மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில் ,லண்டனில் ப்ளூடூத் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவன் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை முடிந்து வீடு நோக்கி செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த சக மாணவர்களினால் இவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை பறி கொடுத்த பெற்றோர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த வருடத்தில் இடம்பெற்ற முதலாவது மாணவ படுகொலையாக இது காணப்படுகிறது.
குறித்த படுகொலையானது பயத்தையும் பீதியையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்த படாவிட்டால் பாடசாலை பாதுகாப்பு பதிலே காணப்படும் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









