ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி ,ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணி நிர்வாகம் போட்டி நடுவர் நீயமூர் ரஷீத்திடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் கடைசிக்கு முந்தைய பந்தில் வங்கதேசம் எல்பிடபிள்யூ ரிவியூ எடுக்க அனுமதித்த மைதான நடுவர் குமார்

தர்மசேனாவின் முடிவுதான் கேள்விக்குரிய சம்பவம்.

தர்மசேனாவின் முடிவுதான் கேள்விக்குரிய சம்பவம். ESPNCricinfo படி, பாகிஸ்தான் புகாரைப் பதிவு செய்தது,

திரையில் ரீப்ளே தோன்றிய பிறகு எதிரணி ரிவியூ எடுத்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

ரிவியூ எடுக்க முடிவு பங்களாதேஷுக்கு ஆட்டத்தில் ஒரு அசைக்க முடியாத நிலையை எடுக்க உதவியது. இந்த பந்து வீசப்படுவதற்கு முன்பு,

பாகிஸ்தானுக்கு இரண்டு பந்துகளில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது.

ரிஷாத் ஹொசைன் பந்தை லெக் ஸ்டம்பை நோக்கி மேலே பாய்ச்சினார், அது ஷாஹீன் ஷா அப்ரிடியின் கால்களுக்கு அருகில் இல்லாமல் லெக் சைடு நோக்கி சுழன்றது. தர்மசேனா அதை வைட் என்று அழைத்தார்;

இருப்பினும், ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, பந்து அப்ரிடியின் கால்களுக்கு அருகில் அல்லது அவரது உடலின் எந்தப் பகுதிக்கும் அருகில் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், வங்கதேசம் எல்பிடபிள்யூ ரிவியூ எடுத்தது.

பெரிய திரையில் எந்த மறுபரிசீலனை

நெறிமுறைகளின்படி, பெரிய திரையில் எந்த மறுபரிசீலனையும் தோன்றுவதற்கு முன்பு மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட

வேண்டும். மறுபரிசீலனை திரையில் தோன்றியதால் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று பாகிஸ்தான் இப்போது வாதிடுகிறது, இது பங்களாதேஷின் முடிவை பாதித்தது.

மறுபரிசீலனைக்கு செல்ல வங்கதேசம் 15 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டதால் பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாகவும் ESPNcricinfo அறிக்கை

தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஒளிபரப்பில் எந்த நேரமும் இல்லை, எனவே பங்களாதேஷ் சரியான நேரத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டதா இல்லையா என்பதை சுயாதீனமாக சரிபார்க்க முடியாது.

போட்டி நடுவரிடமிருந்து PCB என்ன விரும்புகிறது என்பது சரியாகத் தெரியவில்லை; இருப்பினும், மன்னிப்பு கேட்பது விஷயத்தை குளிர்விக்கும்.

ஆட்டத்தின் இறுதி பந்து வீச்சில் ஷாஹீன் ஸ்டம்பிங் செய்யப்பட்டார், இதன் விளைவாக, வங்கதேசம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது,

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. சல்மான் அலி அகாவின் சதம் வீணானது, பாகிஸ்தான் 291 என்ற இலக்கைத் துரத்தத் தவறியது

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை
Posted in இலங்கை செய்திகள்

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை ,புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர

பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்

பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண கிறிஸ்தவ இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (2) நடைபெற்ற வட மாகாண கற்றறிவாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான

சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பாரம்பரிய கல்வி முறை

பாரம்பரிய கல்வி முறைக்குப் பதிலாக, பிள்ளைகள் கல்வி மற்றும் தொழிற் துறைகள் ஆகிய இரண்டு துறைகளிலும் உயர் கல்வியைத் தொடர உதவும்

வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் வரலாறு, சமயம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிலர் இன்னும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்த தவறான கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. வரலாறு, அழகியல் அல்லது சமயம் ஆகிய பாடங்கள் எந்த வகையிலும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ்

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர் சமூகத்தின் மீது சுமையை ஏற்படுத்தும் கல்விக்கு பதிலாக, பிள்ளைகளுக்கு அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்ளவும்,

அவர்கள் விரும்பும் பாடங்களை மேலும் கற்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்வுசெய்யவும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வியை பாடசாலைக் கல்வியினுள் கொண்டு வந்து, மாணவர்கள் கல்வித்துறை அல்லது தொழிற்கல்வி ஆகிய இரண்டு பாடப்

பிரிவுகளிலிருந்தும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போதைய கல்வி சீர்திருத்தம் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட இறுதி சீர்திருத்தம் அல்ல.

வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்

பாடங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் நேர்மறையான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில்

கொண்டு, தேவையானவற்றை இணைத்து, தேவையற்றவற்றை நீக்கி, படிப்படியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் இது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி

ஆஸ்திரேலியா வீரவணக்கு நிகழ்வு தோல்வி அடைந்துள்ளதாக அங்கு திரண்ட மக்கள் கூட்டம் தெரிவித்துள்ளனர்.

திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழருடைய மண்டபத்துக்கு முன்பாக திரண்ட பெரும் திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனை அறிந்த கார்களில் வந்தவர் மண்டபத்துக்குள் நுழைய முடியாதபடி மக்கள் தடுத்தனர்.

தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள கூலிக் குழு ஒன்று வீரவணக்க நிகழ்வை நடத்த முற்பட்டது.

முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள்

முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள் ,தலைவர் இறந்துவிட்டார் என உரிமை கூற முற்பட்டதை அடுத்து ,மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் முறுகல் இடம்பெற்றுள்ளது .

அடையாளம் தெரியாத சிங்கள கூலிகளாகவும் இந்திய கூலிகளுக்கும் செயல்படும் கூலிகளே தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என இந்த வீரவணக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனைக் கண்டித்து தலைவர் மீதும் தமிழீழ மண் மீதும் தமிழீழ மக்கள் மீதும் பாசம் கொண்ட அறத்தமிழர்கள் திரண்டு எழுந்து தமது எதிர்ப்பை காட்டினர்.

இதனால் அந்த நிகழ்வு தோற்றுப் போனதை கீழே உள்ள காட்சிகள் ஊடாக நீங்கள் காணலாம்.

தலைவரையும் தமிழீழ மண்ணையும் நேசிக்கிற மானத் தமிழர்கள் இப்படித்தான் கிளெர்ந்தெழுவார்கள் என்பது சிங்கள கூலிகளுக்கும் வாடகை வாய்களுக்கும் இது ஒரு சாட்டை அடியாக காணப்படுகிறது.

இன்று மதியம் லண்டநேரம் ஐந்து மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் இதுதான் பேச்சு.

வவுனியாவில் வீடு தோற்க காரணம் இதுதான்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.

விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.

ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்

எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.

இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

இனவழிப்பு நடக்கவில்லை

இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.

கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.

நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு

40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.

தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்

இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.

சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.

அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.

முன்னாள் வடமாகாண சபை

குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.

இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.

இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.

அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.

அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.

முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.

சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.

புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.

அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Posted in கவிதைகள்

உறங்கிய காதல்

உறங்கிய காதல்

பார்த்ததும் உன்மேல்
பூத்தது காதல் என்னில்
பழகாமலே ருசித்தேன்
விலகியே நடந்தேன்

விண்ணில் இருந்தே
மண்ணில் இருக்குமுனை
தொட நினைத்து

நீட்டினேன் கைகளை
முடியாமல் தவித்தேன்
சிட்டாக மாறியுனை
கட்டியணைக்க எண்ணி

சட்டென வந்தேன் மண்மீது
அருகிருந்தே உனை நான்
அளந்தேன் பார்வைகளால்

இதமாக இருந்த போதிலும்
இமைகள் படபடத்தன பயத்தில்
பூவான நான்.. காதலை இயம்ப
புயலாக நீ மாறி… எனை காயமாக்கி

அனலான பார்வையால் எனை
தகனம் செய்துவிடுவாய் என்று
சொல்ல நினைத்த காதலை
சொல்லாமலே புதைத்தேன்

இன்றுதான் தெரிந்துகொண்டேன்
அன்று நீயும் எனைபோலவே…..

உன்மீதான என் காதலும்
என்மீதான உன் காதலும்
உச்சரிக்கப்படாமல் உரசாமல்
உறங்கியது மனக்கல்லறைகளில்…!

கூட்டமைப்பு படு தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு படு தோல்வி

கூட்டமைப்பு படு தோல்வி

கூட்டமைப்பு படு தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது .

அனுரகுமார திஸாநாயக்கவைன் அளவும் கட்சி யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளது .

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் 12 ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இதுதமிழ் தேசிய கூட்டமைப்பின் விரோத போக்கை காண்பிக்கிறது என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது .

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு ஏற்பட்டுள்ளது ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் ஐம்பது வருடம் ஆட்சி கட்டிலில் அமர முடியுமா என்கின்ற விடயம் தற்போது மீளவும் ஒருமுறை தோல்வியில் முடிவடைந்துள்ளது .

இலங்கையை விட்டு இவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

இவர்கள் நடத்திய கொள்ளை என்பன விரைவில் வெளியாகும் நிலை ஏற்படப்போகிறது .

அது தவிர இவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதையும் இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .

புலிகளை அழித்து விட்டோம் என ஆணவத்தில் ஆடிய மகிந்தவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது , பெரும் நெருக்கடியையும் அவமானத்தயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்.

மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று (31) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எமது மக்களின் அமோக ஆதரவுடன் நானும், எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். அவ்வாறு தெரிவானதன்மூலம் நெருக்கடியான காலகட்டத்தில்கூட எமது மக்களுக்கு சேவையாற்ற முடிந்தது.

எமது பொதுச்செயலாளர் அமைச்சரான பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கும், முழு நாட்டுக்கும் பல சேவைகளை செய்யக்கூடியதாக இருந்தது.கொட்டகலை உட்பட பல பகுதிகளில் வீதிகள் புனரமைக்கப்பட்டன.

உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்தகாலங்களில் முழுமைப்படுத்தப்படாதிருந்த வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டுன. புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பமாகின.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார்.

இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்துவருகின்றது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.

சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது .

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆள வேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம்

இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.

இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை . நடைமுறைக்கு சாத்தியமான

உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.” என்றார்.

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி யை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஹைதராபாத்துக்கு 213 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ஒட்டங்களும் டேரியல் மிட்செல் 52 ஒட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி

பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி

பிரிட்டனில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஆளும்


கட்சியினர் நூறு ஆசனங்களை இழந்து பலத்த தோல்வியை சந்தித்துள்ளனர்

எதிர்வ்ரும் பாராளுமன்ற தேர்தலில் இவரக்ள மேலும் பலத்த சரிவை சந்திப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

    ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

    அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.

    ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.

    அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    கடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித

    உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு ‘ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும்

    சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்’ என்று கேட்டுக் கொள்வதாக’ உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    ஐ.நா மனிதவுரிமைப் சபையில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்லி, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் சிறிலங்கா ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.

    இந்தத் தீர்மானம் சிறிலங்கா விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்;திருந்தது.

    ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது. நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான

    கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற ‘நீக்கம்’ என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.

    சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), சிறிலங்கா தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)

    சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011ம் ஆண்டில் இருந்து கோரிவருகின்றது.

    தற்போதைய ஐ.நா கூட்டத் தொடரிமை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.

    சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்பம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.

    அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதிநோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்தத் அரசுகள் தமது ‘இறைமையையும்’ ‘ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்’ கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும்,

    மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இறந்தால் உன்னை மறப்பேன் …!

      இறந்தால் உன்னை மறப்பேன் …!

      நினைத்து நினைத்து உருகிடத்தான்
      நீ வந்து போகிறாய்- உன்
      நினைவுகளை தந்து விட்டு
      நிதம் ஏனோ மறைகின்றாய்..?

      ஆழ் மனதில் நீயிருக்க
      அன்பே உனை மறப்பேனா
      அடியே உனை மறந்தால்
      ஆவி உடல் தங்குமா ?

      நீயெடுத்த முடிவொன்றால்
      நிகழ் காலம் இதுவாச்சு
      ஏதெடுத்து உனை மொழிவேன்
      எப்படி உனை உமிழ்வேன்

      காதோரம் செய்திகளை
      காதலியே சொல்லிட வா— நான்
      காணாமல் போகு முன்னே
      கதை ஒண்ணு சொல்லிட வா

      உருமாறும் அகவையில
      உள்ளத்தை மாற்றிட வா
      உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
      உண்மையை ஏற்றிடவா

      எதை உரைத்தும் இன்றென்ன
      எனக்கில்லை நீதானே
      எதை விதைத்தும் இன்றென்ன
      எல்லாமே வீன்தானே

      இருவருக்கும் இடையிலின்று
      இடையே ஒர் வேலியிட்டாய்
      இரு வேறாய் பிரிவதற்கா
      இடையில் ஒரு பதி வைத்தாய்?

      இதயத்தை சலவை செய்ய
      இன்றென்னால் முடியாது
      இறந்தால் உனை தொடரேன்
      இதயமே வருந்தாதே …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -10-03-2021

        Posted in சினிமா

        காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

        காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

        தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

        காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
        நயன்தாரா


        நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.

        10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

        ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த

        பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.

        லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு

        பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்

        என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.

        ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்

        அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

        நயன்தாரா

        அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது

        அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.

        நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.

        தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து

        பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

        இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

        ”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்

        என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

        காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
        காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
        Posted in சினிமா

        அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா

        அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

        தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.

        அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –


        சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

        அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர்,

        அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.

        இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரைபிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

        நயன்தாரா

        தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான்

        எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

        இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய்

        சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.