Tag: மாணவி
இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் 2026 இல் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்
இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் 2026 இல் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்
இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் 2026 இல் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவில் நடைபெற்ற 12வது இளம் சமையல்காரர்
இந்தியாவில் நடைபெற்ற 12வது இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் (YCO) 2026 இல் இலங்கையைப்
பிரதிநிதித்துவப்படுத்திய மாணவி சமையல்காரர் ரூமிரா பியாசிறி, வெண்கலப் பதக்கத்தை வென்று இன்று (8) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மாணவர் சமையல்காரர்களுக்கான உலகின் மிகப்பெரிய உலகளாவிய சமையல் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிகழ்வை, இந்தியாவின்
சர்வதேச ஹோட்டல் மேலாண்மை நிறுவனம், லண்டனில் உள்ள சர்வதேச விருந்தோம்பல் கவுன்சிலுடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
இந்த போட்டி பிப்ரவரி 1 முதல் 6 வரை இந்தியாவின் கொல்கத்தாவில் 50 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
போட்டியின் போது விரிவுரையாளர் எமேஷிகா டி சில்வா ரூமிரா
போட்டியின் போது விரிவுரையாளர் எமேஷிகா டி சில்வா ரூமிரா பியாசிரியுடன் வழிகாட்டியாகவும் வழிகாட்டியாகவும் இந்தியா வந்தார்.
அவர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 6.50 மணிக்கு புது தில்லியில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் AI-277 இல் இலங்கைக்கு வந்தனர்.
SLIIT உடன் இணைக்கப்பட்ட கொழும்பு விருந்தோம்பல் மேலாண்மை அகாடமியின் முதல்வர், நிர்வாகிகள் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவுடன்,
ரூமிரா பியசிறியின் பெற்றோர், பதக்கம் வென்றவரை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.
உயர்தர உயிரியல் மாணவி திடீர் மரணம்
உயர்தர உயிரியல் மாணவி திடீர்மரணம்
உயர்தர உயிரியல் மாணவி திடீர் மரணம் ,தம்புள்ளையில் உயர்தர உயிரியல் மாணவி திடீர் மரணம்.
உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை
தம்புள்ள, நவம்பர் 10 (டெய்லிமிரர்) – இந்த ஆண்டு உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த 19 வயது மாணவி தம்புள்ளையில் உள்ள தனது வீட்டில் திடீரென உயிரிழந்தார்.
இறந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த தருஷி சாமோடி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (09) இரவு சிறுமி தனது அறையில் படித்துக் கொண்டிருந்ததாகவும், காலையில் எழுந்திருக்கத் தவறியபோது, அவரது பெற்றோர் அவரைப் பரிசோதிக்கச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அறையில் மயக்க நிலையில் காணப்பட்டார்
அவர் தனது அறையில் மயக்க நிலையில் காணப்பட்டார், மேலும் தம்புள்ளை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் அழைத்து வரப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
தம்புள்ள காவல்துறை அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டது, ஆனால் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தனர்.
மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா
2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா
2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கி வைக்கும் நிகழ்வின்
உதவு பவராக லண்டனைச் சேர்ந்த ஏ என் என் அக்கா அவர்கள், வழங்கிய 54,000 நிதி பங்களிப்பில் இரண்டு மாணவிகளுக்கு இந்த துவிசக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த இரு மாணவி
வவுனியாவைச் சேர்ந்த இரு மாணவிகளுக்கு, இந்த துவிசக்கர வண்டிகளை வழங்கி அவர்களது பாடசாலை கற்கை நெறிக்கு உதவி அளித்துள்ளார்.
லண்டனை சேர்ந்த ANN அக்கா அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது ,அந்த இரண்டு மாணவிகள் கல்வியில் ஒளியை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே மக்கள் அறப்பணியில் தன்னை அர்ப்பணித்திருக்கும், ஏ என் என் அக்கா அவர்களுக்கு மீளவும் இந்த வேளையில் ,நாங்கள் நன்றிகளையும்
வன்னி மைந்தன் டிக் டாக் தளம்
பாராட்டுக்களையும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாகவும் எதிரி இணையத்தின் ஊடாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமது இன்னல்கள் இடையூறுகள் துயரங்களுக்கு மத்தியிலும் தாயக மக்கள் விடியலுக்காக உழைக்கும் உங்களைப் போன்ற அனைத்து உள்ளங்களுக்கும்
இந்த வேளையில் மிக்க நன்றிகளையும் ,பாராட்டுகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி அக்கா.
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால்
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு,
நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார்கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில்,
சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.
அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது,
மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி
பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி
பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது பகிடிவதை சம்பவமாக இது பதிவாகியுள்ளது ,பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது .
பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை
குழியாபிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு கற்று வந்த மாணவி ஒருவர் ,அங்கு சக மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆற்றில் குறித்துள்ளார்.
மாணவி ஆற்றில் குதித்ததை கண்டு கொண்ட சிலர், உடனடியாக ஆற்றில் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைசேர்த்து ,மாணவிகி நடந்த பகிடிவதை விடயத்தை கேட்ட பொழுதே ,அழுதபடி மாணவி பகிடிவதை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் பகிடிவதை பாடசாலைகளில் இடம் பெற்று வருவது ,மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் நெருக்கடியையும் உளவியல் உரனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை ,எடுக்க இந்த பாடசாலை மறுத்து வருவது என்ன காரணம் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
பகிடி வதைகளை தடுக்க மக்கள் கோரிக்கை
பெற்றவர்கள் கிளர்ந்தெழுந்து இந்த பகிடி வதைகளை தடுக்க ,தடுத்து நிறுத்த மறுத்தால் ,இதைவிட மேலும் பல விடயங்கள் அதிகரித்து செல்லக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ,குளியாப்பட்டிய போலீசார் எதிர்பாராத மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டனர்,
மாணவர்களை மனரீதியாக உளைச்சலுக்கு உள்ளாக்கி ,அவர்களை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து நிலைக்கு தள்ளிய, இந்த மாணவர்கள் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் .
அவர்கள் எந்த ஒரு பாடசாலையும் அனுமதிக்க முடியாத தண்டனையை வழங்கினால் மட்டுமே ,ஏனைய மாணவர்கள் உயிர்ப பாதுகாப்பு இருக்க முடியும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது.
மேற்படி விடையும் பெற்றோர்கள் பத்தியில் மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை ஆசிரியர் தப்பு ஓட்டம் மக்கள் கொதிப்பு தொடரும் போராட்டம் திணறு மானூர் அரசின் நடவடிக்கைகள்
பயம்ப தேசிய கல்வியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குற்ற புலானய்வு துறை அறிவித்துள்ளது .
இந்த மாணவி ஏன் பலியானார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆசிரியர் ஒருவரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாகவே இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால் தற்கொலை என தெரிவிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இறந்த மாணவி தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் சமூக வளைத் தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டறியும் நோக்கம் மக்கள் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் ஒரு அப்பாவி இளம் மாணவி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டால் அவை உண்மையானதாகவே நீதிமன்ற அழைத்துக் கொள்ளப்படும் ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ,
அந்த குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பு படுவதாலேயே இந்த வழக்கு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம் என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
தெவி நிவார பகுதியில் உள்ள பாடசாலை ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினார் என்கின்றகுற்ற சாட்டின் அடிப்படையில் ,தற்போது சிறுவர் மற்றும் மகளிர் பணியாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இந்த ஆசிரியர். அங்கு கல்வி கற்ற ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார் என்கின்ற அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சமீப காலங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ,தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் ,அதிகரித்து வரும் இடையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது.
இந்த கைதின் பின்புலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஆசிரியர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா .அல்லது உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றனவா .என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் ,இவ்வாறான குற்றச்சாட்டுகள் சம்பவங்களினால் பெற்றவர்கள் அச்ச நிலையில் காணப்படுகின்றனர் .
இதனை தடுப்பதற்கு கல்வி அமைச்சு சீரான ஒரு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் ,இவ்வாறு நடவடிக்கையை தடுக்க முடியும்.
இலங்கையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ,சீரிய வழியில் செல்ல வேண்டுமாக இருந்தால் ,கல்வி அமைச்சு தகுந்த நெருக்கமான ,நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான், இவ்விதமான சம்பவங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ,அவர்கள் அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியாது என்ற சட்டம் ,அமல்படுத்தப்பட்டால் மட்டும்தான் இதனை தடுக்க முடியும்.
ஆனால் கல்வி அமைச்சு ஆளு அரசுகள் இதனை செய்யுமா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது .
மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை
மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை
மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை ,தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியையே, மாணவியின் கன்னத்தில் பஸ்ஸில் வைத்து திங்கட்கிழமை (07) மாலை, டிக்கோயா பகுதியில் வைத்து அறைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா ஊடாக போடைஸ் நோக்கி பயணித்து
கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் என பலரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மாணவியின் கால், ஆசிரியை ஒருவரின் சாரியில் மிதி பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை, பஸ்ஸில் வைத்தே, அந்த மாணவியின்
கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்துள்ளார். அத்துடன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
ஆசிரியைக்கு எதிராக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மாணவி, டிக்கோயா-கிளங்கன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறைப்பாடு தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவி கடத்தல்
பாடசாலை மாணவி கடத்தல்
பாடசாலை மாணவி கடத்தல் ,பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு சென்ற இளைஞனை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விப்பயிலும் கணுல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது 04 மாதங்களுமான பாடசாலை மாணவியை, அவருடைய சட்டரீதியான பொறுப்பானவர்களிடமிருந்து கடத்திச் சென்று இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.
யாயபார கணுல்வெல முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட யுவதி, 2024 மே மாதம் முதல் அந்த இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதற்கு அந்த யுவதியின் தாய் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்கு வந்த அந்த இளைஞன், மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் கிராமத்துக்கு கடத்திச் சென்றுள்ளார். அவ்வாறு கடத்திச் செல்லும் போது அந்த யுவதிக்கு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அழைத்துச் சென்றுள்ளார்.
ஜனவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரையிலும், அந்த யுவதியை அவ்விளைஞன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், தான் கொழும்புக்கு கூலி வேலைக்குச் செல்வதாக கூறி, அந்த யுவதிக்கு புர்கா அணிந்து, மஹியங்கனை நகருக்கு மார்ச் 05 ஆம் திகதியன்று அழைத்துவந்து, ஆட்டோவில் ஏற்றி, அந்த யுவதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை தொடர்பில், தன்னுடைய தாயிடம் விபரித்த யுவதி, தாயுடன் சென்று பொலிஸில், மார்ச் 5 ஆம் திகதியன்று முறையிட்டுள்ளார். எனினும், தன்னை தடுத்து வைத்திருந்த வீடு ஞாபகத்தில் இல்லை என்றும் எனினும், சுற்றி முஸ்லிம் மட்டுமே இருந்தனர் என முறைப்பாட்டில் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
முறைபாட்டை ஏற்றுக்கொண்ட பிபில பொலிஸார், சந்தேகநபரான அந்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி
கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி
கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி.கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல் ,பாடசாலை முடிந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ள செய்தி தற்பொழுது பதிவாகியுள்ளது.
பாடசாலை முடிவடைந்து வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இரு மாணவர்களில் ஒரு மாணவியை அந்த வழியால் பயணித்த கருப்பு வான் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.
எனினும் ஒரு மாணவி வாகனத்தின் எதிர் திசையில் தப்பி ஓடியதால் அவர் தப்பிவிட்டார் எனவும் மேலும் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்ணுற்ற சிலர் அதனை தடுக்க முற்பட்ட பொழுது அந்த காப்பாற்று நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து தற்பொழுது அந்த மாணவியைக் கடத்திச் சென்ற வாரம் கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பொழுது வீட்டுக்கு முன்பாக இருந்த கமராவில் அந்த கடத்தல் பதிவாகியுள்ளதாகவும் அதனை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம் ,வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில்,
வகுப்பு ஆசிரியையுடன் இணைந்து மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு
ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு
ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு ஈரானில் பொது இடத்தில் ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு ‘பாதுகாப்பு’ இல்லை
முதலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அந்த பெண் ஒரு வசதியில் சிகிச்சை பெற்று வருவதாக ஈரான் அரசாங்கம் கூறுகிறது
ஈரான் ஒரு பல்கலைக்கழகத்தில் தனது ஆடைகளை கழற்றியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண் மாணவிக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று வடமேற்கு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் இளம் பெண் தனது உள்ளாடைகளை பொது இடத்தில் கழற்றினார், இது ஈரானின் கட்டாய இஸ்லாமிய ஆடைக்
குறியீட்டிற்கு எதிரான எதிர்ப்பாக மனித உரிமை வழக்கறிஞர்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் சில சமூக ஊடக பயனர்களால் உணரப்பட்டது.
பல்கலைக் கழகப் பாதுகாப்பால் தடுத்து வைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் சில உள்ளூர் ஊடகங்களும் அந்தப் பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சித்தரித்தன.
உள்ளூர் ஊடகங்களும் இளம் பெண்ணின் முன்னாள் கணவரைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு கிளிப்பைப் பகிர்ந்துள்ளன.
முகம் மங்கலாக இருந்த அந்த நபர், தான் மனநலம் பாதிக்கப்பட்டு இரண்டு குழந்தைகளின் தாய் என்று அழுவதும், தான் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுவதை கேட்க முடிந்தது.
ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்
ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. பாடசாலை விட்டு மாணவி வீடு செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதான வீதியால் வேகமாக பயணித்த ஓட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்தை பாடசாலை மாணவி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி ,நேற்று (07) மாலை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் படித்து வருவதும், பாடசாலை முடிந்து
தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை
செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியான இவர், குறித்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சடலம் திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது ,கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனமல்வில பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து
கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அட தெரண தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாடசாலை மாணவியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பள்ளியைச் சேர்ந்த ஒரு பையனுடன் காதல் வயப்பட்டிருந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் அவளை ஏமாற்றி நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு முதல் முறையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வீட்டில் இருந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அவரை வலுக்கட்டாயமாக மதுபானம் அருந்த வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதேவேளை இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு (2023) பள்ளிச் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ மூலம் மிரட்டி ஏழு முறை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பள்ளிச் சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாணவியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து, முதலில் பள்ளி மாணவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில், குழுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்றபோது கழிவறைகள் மற்றும் விளையாட்டு ஓய்வறைகளில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற மாணவர்களின் வீடுகளிலும் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை மறைத்த பாடசாலை அதிபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், 17 பாடசாலை மாணவர்களையும் அவர்களுக்கு உதவிய பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

போலி மருத்துவ மாணவி கைது
போலி மருத்துவ மாணவி கைது
போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்
6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.
கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு
பின்னர் இது தொடர்பில் வினவிய போது, எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்
தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி
தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது
கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மாணவி சடலமாக மீட்பு
மாணவி சடலமாக மீட்பு
மாணவி சடலமாக மீட்பு ,காணாமல் போன மாணவி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
காணாமல் போன மாணவி ஒருவரே தற்பொழுது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
மகள் காணாமல் போனதை அடுத்து காவல்துறை நிலையத்தில் பெற்றவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
காவல்துறையினர் துரித விசாரணை
அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை காவல்துறையினர் துரித விசாரணைகளை ஆரம்பித்தனர் .
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் இறுதியில் தற்பொழுது காணாமல் போன இந்த மாணவி சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர் .
கண்டி பகுதியில் காணாமல் போயிருந்த இந்த மாணவியே தற்பொழுது சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவி தவறான முடிவை எடுத்து தன் உயிரை தானே மாய்த்துள்ளதான தகவல் தெரிவிக்கின்றன.
அவ்வாறு ஏன் இவர் செய்தார் என்பது தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ பரிசோதனை
மீட்கப் பட்ட சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .
அந்த மருத்துவ பரிசோதனை முடிவில் மாணவிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விடையங்கள் தெரிய வருமென எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இவ்வாறு காணாமல் போகின்ற பல மாணவிகள், ஆண் பெண்கள், சடலமாக மீட்க்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்
மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்
மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின் பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும்
ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத காரணியான மாணவர்களின் ஆளுமை
வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு இந்த சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது மாணவிகளின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கவும் மாதவிடாயின் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை
காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மொத்த மாணவர்
இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகையில் வயது வந்த மாணவிகளின் மொத்த எண்ணிக்கையில் தோட்டப் பாடசாலை தொகுதிக்கு சொந்தமான 07
தேசிய பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 06 மாதங்களுக்கு செனிட்டரி
நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு மாணவிக்கு ரூ. 1,200 பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலைகள் ஊடாக மாணவிகளுக்கு வவுச்சரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வவுச்சரைப் பயன்படுத்தி, செனிட்டரி நப்கின்களை கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து கொள்வனவு செய்யலாம்.
செனிட்டரி நப்கின் கொள்வனவு
சுகாதாரமானவை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வது மாணவிகளின் பொறுப்பாகும்.
மாணவிகளுக்கு வழங்கப்படும் அந்தந்த வவுச்சர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
இது ரூ. இது 600.00 மதிப்புள்ள ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் ‘A’ பகுதியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் செல்லுபடியாகும் காலம் 10.06.2024 – 10.07.2024 வரை ஆகும்.
மற்றைய பகுதியான ‘B’ 01.09.2024 – 30.09.2024 இடைப்பட்ட காலம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதிக்குள் செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து ,புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு
புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் பேரூந்து விபத்தினால் ,மக்கள் பேருந்துகளில் பயனாகவே அச்சம் கொண்டுள்ளனர் .
சாரதிகள் பேருந்துகளை வீதி விதிமுறைகளுக்கு ஏற்ப செலுத்தி செல்லா நிலையிலேயே ,இலங்கையில் நாடு தழுவிய நிலையில் அதிக பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .


















































