மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
புதுடெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் கேசவன், தயா என்ற தம்பதி பயணம் செய்தனர்.
ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே சென்ற போது, கணவர் கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
தகவலின் பேரில் வந்த ரயில்வே பொலிஸார் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அதையடுத்து 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய பொலிஸார் அறிவுறுத்தினர்.
அதன்படி, கணவர் கேசவன் வாயோடு வாய் வைத்து தயா சிகிச்சை அளித்தார். இதையடுத்து கேசவன் சீராக மூச்சு விட்டார்.
அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய பொலிஸாருக்கு மனைவி தயா நன்றி தெரிவித்தார்.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி









