Tag: கூட்டணி
வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
வீணைக் கட்சியிடம் வீட்டுக் கட்சியினர் கூட்டணி அமைப்பதற்காக கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று (சிறீதர் தியேட்டர்) அந்தக் கட்சியின் செயலாளர்
டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம்.
தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியிலான உடன்பாடுகளை எட்டியுள்ள நிலையிலேயே.
தமிழரசுக் கட்சியின் தலைவர் ஈ.பி.டி. பி.யைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது:-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் . விரிவான பரிசீலனைகளைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றார்.
ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியவில்லை என் தமிழ்ரசு கட்சியின் தலைவர் சிறிதரன் சிவஞானம் ஊடகங்களிடம் தெரிவித்தது குறிப்பிட்டிருத்தக்கது.
விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
விரோதக் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டணி சேர பேசியதாக வரும் செய்திகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக
சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,
அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்
வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில்,
இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுபற்றி கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி
கட்சியின் உயர்மட்டக்குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில்,
அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களை விற்கவேண்டாமென சங்கரி வேண்டுகோள்
மக்களை விற்கவேண்டாமென சங்கரி வேண்டுகோள்
உங்களது பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், தொண்டமான் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றும் இருக்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியும் நானும் உயிரோடு இருக்கிறோம்.
தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேண்டும். நான் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து வெற்றிகரமாக செயற்பட ஒத்துழைப்பதே தந்தை செல்வாக்கு நீங்கள் செய்யக்கூடிய மரியாதை ஆகும்.
இறந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆத்மா சாந்தியடையும் என மேலும் தெரிவித்தார்.
டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
யாழ் மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில்
ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார்.
அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.
உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வீ.கே.சிவஞானமும். குறுஞ்செய்தியை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.
எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு பக்கம் சாராது மக்கள் நலன் சார்ந்து இருக்கும். எந்த இடத்திலும் ஆட்சியை பொறுப்பெடுப்பதற்கோ ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ நாங்கள் தயாராக இல்லை.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.
உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.
கடந்த கால கசப்புகளை கருத்திற்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம் – என்றார்.
சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன் ,இலங்கை தமிழர்சு கட்சிக்கும் சங்குக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடினர்.
ஜனநாயகத் தமிழ்த்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான
செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் க.துளசி
மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு
கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு
கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு கஜேந்திரகுமாரை சந்திக்கிறது சங்குக் கட்சி என செய்திகள் வெளிவந்துள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ் மக்கள் அம்மூன்று தரப்புக்களுக்கே அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் சபைகளின் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடன் இம்மூன்று தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது.
அந்த வகையில் தான் நாம் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளோம். குறித்த உடன்பாட்டுக்கு அமைவாக வடக்கு,கிழக்கில் நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புக்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
அதேவேளை, நாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான முன்னணியுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம்.
அதற்காக நானும், செல்வம் அடைக்கலநாதனும் அவரை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. அதன்போது நாம் கொள்கை தொடர்பான விடயங்களையும் நேரில் தெளிவுபடுத்தி பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், இணைத்தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
நடைபெற்று நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்துக்கே ஆணை வழங்கியுள்ளார்கள்.
இதில் அவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் முழுமையான ஆதரவினை வழங்கியிருக்கவில்லை. அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புரிந்துகொண்டுள்ளார்.
அதேநேரம், தற்போது தமிழ் மக்கள் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் சிங்கள தேசியக் கட்சிகளிடத்திலோ அல்லது ஆளும் தரப்பிடத்திலோ சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.
அதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதொரு விடயமாகின்றது. அவ்விதமான நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம் பலம் கொள்கைக் கூட்டுப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் சம்பந்தமாக அவர் தெளிவு படுத்த வேண்டும். நாம் தமிழ்த் தேசிய சிந்தனையில் தான் பயணிக்கின்றோம்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காகவே செயற்படுகின்றோம். அதற்காகவே மக்கள் எமக்கும் ஆணை அளித்துள்ளார்கள் என்றார்.
கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் ,யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று மாலை தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரந்தன் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓட்டோவில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண்ணும், இரு ஆண்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ,சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.
இதன் போதே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ,
இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா ,இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.
நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது மக்களின் யுகத்திற்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலை முடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்திற்கு ரணில் அநுர கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
ரணில்-அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இந்த சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருக்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப்பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14) திகதி இரத்தினபுரியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுக்கட்டாக பைல்களை தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த
ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என
வெளிக்கொணர்ந்தது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுகின்ற வேலையாட்கள், முதல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வர்த்தக
இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்காகவும் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தேசிய கொள்கை திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அத்தோடு 50 கிலோ உரம் ஒரு மூடையை 5000 ரூபாவுக்கு வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையில் இரத்தினக் கல் காணப்படுகின்ற இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததது.
அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனை நிறுத்தினோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்ய முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மிகப் பெருமளவில் செய்து, தொழில் வாய்ப்பில்லாத
இளைஞர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி சமூகத்தில் அபிமானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தை செயற்படுத்தி, 24
மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்
மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
மோடி ராஜினாமா கூட்டணி பேரம் இந்தியா தேர்தல் முடிவுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது மோடி கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார் .
காணொளியில் விபரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீர்ஸ் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று (05) காலை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜி.எல்.பீர்ஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இவ்வாறு சமகி ஜன சந்தனவில் இணைந்துள்ளனர்
திமுக கூட்டணி – தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு
திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன்
முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:-
தி.மு.க.- 174
காங்கிரஸ்- 25
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6
இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6
ம.தி.மு.க.- 6
விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3
மனிதநேய மக்கள் கட்சி- 2
தமிழக வாழ்வுரிமை கட்சி- 1
மக்கள் விடுதலை கட்சி- 1
ஆதித் தமிழர் பேரவை- 1
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று மதியம் 12 மணிக்கு தி.மு.க அறிவிக்கிறது.































