Posted in Uncategorized

களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

இலங்கையில் சந்திரிக்கா வந்திருக்கா சமாதானம் தந்திருக்க என்ற வாசகங்கள் 1994

ஆண்டுகளில் எங்கும் ஒலித்தவை ,அதே அம்மணி நவாலி செண்பட்டீஸ் ஆலயம் முதல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்

எனினும் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டவர் ,இன்று அதே அம்மணி ஜனாதிபதி

தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி அரசை அமைக்கும் நகர்வில் ஈடுபடுகிறார்

இவருக்கு மேற்குல நாடுக்ளின் பலத்த ஆதரவு உள்ளது ,அம்மணி தனது விட்ட அதிகாரத்தை பிடித்து நாட்டில் நிரந்த தெரிவை மேற்கொள்ள புது முயற்சிகளை

மேக்கொள்ள முனைகிறார்
இது சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இப்போ ஏன் அழுகிறாய் ..?

    இப்போ ஏன் அழுகிறாய் ..?

    அப்பன் பேர் தெரியா
    அநாதை என்றவனே
    ஓப்பாரி வைக்குதடா- ஊர்
    ஓடி ஓளிவதென்ன

    தப்பேதும் இல்லாமல்
    தாராளம் ஒதுக்கியவா
    பிச்சை எடுக்கிறாயே– நாட்டை
    பிச்சை ஆக்கினாயே

    ஆள்தல் புரியாது
    ஆள வந்தவேன
    கேடு பார்த்தாயா
    கேவலம் கெட்டாயே

    ஓடி ஓளிந்திடத்தான்
    ஓடி வந்தாயோ
    நாட்டை விற்றிடத்தான்
    நாடு வந்தாயோ

    சந்தி சிரிக்குதடா
    சகலகலா வல்லமையே
    பொந்து இருக்கென்று
    போய் நுழைய கூடாது

    வம்பு இதுவென்றே
    வாழ்தல் கூடாது
    பந்தி இருக்கென்று
    பல் இழிக்க கூடாது

    அந்தி மலரும்
    அது மறத்தல் கூடாது
    தொண்டு செய்தபின்
    சொல் திரிதல் கூடாது

    பல் துளக்கா விடின்
    பகலும் விடியாது
    சிந்தை துளக்காவிடின்
    சிகரம் எட்டாது

    பார்த்தாயா நீ இன்று
    படை திரளும் கோலத்தை
    அதர்மத்தின் கோலனே
    அழிந்திடடா நீ இன்று …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 12-04-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in Uncategorized

      உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

      உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

      உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் அருகில் உள்ள நகரம் ஒன்றில் பெரும் குழிதோண்டி

      புதைக்க பட்ட நிலையில் 1200 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

      ரசியா உக்கிரேனில் பெரும் மனித பேரழிவை நடத்தியுள்ளது எனவும் இவர்கள் புரிந்த

      போர்குற்றத்திற்கு தண்டனை
      வழங்க வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!

        ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!

        அடக்கி ஒடுக்கி
        அன்றாடம் கசக்கி
        மகிழ்ந்து திரிந்தவர்
        மாளிகை அழுகிறது

        கக்கி துப்பி
        கழிந்து திரிந்தவர் -தலை
        வெட்கி குனியும்
        வேளை சிரிக்கிறது

        ஆடி பாடி
        அன்று மகிழ்ந்த
        நாளை கொன்று
        நரகம் எறிந்தவர்

        கால்கள் நடுங்கும்
        காலம் மகிழ்கிறது
        வெடித்து ஒழிக்க
        வேங்கை வருகிறது

        நடித்து திரிந்தாரும்
        நாடகம் போட்டாரும்
        அடித்து வீசும்
        அக்காலம் வந்தது

        கடித்து குதறும்
        கந்தக துகள்கள்
        வெடித்து பறக்கும்
        வேளை பிறந்தது

        அதர்மம் ஒன்று
        அழியும் நாளில்
        நீதி ஒன்று
        நிமிர்ந்து சிரிக்கிறது

        முள்ளி வாய்க்காலின்
        முன் எழுந்த அவலத்தின்
        கண்ணீர் துளியில்
        கரைகிறது அரசு …!

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் 11-04-2022

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in Uncategorized

          உக்கிரேனில்-வதை செய்யப் பட்டு கொலை செய்ய பட்ட 132 சடலங்கள் கண்டு பிடிப்பு

          உக்கிரேனில்-வதை செய்யப் பட்டு கொலை செய்ய பட்ட 132 சடலங்கள் கண்டு பிடிப்பு

          ரசிய இராணுவம் உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சி

          உறும் என எதிர் பாராக்க பட்ட நிலையில் இதுவரை அதனை ரசியவினால் கைப்பற்ற முடியவில்லை

          ரசியா இன படு கொலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச நீதிமன்றில்

          விசாரணைகள் முன்னெடுக்க படவுள்ளன ,அதற்கு ஏற்ப போல தற்போது Makariv

          பகுதியில் சித்தரவதை செய்ய பட்டு படு கொலை புரிய பட்ட சுமார் 132 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

          இந்த சடலங்கள் யாவும் அடிகாயங்கள் ,மற்றும் வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது

          ரசியா புரிந்த மனித குலத்திற்கு எதிரான இந்த கொலைகளுக்கு தண்டிக்க

          படவேண்டும் என அமெரிக்காவின் நேச நாடுகள் கூட்டாக கோரி வருகின்றன

          ஆமா அது சரி உக்கிரேன் மீது இந்த நாடுகளுக்கு அப்டி என்ன அக்கறை ,அதை

          கொஞ்சம் கிண்டி மேய்ந்து பாருங்கள் நாற்றங்கள் வெளிவரும்

          இவர்களின் பலியாடாக உக்கிரேன் அதிபர் சிக்கியுளளார் என்பதே காலம் பதியவுள்ள வரலாறாக உள்ளது .

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!

            இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!

            வீழ்ந்தவர்கள் நாமென்று
            விலாசம் தந்தவர்கள்
            வீழ்கின்ற காலமிது
            வீசுது காற்று நன்று

            உலகோடி தினம் அன்று
            ஊதி திரிந்தவர்கள்
            ஊர் திரண்டு விரட்டும் காலம்
            ஊடகத்தில் தினம் இன்று

            நடித்து வெடித்து
            நகைச்சுவை குழைத்து
            கழித்து திரிந்தார்
            காலடியில் கல்லடி

            படித்து முடித்தார்
            பக்குவம் தொலைத்தார்
            மன்றில் ஏறி
            மறைகழண்று வீழ்ந்தார்

            அடித்து பிடித்து
            ஆட்சி அமைத்தார்
            அந்தோ பார் – இன்று
            ஆட்சி கவிழ்கிறது

            வென்றவர் தாமென்று
            வெறியோடு அலைந்தால்
            காற்சட்டை கிழியும்
            கல்லறை அழைக்கும்

            விதைக்கும் முன் விதையின்
            விளைச்சல் தெரிந்தால்
            வாழ்வு செழிக்கும்
            வழியெங்கும் மணம் வீசும்

            இன்று பார்த்தாயா
            இராவணன் வருகிறான்
            துட்டகை முணுக்களே
            தூரே ஓடிவிடும் …!

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் 10-04-2022

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in மருத்துவம்

              குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு

              குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு

              சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும்.

              குளிக்காவிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
              குளியல்


              தினமும் குளிப்பவர்களுக்கு, குளியல் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே தெரியும். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் குளியலை உடலுக்கு தேவையான முக்கியமான

              விஷயமாக குறிப்பிடுகிறது. எந்த நீரில், எப்படி, எந்த நேரத்தில் குளிக்கவேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குகிறது.

              கோடை காலம் உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் காலமாகும். அதனால் உடல் எதிர்கொள்ளும் அசவுகரியங்களை ஓரளவு கட்டுப்படுத்த குளியல் உதவுகிறது. அதோடு

              உடலின் புறப்பகுதியில் உள்ள அழுக்கை போக்கவும் துணைபுரிகிறது.

              எப்போது குளிக்க வேண்டும்?

              காலையில் குளிப்பது மிக நல்லது. காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வியர்வை வெளிப்பட்ட உடலோடு குளிக்கவேண்டும். காலை உணவுக்கு

              முன்பாக குளித்திடுவது சரியானது. அதிக பசியோடு இருக்கும்போதும், சாப்பிட்ட உடனேயும் குளிப்பது உடலுக்கு ஏற்றதல்ல. காலையில் தலைக்கு குளிப்பதும், இரவில் தலைக்கு கீழ் கழுவுவதும் உஷ்ணத்தை வெளியேற்றும் வழிமுறையாகும்.

              தினமும் உடலைக் கழுவும் நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்த சாறு சேருங்கள். கோடை காலத்தில் அது உடலுக்கு உற்சாகத்தை தரும். சரும நோய்களும்

              அகலும். வெட்டி வேர், சந்தனம் மற்றும் துளசி, வேப்பிலை போன்றவைகளை கலந்த நீரிலும் குளிக்கலாம்.

              எப்படி குளிக்கவேண்டும்?

              குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு

              தலைக்கு குளிக்கும்போது முதலில் தலையில்தான் தண்ணீரை ஊற்றவேண்டும். சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம்

              செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும். குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, பிடித்தமான எண்ணெய்யை உடலில்

              தேய்த்துவிட்டு குளிக்கவேண்டும். அதனால், கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.

              சோப் பயன்படுத்தலாமா?

              சோப் பயன்பாடு சருமத்தை வறட்சி்க்குள்ளாக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதனால் தினமும் ஒரு தடவை மட்டும் சோப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்றாக

              பயறு தூள், கடலை மாவு போன்றவைகளை உபயோகிக்கலாம். குளிக்கும்போது பயன்படுத்த ஆயுர்வேத சூரணம் உள்ளது. அதனை பயன்படுத்தலாம். அது எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றது.

              தலையில் ஷாம்புவுக்கு பதில் செம்பருத்தி தாழி பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கோடை உஷ்ணத்தால் முடியில் ஏற்படும் பல்வேறு

              பாதிப்புகளை அது போக்கும். நெல்லிக்காயை உலரவைத்து தயாரித்த தூள், பயறு தூள் போன்றவைகளாலும் கூந்தலை கழுவலாம். உடல் அதிகமாக சூடானாலும் முடி

              உதிர்தலும், பொடுகு பிரச்சினையும் தோன்றும். கூந்தலை மேற்கண்ட முறையில் பராமரித்தால் அந்த தொல்லைகள் அகலும்.

              வெயிலில் செல்லும்போது முகம் கறுத்துப்போகாமல் இருக்க மல்லியை பயன்படுத்தலாம். ஒரு பிடி மல்லியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து

              அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். கோடைகாலத்தில்
              பெண்கள் கூந்தல் மற்றும் சரும அழகில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

                Posted in Uncategorized

                புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ-இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை

                சிறார்கள்,கர்ப்பிணிகள்,இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை

                புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ

                இலங்கையில் இறுதி போரில் சிங்கள இராணுவத்தால் கைது செய்ய பட்ட தமிழீழ

                விடுதலை புலிகளின் உறுப்பினர்களில் சிலர் ஆளும் சவேந்திர சில்வாவின் விசேட

                படையினரால் கைது செய்ய பட்டு உயிரோடு வெட்டி கொலை செய்ய படும் காட்சிகள்

                உலகம் எல்லாம் வாழும் மனித குலத்தை இந்த காட்சிகள் நிலையை குலைய வைத்துள்ளன


                சிங்கள அரச பயங்கரவாதம் புரிந்த இந்த படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் என்று தீர்வு கிட்டும்

                மகிந்தா கோட்டாவை இராணுவ தளபதிகளை கூண்டில் ஏற்றிட மக்களே இந்த இணைப்பை அதிகம் பகிருங்கள்,போராளிகளுக்கு நீங்கள் செலுத்தும் வீர வணக்கம்,இதுவே

                உங்கள் கருத்துக்களை கீழே பதிக

                  Posted in Uncategorized

                  புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்

                  புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்

                  இலங்கையில் முள்ளிவாய்க்கள் பகுதியில் கொத்து குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா,கோட்டா அரசு ,மக்கள் கும்பிட கும்பிட கொன்று குவிக்க பட்டனர்

                  சடலங்கள் மீது இராணுவ டாங்கிகள் ஏறி ஆடின,

                  சிறை பிடிக்க பட்ட பெண்கள் கற்பழித்து தலைகள் ,உறுப்புகள் வெட்டி கொலை செய்ய பட்டனர்

                  பல நூறு பேர் உயிரோடு கிடங்குகளில் புதைக்க பட்டனர்

                  இந்த ஆத்மாக்களின் சாபம் கண்ணீர் கதறல் 14 ஆண்டுகள் கழித்து அதே மாத்தில் கோட்டா ,மகிந்த ஆட்சிகளை அலற வைக்கிறது ,மக்கள் இவ்வாறு துடித்தார்களோ

                  அதே பதைப்பில் கோட்டா அரசு சிக்கி திணறுகிறது ,எந்த மக்கள் வெற்றியின்

                  புதல்வர்கள் என கொண்டாடினார்களோ அதே மக்கள் போடா போ என திட்டிய வண்ணம் போராட்டத்தில் குதித்துள்ளனர்

                  இவர்களுக்கு உதவி புரிந்து தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக விளங்கிய

                  பாகிஸ்தான் ,உக்கிரேன்,ரசியா நாடுகளும் அதே மாதத்தில் ஆட்சிகள் பறிபோகும் நிலையில் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன

                  இனப் படு கொலை புரிந்து சர்வதிகாரியாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த அதே

                  அரசுகள் இன்று சுகம் அனுபவித்து வாழ்ந்து வந்த தமது அதிகாரங்கள் பறிக்க பட்டு சிறை செல்லும் நிலையில்

                  மனு நீதி எப்பொழுதும் ஆட்சி புரியும் ,பழியும்,சாபமும் அவர்களை சும்மா விடாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு எனலாம்

                  முள்ளி வாய்க்கால் மண் இப்பொழுது எழுந்து சிவக்கிறது ,தமிழர் தேசம் சிரிக்கிறது .
                  அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான் போலும்

                  • வன்னி மைந்தன்
                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்

                  பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்

                  இலங்கை தலவாக்கலை பகுதியில் தனிமையில் வசித்து வந்த 84 வயது மூதாட்டி

                  கழுத்தை நெரித்து கொன்று அவரது காதணியை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்


                  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                  தனிமையில் உள்ளதை அறிந்த திருடர்கள் அவரது வீட்டுக்கு சென்று இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

                  குறித்த கொலையினை புரிந்த திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                    Posted in Uncategorized

                    புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது

                    புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது

                    இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு

                    ஏவுகணைகள்,ரொக்கட்,இயந்திர துப்பாக்கி , automatic weapons, rockets, machine guns and surface-to-air missiles ஆயுதங்கள் என்பனவற்றை

                    விற்பனை புரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆயுத முகவர் ஒருவர் உள்ளிட்ட

                    மூவரை அமெரிக்கா உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்

                    இவர்கள் மியன்மாரில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                    அமெரிக்கா குடியுரிமை பெற்ற இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு

                    விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

                    Posted in மருத்துவம்

                    பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

                    பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?
                    பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

                    பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை என்றாலும் அவை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

                    நிறைய பேர் உணவு பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.

                    சூடான உணவு பொருட்களையும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப்

                    பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

                    1. ஹார்மோன் வளர்ச்சியை சீர்குலைக்கும்:

                    ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.

                    இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடியவை. மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை

                    சீர்குலைக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு ஹார்மோன், தைராய்டு ஹார்மோனாகும். இது

                    படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

                    1. சிறுநீரக கற்கள்:

                    பிளாஸ்டிக் கொள்கலனில் சூடான உணவை சேமித்துவைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை சூழ்ந்திருக்கும் வெப்பநிலை

                    உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும்.

                    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே சூடான உணவு

                    வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

                    1. மார்பக புற்றுநோய்:

                    பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

                    மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி,

                    கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி

                    புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணமாகும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது

                    அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் டையாக்சின் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது.

                    1. கல்லீரல் புற்றுநோய்:

                    நோய் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு ரசாயன பொருள், பித்தலேட்ஸ். இது சாக்லெட்டுகள், இனிப்புகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் வெளிப்புற கவர்கள் (ரேப்பர்கள்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இது உணவு பொருளுடன் வினை

                    புரிந்து கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுத்துவிடும். விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும். ஆண்களின்

                    ஹார்மோன் அளவும் பாதிப்படையக்கூடும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூடும்.

                    1. நோய் அபாயத்தை அதிகரிக்கும்:

                    ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து படி, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை

                    உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில்

                    பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் பெண்களுக்கு

                    பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
                    மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

                      Posted in உளவு செய்திகள்

                      புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                      புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                      இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது

                      அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது

                      புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்


                      இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                      சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்

                      இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது

                      அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது

                      அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க

                      குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்

                      புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்


                      அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,

                      அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,

                      இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்

                      இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்

                      புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது

                      போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது

                      காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .


                      இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !

                      எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .

                      • வன்னி மைந்தன் –
                      Posted in Uncategorized

                      அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

                      அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

                      மகிந்த ஆட்சியில் அமெரிக்காவின் தூதுவராக செயல் பட்ட Jaliya Wickramasuriya

                      அவர் தம் பதவி வகித்த இலங்கை தூதரகத்தை விலைக்கு வாங்கியுள்ளார்

                      இதற்கு இவர் தனது கணக்கில் இருந்து நேரடியாக US$ 332,027 பணத்தை

                      செலுத்தியுள்ளார் ,இது தொடர்பாக இடம் பெற்று வந்த வழக்கு விசாரணையில்

                      இவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில்
                      இவருக்கு இருபது வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

                      அறுபத்தி ஒரு வயதான இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்க

                      பட்டுள்ளதுடன், மேலும் புரிந்த குற்றத்திற்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது

                      பணமோசடி குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

                      இவரால் கொள்வனவு செய்ய பட்ட இந்த தூதரகத்திற்கு மகிந்தாவின் பணத்தில்

                      இருந்துவாங்க பட்டதான தகவல்கள் காசிக்கின்றமை குறிப்பிட தக்கது

                      25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

                        Posted in சீமான் பேச்சு

                        பாண்டே நீ எல்லாம் பேசலாமா வெளுத்து வாங்கிய சீமான்

                        பாண்டே நீ எல்லாம் பேசலாமா

                        வெளுத்து வாங்கிய சீமான் யார் தமிழர் கேள்விய எதுக்கு கேக்கற

                        பாண்டேவை வைச்சு செய்த சீமான்

                        கேட்க நல்லாத்தான் இருக்கு

                        https://www.youtube.com/watch?v=KYpPxL1dTok
                        Posted in சீமான் பேச்சு

                        இனி உங்களினால் முடியாது – சீமான் அதிரடி பேச்சு

                        இனி உங்களினால் முடியாது – சீமான் அதிரடி பேச்சு

                        சீமான் தியவரை பேசாத வித்தியா வித்துமுறையுடன் பேசிய பேச்சு வாங்க பாருங்கள்

                        இதில் அழுத்தி காணொளி பார்க்க

                        Posted in உளவு செய்திகள்

                        வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                        வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                        இலங்கையில் ஆளும் இனவாத அரசன் மகிந்தா ராஜபக்ச குடும்ப ஆட்சி அழிவின் விளிம்பில் சிக்கி தவிக்கிறது


                        சுருங்க சொல்லபோனால் முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது

                        அந்த கட்சிகள் இலங்கையை மீளவும் பங்கு போட்டு ஆள முடியாத நிலை

                        தோற்றம் பெற்றுள்ளது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை பிரித்து இனவாதம்

                        ஏறி ஊளை இட்டவர்கள் இன்று ஊழியில் ஆடும் நிலையில் சிக்கியுள்ளனர்

                        சிங்கள மக்களே தமக்கு போதும் எனவும் ,முசுலீம் ,தமிழர்களை ,ஓரங்கட்டி

                        அதர்மத்தில் ஆடியது ,தொலை தூர அரசியல் பார்வை இல்லாது தம்பட்டம் அடித்தது

                        அதுவே இன்று வீழ்ந்து அழியும் நிலைக்கு வித்திட்டுள்ளது ,தற்போது புதிய

                        அரசு ஒன்று உதயமாக உள்ளது ,இந்த ஆட்சியின் அமர்விலும் ,தமிழர் தரப்பு பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் ,

                        இங்கே தமிழர் வாக்குகள் பெரும் இடம் பிடிக்கும் ,இம்முறை தமிழர்கள் மகிந்தாவால் பிரிக்க பட்ட வடக்கு கிழக்கை இணைத்து ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண முனையலாம்,

                        அதற்கு அணைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டிய

                        தேவை உள்ளது,தமிழ் காட்சிகள் தமக்குள்ள உள்ள உள் கட்சி மோதல்களை தவிர்த்து ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும்

                        அவ்வாறு தவறின் இழந்த உரிமைகள் மீள எம்மால் மீள் எப்பொழுதும் பெற்று

                        கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன் ,சிங்கள மக்கள் கொதிப்பை போன்று தமிழர் எம்பிக்கள் வீடுகள் முற்றுகை இட படும் நிலையும் ஏற்படலாம்

                        வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                        எனேவ இந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்து, தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கை இணைக்க முயலவேண்டும்

                        இணைந்து ஒன்றுபட்ட தமது ஆதரவையும் ,சிங்கள அரசுடன் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்

                        மகிந்த குடும்பத்திற்கு எதிரான எதிரி அலை தனி சிங்கள மக்கள் , வாக்கு வங்கியாக சிலவேளை மாற்ற பெறலாம் ,

                        ஆனலும் வருகின்ற ஆட்சியாலும் உடனடியாக விரிவான முறையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது சாத்தியமல்ல

                        மீளவும் மகிந்த குடும்பத்தாரை போல அவர்கள் ஆட்சியும் மிக மோசமாக கவிழ்க்க படலாம் ,ஆகையால் ஆள வரும் ஆட்சியின்

                        துறை சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிய துறைகளை ஆட்சி செலுத்தும் பொழுதே நாடு மீள நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்

                        வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திடும் அச்சம் இல்லாத நாடாக

                        இலங்கை மாற்றம் பெறும் பொழுதே வீழ்ந்த பொருளாதாரம் மீள எழுந்திடும் நிலை ஏற்படும்

                        வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

                        இதில் வெளிநாட்டு தமிழர்கள் பங்களிப்பு காத்திரமாக அமையும் ,எனவே

                        கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை உடனே சரி செய்து ,அனைத்து தமிழ்

                        கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய கால தேவை எழுந்துள்ளது

                        அவசரமும் ,அவசியமான இந்த செயல் நோக்கி தமிழர் கட்சிகள் செல்லட்டும்,வரலாற்றை புதியதாக எழுதும் காலத்தை உருவாக்குங்கள்

                        தமிழினம் அதை எதிர் பார்க்கிறது ..விட்டு கொடுப்பதால் எவரும் கெட்டு போவதில்லை !

                        எதிரி வீழ்ந்து கிடைக்கும் பொழுது அதில் ஏறி நாம் சவாரி செய்து எமது எதிர்

                        காலத்தை எதிரிகளிடம் இருந்தே எடுத்து செல்ல வேண்டும்

                        மனம் மாற்றம் இங்கே மன்றில் ஏற்படும் ,ஒன்று பட்டால் தமிழருக்கு வாழ்வு உண்டு

                        ,சிந்திக்குமா நம்ம கட்டெறும்பு தமிழர் கட்சிகள் ..?

                        • வன்னி -மைந்தன்
                        Posted in உளவு செய்திகள்

                        இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்மம்

                        இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்ம – வீடியோ

                        இலங்கை அழிவது எப்படி என அதே சிங்களவர்களால் எதிரியாக பார்க்க பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆரூடம் கூறிய விடயங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளது

                        ஈழ தமிழர் தரப்பை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் எவ்விதம் சிக்க வைத்து,சிங்கள பவுத்த பேரினவாத எதிரிகள் பந்தாடினரோ ,அந்த எழுச்சிமிகு தேசிய போராட்டத்தை நசுக்கினர் என்பதும் ,

                        அதற்காக அவர்கள் கையாண்ட யுக்திகள் ,திட்டங்கள்,தந்திரம் என்ன என்பது .தொடர்பான விடயங்கள் இந்த காணொளியில் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

                        இலங்கை அலைவது எவ்வாறு என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்த விடயங்கள் இப்போது சிங்கள ஆட்சிகளை தலைகீழாக கவிழ்க்கும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                        மகிந்த ராஜபக்சே குடும்பம் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களை கொண்டாடிய அதே சிங்கள மக்கள் ஆட்சிகளை கவிழ்க்க முன் வந்துள்ளதும்,புலிகள் கோடிட்ட அந்த கால கணக்கில் பொதிந்துள்ளது

                        எதிர் கால கால கடிகாரத்தை காட்சி பிழையின்றி எழுதிய புலிகளின் திறன் சார் முலைகளின் செயல் நோக்கு தெளிவாகத்தான் வீழ்ந்துள்ளது என்பது இன்றைய நிகழ்கால இலங்கை தேசத்தின் அழுகுரல் பொருளாதார நெருக்கடி கட்டியம் இடுக்கியது

                        உலக தமிழர்களே இலங்கை எவ்வாறு வீழ்ச்சியுறும் என அவர்கள் கோடிட்ட சான்றுகளை சற்றே கேட்டு கடத்தி செல்லுங்கள் ,வரலாறு ஒன்றை எழுதும்,அதுவே ஒன்றை அழிக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்


                        இந்த பச்சை புலிகள் கூறும் விடயங்கள் நிதர்சனமாக பொருந்துகிறது

                        வரலாற்று சான்றுகளில் இருந்து கற்று கொண்ட பாடஙக்ளின் அடிப்படையில் புலிகள் நகர்த்திய விடுதலை தேசத்தின் கனவு இன்று காணாமல் போனாலும் தமிழீழ விடுதலை புலிகள் கூறிய விடயங்கள் தெளிவாகத்தான் உள்ளது

                        வரலாற்று படிமங்களில் இருந்து வாழ்வை கற்று கொண்டவன் அந்த வரலாற்று வழியே தடம் புரண்டு ஓடினால் அதில் வெற்றி பெறுவான் என்பதற்கு இந்த விடயம் முன்னுதாரணமாக உள்ளது

                        காலம் கடந்து போனாலும் அந்த கணிப்புக்கள் பொய்த்து வில்லை என்பதை புலிகளின் அரசியல் வரலாற்று துறை வெளிக்கொண்டு வந்த விடயங்கள் தெளி நிலையின் உச்சத்தை காட்டி செல்கிறது

                        • வன்னி மைந்தன் –

                        இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                        https://www.youtube.com/watch?v=-81AqUo8Xbw&t=155s
                        Posted in உளவு செய்திகள்

                        இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                        இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                        இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
                        ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது

                        என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன

                        அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது

                        அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது

                        புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                        மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே

                        இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்

                        இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                        இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்

                        கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்

                        இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்

                        இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது

                        Posted in Uncategorized

                        புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு

                        புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு

                        கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி

                        தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு

                        இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

                        தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த

                        மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய

                        காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

                        1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

                        அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

                        1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

                        பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

                        தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச் சமருக்குத்தலைமை தாங்கினார்.

                        தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

                        1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

                        1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

                        1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

                        சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

                        யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது

                        முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

                        தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

                        கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

                        ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும்

                        நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

                        இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண்

                        அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

                        இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக

                        நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு

                        வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத் தவறிவிட்டார்.

                        1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத

                        அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

                        1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

                        ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத்

                        தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம்

                        பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

                        குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம்

                        கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம்

                        படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

                        அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள் (2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம்

                        திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக

                        திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

                        25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை

                        நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே

                        வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது

                        எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பது .