Posted in Uncategorized

உக்கிரேன் தலைநகரில் ரஷியா இராணுவத்தின் 50 டாங்கிகள் அழிப்பு

உக்கிரேன் தலைநகர் அருகில் ரஷியா இராணுவத்திற்கு பாரிய இழப்பு

உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை கைப்பேற்றும் நோக்குடன் முன்னேறிய ரசிய

இராணுவத்தினரை குறிவைத்து உக்கிரேன் இராணுவம் நடத்திய தாக்குதலில்

ரசிய இராணுவத்தின் விசேட தாங்கி பிரிவு முற்றாக அழிக்க
பட்டுள்ளது

இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட யுத்த டாங்கிகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள்

என்பன நீர்மூலமாக்க பட்டுள்ளன


தற்போது அந்த பகுதியை மீள தாம் மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம்

அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்

    நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்

    இலங்கையில் ஆளும் மகிந்த மகன் நாமல் மனைவி ,மற்றும் அவரது

    பெற்றோர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளனர்

    இவர்கள் நாட்டில் சிறை பிடிக்க பட்டு நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத

    நிலை ஏற்படலாம் என்றதினால் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்

    இவர்களுடன் ஒன்பது பேர் இவ்விதம் நாட்டை விட்டு தப்பித்துள்ளனர்

    இலங்கையில் எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை நிலவி வரும்

    நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      மயங்கி விழுந்த சீமான் – அதிர்ச்சியில் மக்கள் video

      மயங்கி விழுந்த சீமான் – அதிர்ச்சியில் மக்கள்

      திருவொற்றியூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

      திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

      வீடுகளை இடிக்க கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் அப்பகுதி மக்கள் திரண்டு

      போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி அ.தி.மு.க. கவுன்சிலரான கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

      இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவொற்றியூருக்கு இன்று நேரில் சென்றார்.

      அண்ணாமலை நகர் பகுதிக்கு சென்ற அவர், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் திடீரென

      மயங்கி கீழே சாய்ந்தார். கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானை சுற்றி நின்று கொண்டிருந்த நாம் தமிழர்

      கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சீமான் மயங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

      உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சீமான். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு

      திரும்பினார். முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

      சீமான் தற்போது நலமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. வெயிலில் நின்றுகொண்டே

      செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர்
      அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

      இதில் அழுத்தி பார்க்க

      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

      இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

      இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

      ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த தமிழர்களை

      இனவாதம் மேலோங்கி அவர்களை அடிமையாக்கி விலங்குகளை விட கீழ் நிலையில் நடத்தியதன் விளைவு ஆயுத போராட்டம் வெடித்தது

      அவ்விதம் முப்பது வருடங்களாகி இலங்கையில் நடந்தேறிய உள் நாட்டு போரில் பல லட்சம் மக்கள் பலியாகினர்


      குறிப்பாக இதில் தமிழர்களே லட்ச கணக்கில் கொன்று குவித்தது சிங்கள அரச பயங்கரவாதம்

      இனவெறியை கக்கி தமிழர்களை ஒரு பயங்கரவாதிகளாக சித்தரித்து அரியணையில் ஆண்டு வந்த தலைமைகளுக்கு இப்பொழுது நெத்தியடி வழங்க பட்டுள்ளது

      இவர்கள் யார் என்கின்ற முகமூடி கிழிக்க பட்டு நாம் எல்லாம் இலங்கை குடிகள் என்ற நிலையில் மக்கள்,ஒன்று பட்டு எழும் காலம் பிறந்திருக்கிறது

      தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவிகளை தமது இரைக்கு பயன் படுத்தி வந்தவர்கள் இன்று அழிவின் விளிம்பில்

      புலிகள் என்ற போர்வையில் முள்ளி வாய்க்களில் ஒட்டு மொத்த தமிழனத்தை கொன்று குவித்து நெஞ்சு நிமிர்த்தி ஆடிய மகிந்தா குடும்ப ஆட்சி இன்று அதே

      மக்கள் சாபத்தின் விளைவால் அதே சிங்கள மக்களினால் கண்முன்னே விரட்டியடிக்க படும் காலம் அரங்கேறியுள்ளது

      இராணுவ சர்வாதிகாரத்தில் சிவில் நிர்வாகத்தை ஆட்சி கொள்ள முனைந்த இடி அமீன்கள் இன்று தமது பதவிகளை உதறி விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன

      இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

      வாரிசு அரசியலை முன் நகர்த்த முனைந்தவர்களுக்கு இன்று பெரும் இடி வீழ்ந்துள்ளது

      அழுகுரல்களின் மேல் ஏறி அவர்களின் இரத்தம் குடித்து கதற கதற கொன்று குவித்து ஏப்பம் இட்ட சிங்கள அரச பயங்கரவாதம் இன்று வீதி வந்த மக்களின் செருப்புகளில் மிதிபட்டு ஓலமிடுகிறது

      இந்த ஓலம்தான் அன்று எம் மக்களின் வாழ்வாக இருந்தது ,அரசன் அன்றே அறுப்பன் தெய்வம் நின்று அறுக்கும் என்பது இது தான் போலும்

      இலங்கையில் மகிந்த ஆட்சி இல்லாது ஒழியும் காலம் வரும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாம் தொடராக கூறி வந்தோம் ,அன்று நம்மை

      நயப்புடைத்தவர்கள் இன்று எமது எதிர்வு கூறல் தெளிவானது என்பதை புரிந்திருப்பீர்கள்

      கடாபி வீழ்ந்த போதும் எச்சரித்தோம், எவர் கேட்டார் ,மகிந்தவின் ஊதுகுழல்களாக விளஙகியவர்வர்களும்


      நாட்டின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க மறந்ததன் விளைவு இன்று இருந்த இடம் தெரியாதது காணாமல் போகும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப ஆட்சி மாறிவிட்டது

      முற்போக்கை முன் விரிக்க மறந்தால் பிற்போக்கு பிடரியில் அடிக்கும் என்பது இது தான் .

      • வன்னி மைந்தன் –
      Posted in Uncategorized

      17,700 ரசிய இராணுவம் பலி – தொடரும் உக்கிர மோதல்

      17,700 ரசிய இராணுவம் பலி – தொடரும் உக்கிர மோதல்

      உக்கிரன் நாட்டை ஆக்கிரமிக்க ரசியா படைகள் பல்முனை தாக்குதல்களை தொடுத்தனர்


      இந்த தாக்குதலின் போது இதுவரை 17,700 ரசிய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரேன் மற்றும் அதன் நேச நாட்டு உளவு துறையினர் தெரிவித்து வருகின்றனர்

      ஆனால் ரசியாவோ தனது இலக்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது ,உக்கிரேன்

      தலைநகர் கீவ் நகர் நோக்கி பல்முனை தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளது


      இந்த நகர் வீழ்ச்சி உறும் இறுதி தாக்குதல் இதுவாகும் என கணிக்க பெறுகிறது

      புதிய தந்திரோபாய திட்டங்களுடன் இந்த தாக்குதலை ரசிய இராணுவம் தொடுத்து வருகிறது

      கீவ் நகரம் வீழ்ச்சி உற்றால் உக்கிரேன் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை

      ஏற்படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,அதுவே அண்டைய நாடுகளுக்கும் பெரும்

      அச்சுறுத்தலான ஒன்றாக மாற்றம் பெறும் என எதிர் பார்க்கலாம்.

      உக்கிரேன் வீழ்ச்சியின் பின்னர் ரசியாவின் நிலைபாடு மற்றும் அண்டைய நாடுகள்

      மீதான அதிகாரம் செலுத்துதல் மேலும் ஆழமாகும் என்பதில் மாற்றமில்லை

      • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள்

        புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

        புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

        இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய வீரம் செறிந்த போராட்ட இயக்கமாகவும் ,தமிழர்கள்


        அங்கீகாரம் பெற்று நல்லாட்சி நிறுவிய அரசாகவும் விடுதலை புலிகளின் நிர்வாகம்

        ,அவர்களின் ஒழுங்கு விதிகள் தமிழீழ மண்ணில் நிறுவ பட்டு செவ்வனே ஆட்சி புரிந்தன

        அவ்வாறான விடுதலை இயக்கத்தை ,அவர்கள் கூட இருந்து விலைபோனவர்கள் காட்டி கொடுத்து முற்றாக அழித்தனர்

        மீளவும் இலங்கையில் புலிகள் அமைப்பு தோற்றம் பெறாது என்ற வகையில் காவடிகள் ஆடிய வண்ணம் உள்ளன

        இவ்வாறான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் முளைத்த புதிய பத்திரிகை ஒன்று

        புலிகளை நினைவு கூறாது அரசியல் நடத்தும் படி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது

        இதே பத்திரிகையின் பிதாமகனும் நிறுவனரும் புலிகள் அருகில் இருந்து ,புலிகள்

        தலைவருடன் உண்டு கழித்து அவர் தம் பிரச்சார பீரங்கிகளாக விளங்கியவர்கள்,

        அவர்கள் பெயரில் கட்சியும் ஆரம்பித்தவர்கள்

        வெளிப்படையாக சொல்ல போனால் இவர்களே தேச புதல்வர்களான அன்று பார்க்க பட்டது ,அவ்விதமான அந்த பத்திரிகையில் நமது பார்வை என்ற பக்கத்தில் புலிகளின்

        பின்னால் ஒளிந்திருந்து அரசியல் நடந்தும் குழுக்கள் என பலரை சாடியுள்ளதுடன் ,அதன் உட்கருத்து புலிகளை நினைவுகூறாது சுமந்திரனை போல வாழுங்கள் என்கிறது

        புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

        சுமந்திரனிடம் வாங்கிய பணத்திற்கு இவ்விதம் விளம்பர பார்வை புரிவதை நிறுத்தி

        ,வரலாறுகளை படித்து முதிர்ச்சி பெற்ற நீங்கள் தமிழனத்தைச செவ்வனே வழிநடத்துங்கள்

        துப்பாக்கி முனையில் நீங்கள் முன்னர் வகித்த ஊடகத்தில் பல ஊடக நபர்கள் உங்களுக்காக படுகொலை செய்ய பட்டனர் ,அவ்விதமான சிங்கள ஆட்சிக்கும்

        அடிகழுவி பிழைக்கும் சூத்து மாத்து சுமந்திரன் போன்ற காவடிகளுக்கு வால்

        பிடிப்பதனை நிறுத்தி, சமூகம் அதன் செழிப்பு ,விடுதலை தொடர்பாக உரத்து பேசுங்கள்

        இறந்த பின்னரும் மக்கள் நெஞ்சங்களில் வாழும் இடத்தை பிடித்து மடியுங்கள்

        ,அதுதான் இரத்தம் சிந்திய விடுதலைக்கு நீங்கள் செய்திடும் பங்களிப்பும் நன்றி கடனுமாகும் .

        உங்களை விமர்சிப்பது அல்ல எமது நோக்கம் ,வழிமாறி பயணிக்கிண்றீர்கள் என்ற வேதனையுடன் இதனை பதிகிறோம்.

        • வன்னி மைந்தன் –
        Posted in Uncategorized

        தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது

        தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது

        இலங்கை வரலாற்றில் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்து வந்த கோட்டா
        ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்

        பட்டினை சாவை எதிர்கொள்ள நேரிடும் நிலையை கோட்டா உருவாக்கிய நிலையில்

        வேறு வழியின்றி ஆட்சி யாளர்களுக்கு எதிராக சுமார் மூன்று வருடத்தில் மக்கள் எதிராக போர் நடத்தி வருகின்றனர்

        சமூக வலைத்தளங்களில் வைரலான கோட்டா எதிர்ப்பு தற்போது மிக வேகமாக பரவி நாடெங்கும் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது

        கோட்டா ,மகிந்த கூட்டாக ஆட்சியை இழந்து வீடு செல்லும் நிலை ஏற்பட போகிறது


        மக்கள் கோபாத்தை தணிக்க பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

          Posted in உளவு செய்திகள்

          கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

          கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

          இலங்கையில் மக்களின் ஆக்கிரோச போராட்டம் அதிவேகமாக நாடெங்கும் பரவி வரும் நிலையிலும் ,அமைச்சர்கள் வீடுகளும் முற்றுகையிட பட்டு வருவதாலும்
          ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது

          அதற்கான முற்றுகை போர் பெரும் வீச்சாக படர்ந்து வருகிறது ,இவ்வேளை இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு மக்கள் கிளர்ச்சியை எழவைத்து தமது ஆட்சிக்கு எதிராக

          திருப்பியவர்களை கொலை செய்திடும் நிலைக்கு கோட்டா செல்ல கூடும் என எதிர் பாரக்கலாம்

          அடுத்து அரசியல் படு கொலைகள் ஊடக நபர்கள் கடத்தல் அல்லது கொலை செய்ய படுதல் போன்ற செயல் பாடுகள் நடத்த படும்

          இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்த சிவில் உடையிலும் அனுப்ப படுவார்கள் என எதிர் பார்க்கலாம்

          விரைவில் கோட்டா மீது பாராளுமன்றில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் ஊடாக ஆட்சி கவிழிப்பிற்கு எதிர்க் கட்சி செல்ல கூடும் என்பது நிலவரமாகிறது

          தனிப்பெரும் பான்மை மக்களின் ஆதரவுடன் வென்றதாக ஏப்பம் இட்ட கோட்டாவுக்குஅதே மக்கள் அடித்து விரட்டும் காலம் உருவாகும் என நாம் அப்போதே தெரிவித்து இருந்தோம் ,அவை இப்பொது நிதர்சனமாகிறது

          கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

          இலங்கையில் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவில் மிதந்த மகிந்த ராஜபக்சே குடும்பத்தில் இரண்டாவது இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் அமர்ந்தார்

          இவரது ஆட்சி அமர்வின் பின்னர் தன் பக்கம் புகழையும் அரசியல் கட்சிகளையுமிணைத்து வைத்திருந்த மகிந்த ராஜபக்சே அரசியல் பலம் பறிபோகும் நிலைக்கு தள்ள பட்டது

          சிங்கள பவுத்த இனவெறியை கிளறி தமிழ் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு மகிழ்ந்து உலவிய மகிந்த ராஜபக்சே இன்று கண்ணீரில் குளிக்கும் நிலைக்கு அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே களத்தை உருவாக்கி மகிந்த ராஜ்பக்சவிடம் கையளித்தார்

          அண்ணன் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி உயர்பு பெற்றவர் ,அண்ணனிடம் ஆசி வாங்கி அரியணையில் அமர்ந்த கோத்தபாய ராஜபக்சே இன்று அதே அண்ணாவை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியும் நிலைக்கு தள்ள பட்டார்

          இது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளக சண்டைகளை ஏற்படுத்தியுள்ளது

          காலம் அநீதிகளை தட்டி கேட்கும் என்பதற்கு ,அதர்ம வாதிகளிற்கு இதுவொரு சிறந்த பாடமாக வரலாறு எழுத பட்டுள்ளது .

          • வன்னி மைந்தன் –
            Posted in மருத்துவம்

            சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.

            சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.

            உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

            முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.

            கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில

            மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

            கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும்

            பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.

            இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:

            ஊட்டச்சத்துள்ள உணவு:

            கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை

            சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்

            ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள

            வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.

            உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

            மருத்துவ ஆலோசனை:

            கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் சர்க்கரை அதனால் ஏற்படும் தாக்குதல் தொடர்பான மருத்துவ ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க

            வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.

            சர்க்கரை நோயும்… மருத்துவ ஆலோசனையும்.

            உடற்பயிற்சி கட்டாயம்:

            கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை

            கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5
            நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              கத்திகள் எழுகிறது …!

              கத்திகள் எழுகிறது …!

              வன்னி மைந்தன் கவிதைகள்

              திண்ணையில உட்க்கார்ந்து
              தீங்குரைக்கும் நெஞ்சுகளே
              குஞ்சுகளை காணாது
              குருவிகள் அலைகிறதாம்

              பஞ்சு வெடிக்கின்ற
              பங்குனி வெய்யிலில்
              கஞ்சிக்கு வழியில்லா
              கால்கள் நடக்கிறதாம்

              இதயம் இருக்கென்று
              இன்றமர்ந்து பேசும்
              கோடிகளில் கொஞ்சத்தை
              கொட்டி கொடுங்கள்

              கேடில்லை தான்
              கேட்பாரும் இல்லைத்தான்
              நாட்டை தின்றுவிட்டு
              நம் வயிற்றில் அடித்தீரே

              கோடிகளில் கொஞ்சத்தை
              கொட்டி கொடுங்கள்
              பாவ சுமையில்
              பாதி கழுவட்டும்

              ஆளை கொன்று
              அரியணை பிடித்தீர்
              அம் மக்கள் விழித்தார்
              ஆட்சி துறப்பீர்

              கஞ்சா காடழிக்க
              கத்திகள் எழுகிறது
              நாடு சுத்தமிட
              நல்புரட்சி வெடிக்கிறது …!

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் 31-03-2022

              வன்னி மைந்தன் கவிதைகள்

                உடல் எடையைக் குறைக்கும்
                Posted in மருத்துவம்

                மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

                மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

                உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.

                மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ‘ஸ்லோ ஈட்டிங்’ என்பது நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதனால் இயல்பாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

                ‘லெப்டின் மற்றும் க்ரெலின்’ எனும் இரண்டு ஹார்மோன்களும் பசிக்குத் தொடர்புடையவை ஆகும். இதில் ‘லெப்டின்’ உடலுக்குத் தேவையான கலோரியின்

                அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு உதவும். ‘க்ரெலின்’ பசியைத் தூண்டும்; உடல் எடையை அதிகரிக்க உதவும்.

                மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டது’ என்று

                மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.

                மேலும், மெதுவாக உணவு சாப்பிடும்போது உணவில் உள்ள சுவையையும், வாசனையையும் நம்மால் நன்றாக உணர முடியும். அதேநேரம், சுவையின் இன்பத்தை

                ரசிக்கும் போது சாப்பிடும் நேரம் இரட்டிப்பாகும். இது சாப்பிடும் உணவின் அளவை தன்னிச்சையாக குறைக்கும்.

                மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

                உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.

                அடுத்த முறை உணவு உண்ணும்போது, சுவையின் திருப்தியை நாம் அடைந்தவுடன் பசியின்மை ஏற்படும்.

                உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது, உணவுப் பொருட்கள் வாயில் உள்ள உமிழ் நீருடன் கலக்கும். உமிழ்நீரில் உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் உள்ளன. ஆகையால், இது உணவு செரிமானத்தை வாயில் இருந்தே தொடங்குகிறது.

                மெதுவாக சாப்பிடும்போது உணவு வயிற்றை சென்றடைய 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இது வயிற்றின் வேலையை மிகவும் எளிதாக்குவதுடன், சாப்பிட்ட

                உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்யும். இதனால், நாம் அடுத்த வேளை
                உணவு சாப்பிடும்போது இயல்பாகவே உற்சாகம் ஊற்றெடுக்கும்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  பெண் உலாவும் இரவு வரும் ..!

                  பெண் உலாவும் இரவு வரும் ..!

                  ஆமி பொலிஸ் வீதியில
                  அன்றாடம் நிற்கையில
                  வாள் வெட்டு நடக்குதாம்
                  வம்புகள் வெடிக்குதாம்

                  தலை பா கட்டிகளும்
                  தலை தெறிக்க ஓடுதாம்
                  வெள்ளை வெட்டிகளோ
                  வெறியோடு சிரிக்குதாம்

                  குண்டி விழும் காற்சட்டை
                  குமரிகள் முன் விழ
                  பொக்கை வாய் பாட்டிகளும்
                  பொல்லெறிந்து சிரிக்குதாம்

                  தன் பதவி தான் காக்க
                  தமிழருக்குள் சில்லறைகள்
                  நேர்ந்து விட்டதுகள்
                  நெடுகிலும் ஆக்கினைகள்

                  குடல் பிடுங்கி வெளி எறிந்து
                  குரல் ஒடுங்கி சாகடிக்க
                  ஆள் இல்லா நிலையின்றோ
                  அதனாலோ ஆடுகிறார்

                  விடிகின்ற ஆதவனின்
                  விடியலின் ஒளியிலே
                  காவாலி கரை சேரும்
                  கால் தடம் மாறும்

                  இரவு வெளிச்சத்தில்
                  இளம் மாது உலாவும்
                  காலம் அது மலரும்
                  கரிகாலன் வருவான் …!

                  வன்னி மைந்தன் ( ஜெகன் )
                  ஆக்கம் 30-03-2022

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in உலக செய்திகள்

                    அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

                    அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

                    உக்ரேன் மீது நடத்த பட்டு வரும் தாக்குதலை அடுத்து ரசியா அணு குண்டுகளை அந்த நாட்டின் தலைநகர் மீது வீச கூடும் என்ற

                    எதிர் பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதனை தாம் செய்திட மாட்டோம் என ரசியா தெரிவித்துள்ளது

                    உக்கிரேன் மீது ரசியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் உக்கிரேன் நாடும் அதன் மக்களும் அதன் இராணுவமும் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளன

                    அழகிய நாடாகவும் ஆயுத உற்பத்தியில் முதன்மை பெற்ற நாடுகளில் ஒன்றாகவும் வல்லரசாக வலம் வந்த உக்கிரேன் இன்று ஆயுத உதவிகளை அமெரிக்கா

                    பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்கி ரசியா மீதான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                    இந்த போர் உக்கிரேன் நாட்டு கயானவை காலி செய்து வருகிறது ,உக்கிரேன் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளிடமும் அதி நவீன ஆயுதங்களை கொளவனவு எபுரிந்து அதனை ரசியா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது

                    இந்த தாக்குதல்களினால் ரசியா இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது

                    அவ்விதமான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் ரசியா மீது அணுகுண்டு தாக்குதல்களை நடத்த கூடும் என உலக அரங்களில் ரசியாவின் எதிரி நாடுகள் பரப்புரை மேற்கொண்டு வந்தன

                    அவ் விதமான பரப்புரையில் உச்ச கட்டமாக தாம் உக்கிரேன் மீது அணு குண்டு தாக்குதல்களை நடத்த மாட்டோம் என ரசியா நாட்டின் ஜனாதிபது பிளாடிமீர் புட்டீன் தெரிவித்துள்ளார்

                    இவரது இந்த அவசர அறிவுப்பு உக்கிரேனை தம்மிடம் சரண் அடைய வைக்கும் தந்திர பேச்சா என்ற கோணத்திலும் ரஷியா நாட்டின் ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் பேச்சு ஆய்வுக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                    அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

                    ரசிய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் அசைவுகள் ஒவ்வொன்றும் வடகொரியா அதிபர் கிங் யோங் உன் நடவடிக்கை ஒத்த ஒன்றாக உலக அரங்கத்தில் பார்க்க பட்டு வருகிறது

                    இவ்வாறான நிலையில் அணுகுண்டு தாக்குதல் நடத்த மாட்டோம் என ரசியா ஜனாதிபதி அறிவித்துள்ள செயல் சற்றது நின்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது

                    உக்கிர போருக்கு இடையிலும் தொடர்ந்து இடம் பெற்று வரும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுக்களில் நம்பிக்கை தரும் விடயங்கள்
                    இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

                      பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

                      குப்பையில மிதக்குதடா குளிர் பானம்
                      குளிரூட்டி இல்லாது இவை காணம்
                      குசினியில சமையலது பெண் பாவம்
                      குழாயில காஸ்இல்லா அவை சாபம்

                      விறகெரிந்த காலமது மறந்தாச்சு – இன்று
                      வீடெல்லாம் மீள இவை வந்தாச்சு
                      ஆடம்பர வீடெல்லாம் அவிழ்ந்தாச்சு
                      அவை சேர்த்த பொருள் எல்லாம் வீணாச்சு

                      கோட்டையிலே ஆண்டவரும் வீழ்ந்தாச்சு
                      கொடும்பாவி எரியும் நிலை வாந்தாச்சு
                      வீதியில மக்கள் எல்லாம் கூடியாச்சு
                      விதி மறந்தார் சதிக்குள்ளே வீழ்ந்தாச்சு

                      வாசல் படி கூட்டுமாறு வந்தாச்சு
                      வாய்க்கரிசி போட வந்தான் சொன்னாச்சு
                      தன் பலத்தில் வாழ்வேன் என்றார் என்னாச்சு
                      தமிழர் பலம் வேண்டும் நிலை என்றாச்சு

                      நாறடித்தான் ஆட்சி இவன் என்றாச்சு
                      நாட்டை விட்டு ஓடும் நிலை என்றாச்சு
                      நம் நாட்டை நாம் காக்க தீர்வு வேண்டும்
                      நாம் தமிழர் வந்தால் மட்டும் நாடு எழும்

                      நீர் மூலம் ஆக்கினாய் தமிழரைத் தான்
                      நிர்வாணமாய் ஆனாய் நீ கேவலம் தான்
                      சிங்களவர் தமிழர் எல்லாம் ஓர் இனம் தான்
                      சிறை வைத்தான் ஆட்ச்சியாளன் கொடியவன்தான்

                      ஏறி அன்று ஆட்டம் போட்டாய் ஏன் ராசா – இன்று
                      எமன் வந்தான் வாசலிலே ஏன் ராசா
                      நாடு விற்றாய் சீனாவிடம் ஏன் ராசா
                      நாட்டை விட்டு ஓட வைப்பான் பார் ராசா

                      பிரபாகரன் ஆண்ட காலம் பொற்காலம்
                      பிடரி பட சொல்லுதடா இக்காலம்
                      பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
                      பட்டியணியால் சாக வேண்டாம் நாங்க தாங்க ..!

                      வன்னி மைந்தன் ( ஜெகன் )
                      ஆக்கம் 29-03-2022

                        Posted in மருத்துவம்

                        இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்

                        இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்

                        குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

                        சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை

                        தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.

                        அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது.

                        அதற்கு பதிலாக சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற சிக்கனை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில்

                        சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

                        • மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க, தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம், விதைகளை
                        • போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
                        • இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
                        • 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது,
                        • மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.
                        • பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
                        • கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.
                        • ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .​

                        சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர்.

                        அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

                        அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின்

                        காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.

                        மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.

                          Posted in Uncategorized

                          புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்

                          புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்

                          உக்கிரேன் நாட்டு அதிபர் Yermak ருடன் ரசிய நாட்டின் அதிபர் புட்டீன் நேரடியாக பேச்சில் ஈடுபடவுள்ள்ளார்


                          இந்த பேச்சில் ரசியா தனது பேரம் பேச்சை நடத்தும் எனவும் ,அவ்வேளை வேறு வழியின்றி அவர்களின் காலடியில் விழும் நிலைக்கு


                          உக்கிரேன் செல்ல நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது

                          அதற்கான முற்றுகை தாக்குதலை ரசிய படைகள் வேகமாக தொடுத்த வண்ணம்

                          உள்ளன ,தனது கோரிக்கையை ஏற்க மறுத்தால் நாயடு தனது வசம் விழும் என்ற ர நிலையை ரஷியா திபர் அறிவிப்பார் என அடித்து கூறலாம்

                          இது ஒருவவகை மூடிய அறைக்குள் நடக்கும் மிரட்டல் என எடுத்து கொள்ளலாம்

                            Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                            பள்ளி மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை

                            பள்ளி மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை

                            போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மாணவனுடன் சென்ற ஆசிரியை, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

                            பள்ளி மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை
                            கைது செய்யப்பட்ட ஆசிரியை

                            திருச்சி துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் தேதி, திடீரென

                            மாயமாகினர். இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர்.

                            இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

                            இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை போலீசார் கைது செய்து, அவருடன் இருந்த மாணவனை மீட்டனர்.

                            விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவனுடன் சுற்றித்திரிந்ததும், பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து,

                            ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார்,
                            திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

                              Posted in Uncategorized

                              உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்

                              உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்

                              உக்கிரேன் Donbas கிழக்கு பகுதிகளை ரசிய இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது ,இந்த பகுதி ரசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்

                              கொண்டுவரப்பட்டு அந்த நகரம் பலத்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

                              அடுத்து உக்கிரேன் கீவ் நகரை தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ரசியா தயாராகி வருகிறது

                              விரைவில் மூன்று முனை தாக்குதல்கள் ஊடக அந்த நகரை மீட்கும் நடவடிக்கையில் ரசிய படைகள்
                              நெருங்க உள்ளன

                              இங்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதங்கள் குவிக்க பட்டுள்ளது ,யுத்தம்


                              ஒன்று இங்கு வெடித்தால் அது இரு பகுதிக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது

                                Posted in உலக செய்திகள்

                                செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்

                                செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்

                                செய் அல்லது செத்து மடி உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் நோக்கத்துடன் ரசியா படைகள் தீவிர முற்றுகை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன


                                இதுவரை இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய ரசியா இராணுவம் தற்போது மக்களை அங்கிருந்து அகற்றும் முகாமாக பொது இடங்களை இலக்கு வைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன

                                இந்த தாக்குதல்கள் அகோரத்தில் கீவ் நகரின் ஷொப்பிங் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

                                அழகிய கட்டிடங்கள் இடிந்து தொங்கும் காட்சிகள் உருக்குலைந்த மனித உடல் போல காட்சி தருகிறது

                                இவை தற்போது ரஷியா இராணுவத்தின் மூர்கத்தனமான தாக்குதலின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது

                                ரசியா இராணுவத்தின் செய் அல்லது மடி என்கின்ற இராணுவ தாக்குதல்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரம் பெற்று வருகிறது

                                கொடிய போர் இவ்விதம் தொடர்ந்து வந்தாலும் ரசியா தனது சமாதானத்தை முகத்தையும் காட்டிய வண்ணம் உள்ளது இந்த பேச்சு வார்த்தை மேசையில் ரசியா நடத்திய பேரம் பேச்சு தோல்வியில் முடிந்த

                                நிலையில் ரசியா இராணுவம் இந்த அகோர வெறி தாக்குதலை தொடுத்துள்ளது ,உலக நாட்டு ஆயுதங்கள் யாவும் இங்கு பொய்த்து போயுள்ளது

                                ரசியா இராணுவம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகரை தனது
                                கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் செய் அல்லது செத்து மடி தாக்குதலை தொடுத்துள்ளது

                                தமது தலை நகரம் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியுறுவதை தடுக்கும் முகமாக அமெரிக்கா பிரிட்டன் கனடாவிடம் உக்கிரேன் அவசர ஆயுத உதவியை கோரியுள்ளது

                                மேற்குலகம் வழங்கும் இந்த யுத்த உதவிகள் இரும்பு கரம் கொண்ட உலக வல்லாதிக்க ரசியா இராணுவத்திடம் இருந்து தப்பித்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

                                உக்கிரேன் அதிபரின் அடம் பிடிக்கும் கொள்கையால் பேரழிவில் சிக்கியுள்ள உக்கிரேன் நாட்டை காப்பாற்ற முடியா நிலையில் உக்கிரேன் செல்ல கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது

                                நாட்டை பறிகொடுத்து உலக நாடு ஒன்றிடம் தஞ்சம் புகுந்து வாழும் நிலையில் உக்கிரேன் செல்லும் அபாயம் எழுந்துள்ளது

                                எதிரியின் காலடியில் வீழ்ந்து தமது நாட்டை பாதுகாத்த வண்ணம் மக்கள் பேரழிவை தடுப்பதே போரியல் தந்திரம் என்கிறது போரியல் விதி

                                ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டாம் உலக போரில் கடைபிடிக்க பட்ட விடயங்கள் கைடைபிடிக்க வில்லை என்பதே களநிலவரமாகி உள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி

                                அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி

                                அழியும் உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை இந்த இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி 400 பாடசாலைகள் அழிக்க பட்டுள்ளன ,

                                மேலும் 150 க்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                                இலங்கை வடக்கு வன்னி பகுதியில் உள்ள செஞ்சோலை சிறார்கள் மீது உக்கிரேன் கிபிர் விமானங்கள்,மற்றும் மிகையொலி விமானங்கள்
                                குண்டுகளை வீசி அப்பாவி சிறுவர்களை கொன்று குவித்தது

                                இந்த படுகொலை வெறியாட்டத்தை நடத்தியது இந்த விமனாத்தை செலுத்தி சென்றது

                                உக்கிரேன் விமானிகள் தான் என்பது அன்று அப்பட்ட மனது ,இறுதி போரில் கொத்து குண்டுகள் உள்ளிட்டவை இதே உக்கிரேனால் வழங்க பட்டன

                                இப்போது கண்முன்னே அதே மக்கள் அதே இராணுவம் குருவிகள் சுடுவது போன்று சுட்டு வீழ்த்த படும் காட்சிகள் அவலமாக விரிகிறது பாவிகளின் கண்ணீர் கதறல் சாபம் உக்கிரேன் இராணுவம் அதன் மக்களை கதற வைத்து வருகிறது

                                இப்போது அதே வானில் இருந்து அந்த அபாபாவி சென்சோலை சிறார்கள் ஆவிகள்

                                மகிழ்ச்சியில் குதிக்கிறது,அதிகாரமு ம் ஆட்சியும் ஒரு நாள் அழிக்க படும் பொழுது ஆண்டவன் அம்மணமாக பொழுது அவன் செயல்கள் அவனுக்கே தணடனை வழங்கும் என்பது இது தான் போலும்

                                அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி


                                இதே போன்று சிங்கள ஆளும் மகிந்த குடும்பமும் அதே இராணுவ தளபதிகள்

                                குடும்பமும் கண்ணீர் விடும் காட்சிகள் விரைவில் அரங்கேறும் என்பது நிகழ் கால அரசியல் விளையாட்டு காண்பிக்கிறது

                                அழகிய நாடாக உலகில் வலம் வந்த உக்கிரேன் தற்போது அம்மணமாக உள்ளது

                                ,இனவெறியுடன் ஆசிய நாடுகளையும் அதன் செலவத்தையும் கொள்ளையடித்து தமது நாட்டை ஆவிகளின் உடல்கள் மேலே கட்டி எழுப்பி வந்த உக்கிரேன் இன்று

                                கண்ணீரின் தேசமாக கரைந்து ஓடுகிறது ஆறாக ஓடும் இரத்தம் ஆற்றில் தவிக்கிறது

                                வெள்ளை சீருடையில் பாடசாலையில் காலை வேலை கூவிய சென்சோலை குழந்தைகளை கொன்று ஏப்பம் இட்டது இதே உக்கிரேன்

                                குத்தைகைக்கு மராட்டிய பட்ட கூலியாகி வந்து அப்பாவி குஞ்சுகளை கொன்று குவித்து

                                அவர்களை புலிகள் என கூவிய சிங்கள தேசத்தின் அனுதாபிகள் இன்று அழிகிறது – வன்னி மைந்தன் –