Tag: மாரடைப்பது ஏற்பட்ட
மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
புதுடெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் கேசவன், தயா என்ற தம்பதி பயணம் செய்தனர்.
ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே சென்ற போது, கணவர் கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
தகவலின் பேரில் வந்த ரயில்வே பொலிஸார் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அதையடுத்து 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய பொலிஸார் அறிவுறுத்தினர்.
அதன்படி, கணவர் கேசவன் வாயோடு வாய் வைத்து தயா சிகிச்சை அளித்தார். இதையடுத்து கேசவன் சீராக மூச்சு விட்டார்.
அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய பொலிஸாருக்கு மனைவி தயா நன்றி தெரிவித்தார்.
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்











