கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு கஜேந்திரகுமாரை சந்திக்கிறது சங்குக் கட்சி என செய்திகள் வெளிவந்துள்ளன.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ் மக்கள் அம்மூன்று தரப்புக்களுக்கே அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் சபைகளின் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடன் இம்மூன்று தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது.

அந்த வகையில் தான் நாம் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளோம். குறித்த உடன்பாட்டுக்கு அமைவாக வடக்கு,கிழக்கில் நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புக்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை, நாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான முன்னணியுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம்.

அதற்காக நானும், செல்வம் அடைக்கலநாதனும் அவரை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. அதன்போது நாம் கொள்கை தொடர்பான விடயங்களையும் நேரில் தெளிவுபடுத்தி பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், இணைத்தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

நடைபெற்று நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்துக்கே ஆணை வழங்கியுள்ளார்கள்.

இதில் அவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் முழுமையான ஆதரவினை வழங்கியிருக்கவில்லை. அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புரிந்துகொண்டுள்ளார்.

அதேநேரம், தற்போது தமிழ் மக்கள் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் சிங்கள தேசியக் கட்சிகளிடத்திலோ அல்லது ஆளும் தரப்பிடத்திலோ சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

அதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதொரு விடயமாகின்றது. அவ்விதமான நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம் பலம் கொள்கைக் கூட்டுப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் சம்பந்தமாக அவர் தெளிவு படுத்த வேண்டும். நாம் தமிழ்த் தேசிய சிந்தனையில் தான் பயணிக்கின்றோம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காகவே செயற்படுகின்றோம். அதற்காகவே மக்கள் எமக்கும் ஆணை அளித்துள்ளார்கள் என்றார்.

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை

இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு,

இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில்

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன்.

ஒரு விடயத்தை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன், இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை.அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எந்தவொருசர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலை குற்றவாளியாக கண்டறியவில்லை.

இலங்கையில் நடந்தது துன்பகரமான ஆனால் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவநடவடிக்கை.

அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எந்த சமூகத்திற்கும் எதிரானது இல்லை.

போரின் போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்தினாலும், மோதலை இனப்படுகொலை என சித்தரிப்பது உண்மையை சிதைப்பது மாத்திரமல்லாமல்,அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம்.

கனடாவில் இடம்பெறும் இந்த செயற்பாடுகள், நமது கள யதார்த்தங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

மேலும் வாக்குவங்கியை நோக்கமாக கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம்.மேலும் ஒரு தேசமாக காயங்களை ஆற்றுவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு

சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்ற வேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர்.

அங்கு பிரம்டன் மேயர் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை! கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள் என்றார்.

மேயரின் இச் செய்தி இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடா நினைவுத்தூபி நாமல் அதிருப்தி
Posted in இலங்கை செய்திகள்

கனடா நினைவுத்தூபி நாமல் அதிருப்தி

கனடா நினைவுத்தூபி நாமல் அதிருப்தி

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது என நாமல் ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன.

இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்.

இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, கனடா துல்லியமான வரலாற்றுக் கதைகளை ஆதரிக்குமாறு முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல்,

இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடனாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப்பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை இராணுவம் , விடுதலைப் புலி பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் எந்த இனப்படுகொலையும் சர்வதேச சட்டத்துக்கமைய நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில்,

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது.

தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசாங்கத்தால் அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது.

இது நீண்ட காலமாக தமிழ் புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள சில பிரிவுகளால் முன்னெக்கப்படுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக,

இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன.

1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவைக் கொன்றதன் மூலம் வன்முறை செயற்பாடுகளை தொடங்கிய விடுதலைப் புலிகள், ஏராளமான கொடூரமான செயல்களைச் செய்தனர்.

இந்தப் பயங்கரவாதக் குழு ஆயிரக்கணக்கான தமிழ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து, பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது.

பல தசாப்த கால வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கையில் இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளை ஒழித்தன.

விடுதலைப் புலிகள் மற்றும் காலிஸ்தான் போராளிகள் போன்ற பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரித்த கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, கனடா துல்லியமான வரலாற்றுக் கதைகளை ஆதரிக்குமாறு முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தீர்க்கமாகச் செயல்படத் தவறுமாயின் அது ஆயுதப்படைகள், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களுக்கு ஒரு அவமானமாக அமையும்.

இலங்கையின் தேசிய நலன்களைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களை திறம்படக் கையாள அரசாங்கத்தின் இயலாமையையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றார்.

கனடாவில் அமைச்சர் ஆனார் ஹரி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

கனடாவில் அமைச்சர் ஆனார் ஹரி

கனடாவில் அமைச்சர் ஆனார் ஹரி

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அதில் வெற்றிபெற்ற தமிழரான ஹரி ஆனந்தசங்கரிக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில்

புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில்,

இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில்,

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்.

டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை,

எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.

முடியரசு – பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன்.

பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி,

மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.

கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும்

அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது
Posted in இலங்கை செய்திகள்

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவில்லை என EPDP தெரிவித்துள்ளது.

காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தி்ல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வெளிப்படைத் தன்மையோடு நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்ற தனித்துவமான அரசியல் தரப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம்,

சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல், நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் வீராப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்த வரையில் இப்போதுகூட கொள்கை ரீதியான உடன்பாடு கொள்கை ரீதியான கூட்டிணைவு என்று திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள்.

அவர்களுடைய கொள்கை என்ன என்பது அவர்களுக்கே விளங்கவில்லை என்பதையே அவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக தூய நகரம் தூய்மையான நிர்வாகம் என்கிறார்கள். கடந்த மாகாண சபையிலே ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களையும்,

கடந்த காலங்களில் நிதி நிறுவனம் நடாத்தி எமது மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களையும்

இணைத்து வைத்துக் கொண்டு தூய்மையான நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள்.

ஒற்றையாட்சியையும் ஏக்கிய இராச்சியத்தினையும் நிராகரிக்கின்றோம் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத கட்சிகளோடு ஒட்டவும் மாட்டோம் உறவாடவும் மாட்டோம் என்கிறார்கள்.

ஏக்கிய இராச்சியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆதரவு கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அரவணைத்து உறவாடிக் கொண்டு,

குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் டீல் பேசுகின்றனர்.

இன்னொமொரு வேடிக்கை என்னவென்றால், ஈ.பி.டி.பி. தமிழ் தேசிய பரப்பில் செயற்படாத கட்சியாம். எங்களோடு பேசுவது தங்களுடைய கொள்கைக்கு மாறான செயற்பாடாம்.

ஆனால்,ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், ரெலோ, சமத்துவக் கட்சி உள்ளங்கிய ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டணியோடு பேசுவார்களாம். அவர்கள் தமிழ் தேசியப் பரப்பிலே செயற்படுகிறார்களாம்

தமிழ் தேசியத்திற்கு புறம்பான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அடையாளப்படுத்துகின்றவர்கள், 2015 ஆம் ஆண்டு வரையில் எமது கட்சியை வழி நடத்திய தலைவர்களுள் ஒருவரான

தோழர் அசோக் என்று அறியப்பட்ட சந்திரகுமாருடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க டீல் பேசுகின்றனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்டமையினால் ஈ.பி.டிபி. ஒட்டுக் குழுவாம்.

தென்னிலங்கை அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கின்ற கட்சி ஒட்டுக் குழு என்றால், டி.எஸ் சேனநாயக்கா காலத்திலேயே இணக்க அரசியல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தானே Most senior ஒட்டுக்குழு

இவ்வாறு தங்களுடைய செயலுக்கும் சொல்லுக்கும் சம்மந்தமில்லாமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து

சுயலாப அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமற்றது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானம் அமைந்திருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம் ஜனாதிபது அனுரவுக்கு தற்துணிவு என்பது கடுகளவும் இல்லை என விமல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். பெரும்பான்மைப் பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அநுர அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.

2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்ததையும், அந்தப் பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அநுர அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுடன் அரசு அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதாயின்

அதற்கு இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

கடந்த காலங்களில் இதனைக் காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார்.

அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அநுர அரசு நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும்.” – என்றார்.

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை

இனப் படுகொலை என்பது தொடர் நடவடிக்கை

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை இனப்படுகொலை என்பது ஒரு தொடர் நடவடிக்கை என கனடாவில் இருந்து விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என

ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாரம் முழுவதும் தமிழ்சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்துகொள்வார்கள்.

மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மனஉளைச்சல் குறித்து அறிந்துகொள்வார்கள்.

இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வால் குறிக்கப்படவில்லை. அது ஒரு செயல்முறை, ஒரு குழுவினரான மக்களை , ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும், தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம்.

மே2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக் குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்க்கின்றது,167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்விவாரத்தை அங்கீகரிப்பது ,நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்.

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன் அர்ச்சுனா இராமநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ,வன்னிமைந்தன் அவர்கள் போட்டியிட உள்ளதாக ,மக்கள் வாக்கு அற்று உள்ளுராட்சி சபை தேர்தலில் தோல்வி அடைந்த அர்ச்சனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் ,பல்வேறுப்பட்ட சர்ச்சைப் பேச்சுக்களை பேசி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினராக விளங்க கூடிய அர்ச்சுனா இராமநாதன் ,வன்னி மைந்தன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, போட்டியிட உள்ளதாகவும் அவர் பாரிய வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்வார் என அடித்து விட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் வன்னி மைந்தன், எப்படி வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வர முடியும் என்பதை கூட அறியாத அர்ச்சனா ராமநாதனுடைய ,உருட்டும் பிரட்டும் இது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நாள்தோறும் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக .தான் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதற்காக. அவதூறுகளையும் சர்ச்சைப் பேச்சுகளையும் பேசி இடம் பிடித்து வருகிறார் .

அவ்வாறான மக்கள் நலனற்ற மக்கள் சேவை மறந்து ,மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ,மக்கள் பணத்தில் வாழ்வை ஓட்டி வருகின்ற அர்ஜுனா இராமநாதன் ,தமிழர் அரசியல் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தும் முதலாவது கதிர்காமராக பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் வெளிநாட்டு வாழ் மக்களிடம் ,பணக் கொள்ளையடிக்க முனையும் அர்ச்சனா, தங்கத்துடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் ,என்கின்ற விடயமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இவருமே இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றனராம் .

ஆடம்பரமான வாழ்வில் திளைத்திருக்கும் இவர்களுக்கு வெளிநாட்டு மக்கள் காசுகளை அனுப்பி வருகின்றனர் .

பாவப்பட்ட மக்கள் வறுமையில் உள்ள மக்கள் பசிபோக்க மறுக்கின்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ,வைத்தியர் அர்ச்சனா இராமநாதனுக்கு, எதற்காக பணத்தை அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

ஆகமொத்தம் அர்ஜுனாவின் கணிப்பின்படி, வடக்கு முதலமைச்சராக வன்னி மைந்தன் வருகிறார் வருகிறார்.

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு நிகழ்வு என்று தற்போது இடம் பெற்றுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதருக்கும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் ,சந்திப்போன்ற இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறுபட்ட ,உள்ளக எவ்விடயங்கள் தொடர்பில் இருதரப்பும் கலந்து உரையாடி இருக்கின்றனர்.

இந்திய இலங்கை உறவுகள் பலப்படுத்தும். மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கும் , இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் , இந்தியா தூதர் கேட்டறிந்து கொண்டார்.

200 வருடங்களுக்கு மேலாக ,மலையகத்தில் வாழும் இந்திய பூர்விக குடிமக்கள், தொடர்ந்தும் வறுமை நிலையில் காணப்படுகின்றனர்.

இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால். நிச்சயமாக இந்தியா உதவி செய்ய வேண்டும்.

ஆனால் அந்த மக்கள் இதுவரை இலங்கையினுடைய குடியுரிமையை கூட. பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொத்தடிமைகளாக மலையகத்தில் வாழும் ,மலைவாழ் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் கடமையாகும்.

ஆனால் தமது கடமையிலிருந்து இந்திய தவறி வருவதும், இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து வருவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குற விடயம்.

திடீரென ஜீவன் தொண்டமான சந்தித்து, இந்திய தூதர் பேசிய விடயம் ,உள்ளக விளையாட்டுகளின் ஒரு சதுரங்க ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசியல்வாதிகளை இந்தியா தனது கையில் வைத்து விரலை ஆட்டுகிறதா என்பதுதான், இந்த பேச்சுக்களின் ஊடாக வெளி வருகின்ற விடயமாக உள்ளது .

போதை ஊசி வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் ஹீரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய 27 வயதுடைய வாலிபன் ஒருவர், கடந்த தினம் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் 15ம் தேதி காணாமல் போன நிலையில் ,உறவினர்கள் அவரைத் தேடிய பொழுது ,அவர் ஊருக்கு அருகிலிருந்து சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது , போதை வஸ்து ஊசி மூலம் ஏற்படுத்தப்பட்டதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாலிபங்கள் மத்தியில் போதவஸ்து , அதிக பாவனையும் , அதனால் அவர்கள் வாழ்வைச் சீரழித்து, அவன் உயிரைப் பறிக்கின்ற இழிநிலை நடவடிக்கை தொடர்கிறது.

சிங்கள மேலாதிக்க பௌத்த அடக்குமுறை யாழர்களினால் ,தமிழர் சிந்தனை தடுக்கப்பட்டு ,அவர்கள் சிந்தனை திசை திருப்பப்படும் ,நடவடிக்கை ஒன்றாக இந்த போதை வஸ்து பாவனை காணப்படுகிறது.

பாடசாலைகள் முதல் வர்த்தகங்கள் அனைத்து பகுதிகளிலும். இந்த போதை வஸ்து திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை விற்பனை செய்பவர் .ஆளுகின்ற அரசியல்வாதிகள் தான் என்பது மக்கள் அறிந்ததே.

இவ்வாறு போதைகளை பயன்படுத்தி வாலிபங்களை .திசை திருப்பி படுகொலை செய்வது என்பதே , இதுவும் ஒரு இனப்படுகொலை தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

போதை வஸ்துக்கு எதிராக மக்கள் விழித்து எழாத வரைக்கும் ,அதனை மக்கள் எதிர்கொள்ளாத வரைக்கும், இவ்வாறான இளம் இறப்புகளை தடுக்க முடியாது .மக்கள் சீரழிவுகளை தடுக்க முடியாது என்பதே நியமாகிறது .

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு அரசின் சதி நடவடிக்கை தற்பொழுது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இறங்கொடை பகுதியில் நடந்த பேருத்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த விபத்தில் 22 மக்கள் பலியாகி 44 மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

தொடர்ந்து இடம் பெற்ற விசாரணைகளில் ,பேருந்து இயந்திர கோளாறு காரணமாக சேதமாகவில்லை எனவும் ,ஆபத்தான நிலையில் அந்த பேருந்தை சாரதி ஓட்டி செல்லவில்லை எனவும், அங்கிருந்த கமரா மூலம் அவதானிக்க முடிந்ததாக இப்படி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டி செல்லவில்லை ,இயந்திர கோளாறு ஏற்படவில்லை. ,அப்படி என்றால் இந்த விபத்து எப்படி இடம்பெற்றது என்பதற்கு பதில் இல்லை.

ஆக இதனூடாக இறம்பொடை பேருந்து விபத்து பலிகளை மறைக்கவும் ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும், இவ்வாறு மூடி மறைப்பு நாடகத்தை அனுரா ஆட்சி கட்சிதமாக நடத்தி இருக்கிறது.

தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ,தமது ஆட்சி அதிகாரத்தில் நிலவுகின்ற, இவ்வாறான விபத்துக்களை மூடி மறைக்க ,வேண்டிய நெருக்கத்தில் ஆளும் அனுரா அரசு உள்ளதை இவை காண்பிக்கிறது.

மக்களை திசை திருப்பவே ஆளும் பிரதமர் விசேட தளத்துக்கு விரைந்து சென்றதும் பின்னர் ,பத்து மில்லியன் என அறிவித்ததும் கண்துடைப்பு நாடகமாகிறது.

அப்பாவி மக்கள் உயிரோடு விளையாடு அனுரா அரசின் இந்த கபட நாடகம் ,மிக ஆபத்தான ஒன்று என மக்கள்குற்றம் சுமத்துகின்றனர் .

மாகாண சபையில் வென்று விட வேண்டுமாக இருந்தால் .மக்கள் மனங்களை குளிர்விக்க வேண்டும்.

அதற்காகவே இப்பொழுது 10 மில்லியன் நாடகமும் ,பேருந்து இயந்திரக் கோளாறு ஏற்படவில்லை எனவும், சாரதி ஆபத்தான நிலையில் ஓட்டி செல்லவில்லை என்பதையும் அரசு அறிவித்துள்ளது.

பேருந்துகளின் மானத்தை காப்பதற்காக ,இப்படி அடித்து விட்டு இருக்கிறது ,விசாரணை குழு .

எல்லாம் ஒரு நாடகம்தான் ,உருட்டு அனுரா ஆட்சி என்பது ,இந்த உருட்டில் இருந்து தெரிகிறது.

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி, அதிர்ச்சிகரமான சம்பவம் கொட்டவா ரூட்மேல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திடீரென வீட்டில் தீப்பற்றியதை அடுத்து அவ்வேளை அங்கிருந்த 19 வயது இளம்பொண் அந்த தீயில் கருகி பலியான பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பற்றல் நடவடிக்கை எடுத்து விரைந்து சென்ற மீட்பு குழு மற்றும் அயலவர்கள் வீட்டு தீயை அணைத்த பொழுதும் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

இந்த வீட்டில் இந்த தீ பற்றல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பாக, தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு காரணமாக அல்லது மின்சார காசிவின் காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

எனினும் குற்றப் புலனாய் பிரிவுகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

விசாரணையின் முடிவிலேயே இந்த தீப் பற்றல் சம்பவம் என்பது ,விபத்து சம்பவமா ,அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவமா என்பது தெரியவரும் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

எரிவாய்வு சிலிண்டர்கள் வெடித்தும், மின்சார காசிவின் காரணமாக பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இதுபோன்று இந்த அப்பாவி 19 வயது சிறுமியும் ,தீயில் கருகி பலியான சம்பவம் இடம்பெற்று இருக்கலாம், என்கின்ற சந்தேகம் மத்தியில் காணப்படுகிறது.

விசாரணையின் முடிவிலேயே ,காவல்துறை என்ன நடந்தது என்பதை அறியத் தருவார்கள் என்பதாக மக்கள் பேசுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை யாழ்ப்பாணத்தில் தனது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தையை என்னவென சொல்வது.

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு

உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.

குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எத்தனையோ பெற்றோர் குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் இக் காலத்தில் இவ்வாறான தந்தையும் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அதிலும் யாழ்ப்பாணத்தில் என நினைக்கையில் நெஞ்சே பதறுகின்றது.

பொலிஸ் விசாரணையின்போது என்ன நடந்தது என்பதை குடும்பத்தினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

என்னதான் இருந்தாலும் அந்த 6 வயது சிறுமிக்கு ஒரு தந்தை நஞ்சை ஊட்டிவிட எப்படி மனம் வந்தது? அந்த பிள்ளைக்கு என்ன தான் தெரியும் இந்த மழலை வயதில் என பிரதேச மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம் என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

தெவி நிவார பகுதியில் உள்ள பாடசாலை ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினார் என்கின்றகுற்ற சாட்டின் அடிப்படையில் ,தற்போது சிறுவர் மற்றும் மகளிர் பணியாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இந்த ஆசிரியர். அங்கு கல்வி கற்ற ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார் என்கின்ற அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சமீப காலங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ,தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் ,அதிகரித்து வரும் இடையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது.

இந்த கைதின் பின்புலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா .அல்லது உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றனவா .என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

தொடர்ந்தும் அதிகரித்து வரும் ,இவ்வாறான குற்றச்சாட்டுகள் சம்பவங்களினால் பெற்றவர்கள் அச்ச நிலையில் காணப்படுகின்றனர் .

இதனை தடுப்பதற்கு கல்வி அமைச்சு சீரான ஒரு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் ,இவ்வாறு நடவடிக்கையை தடுக்க முடியும்.

இலங்கையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ,சீரிய வழியில் செல்ல வேண்டுமாக இருந்தால் ,கல்வி அமைச்சு தகுந்த நெருக்கமான ,நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான், இவ்விதமான சம்பவங்கள் தடுக்கப்படும்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ,அவர்கள் அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியாது என்ற சட்டம் ,அமல்படுத்தப்பட்டால் மட்டும்தான் இதனை தடுக்க முடியும்.

ஆனால் கல்வி அமைச்சு ஆளு அரசுகள் இதனை செய்யுமா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது .

வவுனியாவில் வீடு தோற்க காரணம் இதுதான்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.

விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.

ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்

எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.

இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

இனவழிப்பு நடக்கவில்லை

இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.

கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.

நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு

40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.

தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்

இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.

சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.

அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.

முன்னாள் வடமாகாண சபை

குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.

இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.

இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.

அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.

அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.

முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.

சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.

புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.

அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கண்டியிலும் பஸ் விபத்து 20 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம் கண்டி, அலதெனிய, யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் , கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,

பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 21க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, ஹட்டன் வீதியில் 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் நேற்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரே பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு வீதி விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம் ,தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டவரலாற்றின் முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் லண்டனில் மரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லண்டனில் வசித்து வந்த முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் தற்பொழுது உடல் சுகவீன காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வித்தாக சங்கர் அவர்கள் வீரமரணம் அடைந்திருந்தார்.

அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான விடுதலை மறவர்கள் தங்கள் மண்ணுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள்.

தற்பொழுது சங்கருடைய தந்தை மரணமானதை அடுத்து லண்டன் வாழ் தமிழ் மக்கள் ,அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

விடுதலை இன்று வீரம் இழந்து போயிருந்தாலும் ,ஆனால் அந்தக் காலத்தில் எங்களுக்காக நின்ற அரும் பெரும் தலைவர்களையும், தலைமைகளையும் மாமர வீரர்களையம் மக்கள் மறக்கவில்லை.

லண்டன் பகுதியில் இவரது இறுதி நிகழ்வு தொடர்பான விடயங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் ,அவ்வளை பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு தமது இறுதி நிகழ்வை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரத்தின் விளைநிலமாகவும், விடுதலையின் கனவாகவும் ,அண்ணனுக்கு தம்பியாகவும் ,தமிழின போருக்கு துணையாக நின்று களமாடி, வீரமரணம் அடைந்த சங்கர் அவர்களின் ,தந்தையை நினைவு கூறுவோம் .

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்

தமிழர்களை ஒன்று திரண்டு வருக விரைவில் மேலதிக விபரம் இணைக்கப்படும்.

இந்த மாமற வீரன் சங்கர், கடல் புலிகளின் தளபதி சூசை அவர்களுடைய உறவுக்காரர் என்பதை இங்கே குறிப்பிடத்தக்கது .

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர் ,செயல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஆளும் பிரதமராக இருக்கக்கூடிய கருணி அமர சூரியா அவர்கள் ,கொத்தமலை பேருந்து விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு சென்று நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 21 பேர் பலியாகி 44க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் உடல் அவயங்கள் இழந்த நிலையில் ,செயல்முடக்க பட்ட நிலையில் காணப்படுவதான தகவல்களும் வெளியாகி உள்ளது.

மிகப்பெரும் கொடூரமான விபத்தாகவும். மக்களை நெஞ்சுருக வைத்த விபத்தாகவும் இந்த் பேரூந்து விபத்து காண படுகிறது.

லஞ்ச ஊழலை ஒழிப்பதாக தெரிவித்து .இலங்கை ஆட்சியில் அரியணையில் ஏறிய .இவர்கள் மக்கள் பயணத்தில் கூட அவர்களை காப்பாற்ற முடியாதவர்களாக உள்ளனர் .

மக்கள் அனுதாப அலைகளில் அரசியல் நடத்தும், இவ்வாறான பிரதமர் உள்ளிட்டவர்கள், மக்கள் சிலர் எதிராக கருத்துக்களை வைத்து வருகின்றனர்.

வீதிக்கு வீதி காவல் துறை இருக்கின்ற பொழுது ,எவ்வாறு இந்த வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி விபத்தில் சிக்குன என்பதற்கான விடையத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஆண்டுதோறும் 36,000 விபத்துக்கள் இலங்கையில் ஏற்படுகிறது.

இந்த விபத்துக்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பாக, அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம், ஒதுக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

அதுவும் ஒரு நாடகம் எனப் பார்க்கப்படுகிறது.

இந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ,இலங்கை பிரதமர் பார்வையிட்டார் ,இன்றைய உள்ளூர் செய்திகளில் தலைப்பு இதுதான்.

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி யான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலாங்கொட சமனவல பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றுக்குள் நேற்று மாலை தந்தை ஒருவரும் ,அவரது மகனும் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன் பொழுது மகன் நீரில் மூழ்கியதை அடுத்து ,அவரை காப்பாற்ற சென்ற தந்தை அந்த நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் தப்பித்த பொழுதும், தந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்க இறந்தவர் 44 வயதுடைய தந்தையே என கூறப்படுகிறது.

ஆற்றுக்குள் குளிக்கச் சென்ற பொழுது, அதில் வேகமாக வந்த நீரலையின் அடித்துச் செல்லப்பட்டு ,மகன் மூழ்கடிக்கப்படுவதை அறிந்து அவரை ,காப்பாற்றி கரை சேர்த்த தந்தை ,தற்பொழுது பலியாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும், குளங்கள் நீர் ஏரிகளில் மூழ்கி எண்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான தகவல் ஒன்று உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்

சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்

சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள், உறைந்துள்ளதாக அந்த கடலோரவால் மக்கள் தெரிவித்த வருகின்றனர்.

அலைகள் அதிகமாக அடித்து உயரமாக உள்ள மான்மேடுகளை அரித்து , உடைத்து கடல் உள்வாங்கி வருவதால் ,மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்தக் கடல் அரிப்பை தடுப்பது எப்படி ,என்பது தொடர்பாக ,தற்பொழுது அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தொடர்ந்தும் இவ்வாறு கடல் மண்ணரிப்பு ஏற்பட்டால், நிலங்கள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டு ,அங்கிருக்க கூடிய வீடுகளும் கடலோடு சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதாக ,மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுகின்ற அரசாவது ,இதில் கவனம் செலுத்தி ,இந்த கடல் அரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கடல் பகுதியில் இறால் வளர்ப்புகள் ,அதிகமாக காணப்படுவதாகவும் ,இந்த கடல் அரிப்பு ஏற்படுவதால் ,அந்த இறால் வளர்ப்பு பண்ணையாளர்களும்,

பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் இங்கிருந்து இருந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கடல் அரிப்பு காரணம் என்ன ,..? .அங்கு இருக்கக்கூடிய மக்கள் தொழில்துறைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழிய கவனம் செலுத்த வேண்டும்.

அது தவறினால் ,அதனால் ஈட்டப்படுகின்ற வருமானங்களும் ,தொழில்துறைகளும் ,மக்களும் ,பாதிக்கப்படக்கூடிய ஒரு அபாயம் உள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் இப்படி கருத்துரைத்து வருகின்றனர் .