Posted in Uncategorized

எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை படத்தில் காணலாம்.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள்.

இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த மாதம் 27-ந் தேதி ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் அதிகாலையில் 2 டிரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து பறந்து வந்த இந்த டிரோன்களில் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தார்கள். அது கீழே விழுந்து வெடித்தது.

விமானப்படை ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டுகள் இரண்டுமே சக்தி குறைந்ததாக இருந்தது. எனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் நடத்தியது இதுவே முதல் முறை ஆகும்.

எனவே பெரிய தாக்குதல்களை நடத்துவதற்காக இது ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாக இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டது.

சிறிய வகை டிரோன்கள் என்பதால் ரேடார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எளிதாக ஊடுருவியது. எனவே சிறிய டிரோன்கள் வந்தாலும் கண்டுபிடிக்கும் கருவிகளை பொருத்தும் பணிகள் நடந்தன.

கடந்த மாதம் நடந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவ செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் ஊடுருவி இருக்கின்றன.

எனவே அவை பறந்து வந்தால் சுட்டுவீழ்த்துவதற்கு எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்முவில் உள்ள அக்னூர் பகுதியில் மர்ம டிரோன் ஒன்று பறந்து வந்தது. எல்லையில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி வந்து பறந்து கொண்டு இருந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அதை நோக்கி சுட்டார்கள்.

டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.

இதில் ஒரு குண்டு டிரோனை தாக்கியது. உடனே டிரோன் கீழே விழுந்தது. அதை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தார்கள். டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த குண்டு வெடித்து இருந்தால் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். சரியான நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் சதி முறியடிக்கப்பட்டது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தகர்க்கும் வகையில் இந்த வெடிகுண்டை அனுப்பி இருக்கிறார்கள். ராணுவம் உஷாராக இருந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இந்த டிரோனையும் அவர்கள்தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே ஜம்மு விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்திய டிரோன்களில் சிறிய அளவிலான வெடிகுண்டுகளே இருந்தன. ஆனால் இன்று வீழ்த்தப்பட்ட டிரோனில் 5 கிலோ அளவுக்கு அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து இருந்துள்ளது.

இந்த அளவுக்கு பெரிய வெடிகுண்டுகளை டிரோன்கள் மூலம் அனுப்ப முடியும் என்ற நிலை இருப்பதால், இது ஒரு ஆபத்தான வி‌ஷயமாக கருதப்படுகிறது. எனவே பாதுகாப்பு படைகள் மேலும் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதையும் படியுங்கள்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட்

Posted in உளவு செய்திகள்

ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய தலைமையமாக

விளங்கும் இராணுவ தளம் மீது கடந்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இதில் அமெரிக்கா CIA and US Special Operations units.பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் காயமடைந்துள்ளனர்

மேற்படி தகவலானது அங்கு உள்ள அந்த முக்கிய நபர்கள் குடும்பங்கள் வாயிலாக கசிந்துள்ளது

மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா

20 MORE SRILANKA NEWS READ CLICK HERE

இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைபவரக்ளை தடுத்து அவர்களை கைது

செய்திடும் நோக்குடன் ஐந்து உளவு விமானங்களை இலங்கைக்கு இலவசமாக அவுஸ்ரேலிய வழங்கியுள்ளது

மகிந்த காலத்தில் கப்பல் ஊடாக அவுஸ்ரேலியாவுக்குள் பலநூறு பேர் மகிந்த மகனால் கடத்த பட்டனர்

அவ்வாறான ஒரு கடத்தல் இப் பொழுது இடம்பெறலாம் என்பதால்,அவுஸ்ரேலிய முந்தி கொண்டு

இந்த அன்பளிப்பை செய்துள்ளமை கவனிக்க தக்கது

    Posted in உளவு செய்திகள்

    சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்

    சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்

    சிரியாவின் ,லெபனான் எல்லை ஊடக பயணித்த ஹிஸ்புல்லா மற்றும் சிரியா இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் இரு ஏவுகணை தாக்குதலை நடத்தியது

    இந்த தாக்குதலில் அவர்கள் சென்ற வாகனம் முற்றாக சிதறி சேதமானது ,எனினும் தமது இராணுவ தளபதிகள் எவ்வித

    காயங்களும் இன்றி முன்னரே தப்பித்து கொண்டனர் என தெரிவித்துள்ளனர்

    வாகன சாரதியின் சாதூரியமான வாகன ஓட்டுதல் காரணமாக இவர்கள் தப்பித்து கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

    ஈரானின் இராணுவ தளபதியை கொன்ற அதே பாணியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.


    கிசுப்புல்லாவின் முக்கிய தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தில் இஸ்ரேல் ,அமெரிக்கா உள்ளதாக ஈரான் எச்சரிக்கை

    விடுத்தது சில வாரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
    சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
    சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
    சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
    Posted in உளவு செய்திகள்

    துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா

    துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா

    லிபியாவில் தற்போது சமாதான உடனப்படு நிலவி வந்துள்ள நிலையில் ,அங்கு இரு தரப்பும் போர் அத்து மீறல்களில் ஈடுபட்ட வந்தனர் .

    இவ்வேளை தெற்கு Tripoli யில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அதி நவீன துருக்கியின் உளவு விமானம் ஒன்று லிபியா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

    தாம் இதனை சுட்டு வீழ்த்தியதாக லிபியா இராணுவம் அறிவித்துள்ள நிலையில் மேலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,read more

    ரஸ்சியா தலைமையில் சமரச நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் இந்த சமபவம் போர் அத்துமீறல் என கோரி

    துருக்கி வெளியேறி தனது தாக்குதல்களை அது மேற்கொள்ள கூடும் என நம்ப படுகிறது

    துருக்கிய உளவு விமானத்தை