Tag: கூட்டமைப்பு
கூட்டமைப்பு படு தோல்வி
கூட்டமைப்பு படு தோல்வி
கூட்டமைப்பு படு தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது .
அனுரகுமார திஸாநாயக்கவைன் அளவும் கட்சி யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளது .
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் 12 ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இதுதமிழ் தேசிய கூட்டமைப்பின் விரோத போக்கை காண்பிக்கிறது என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது .
கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு
கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆப்பு அடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
பிரிட்டன் லண்டனை தளமாக கொண்டு இயங்கிய உலக தமிழர் பேரவை தற்போது இலங்கைக்குள் அகல கால் ஊன்றியுள்ளது .
இந்த கட்சியானது மகிந்த ராஜபக்ச காலத்தில் தடை செய்யப்பட்ட நிலையில் ,ரணில் ஆட்சியினால் அந்த தடை நீக்க பட்டு தற்போது இலங்கைக்குள் அகல கால் ஊன்றியுள்ளது
இந்த கட்சி இலங்கை ஆளும் மத்திய பவுத்த அரச நிர்வாகத்துடன் இணைந்து தமிழருக்கான தீர்வை பெற்றிட காலடி எடுத்து வைத்துள்ளது .
தமிழீழம் வேண்டாம் இலங்கை ஒற்றை ஆட்சிக்குள் இணைந்து பயணிப்போம் என்கிறது .
வடை விற்பனை மீள ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் ,இது ஓட்டை வடையா அல்லது தட்டை வடையா என்பதாக இப்பொழுது புலி கட்சிக்குள் குத்து வெட்டு ஆரம்பமாகியுள்ளது .
வெங்காயம் மிளகாய் போட்டு ரெம்ப காரமாக சூடு நடக்கிறது .சமையல் பிரமாதம் ,அரை அவியலாக மாறலாம் என்பதால் பதட்டமாக கழிகிறது .
கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு
முன்னு பின் முரண் நிலையிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் பயணிப்பதாக தோற்ற பாடு காண்பிக்க படுகிறது .
இதே இலங்கையில் இருந்து முள்ளி வாய்க்காலில் இடம்பெற்றது தமிழ் இன அழிப்பு என்று இவர்களினால் சகட்டு மேனி அரசியலுக்கு கருத்துரைத்தாலும் அதன் ஊடக தீர்வினை பெற்றுவிட முடியுமா என்பது கேள்வியாக உள்ளது .
கள்ள நாதாரி சம்பந்தன் ,ஒட்டுண்ணி சுமந்திரனுக்கு இவர்களது வெளிநாட்டு அரசியல் நகர்வு ஆப்பு அடிக்கும் எனலாம் .
பாம்மாத்து அரசியல் விட்டு வண்டி ஒட்டிய கூட்டமைப்புக்குள் ,தமிழ் அரசியல் கட்சிக்கும் இவர்கள் வரவு சாவு மணி என்பதாகிறது .
அமெரிக்கா வெள்ளை மாளிகை வரை இந்த கட்சிக்கு தொடர்புகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்க .
இந்த கட்சியில் இவர்கள் வலைக்குள் யார் தலை முன் உருள போகிறது என்பது தான் விடயமாகிறது
புது மாப்பிள்ளைக்கு நல்ல வரவேற்பு ,பொண்ணு வீட்டு காரங்க கும்மி அடிப்பாங்களா ,கொளுத்தி போடுவாங்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்
- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்
சுதந்திரத்தினத்தை புறக்கணிப்போம் கூட்டமைப்பு
சுதந்திரத்தினத்தை புறக்கணிப்போம் கூட்டமைப்பு
இலங்கையின் சுதந்திரத்தினத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல் பட்டு ,தமிழர் அரசியல் விடயங்களை குழிதோண்டி புதைத்து வரும் கூட்டமைப்பு ,இவ்விதம் அறிவித்துள்ளது ,தமிழ் மக்கள் மத்தியில் நகைச்சுவையாக பார்க்க படுகிறது .
போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை
போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை
சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி
வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கவில்லை என்றால், தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் வகையில் டிசெம்பர் 13ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.
இதன்போது பல முற்போக்கான கருத்துகள் வெளியிப்பட்டன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு இதில் முக்கியப் பங்குள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி, எமது நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகளே பிரதான விடயமாக உள்ளன எனவும் தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை அரசியல் தீர்வின் ஊடாக அடைய முடியுமா என்பதை பெப்பரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு என்ன என்பதை நாம் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே எமது கட்சியின் நிலைப்பாடு. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவையில்லை.
அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு உண்மையில் அதிகாரப் பகிர்வாக இருக்காது. சமஸ்டி கட்டமைப்பில் மாத்திரமே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி இதனை தீர்க்க முடியும் என தெரிவித்து காலக்கெடு ஒன்றையும் ஜனாதிபதியே அறிவித்துள்ளார்.
இந்த காலக்கெடுவுக்கு நாமும் இணங்கியிருக்கிறோம். தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் புதிதாக எதனையும் ஆரம்பிக்க வேண்டியதில்லை. 35 வருடங்களாக இது தொடர்பில் பேசப்பட்டு பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, பல இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை
ஜனாதிபதி கூறியுள்ள காலக்கெடுவுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும். இதனை செய்யாது காலத்தைக் கடத்தும் செயற்பாடாக இது
இருக்கக்கூடாது. நாமும் பல்வேறு சந்தேகங்களுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம். பல தடவைகள் இதுபோன்ற முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன ஆனால் எதுவும் நடக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வரவில்லை என்கிற பலிச்சொல் எமக்கு வரக்கூடாது என்பதாலேயே நாம் கலந்துரையாடலில் ஈடுபடுகிறோம்.
காலக்கெடுவுக்குள் இதனை செய்ய முடியாதென தெரிந்து ஜனாதிபதி எம்மை ஏமாற்றுவராக இருந்தால், நாட்டினதும் சர்வதேசத்தினதும் கண்களில்
மண்ணைத் தூவும் செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால் அதனை உலகுக்கு அம்பலப்படுத்துவோம்.
இது மட்டுமல்ல நாட்டில் எங்களுடைய மக்களை அணி திரட்டி நியாயமான
அரசியல் சுதந்திரத்துக்காக பல போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சுமந்திரன் எச்சரித்தார்.
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் ‘ராஜபக்ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத்
தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்,
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.
நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும்,வைத்தியசாலையில் இருந்தும்,வீடுகளில் இருந்தும்
இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம்.
அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி
அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள்.
இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு. ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது.
அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம்.
இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,
அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும்.
இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.
சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள்.
ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
அதன்படி, எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.
மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.
உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.
தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார்.
எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.
இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற
கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.
இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில்,
எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம்.
இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ்,மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை
பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?
அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்
விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து
வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்
பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
அவர்களுடன்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்
இலங்கை பாராளுமன்றில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் .இவரது வெற்றி முதலே தீர்மானிக்க பட்ட ஒன்று என்பதை இன்றைய நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது .
மொட்டு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் தனது அரசியல் விளையாட்டை எதிர்காலத்தில் தொடருவாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .
தான் நாட்டின் ஜனாதிபதியான நிலையில் தனது பாராளுமன்ற பேச்சை சுருக்கி கொண்ட ரணில் தந்திர நகர்வு ஆரம்பிக்க பட்டு விட்டதை எடுத்து காட்டியது .
ரணிலை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது என்கின்ற வாதம் போலியானது என வெளிப்படுத்த பட்டது .
தமிழ் தேசிய கூட்டமைப்பை சஜித் மற்றும் அழகப்பெரும ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
அதில் சஜித் பக்கம் வாக்கு அளிக்க உள்ளவர்களும் அதேபோல மொட்டு கட்சியின் பக்கம் உள்ள உறுப்பினர்கள் விபரமும் வெளியானது.
ஊடக நபர் ஒருவர் பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காட்சி படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
அதனை இந்த காட்சியில் நீங்கள் கண்டு கொள்ள முடியும் .தள்ளாடும் சம்பந்தர் அரசியல் சித்து விளையாட்டு மக்களே இதில் தெரிகிறது அல்லவா .
இருவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து வாக்களித்து வாக்கு சிதறலை மேற்கொண்டுள்ளது படத்தை உற்று கவனியுங்கள் .
நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை
நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் சாணக்கியன் இலங்கையின்
புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார் என கல்லடி பாலத்தின் அருகே பதாகை ஒன்று தொங்குகிறது
அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?
அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறது ,இந்த
பயணத்தின் பொழுது
இலங்கை தமிழர் தொட்ரபில் பேச படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவின் அழைப்பினை ஏற்று இவர்கள் பயணமாவது ஆளும் ஆட்சியாளர்களுக்கு
கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு
கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு
இந்தியாவுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம் பெறுகிறது
இந்த சந்திப்பில் இலங்கையின் சமகால அரசியல் நிலை தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இந்தியாவின் காத்திரமான செயல்பாடுகள் தொடர்பாகவும் பேச படும் என எதிர்பார்க்க படுகிறது
கோட்டாவின் நேரடி உளவாளி சுமந்திரன் இந்த பேச்சில் ஈடுபடவுள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் கூட்டமைப்பு வெற்றி
யாழில் கூட்டமைப்பு வெற்றி
யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான
முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி – 7524
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5542
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642
சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்
சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின
அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது
ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது
ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன
கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?
,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்
ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்
வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,
இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்
இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,
அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்
,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்
சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே
தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன
- வன்னி மைந்தன் –
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு
வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது
போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த
இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ
அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,
அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட
இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான
நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது
,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது
அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன
ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து
அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது
சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு
குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்
இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்
கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன
தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து
தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .
இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்
ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது
இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,
இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.
இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட
இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
இலங்கையில் எதிர்வரும் யூன் மாதம் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டும் என அடம் பிடிக்கிறார் கோட்டபாய .
அதற்கு இவர் வகுத்துள்ள நீண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழர் தரப்பாக விளங்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதைக்க வேண்டும்
அதற்கு என்ன செய்திட வேண்டும் என்ற திட்டமிடல் அடிப் படையில் சுமந்திரனை வைத்து இந்த நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்க மக்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க சுமந்திரனை வைத்தே கோத்தபாய விளையாடல்களை ஆரம்பித்தார் ,
இவர் கக்கிய சிங்கள பவுத்த இனவாத தூண்டுதலே ஒன்றுபட்டு சிங்கள மக்கள் வாக்குக்களை அள்ளி வீச காரணமாயிற்று
அவ்வாறே இம்முறையும் அதே பாணியில் கோட்டா வென்றிட இந்த நாரதர் சுமந்திரனை இவ்வாறு தமது நிருபர் ஒருவர் ஊடாக எழுதி கொடுக்க பட்ட கேள்விகளுக்கு இவ்விதம் பதில் வழங்கி ,
சிங்கள மக்களை உசுப்பேற்றுவது ,மறுபுறத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவது ,ஒரு
எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் நோக்கிலேயே சுமந்திரன் இந்த செயலை ஆற்றியுள்ளார்
இருந்து பாருங்கள் வரும் நாட்களில் அவர் இன்னுமொரு மறுப்பு பேட்டி வழங்குவார் அதில் பவுத்த சிங்கள பெரும்பான்மையை தூண்டி விடும் ,புலி எதிர்ப்பு வாதத்தை கக்குவார்
,அவை நடக்கும் ,அதை தான் யானை கட்சியின் வெற்றியை உடைத்து ,அதனை கவிழ்க்க கோட்டபாயவுடன் இரகசியாமாக
,எழுது முனை ஒன்றின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திய இவர் பல கோடிகளை வாங்கி கொண்டு இந்த ஏப்பம் இடலை புரிந்தார்
அதுபலவே இம்முறை நடக்கிறது, இதில் தமிழர்கள் உசாராக வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் ,
ஆனால் ,சம்பந்தன் ,சுமந்திரனை அந்த கட்சியின் பதவிகளில் இருந்து அகற்றும் வேலைகளை புலம் பெயர் மக்கள் ,மற்றும்
,இலங்கை வாழ் தமிழ் மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் ,அழுத்தம் கொடுக்க வேண்டும் .
சுமந்திரனின் இந்த நயவஞ்ச செயலை இனம் கண்டு இவரை விரட்ட வேண்டும் ,தேர்தலில் தோற்றாலும் தான் தேசிய பட்டியல் மூலம்
ஆட்சியில் அமர்வேன் என்ற திமிர் தான் ,சுமந்திரன் இவ்விதம் புரிந்திட காரணம் .
தமிழ் தேசியம் ,அதன் உணர்வு அற்ற இந்த சிங்கள கலவை, இழி செயலானை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் ,மிக நிதானமாக நடைபயில வேண்டும் .
நாம் மேலே சொன்ன இந்த விடயங்களை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து சென்று மீள் பார்வை செய்யுங்கள் ,அப்டியே இவரது அப்பட்ட சித்து விளையாடல்கள் புரியும் மக்களே .
நாம் தமிழராய் நிமிர் வோம் ,நமது எதிர்ப்பை ஒன்றித்து காட்டி வெல்வோம் .கயவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றுவோம் .
- வன்னி மைந்தன் –
தமிழர்களை கைவிட்ட கூட்டமைப்பு -வீட்டுக்கு வந்தால் செருப்படி – மக்கள் குமுறல்
தமிழர்களை கைவிட்ட கூட்டமைப்பு -வீட்டுக்கு வந்தால் செருப்படி – மக்கள் குமுறல்
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இதனால் அன்றாடம் கூலிகள் பெரும்
இடர்களுக்குள் சிக்கி வருகின்றனர் .
ஒருவேளை கூட உண்ணமுடியாத நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்றனர் .
இவ்வேளை தம்மை பிரதி நிதிப் படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்கள் எவரும் தமது நிலைகளை
கண்டறிந்து உதவிட முன்வரவில்லை என பாதிக்க பட்ட மக்கள் தமது உள்ள குமுறலை நமக்கு தெரிவித்துள்னர்
தேர்தல் வந்தால் மட்டும் புலிகளின் வீர வசனங்களை பேசிய படி வீடு தேடி வரும் இவர்கள் ,தேர்தல் முடிந்ததும் மறந்து விடுகின்றனர் என குமுறியுள்ளனர் .
இலங்கை அரச காவல்துறையினர் அப்பாவி மக்கள் மீது போலி குற்ற சாட்டுக்களை சுமத்தி தாக்க படுவதும் ,அதற்கு எதிராக
இவர்கள் எதுவும் செய்திட இயலாமல் இருப்பதையும் சுட்டி காட்டும் மக்கள்
இம்முறை தேர்தலில் இவர்களை தோற்கடிப்பதுடன் ,நாம் யாருக்கு வாக்கு அளிக்க மாட்டோம் என்கின்றனர் .
இது மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டு நிலையாக அமைந்துள்ளது ,இதனை தடுக்க கூட்டமைப்பினர் என்ன செய்ய போகின்றனர் ..? இவ்வாறு நோக்கின் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியே

19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்
19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்
இலங்கையில் ஆளும் பவுத்த இனவாதியான கோட்டபாய ஆட்சியில் தமிழர் நலன்கள் தொடர்பான பல விடயங்கள் சட்ட மூலோபாய மூலம் அகற்ற பட்டு வருகிறது .
அவ்விதம் இலங்கை சரத்துக்களில் உள்ள 19 தாவது சட்ட மூலத்தை தாம் அகற்ற ஒருபோதும் இடமளியோம் என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,முக்கிய நபருமான சுமந்திரன் தெரிவித்துளளார் .
சட்டவாதியாகவும் ,கோட்டபாயவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கும் இவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் காமெடியாக வலம் வருகிறது
























