உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு

உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு

உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு ,ரஷ்யா படைகள் தெரிவிப்போம்

கடந்த சில தினங்களாக சுக்கிரேன் மற்றும் ரகசிய பணிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது.

ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்தல்

இந்த யுத்தத்தில் உக்கிரேடைய மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அதிகளவான சேதங்கள் உயிர்பலிகள் மனித காயங்கள் என ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நீண்ட துர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதிலே கணிசமான பாதிப்புகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்கிரேனுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் ,இந்த திடீர் யுத்தம் இடம்பெற்றுள்ளது மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .

என்று முடியும் உக்கிரேன் ரஷ்யா யுத்தம் என்பதே, உலக மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் போர் முடிவதாக தெரியவில்லை தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா
Posted in இலங்கை செய்திகள்

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது.

ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது.

தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

மேலும் அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும்.

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

இலங்கை நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்பு மேற்கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது

போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும்,

மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,

01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பின்போது கைதானோர் எந்தெந்த மாவட்டத்தின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனாலும் குறைவானவர்களையே கைது செய்திருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது,. ஏனெனில் நாடு முழுவதும் கஞ்சா பாவனையில் இருக்கும்போது,

கைதானவர்களின் எண்ணிக்கையும் கைதான போதைப்பொருட்களின் அளவுகளும் குறைவாகவே காணப்படுகின்றது.

மீண்டும், தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்களின் மூலமும் திடீர் சோதனைகளின் மூலமும் போதையை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம் அனுர அரசு இந்த போதையை இல்லாதொழிக்க என்ன என்ன எல்லாம் செய்யப்போகின்றார்கள் என

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
Posted in பாடல்கள்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .

மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .

இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.

அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .

சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.

கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .

குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .

தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.

புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..

இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்


காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்

நன்றி வன்னிமைந்தன்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான் அலற விட்டார் வன்னி மைந்தன் டிக் டாக்கில் அலற விட்டுள்ளார் .

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் வன்னி மைந்தன் மீது தொடர்பான இழிவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்.

சூப்பர் தாக்குதலையும் அவதூர் பரப்புரைகளையும் தொடர்ந்து .மேற்கொள்ளுபவர் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் விடுதலை அதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு சிங்கள தேசியவாதத்தை காத்து வருகிறார்.

இந்த விடயங்களை உன்னிப்பாக .அவதானித்த வலிமைதான் தற்பொழுது தெற்கு வெடித்து குழம்பி கதற விட்டிருக்கின்றார்.

எழுப்பப்படுகின்ற கேள்விகள் எதற்கும் அர்ச்சனா ராமனாதனிடம் பதில் இல்லை என்பது வன்னி மைந்தன் இந்த காணொளியில் வழங்கிய தனது செய்திகளுடாக தெரிவித்துள்ளளார் .

அவை வெட்ட வெளிச்சமாக அப்பட்டமாக நிரூபிக்கிறது .அதை ஒரு முறை நீங்களும் கேட்டுப்பாருங்கள் காணொளியில் அமர்த்தி காலொடி பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்

ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல் ,ரஷ்யா உக்கிரமீது கடும் தாக்குதலை கடந்த இரவு நடத்தியுள்ளது.

திடீரென யூக்ரேன் உள் கட்டமைப்புகளை இலக்கவைத்து ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில், 15 மக்கள் காயம் அடைந்த பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான ஏவுகணை தாக்குதல்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா படைகள் இது போன்ற தற்கொலை விமானங்களையும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தினர்.

இதே பல வீடுகள் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து எரிந்து காணப்படுகிறது.

அங்கு தரித்திருந்த வாகனங்கள் என்பனவும் தீயில் பற்றி எரிந்து சேதமாகி உள்ள காட்சிகள் காணப்படுகின்றன.

ரஷ்யாவில் எல்லையோரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் .மக்கள் உயிர் அச்சுதலின் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து நகர்ந்து வருகின்றனர் .

யுக்கிரன் ரஷ்யா போர்

இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில். தொடர்ந்தும் முக்கிய பல பகுதிகள் மின்சாரம் இன்றி தவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி
Posted in உலக செய்திகள்

ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி

ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி

ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி யான சம்பவம் ஆயிட்டியில் இடம்பெற்றுள்ளது.

மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆயுதக் குழுவினர் .திடீரென நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக .அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

வீடுகளுக்கு தீ வைத்து எரிப்பு

வீடுகளுக்கு தீ வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததுடன் ,தேவாலயம் சென்று அங்குள்ளவர்களை சுட்டு படுகொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற செய்திகளின் அடிப்படையில் ,ஐம்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பல காயமடைந்த நிலையில் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலி

இந்த ஆண்டு இதே ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக கடந்த ஆண்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது .

மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த வன்முறை தாக்குதினால், மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி பயத்தில் உறைந்துள்ளனர் .

இந்த ஆயுத குழுக்களை எப்படி தடுப்பது ,இவர்கள் ஏன் இந்த வெறியாட்டங்களை செய்து வருகிறார்கள் ,என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

இறந்தவர்களில் சிறுவர்கள் முதியவர்கள் ,கர்ப்பிணிகள் ,பெண்கள், உள்ளிட்ட அடங்கும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது இரண்டு பட்டதாரி பண்புள்ளைகள் இதுவரை திருமணம் முடிக்காத நிலையில் எண்ணி மனமுடைந்த 53 வயது உடைய தந்தை அவர்கள் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை சம்பவம்

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த தற்கொலை சம்பவம் மிக பெரும் துயரையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் இறப்பதற்கு முன்னதாக தனது பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்சி விளையாட ஆசைப்பட்ட தந்தை ,பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறி வருகின்ற நிலையில், அதை எண்ணி மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள்

இந்த காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள் என்கின்ற காரணத்தினால், இப்படியும் ஒரு முடிவு எடுத்து தந்த இருவர் பலியாக நேரிடும் என்பது இதனூடாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் என்பது உலகளாவிய ரீதிய மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது . இப்படியும் தந்தைகள்.

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்

அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள் ட்ரம் கொடுத்த திடீர் அதிர்ச்சி வைத்தியம் சிக்க போகிறதா இலங்கை.

இலங்கையில் ஆளுகின்ற அறுவ ஆட்சிக்கு ஆப்பு வைக்க நடவடிக்கையில் அமெரிக்கா சில விடயங்களை காய் நகர்த்தி வருகிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளதாக தெரிய வருகிறது.

டிரம்ப் விடுத்த விசேட அழைப்பின் அடிப்படையில் இவர்கள் அங்கு சென்று இரு நாட்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பாக உரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரி அதிகமாக அறவிடுவதாக அமெரிக்க அறிவித்ததை அடுத்து இலங்கை பறந்தடித்து ஓடுகிறது.

இதன் பொழுது இரு தரப்பிலும் சில இனக்கபாடுகளுக்கு உடன்பட்டால் மட்டும், அந்த வரி விதிப்பு தற்காலிகம் நிறுத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

அதனால் இலங்கையில் இப்பொழுது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து ஆளும் இலங்கையினுடைய தேர்தல் குழுக்கள் தற்பொழுது அமெரிக்காவுக்கு திடீரென பறந்து செல்கிறார்கள்.

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல் சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகியுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் சமங்கி ஜன பழக வை மூன்று தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ,முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரத்தக்க அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருகின்ற வேளையில் மாத்தளை மாவட்டத்தின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை

ராஜினமா செய்ய உள்ளதால் அந்த கட்சிக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

திடீர் பதவி விலகல்

உள்ளக ரீதியாக எதிரணிகளால் பொட்டிகள் வாங்கப்பட்டு அதன் பின்னர் இவர்கள் இந்த திடீர் பதவி விலகலுக்குச் செல்வதாக தெரிய வருகிறது.

பல பகுதிகளில் ஆட்சி அமைப்பதில் இழுபறிநிலை இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது.

அதனை அடுத்து பதவி விலகினான் இத்தனை கோடி எங்களுக்கு தரப்படும் என்கின்ற நிலையில் ,அதன் டீல் அடிப்படையில் இவர்கள் இந்த பதவியை விலகுவதாக தெரிய வருகிறது.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது இது தான் சார் .

தமிழர்காணி அபகரிக்க மாட்டோம் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்

அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்

அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள் , அரசு தமிழர்காணி அபகரிக்க மாட்டோம் அனுரா அரசு அதிரடி அறிவிப்பு.

தமிழர் கனிகளை அபகரிக்க மாட்டோம் என அனுராவின் ஆளும் ஆட்சி பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பகுதிகளில் தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஆளுகின்ற அணுறு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது .

இந்த செயல்பாட்டுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்துக் கிளம்பினார் அதனை அடுத்து தற்பொழுது காலி அபகரிக்கும் வண்ணம் எனக்கு இல்லை என திடீர் வாழ்த்தி அடித்து இந்த அறிக்கையை ஆளும் அரசி பிரதமர் முடித்துள்ளார்.

காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள்

உலகளாவிய ரீதியில் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் பரவியதை அடுத்து தமிழர்கள் கொந்தளித்தனர்.

ஊருக்கு பின்னரான இடம்பெறும் நடவடிக்கையாக இந்த காரியபக்கரிப்பு பார்க்கப்படுகிறது.

சர்வதேசத்தின் கதவுகளை மூலம் தவறுகள் தட்டிய நிலையில் இப்பொழுது திடீர் பெல்ட்டி அடித்து தமிழர் காலிகள் அபகரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என அரசு இப்படி அறிவிக்கிறது.

அனுரா ஆட்சி வந்ததன் பின்னர் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் மேற்கொண்டு வருவதும் தலைக்கனத்தில் ஆடி வருகின்ற செயல்பட ஆகும் இது பார்க்கப்படுகிறது.

சிங்கள மக்களை குஷிப்படுத்துகிறோம் என்று நினைப்பில் ஆடுகின்ற அழுக ஆட்சி விரைவில் குத்துக்கரணம் அடிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம் இதுவாகும் எடுத்துக் கொள்ளலாம்.

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கியதில் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.

இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை

மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வெற்றிபெற்றோர் தத்தம் பிரதேசங்களை அன்றாடம் கண்காணித்து, இவ்வாறு வளர்ந்திருக்கும் மரங்கள், தேங்கியிருக்கும் ஆறுகள்,

பழுதடைந்திருக்கும் கிணறுகள், உடைந்திருக்கும் பாலங்கள், வீதிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுத்திருக்க கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

காலிக்கு சென்ற பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலிக்கு சென்ற பஸ் விபத்து

காலிக்கு சென்ற பஸ் விபத்து

மட்டக்களப்பிலிருந்து காலிக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை நாட்களாக வீதி விபத்துக்களும் அதனால் பல உயிரிழப்புக்களும் நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு என்ன நடவடிக்கையில் ஈடுபட்டதென தெரியவில்லை.

இருப்பினும், பஸ்கள் சரியான நிலையில் இருக்கின்றதா என பரிசோதனை செய்த அரசு, அதனை ஓட்டும் சாரதிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என பார்க்க தவறி விடுகின்றனர்.

இதனாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேரிடுகின்றது எனவும் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கின்றனர் ர்னவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலமை எங்க போய் முடியுமோ

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு

அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில்

பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள்

நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
Posted in உலக செய்திகள்

12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு

12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு

12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு ,ஜெர்மனியின் புகையிறது நிலையத்தில் கத்திவிட்டு தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது .

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில்

இந்தத் திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ற கத்தி தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,39 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏர் மணிய குற்றம் குறைந்த தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம் ஜெர்மன் ஹம்பக் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் இந்த கத்தி போட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் பொழுதே பன்னிரு ஒரு காயமடைந்தும் பலர் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .

காயம் அடைந்தவர்கள் ஐந்து உள்ள நாட்களில் இரண்டு அமெரிக்கர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர் இருவரும் மிக ஆபத்தானநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெருகிவரும் இந்த கத்தி வெட்டு தாக்குதல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் வெளிநாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜெர்மன் அரசு .

மேற்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்கப்படுகிறது.

நீ ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை என்பது தொடர்பாக எதனையும் தெரியவில்லை.

இருந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் பரபரப்பையும் பிரியவே ஏற்படுகிறது.

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர்விளக்கம் ,பிரபாகரனுக்கு சிலையா நான் சொன்னேனா என்ன சொன்னேன் என சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா?

நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எந்த கருத் தையும் தெரிவிக்கவில்லை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று

பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு சிலை

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனை யும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன்.

அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.

வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது
Posted in இலங்கை செய்திகள்

வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது

வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது

வன்னி மைந்தன் டெக் டாக் நேரலை நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 10:00 மணி வரை லண்டன் நேரத்துக்கு இடம்பெறுகிறது இலங்கை நேரம் இரவு 9:30 ல் இருந்து அதன் பின்னராக இடம்பெறுகிறது .

எனவே கலந்து கொள்ள விரும்புகின்ற உறவுகள் இந்த நேரலை இணைப்பு அழுத்தி அங்கே கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் .

அரசியல் கவிதைகள் ,பாடல் எழுதுவது எப்படி எ,ன்கின்ற உடைய இடம்பெற்று வருகிறது.

எதிரி இணையம் என் இணைந்து நூறு பாடலாசிரியரை உருவாக்குன நடவடிக்கை இடம் பெற்று வருகிறது அதற்காக 100 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கான தகமை உள்ளவர்களாக இருந்தால் கவிதை பாடலாசிரியராக வரவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களை நீங்கள் எங்களுக்கு பதிவிடலாம்.

என்ற நமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் .0044 7536707793.

மறக்காமல் இணைந்து கொண்டு உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வாருங்கள் .

இது உங்களுக்கான தளம் கருத்துக்களம். வாருங்கள் அரசியல் பேசலாம் பாடல் ஆசிரியர்களாக நீங்கள் உங்களை வளர்த்து கொள்ளுங்கள் .

நன்றி -வன்னி மைந்தன்

டிக் டாக் நேரலை இதில் அழுத்தி இனைந்து கொள்ளுங்கள்

https://www.tiktok.com/@vannimainthan/live?enter_from_merge=personal_homepage&enter_method=others_photo

60 காசா மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

60 காசா மக்கள் படுகொலை

60 காசா மக்கள் படுகொலை

60 காசா மக்கள் படுகொலை தொடரும் இஸ்ரேல் நாட்டின் அராஜக நடவடிக்கை.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்ற கடும் தாக்குதினால் , கடந்த 24 மணித்தியாலத்தில் 60 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் சிறார்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளனர் .

யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கை

சமரச நடவடிக்கையை முறித்து யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் பொழுதே தற்போது அதிகளவான மக்கள் பலியாகி வருகின்றனர் .

யூத படைகள் தொடர்ந்தும் பலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களை படுகொலை செய்து வருகின்றார்கள்.

இதனால் மக்கள் சொல்லென்னா துயர்களை சந்தித்த வண்ணம் வருகின்றனர்.

உடனடியாக இந்தப் போருக்கு முடிவு கட்டப்பட வேண்டிய காலம் வந்துள்ளது .

ஆனால் உலக நாடுகள் அதனை செய்யாமல் மௌனம் காத்து வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் இனப்படு கொலை

தொடரும் இஸ்ரேல் நாட்டின் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது யார் ..?

மக்கள் நிம்மதியாக வாழ வைப்பது யார்..? என்ற கேள்வியே தற்பொழுது சர்வதேசத்திடம் மனிதாபிமான மக்கள் எழுப்பி நிற்கின்றார்கள் .

45பேர் பலி இந்தியாவில் அகோரம்
Posted in உலக செய்திகள்

45பேர் பலி இந்தியாவில் அகோரம்

45பேர் பலி இந்தியாவில் அகோரம்

45பேர் பலி இந்தியாவில் அகோரம், இந்தியாவில் தற்பொழுது கடந்த 24 மணித்தியாலமாக இடம்பெற்று வருகின்ற ,சீரற்ற காலநிலை காரணமாக 45 பேர் உத்தரபிரதேச பகுதியில் இறந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இடி மின்னல் காற்று ஆகியவற்றின் பாதிப்புகளினால் .இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் அங்கு சேதம் அடைந்தும், முற்றாக இடிந்தும் காணப்படுகின்றன.

அதேபோன்று வர்த்தக நிலையங்களும் சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் வாகனங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்தப் புயல் காற்றினால் காயமடைந்த நிலையில் ,பல டசினுக்கு மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு படைகள் தற்பொழுது களமிறக்கப்பட்டு ,பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கடும் எச்சரிக்கை

மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும், மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .

வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.

அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .

ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .

இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .

மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.

இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.