Tag: மட்டக்களப்பு
மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் ஆரம்பம்
மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் ஆரம்பம்
மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் ஆரம்பம் கிழக்குப் பாதையில் மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான கிழக்குப் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, பயணிகள்
மற்றும் பயணிகளுக்கான ஒரு முக்கியமான போக்குவரத்து இணைப்பை மீட்டெடுக்கின்றன.
இந்த முக்கியப் பாதையில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் பயணத்தை உறுதி செய்யும் வகையில்,
செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சேவைகள் மீண்டும் தொடங்குவது நாளை (24) முதல் அமலுக்கு வருகிறது, பின்வரும் அட்டவணையுடன்:
மட்டக்களப்புக்கு: ரயில்
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கு: ரயில் எண். 7083 கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6:00 மணிக்கு திருகோணமலைக்கு புறப்பட்டு,
மதியம் 12:40 மணிக்கு கல்ஓயா ரயில் நிலையத்தை அடைந்து, பின்னர் ரயில் எண். 6011 ஆக மட்டக்களப்புக்குத் தொடர்கிறது.
மட்டக்களப்பு முதல் கொழும்பு கோட்டை வரை: ரயில் எண். 6012 மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, திருகோணமலை-கொழும்பு கோட்டை ரயில் வந்த பிறகு கல்ஓயா ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது.
பயணிகள் முன்கூட்டியே அட்டவணையை சரிபார்த்து, பாதுகாப்பான பயணத்திற்கான ரயில்வே வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு வாகனவிபத்தில் 05பேர் காயம்
மட்டக்களப்பு வாகனவிபத்தில் 05பேர் காயம்
மட்டக்களப்பு வாகனவிபத்தில் 05பேர் காயம் ,மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (12) அன்று கிரான் பிரதேசத்தில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பகுதியில் இருந்து கண்டி பகுதி
கல்முனை பகுதியில் இருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற காரும் வாழைச்சேனை பகுதியில் இருந்து கிரான்
பிரதேசத்தை நோக்கி சென்ற சிறிய எல் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு சந்தர்ப்பத்தில் அப்பகுதியில்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு 7 – 8 மணியளவில் புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து ஊர்காவல் படையினரும் வீடுகளின் உறங்கிக்
அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணை
கொண்டிருந்தவர்களின் 45 அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரை பகுதிக்கு ஒதுக்கிக் சென்றுள்ளனர்.
விசாரணக்கொன அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பிய உள்ள போதிலும் நள்ளிரவு வேளை பெண்கள் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன்
இவர்களது சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
உயிரிழந்தவர்களின் நினைவாக புதுக்குடியிருப்புபில் அமைக்கப்பட்டநினைவுத் தூபி முன்றலில்
உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்தப் படுகொலையில் 09 ஆண்கள் 08 பெண்கள் சிறுவர்கள் என17 படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என இறந்தவர்களின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
காலிக்கு சென்ற பஸ் விபத்து
காலிக்கு சென்ற பஸ் விபத்து
மட்டக்களப்பிலிருந்து காலிக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.
கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மை நாட்களாக வீதி விபத்துக்களும் அதனால் பல உயிரிழப்புக்களும் நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு என்ன நடவடிக்கையில் ஈடுபட்டதென தெரியவில்லை.
இருப்பினும், பஸ்கள் சரியான நிலையில் இருக்கின்றதா என பரிசோதனை செய்த அரசு, அதனை ஓட்டும் சாரதிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என பார்க்க தவறி விடுகின்றனர்.
இதனாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேரிடுகின்றது எனவும் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கின்றனர் ர்னவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலமை எங்க போய் முடியுமோ
மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்
மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்
மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் ,வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். முற்போக்குத் தமிழர் கழகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாத்திரமே செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை எனவும், பிரச்சினைகள் ஏற்படும் போது ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டரை வெற்றியீட்டி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:
”2022 இல் நான் இந்த பகுதிக்கு வந்த போது நீண்ட வரிசை இருந்தது. பல பகுதிகளுக்கும் சென்றேன்.
நீங்கள் அனைவரும் வரிசையில் இருந்தீர்கள். இந்த வரிசையுகத்தை நிறைவு செய்ய முடிவு செய்தேன். 2023 இல் நான் வரும் போது வரிசைகள் இருக்கவில்லை.
விவசாயிகள் என்னிடம் உரம் கேட்டார்கள். அதனை நான் பெற்றுக்கொடுத்தேன். நீங்கள் சிறந்த விளைச்சலைப் பெற்றுத் தந்தீர்கள்.
இவ்வாறு தான் நாட்டை முன்னேற்றினோம். நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள். மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா?
நெருக்கடியை போக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றோம். நிபந்தனைகளுடன் உதவி கிடைத்தது. உதவி பெற வேறு வழியிருக்கவில்லை.
இந்தியாவிடமிருந்து 3.5 பில்லியன் கிடைத்தது. அது தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது. வரியை அதிகரிக்க நேரிட்டது. விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
எவ்வாறு முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம் என்பது இந்த தேர்தலிலே முடிவாகும். பிரச்சினைகள் வந்த போது மற்ற தலைவர்கள் ஓடுகையில் நான் மட்டுமே முன்வந்தேன்.
இவர்களை நம்ப முடியுமா? பாராளுமன்றத்தைக் கலைகுமாறு கோரினார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள்.
இவ்வாறு பல நொண்டிச்சாக்குகளைக் கூறினார்கள். இவர்கள் கூறியதைப் போன்று 2022 இல் தேர்தலை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும். பிரச்சினை தீருமா? அல்லது சிக்கல் ஏற்படுமா? பங்களாதேஷத்தைப் போன்று நாடு மாறியிருக்கும்.
சஜித் வந்து மேடைகளில் பேசுகிறார், பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த தீர்வும் அவரிடமில்லை. இவ்வாறனவர்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும். அடுத்த 5 வருடங்களுக்கான ‘இயலும் ஶ்ரீலங்கா’ திட்டம் எம்மிடமுள்ளது. 5 அம்சங்களில் அதில் பிரதானமானவை.
வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்த வேண்டும். வரியைக் குறைப்பதாக சஜித்தும் அநுரவும் சொல்கிறார்கள்.
வரியை குறைத்தால் வருமானம் குறையும். கடன் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்தார். 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டுமா?
பெண்களுக்குத் தான் அதிக பிரச்சினை ஏற்பட்டது? பெண்களின் உரிமைகள் செயற்படுத்தப்படுவதில்லை. பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பெண்கள் வீடுகளில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தடுக்க சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ சேவை நிலையங்களை அமைக்க இருக்கிறோம்.
குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குழப்பம் செய்யும் ஆண்கள் இனி கவனமாக இருக்க வேண்டிவரும். பெண்களின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்.
இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம்.
மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம். கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம்.
திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களிப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம்.
இந்தப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக முன்னேற்றுவோம். 1977 இல் நான் இங்கு வந்த போது தேவநாயகம் அமைச்சராக இருந்தார்.
நல்லையாவைப் பற்றியும் அறிந்திருந்தேன். எனது தந்தை ஹோட்டலொன்றை ஆரம்பித்தார். அதற்கு அருகில் தான் பிள்ளையானின் கிராமம் இருந்தது.
கல்குடாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்றை இங்கு உருவாக்குவேன்.
ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். இப்பகுதிக்கு வர அது இலகுவாக இருக்கும்.
சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பயிற்சிகளை வழங்குவோம். சம்பிரதாய நடனங்கள், கப்பிரிங்ஜா, சம்பிரதாய முஸ்லிம் நடனங்கள், நவீன நடனங்கள், வாத்தியக் குழுக்கள், சுவையான உணவுகள் என பல விடயங்கள் எமக்குத் தேவைப்படும். அவ்வாறு தான் சுற்றுலாத்துறை முன்னேறும்.
இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள இருக்கிறோம். மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் “இயலும்”. சஜித்தினால் அல்லது அநுரவினால் அதனை செய்ய முடியும்.
கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேசும் இல்லை சுற்றுலாத்துறையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம் .மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறுவன் ஒருவனுக்கு இரத்தம் மாற்றி ஏற்றியதால் அவன் இறந்துவிட்டான் .
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ,கவன இன்மை காரணமாக அப்பாவி சிறுவன் இறந்துள்ளான் .
மேலும் அந்த விடயம் மருத்துவர்களினால் மூடி மறைக்க பட்டு தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
மருத்துவமனை மாபியா ஊழல் அம்பலம்
வடக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் ,தற்போது இலங்கை முழுவதும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் அதிகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தனியார் மருத்துவமனைகளில் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் இந்த விடயங்கள் நகர்த்த படுவதால், குற்ற சாட்டுக்களை முன் மாதிரியாக வைக்க படுகிறது .
இலங்கை முழுவதும் பரவியுள்ள இந்த மருத்துவ மாபியா குழுவை முற்றாக அழிக்க வேண்டும் என்கின்ற விடயம் சூடு பிடித்துள்ளது .
அருச்சுன இராமநாதன் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் தற்போது ஒன்று ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளதையே இந்த மட்டக்களப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .
வீடி
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி Action unity lanka நிறுவனத்தின்
Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை
இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு
75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்
இதன் போது வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று ஆடுகள் வீதம் மொத்தம் 63 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு Action unity lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், பிரதேச செயலகம் மற்றும் Action unity lanka நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு காத்தான் குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பாலமுனை கடற்கரை பகுதியில் மீட்க பட்ட பெண் யார் என்பது தொடர்பில்விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் இலங்கை பொலிஸார் குற்றவாளிகளை தேடுகின்றனர் .
இந்த பெண்ணின் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ள கொலை குற்றவாளிகள் யார் என்பதை காத்தான் குடி பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை .
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
இந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பின்னர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்கின்ற தகவல்கள் வெளியாகி வருகின்ற பொழுதும் ,அது தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் எதனையும் தெரிவிக்கவில்லை .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான மர்ம கொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை இலங்கை போலீசார் கண்டுபிடிக்க முடியாது திணறி வருகின்றனர் .
சீரியல் கில்லர் ஒருவர் இவ்வாறான கொலைகளை செய்து வருகின்றாரா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
மகள்களை கற்பழித்த தந்தை
இங்கிரிய பகுதியில் தனது மகள்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தந்தை செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தாய் இறந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகளும் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர் .
இவ்வாறான கால பகுதியில் 17 வயதான தனது மூத்த மகளை தந்தை ஐந்து வருடமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .
இதே சமகாலத்தில் தனது இரண்டாவது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தந்தை முனைந்ததை கண்ணுற்ற மூத்த மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் .
அதனை அடுத்தே தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் .
அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான வானிலை நீங்கி மழை பெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாத போதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மழையுடனான வானிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுனயீனம் காரணமாக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (27) வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் உறவினர்கள் தேடிவந்த போதே வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.
ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது.
இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.
எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது முகநூல், எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்
அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும். அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.
இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?
ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார். இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன்.
தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.
சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்
இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார்.
பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்? என பாராளுமன்ற உறுப்பினர் மனோ
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி. பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடித்தக்கது.
மேலும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மொனராகலை
ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
பிரதான பொலிஸ் பரிசோதகராக ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த
பீ.கே.எட்டியாராட்சி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில்,
வெற்றிடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக இவர் (28) புதன்கிழமை சமய வழிபாடுகளை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
இலங்கை மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி அடித்து செல்ல பட்ட நபர் ஒருவர் சில தினங்களின் பின்னர் சடலமாக மீட்க பட்டுளளார்.
இவருடன் மூவர் நீரில்அடித்து செல்ல பட்ட நிலையில் சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தீவிர படுத்த பட்டன.
அவ்வாறான தேடுதலின் பொழுதே திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
தொடர்ந்து காணாமல் போன ஏனையவர்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.
பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .
இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்வதற்கான விசேட பீசீஆர் பரிசோதனை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று
(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பீசீஆர் பரிசோதனை கடந்த திங்கட்கிளமை முதல்
நடைபெற்றுவருவதாகவும் இதுவரை 143 பேருக்கான பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நால்வருக்கு
கோரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில்
வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் இதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 101 நோயாளர்களில் 8 பேர் கொரோனா நோய் உறுதி
செய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவரே இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.
கொரோன பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருந்ததினைத் தொடர்ந்து இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டு, இங்கு வரும் கொரோனா
நோயாளர்களை அல்லது கோரோனா நோய் தொற்று அறிகுறி காணப்படுபவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக பிரிவு
அமைக்கப்படடிருந்தது. தற்போது பீசீஆர் பரிசோதனை மேற்கௌ;வதனையடுத்து இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவு
ஒன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்களுக்காக
சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால்
சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது இங்கு வருபவர்கள் இடைவெளிபேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருப்பதுடன் அவசிய தேவைக்காக மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை
சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக்
கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனி பிரதனியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுனருமான டாக்கடர் எஸ். மதனழகன்
=நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகிஇ மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.































