினர் தனது பகுதியில் மக்களை காக்க தவறி வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்

                    பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

                    றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்


                    அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

                      கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

                      இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸா


                      கொரனோ சோதனை செய்து கொண்ட பின்னர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார் ,


                      இவரது வருகையை அடுத்து இவருக்கு எதிராக கோஷங்கள் பாரளுமன்றில்

                      வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு

                        இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொண்டேனர்

                        ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பிலான வரி அறுபத்தி ஐந்து வீதம் இன்று

                        நடைமுறைக்கும் வரும் நிலையில் அதிகரிக்க பட்டுள்ளது

                        இந்த சேவை வரி காரணமாக பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

                        பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ,


                        மீளவும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

                          பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

                          இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்

                          போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி


                          கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்

                          இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது

                            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                            Posted in இலங்கை செய்திகள்

                            கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                            கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                            இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது


                            இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                            சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன


                            கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு

                              போராளிகள் மீதான வன்முறை பற்றி தெரிவிப்பு: மலையக அபிலாசை ஆவணம் கையளிப்பு
                              மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு


                              இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும்

                              இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இருப்பை பதிவு செய்துக்கொண்டு நமது மக்களை பற்றிய அமெரிக்காவின் அக்கறையை இலங்கை தொடர்பான உங்கள்

                              கொள்கை நிலைப்பாடுகளின் போது வெளிப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.


                              தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று அமெரிக்க தூதுவரை சந்தித்து உரையாடியது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்

                              இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமெரிக்க தரப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அரசியல் துறை அதிகாரி ரூபி வுட்சைட் ஆகியோர்

                              கலந்துக்கொண்டனர். மனோ எம்பியின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் உதவியாளராக கலந்துக்கொண்டார்.


                              இது தொடர்பில் மனோ எம்பி தனது டுவீட்டர் தளத்தில்,
                              “ஐஎம்எப் இலங்கைக்கு உதவ நினைக்கிறது. நன்றி. ஆனால், அதை ஜனநாயக நிபந்தனையுடன் செய்க. போராளிகள் மீது வன்முறை கூடாது.

                              காலிமுகம் உட்பட நமது போராளிகள் உலகில் மிக கட்டுப்பாடான போராளிகள். அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம், ரம்புக்கன நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்

                              கூறினேன். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார அபிலாசைகளுக்கு இலங்கை பரப்புக்கு உள்ளே தீர்வுகள் வேண்டும்” என்று கூறியுள்ளார்.


                              மேலும் இந்த சந்திப்பின் போது, மலையக தமிழரின் அரசியல் அபிலாஷை ஆவணத்தை அமெரிக்க தூதுவரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கையளித்தார். இலங்கையில் தென்னிலங்கையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா,

                              தென் மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலைமைகள் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டு தெரிந்துக்கொண்டார்.


                              தான் கொரிய வம்சாவளி அமெரிக்கர் என்பதில் பெருமை அடைவதாகவும், இந்நிலையில் தமது நாட்டின் பன்மைத்தன்மை தமக்கு பலம் சேர்த்துள்ளதாகவும்

                              அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இதுவே இலங்கையும் எதிர்பார்க்கும் எதிர்காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அமெரிக்க தூதுவரிடம் கூறினர்.


                              மத்திய மலைநாட்டுக்கு விஜயம் செய்து நேரடியாக விடயங்களை அறியுங்கள் என கூட்டணியின் பிரதிதலைவர் இராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பையும் அமெரிக்க தூதுவர் ஏற்றுக்கொண்டார்.


                              இது தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவீட்டர் தளத்தில்,
                              “மலையக தமிழர் உட்பட அநேகமான (இலங்கை) சமூகங்கள்,


                              எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நிலையான பொருளாதார


                              மீட்சிக்கு இலங்கை மக்களின் தலைவர்கள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (இவைபற்றி) @ManoGanesan
                              மனோ கணேசன் அவர்களுடன் உரையாடினேன்.” என்று கூறியுள்ளார்.

                                Posted in Uncategorized

                                லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்

                                லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்

                                லண்டன் Dartford பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது


                                இதன் பொழுது அந்த வீட்டில் மறைத்து வைக்க பட்டிருந்த இரண்டு விமான எதிர்ப்பு

                                துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன

                                இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முப்பத்தி ஆறு வயது நபர் கைது செய்ய பட்டு

                                தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்


                                இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                                  Posted in Uncategorized

                                  உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                                  உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                                  உக்கிரேன் மாறியபோல் பகுதியில் மேலும் போர் வெடித்துள்ள நிலையில் அந்த

                                  பகுதியை காவல் காக்கும் உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் என ரசியா

                                  மிரட்டல் விடுத்தது வருகிறது

                                  இதனை ஏற்க அந்த நாட்டு இராணுவம் மறுத்து போரிட்டு வருகிறது


                                  சரண் அடைய மறுத்தால் பெரும் தாக்குதல்கள் நடத்த படும் என்பது ரசியாவின் வாதமாக உள்ளது

                                  இங்கே ரசியா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

                                    ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

                                    கிரேஸ் நாட்டினால் ரசியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று 19 சிப்பந்திகளுடன் சிறை

                                    பிடிக்க பட்டுள்ளது

                                    சட்டவிரோத செயல் பாடுகளில் குறித்த கப்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே இந்த

                                    சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளது

                                    இவை நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in Uncategorized

                                      மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்

                                      இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட

                                      காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்

                                      இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்

                                      இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன

                                        Posted in Uncategorized

                                        உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

                                        உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

                                        இலங்கை கொக்கல , ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 322 ஊழியர்கள்

                                        உட்கொண்ட உணவு விஷமானதால் அவர்கள் அனைவரும் வாந்தி ,தலைச்சுற்று

                                        ,வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                        மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன