Posted in இலங்கை செய்திகள்

19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்

19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்

இலங்கையில் ஆளும் பவுத்த இனவாதியான கோட்டபாய ஆட்சியில் தமிழர் நலன்கள் தொடர்பான பல விடயங்கள் சட்ட மூலோபாய மூலம் அகற்ற பட்டு வருகிறது .

அவ்விதம் இலங்கை சரத்துக்களில் உள்ள 19 தாவது சட்ட மூலத்தை தாம் அகற்ற ஒருபோதும் இடமளியோம் என

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,முக்கிய நபருமான சுமந்திரன் தெரிவித்துளளார் .

சட்டவாதியாகவும் ,கோட்டபாயவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கும் இவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் காமெடியாக வலம் வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா

பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா

இலங்கையில் ஆளும் பவுத்த வெறிபிடித்த மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் படித்த பட்டதாரி பிக்குகளை

நாட்டின் முக்கிய சிங்கள பாடசாலைகளில் ஆசிரியராக பணியில் அமர்த்த ஆளும் இலங்கை பிரதமர் கட்டளை பிறப்பித்துள்ளார் ,

இவர்கள் மூலம் பவுத்த மத வழிப்பாட்டை மேலும் விஸ்தரிக்கவும் ,அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில்

,பவுத்த ,இன வரலாற்றை இடித்து இனவெறியை தூண்டவும் இந்த நகர்வை மகிந்தா மேற் கொண்டுள்ளார் .

இலங்கை ஒரு பவுத்த நாடு என்பதும் ,சிங்களவர்களே அதில் முதன்மை குடிகள் என்பதையும் ஆளும் இந்த வெறி பிடித்த

அரசு அதிகாரங்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

ந

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்

வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்

இலங்கை – வவுனியா எ- ஓமந்தை பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் வாலிபர் ஒருவர் தொடர்ந்து பல

மாதங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .

இதில் அவர் தற்போது கற்பமாகிய நிலையில் ,மருத்துவ சோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .

குறித்த குற்றத்திற்கான வாலிபர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் .


இவ்வாறான குற்றங்கள் நாட்டில் தற்போது அதிகரித்து செல்கிறது .

இதற்கு மகிந்த ஆட்சியில் பாலியல் கல்வி ,விழிப்புணர்வு ஊட்டல் கற்கையை உருவாக்க முனைந்த பொழுதும் இறுதியில் எழுந்த எதிர்ப்பால் ,கைவிட பட்டது .

வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இவை அடிப்படை கல்வியாக மாணவர்களுக்கு போதிக்க படுகிறது ,

குறிப்பாக பெண்களுக்கு இது தொடர்பான விளக்கங்கள் செய் முறை கட்சிகளுடன் கற்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video

ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் அகோரமாக தாக்கின

அதில் அல் அசாட் விமான நிலையம் இப்பொழுது காண்பிக்க பட்டுள்ளது

இங்கு 17 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .

அமெரிக்கா படைகள் கொட்டகைகள் ,மற்றும் இராணுவ தங்குமிடங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டது

இதில் தமது படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்கா அறிவித்தது

ஆனால் ,அதில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவம் செத்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த ஏவுகணை தாக்குதலின் அதி கோரத்தை மேற்படி காட்சிகள் வெளிக் காட்டியுள்ளன .

தமக்கு சேதம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது பொய் என்பது இந்த காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளன

அது தவிர அவசர அவசரமாக இந்த காணொளியை அமெரிக்கா ஏன் வெளியிட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ,

ஈரான் கூறியது போன்று சேதங்கள் அதிகம் தான் என்பதும் இதற்குள் இருந்த இராணுவம் பலியானது உண்மை தான் என்பதையும் இந்த காணொளி தாக்கு தல் காட்சிகள் வெளிக்காட்டி நிற்கின்றன full video

ஈரான் ஏவுகணை தாக்கிய

Posted in உளவு செய்திகள்

துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா

துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா

லிபியாவில் தற்போது சமாதான உடனப்படு நிலவி வந்துள்ள நிலையில் ,அங்கு இரு தரப்பும் போர் அத்து மீறல்களில் ஈடுபட்ட வந்தனர் .

இவ்வேளை தெற்கு Tripoli யில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அதி நவீன துருக்கியின் உளவு விமானம் ஒன்று லிபியா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தாம் இதனை சுட்டு வீழ்த்தியதாக லிபியா இராணுவம் அறிவித்துள்ள நிலையில் மேலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,read more

ரஸ்சியா தலைமையில் சமரச நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் இந்த சமபவம் போர் அத்துமீறல் என கோரி

துருக்கி வெளியேறி தனது தாக்குதல்களை அது மேற்கொள்ள கூடும் என நம்ப படுகிறது

துருக்கிய உளவு விமானத்தை
Posted in உளவு செய்திகள்

ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா

ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்கா அரசின் உத்தரவின் பேரில் அவசர அவசரமாக இருபதாயிரம் அமெரிக்கா துருப்புக்குள்


10 முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .

இவற்றில் முதன்மையாக ஜெர்மன் வான்தளத்தில் அதிக அளவான துருப்புகள் ,அனுப்பி வைக்க படுகின்றன .

இதில் ஜெர்மனின் ஐந்து விமான தளங்கள் Berlin, Frankfurt, Hamburg, Munich and Nuremberg


ஊடக இராணுவ போராயுதங்கள் விநியோகம் இடம்பெறவுள்ளதுடன் ,

அந்த ஐந்து விமான தளங்களையும் அமெரிக்கா படைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றன .

பெல்ஜியம் ,நெதர்லாந்து,ஜெர்மன்.போலந்து ,லித்துவேனியா .போன்ற நாடுகளில் அதிக இராணுவம் குவிக்க படுகிறது

ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா

நேட்டோ படைகளிற்கு உதவும் முகமாக இந்த இராணுவம் அனுப்பி வைக்க படுகின்றனவாம் .

சுமார் 1100 டாங்கிகள்,மற்றும் 8600 இராணுவ வாகனங்கள் ,என்பனவும் அனுப்பி வைக்க படுகின்றன ,

அது தவிர விமான தாங்கி கப்பல்கள் ,விமானங்கள் ,என்பனவும் கடல் வழியாகவும் ,வான் வழியாகவும் அனுப்பி வைக்க படுகின்றன .

அமெரிக்கா அரசு எடுத்துள்ள இந்த அவசர முடிவுகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது ,ரசியா, ஈரான்

தாக்குதல் அச்சம் காரணமாக இவை நடைபெற்றுள்ளதாக பார்க்க படுகிறது full video

ஈரான் ,அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ,அதனை அடுத்து எழுந்துள்ள நெருக்கடி மற்றும் ரசியா உருவாக்கி வெளியிட்டுள்ள ஒலியை விட 27 மடங்கு சகதி வாய்ந்த கைபிரட் ஏவுகணை

இதனை அடுத்து ரசியாவின் எல்லை பகுதியான போலந்து ,உக்கிரேனில் அமெரிக்கா நிலை கொண்டுள்ளது ரசியாவின் எம்மீதான ஒரு பரந்த போரை அமெரிக்கா முத்தெடுக்க முனைவதாகவும் .

ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா

அரேபிய கடலில் அமெரிக்கா போர் கப்பலை இடிக்க துரத்திய ரசியாவின் செயலின் பின்னர் இந்த விடயங்கள் இறுக்கம் பெற்றுள்ளன

ஐரோப்பாவில் இருந்து தமது இராணுவத்தை விலக்கிய அமெரிக்கா மீளவும் அதே நாடுகளில் தனது இராணுவத்தை அந்த நாடுகளின் ஆதரவுடன் களமிறக்குவது

பலத்த சந்தேகங்களை எழுந்துள்ளது

ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

இன்று இரவு பிரிட்டனின் பல பகுதிகளில் புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

வட ஐயர்லாந்த் ,ஸ்கொட்லாந்து ,மற்றும் ஆங்கில கால்வாயை அமைந்துள்ள பகுதியிலும் மோசமாக இந்த புயல் தாக்கும் என தெரிவிக்க படுகிறது ,

இந்த ஆங்கில கால்வாயை கடக்கும் பொழுது பிரிட்டனின் பல பகுதியில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் எனவும்

இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே மரங்களின் கீழே இவ்வேளை கார்களை நிறுத்தி வைக்காதீர்கள் ,வீட்டு யன்னல்களை திறந்து

வைக்காதீர்கள் .மிகவும் விழிப்பாக இருங்கள் ,உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் .

Posted in முக்கிய செய்திகள்

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம் இல்லை – வீழ்ந்த விமான உறவுகளை மிரட்டும் ஈரான்

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம் இல்லை – வீழ்ந்த விமான உறவுகளை மிரட்டும் ஈரான்

ஈரானில் வைத்து ,ஈரான் இராணுவம் ஏவிய ஏவுகணை தாக்கி உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டது ,இதில் பயணித்த 180 பேரும் பலியாகினர் .

இதில் மரணமான உறவுகளின்,உறவினர்கள் மேற்குலக ஊடகங்களுக்கு செவ்வி வழங்க கூடாது எனவும் ,அவ்வாறு

அமெரி வழங்கினால் அவர்களது உறவினர்கள் சடலங்கள் வழங்க படமாட்டது என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

ஈரானின் இந்த அபய எச்சரிக்கை ,உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

கனடா பிரதமரோ தமது நட்டு பயணிகளுக்கு பல லட்ஷம் டொலர் நஷடம் வழங்க வேண்டும் என ஈரானை கேட்டு

கொண்டுள்ளார் .இதனால் ஈரான் பல மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்த வேண்டிய அபாய நிலையில் சிக்கி தவித்து வருகிறது .

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

மகளை கற்பழித்த தந்தை கைது

மகளை கற்பழித்த தந்தை கைது

இலங்கை – கந்தளாய் பகுதியில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்த தந்தை செயலால் மனைவி முன் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார் .

இவ்வேளை அங்கு உறங்கிய 11 வயது மகளை தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
.
பாதிக்க பட்ட மகள் விடயத்தை தாயிடம் தெரிவித்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

ராஜனியை இலங்கை வருமாறு அழைக்கும் விக்கி – தமிழர்க்ள கொதிப்பு

ராஜனியை இலங்கை வருமாறு அழைக்கும் விக்கி – தமிழர்க்ள கொதிப்பு

இந்தியா – தமிழகம் சென்றுள்ள வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ராஜனியை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

அவரை இலங்கை யாழ்ப்பாணம் வருமாறு விக்கிக்கேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார் .

ரஜனி தமிழகத்தில் கட்சி தொடங்கவுள்ள நிலையில் விக்கினேஸ்வரன் ராஜனியை சந் தித்துள்ளார் .


இவரது இந்த சந்திப்பு தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பணம் தர மறுத்த – தாய் நஞ்சு அருந்திய மகன்

பணம் தர மறுத்த – தாய் நச்சு அருந்ய மகன்

இலங்கை – கந்தளாய் பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவர் தாயிடம் பண கேட்டு தகராறு செய்துளளர் ,தாயோ

பணத்தை வழங்க மறுத்த நிலையில் அலரி விதைகளை உட்கொண்டுள்ளளார் .

தற்போது மருத்துவ மனையில் மகன் மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு செல் வந்தர் தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

வெளிநாட்டு செவந்தரை தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

இலங்கையில் இருந்து வெளி நாடுகள் தப்பி சென்று பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்துள்ள தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை செய்ய வேண்டும் என விக்கினேஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்

இலங்கை அரசு கூறும் அதே செய்தியை விக்கியும் கூறுகிறார் .


தமிழர்களை கொன்றவர்கள் ஆளும் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிப்பட்டு வரும் நிலையில் சிங்கள சம்பந்தி விக்கி

சிங்கள கொலையாளிகளுக்கு ஒத்து ஊத்தி வருவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

மகிந்தா அணியின் கைக்கூலியாக விக்கி உள்ளாரா என்ற ஐயத்தை விக்கியின் சமீப கால் பேச்சு காண்பிக்கிறது

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

இலங்கை – அம்பாறை மாவட்டத்தில்;காவல்துறை அதிகாரி மீது சரமாரியாக தகுத்ததால் நடத்திய நால்வரை

காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்துள்ளனர் .

கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

யானை கட்சிக்குள் குத்து சண்டை

யானை கட்சிக்குள் குத்து சண்டை

இலங்கையில் -ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பதவியை

வகித்து வரும் ரணிலுக்கு எதிராக யானை தேசிய கட்சி உறுப்பினர்கள்போர் கொடியை தூக்கியுள்ளனர் .

இதனால் தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்கும் படி கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் இடம் பெற்றுள்ள

நிலையில் இரண்டு பிரதான பதவிகளையும் ரணில் சஜித்துக்கு வழங்குவார் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

இலங்கையில் – இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி அங்கு வேலை வாய்பபை பெற்று தருவதாக கூறி

பணசேர்ப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

இவரது ஆசை வார்த்தையை நம்பிய மக்களில் சிலர் பெரும் தொகை பணத்தை வழங்கி அமர்ந்துள்ள நிலையில் மேற்படி பெண் கைது செய்ய பட்டுள்ளார் .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள்

Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்

Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்

அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான Boeing நிறுவனத்திற்கு ,இந்த விமான சேவைகள் ,மற்றும்

தாயாரிப்புக்களை கட்டு படுத்தும் அமைப்பு regulator சுமார் 5.4 மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்தும் படி உத்தரவிட்டுள்ளது

737 MAX விமானம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த பல நூறு மக்கள் பலியாகினர் ,இந்த நிலையில் தற்பொழுது அந்த விமானத்தில் முக்கிய பாகம் முறைப்படி ,பாதுகாப்பாக

பொருத்தப்படவில்லை என்ற குற்ற சாட்டில் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .

தொடர்ந்து குறித்த நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிட தாக்காது

Boeing விமானநிறுவனத்துக்கு
Posted in உலக செய்திகள்

ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்

ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்

ஈரான் – நாட்டில் உள்ள ஈரானுக்கான பிரிட்டன் தூதரக அதிகரி Rob Macaireசுட்டு வீழ்த்தப்பட்ட உக்கிரேன் விமான

பயணிகள் படுகொலை தொடர்பாக ங்அங்குள்ள மக்களை திரட்டி அந்த அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபபட்டார் .

தமது நாட்டில் தூதுவர்கள் கடை பிடிக்க வேண்டிய செயல் பாடுகள் ,மற்றும் சட்ட வரைபிற்குள் நின்று இவர் செயல் படவிலை எனவும்

,வன்முறை ,கலவரத்தை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் அந்த காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் ,

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் மேலும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

ஈரானில் பிரிட்டன் தூதுவர்
Posted in உளவு செய்திகள்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன்? – ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
டெஹ்ரான்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி

காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

ஃ சுலைமானி ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வந்தார்.

இதனால் அவரது கொலை ஈரானை பயங்கரமாக உலுக்கியது. காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது.

அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ

நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே

ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில் ஈராக் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம்

சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க

தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை எ ஈரான்தான் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.

இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி

திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதார தடைகள்

அறிவிக்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் கூறினார்.

இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை
Posted in சினிமா

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்

பிரபல பாலிவுட் நடிகையும், சயீப் அலிகானின் மகளான சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்
சாரா அலிகான்


நடிகைகளிடம் ரசிகர்கள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இதில் சில நடிகைகளுக்கு நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தி நடிகை சாரா அலிகானையும் ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது.

இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் மகள் ஆவார்.

அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா அலிகான்

சாரா அலிகானும் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து விட்டு திரும்பிய சாரா

அலிகானை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டார்.

இதனால் சாரா அதிர்ச்சியானார். முத்தமிட்டவரை பாதுகாவலர் பிடித்து தள்ளினார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஜிம்மில் இருந்து வந்த போது சாரா அலிகான்

ஆபாச ஆடை அணிந்து இருந்ததாக குறைகூறி வருகிறார்கள்.

Posted in சினிமா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –


சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர்,

அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரைபிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நயன்தாரா

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான்

எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய்

சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.