Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பரவும் எலி காய்ச்சால்
பரவும் எலி காய்ச்சால்
பரவும் எலி காய்ச்சால் ,யாழில் பரவி வரும் எலி காய்ச்சல் ஊடக சிலர் மரணடைந்துள்ளனர் .
இவ்வாறு மரணம் ஆனவர்கள் 20 முதல் 65 வயதுக்கு உள்ளிட்டவர்கள் என யாழ்பாண மருத்துவ நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளாராம் .
இதனை அடுத்து யாழ்ப்பாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
எனவே மக்களே விழிப்பாக இருங்கள் .வேகமாக பரவும் கொடிய வைரஸ் .இந்த நோயில் சிக்காது தப்பித்து கொள்ளுங்கள் உறவுகளே .
அர்ச்சுனா கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனா கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனா கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள் ,கூட இருந்து பயணிக்கும் அன்பர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் .
மக்களே தவற விடாதீர்கள் கேளுங்கள் ,முடிவு உங்கள் கையில் ,நீதிபதிகள் நீங்களே .
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் போஞ்சி, பச்சை மிளகாய், கறிமிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலை 900 முதல் 1000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 400 ரூபாவாகவும், முட்டையின் விலை 44 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
பாகற்காய் மற்றும் தும்பகரவில ஆகியவற்றின் சில்லறை விலை 600 ரூபாவாகவும், தம்பல,வெட்டக்குளு,மேக்கரல் சுண்டைக்காய், நோகோல்,
தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கிழங்கு ஆகியவற்றின் சில்லறை விலை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
புடலங்காய், முள்ளங்கி, கெரட், பூசணிக்காய் ஆகியவற்றின் சில்லறை விலை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாக இருந்தது. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கறிமிளகாய் மொத்த
விற்பனை விலை 800 ரூபாவாகவும், சிவப்பு முட்டைக்கோஸ் ஒரு கிலோ கிராம் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் உள்ளது. .
இது தவிர சில பகுதிகளில் தேங்காய் 200 ரூபாவாகவும், அதே தரம் கொண்ட தேங்காய் எண்ணெய் போத்தல் 800 ரூபாவாகவும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு
கிலோ கிராம் சிவப்பு வெங்காயத்தின் சில்லறை விலை 450 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா
நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா
நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா என அவரது களத்தில் பணியாற்றும் திலீப் என்கின்ற அன்பர் தெரிவித்துள்ளார் .
வெள்ள நிவாரணம் என கூறப்பட்டு வழங்க பட்ட பொருட்களில் ,ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி வழங்க பட்டுள்ளது .
அவ்விதமன் 150 பொதிகள் 150,000 ரூபாவுக்கு வழங்க பட்டுள்ளது எனவும் அது தனது சொந்த பணம் என அவர் தெரிவித்துள்ளார் .
அதனால் இப்பொழுது அதே கால பகுதியில் அர்ச்சுனாவினால் மக்களிடம் சேகரிக்க பட்ட 13 லட்சம் ரூபாய்கள் எங்கே என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அப்படி என்றால் அந்த நிதியை அருச்சுனா என்ன செய்தார் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அப்படி அந்த நபர் கூற்று படி அதனை அர்ச்சுனா ஊழல் செய்து விட்டாரா என்பதே கேள்வியாக உள்ளது .
இதற்கு அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
மக்கள் அவலத்தில் அந்த மக்களுக்கு உதவி என்ற போர்வையில் கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகத்தை இது அதி தீவிர படுத்தியுள்ளது .
அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா என்பதே மக்கள் மத்தியில் இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
ரணில் ஆட்சியில் பல மில்லியன் அமெரிக்கா டொலர் கடனாக வாங்கி குவிக்க பட்டுள்ளது .
அவ்வாறு வாங்கி குவிக்க பட்ட கடனை வட்டியுடன் சேர்த்து இப்பொழுது மீள செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளும் அனுரா அரசு தள்ள பட்டுள்ளது .
அதனால் இலங்கையின் நிதி நிலை நெருக்கடியை சமாளித்து அதன் ஊடாக தனது அரியணையை அனுரா குமார திஸாநாயக்கவினால் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது .
களமுனை நகர்வை உற்று பார்க்கும் பொழுது விரைவில் ,ஆளும் அனுரா ஆட்சி கவிழ்க்க படும் நிலையயே காணப்படுகிறது .
NDF தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
NDF தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
NDF தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
கொழும்பு, டிசம்பர் 11 (டெய்லி மிரர்)- புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல் ஆணையம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து 13 லட்சம் ரூபாய்கள் பெற பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து இருந்தார் .
ஆனால் மக்களுக்கு ஷாப்பிங் பையில் உணவு வழங்கி விட்டு அதற்கு 13 லட்சம் செலவு செய்ததாக கணக்கு அறிக்கை காண்பிக்க பட்டுள்ளது .
அந்த பொதிகளை பெற்று கொண்ட மக்கள் பேசிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உதவிகள் வழங்கிய மக்களுக்கு அந்த பைக்குள் வழங்கிய பொருள் என்ன ..?அதன் விலை என்ன ..? என்பதை அர்ச்சுனா விடம் மக்களே கேளுங்கள் .
ஒரு பைக்குள் வழங்க பட்ட உணவு பொதியின் விலை என்ன என்பதையும் மக்கள் கவனித்து கொள்ளுங்கள்.
25 உணவு பொதியை வழங்கி விட்டு ,13 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காண்பிக்க பட்டுள்ளது .
இதில் இருந்து பணம் எவ்வாறு கொள்ளை ,அல்லது மக்கள் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள் என மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
வெளிநாடுகளில் மக்கள் குளிருக்குள் நடுங்கிய வண்ணம் ,மிக கடினமாக வேலை செய்து அனுப்பும் பணத்தில் ஆடம்பர கொட்டலில் ,அர்ச்சுனா சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவத்துகின்றனர்.
இந்த வெள்ள நிவாரண உதவியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதையே இந்த பொதியின் அளவீடுகள் காட்டுகின்றன என மக்கள் பேசி கொள்கின்றனர் .
படத்தை பார்த்து மக்களே முடிவை எடுத்து கொள்ளுங்கள் .இப்பபோ யார் நல்லவன் யார் கெட்டவன் ,யார் மக்களுக்கானவன் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள்


- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா
தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா
தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு
ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
முற்றாக பற்றி எரிந்த வீடு
முற்றாக பற்றி எரிந்த வீடு
முற்றாக பற்றி எரிந்த வீடு வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்
கொழும்பு துறைமுகத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது.
இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்தியை அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் எதிர்பார்த்திருந்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் தனது உள் மூலதன இருப்புக்களை கொழும்பு மேற்கு சர்வதேச முனைய திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெரும்பங்கு அதானி குழுமத்திற்கு சொந்தமானது.
இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
ஆனால் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததால், அதற்கான நிதி உதவி பெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.
இத்தகைய பின்னணியில், உரிய கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
பாடசாலை சீருடையை வழங்கிய சீனா
பாடசாலை சீருடையை வழங்கிய சீனா
பாடசாலை சீருடையை வழங்கிய சீனா 2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் Key Zheng Hong இன்று (10) பிற்பகல் கொழும்பு
துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள
மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள்
ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாவது தொகுதி டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
கல்வி எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது, எமது அரசாங்கம் கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. நாம் அபிவிருத்தி அடைய கல்வி ஒரு அடிப்படை வழிமுறையாகும். எந்தவொரு சமூக-பொருளாதார வேறுபாடு
அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் கல்வியை அணுக கல்வியில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான பல முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.
பாடசாலை சீருடைக்கான பொருட்களை வழங்குவதில் சீனாவின் பெருந்தன்மை எங்களுக்கு மிகவும் முக்கியமானது, இல்லாவிட்டால் இதற்கான நிதியை நாங்கள் தேட வேண்டியிருக்கும். 2025 ஆம் ஆண்டில், நமது நாட்டில்
உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சீருடை வழங்கும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.
இது சீனாவிடமிருந்து கிடைக்கும் முக்கியமான நன்கொடை என்றும், இதற்கு அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தூதரக அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், துறைமுகங்கள்,
கப்பல்துறை மற்றும் விமான சேவை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை ,ஜூலை 08 ஆம் திகதி அதுருகிரியவில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்றழைக்கப்படும்
கிளப் வசந்த மற்றும் மற்றுமொருவர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துருகிரியவில் உள்ள பச்சைக் கடை உரிமையாளர் உட்பட 8 சந்தேகநபர்களை விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஷார்தீனால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர்கள் 100,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா இரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் எட்டு பேரின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதுருகிரிய பொலிஸில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் குட்டி வசந்த மற்றும் விஜேசூரிய ஆராச்சிகே நயன வாசல விஜேரத்ன ஆகியோரின் கொலை மற்றும் அதற்கு
உதவியமை தொடர்பில் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் பலர் அரச சாட்சிகளாக மாறவுள்ளதாக அரச சட்டத்தரணி சக்தி ஜகோதராச்சி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணிகளான விஷ்வ விதானகமகே மற்றும் நுவான் ஜயவர்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
2025 பட்ஜெட் தயாரிப்பதற்கான விவாதங்கள் தொடங்குகின்றன
2025 பட்ஜெட் தயாரிப்பதற்கான விவாதங்கள் தொடங்குகின்றன
2025 பட்ஜெட் தயாரிப்பதற்கான விவாதங்கள் தொடங்குகின்றன , 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான பூர்வாங்க
அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ஊடக அமைச்சின் செலவினத் தலைவர்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளாய்வு
செய்வதற்கான கூட்டம் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விவசாய அமைச்சின் செலவினத் தலைவி மீதான விவாதம் நடைபெற்றது.
எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு
எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு
பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்க்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில், உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்
தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்
தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை
ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனிப்பட்ட விஜயமாக கொழும்புக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது
வைத்தியசாலையை அண்மித்த நிலையில் திடீரென அவரின் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகி சுயநினைவற்று மயங்கி வீழ்ந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாகக் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
சுயநினைவற்ற நிலையில் அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது
போதையில் கான்ஸ்டபிள் சார்ஜென்ட்டின் உதட்டில் காயம்
போதையில் கான்ஸ்டபிள் சார்ஜென்ட்டின் உதட்டில் காயம்
போதையில் கான்ஸ்டபிள் சார்ஜென்ட்டின் உதட்டில் காயம் அம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி பாடசாலையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகளுக்கான கடமைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில்
வந்து பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை தாக்கிய சம்பவம் திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன்ட் ,
மேல் உதடு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி
கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி
கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்
உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் 7031(c)சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார்பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை
விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்கிறார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்கிறார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்கிறார்,ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதை குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கேட்டு போராட்டம்
நீதி கேட்டு போராட்டம்
நீதி கேட்டு போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதியன்று வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய குறித்த பேரணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அவர்கள்….
சர்வதேச மனித உரிமைகள் நாளாக உலகம் தோறும் இன்று (10) அனுஷ்டிக்கப்படுகிறது. சர்வதேசமும் அனைத்துலகமும் ஈழத்தமிழரை கைவிட்ட நிலையில் மனிதர்களாக எம்மை பார்ப்பதில்லை
எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. நமக்கு சர்வதேச நீதி வருமா? என்ற கேள்வியோடு இந்த தினத்தில் நாம் போராடி வருகிறோம்
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத நிலையில் ஐ.நா அனைத்துலக சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகளின் அவையின் கீழ், சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம்.
எங்கள் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களே! அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்ல. இன்று குழந்தைகளை வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட வரிசையில் இலங்கை சர்வதேச ரீதியில் முதலாம் இடத்தில் இருக்கிறது.
எமது 40ற்கு மேற்பட்ட குழந்தைகளின் முகங்கள் இன்றும் எம் கண்முன்னே அழியாத உயிர்ப்புக்களாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிப்போரில் வலிந்து காணாமல் போன உறவுகள் வரிசையில் இந்தக் குழந்தைகள் என்ன
ஆனார்கள் என்ற விம்மலும் கண்ணீரும் இன்னும் எம்மை வருத்துகிறது. எமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை நாம் சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
இது அன்னையர் தினமோ, ஆசிரியர் தினமோ அல்ல, அவ்வாறுக்கூறி கடந்து செல்ல முடியாது. இது மனித உரிமைகள் தினம். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எம் உயிருக்கும் மேலான வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் எம்மையும் மதிக்க வேண்டும். மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
ஆனால், இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். இதுவரை வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 300க்கும் அதிகமான உறவுகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உறவுகளை இனி யார் தேடுவது.
எப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கிடைத்து எம்மைப் போல் அழுபவர்களின் குரல் ஓய்கிறதோ, அன்று தான் எமக்கு மனித உரிமைகள் தினம் என வலியுறுத்தி நிற்கின்றோம் என்றனர்.


























