மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து
Posted in இலங்கை செய்திகள்

மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து

மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து

மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்டிருந்தேன்.

சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்துக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவை தெரிவுசெய்திருந்தார்.

தற்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை என்னை சார்ந்துள்ளது.

இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் நமது இரு நாடுகளிடையிலும் காணப்படும் பிரிக்க முடியாத பிணைப்புக்காகவும் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறுதிப்பாட்டினை இது பிரதிபலிக்கின்றது.

சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு

சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு

சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு .இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாச அவர்களைச் சந்தித்தமையையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.

இந்திய இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

எமது விசேட பங்குடைமைக்கு இலங்கையில் கட்சி வேறுபாடுகளின்றி சகலராலும் ஆதரவு வழங்கப்படுகின்றது.

அத்துடன், நமது ஒத்துழைப்பும் வலுவான அபிவிருத்தி பங்குடைமையும் நமது இரு நாட்டு மக்களினதும் நலன்களால் வழிநடத்தப்படுகின்றன.

என இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார் .

தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி

தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி

தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி ,இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.

என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி அவர்கள் தனது கருத்தை பதிவிட்டுளளார் .

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய் ,3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம்,

தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான்.

அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.

அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.

குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.

நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.

நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.

நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு ,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு ,எல்பிட்டிய – ஊரகஹ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுரா ஆட்சியில் தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

இது திட்டமிடப்பட்ட உள்ளக சாதியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .

இராசமாணிக்கம் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்

தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்

தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர் ,வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களொ பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத்

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியை மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் நிராகரித்தமை போல் உள்ளூராட்சித் தேர்தலிலும் நிராகரிப்பார்கள் என்ற செய்தியை தைரியமாக பாராளுமன்றில் சொல்லியிருக்கின்றேன்.

மட்டக்களப்பில் அனைத்து சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் விட்ட தவறை இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.

அவர்களுக்கு பாராளுமன்றில் உரையாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. செயற்றிறன் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

சிலவற்றை பாராளுமன்றில் கதைத்தால் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்திலும் அவர்கள் உள்ளார்கள் என்றார்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு ,இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா
Posted in இலங்கை செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்த இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் முப்படை வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது ,ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம்; ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.04.2025இன்று ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலீசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.


இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது


மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த

இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.


இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.


இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்குவிரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.


அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.


அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர்

துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு ,ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
Posted in இலங்கை செய்திகள்

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும் ,கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பில் யாழில் இன்று (03) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

‘ தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்தில் அது பேசு பொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.

ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட அரசுடமையாக்க பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும்.” எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.

இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.

மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம் ,வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ ,ஒரு பெண்ணை நடு வீதியில் வைத்து தாக்குகின்றான் அவசரமாக பகிருங்கள் இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை வேடிக்கை பார்க்க மட்டும் ஆட்கள்.

இவன் கைது செய்யப்படவண்டும். பொலிசாரின் கண்ணில் படும்வரை விரைவாகப் பகிருங்கள் 🙏
இது கண்ணிவெடி அகற்றும் பணியகம் போலுள்ளது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க அதிகம் பகிருங்கள் மக்களே

https://www.facebook.com/61553765198144/videos/999254965085625

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித் ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி

நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர்.

சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு மக்கள் எதிர்பார்க்கும் இதற்கு மிகவும் பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடந்த “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை

ஆவணத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. எனவே நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு

முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது
Posted in இலங்கை செய்திகள்

நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது

நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது

நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது. இந்த விடயத்தைக் கண்டித்து கைலாசா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டார் என காணொலி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இவ்வாறு வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் கைலாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார் என கைலாசா உறுதியாக அறிவிக்கிறது. நித்தியானந்தாவை இழிவுபடுத்தவும் ,அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரசாரத்தை கைலாசா திட்டவட்டமாக மறுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் அவர் இறந்துவிட்டார் எனவும் வதந்திகள் பரவியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் மோடி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் மோடி

இலங்கை வரும் மோடி

இலங்கை வரும் மோடி ,இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம்.

அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்”. என தெரிவித்துள்ளார்.