Tag: கொள்கலன்கள்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விசாரணை ஆரம்பம்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விசாரணை ஆரம்பம்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விசாரணை ஆரம்பம் ,சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதை விசாரிக்கும் குழுவில் உபாலி பன்னிலகே பெயரிடப்பட்டுள்ளார்
முறையான பௌதீக ஆய்வு இல்லாமல்
முறையான பௌதீக ஆய்வு இல்லாமல் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதை விசாரிக்கும் பாராளுமன்றத் தேர்வுக்
குழுவின் உறுப்பினராக அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலையமைப்பு உத்தரவு 106 இன் விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக்கவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கிராமப்புற மேம்பாடு, சமூகப்
பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்
பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக பரிசோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டதை விசாரித்து, சம்பவம் குறித்து
அறிக்கை அளித்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க பாராளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்தக் குழு செயல்படுகிறது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன ,ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல
கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன.
சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது.
இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான
மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா ? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து
காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள்
துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள்
துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக 800 முதல் 1000 வரை கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனங்களே காரணமாகும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று (9) ஊடக சந்திப்பொன்றை நடத்தி சுட்டிக்காட்டினார்.
கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, சாரதிகள் சுமார் ஒரு வாரமாக துறைமுகத்திலேயே தங்க வேண்டியுள்ளதாக சனத் மஞ்சுள கூறினார்.
இதற்கிடையில், கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை சுமார் 20% அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன்களின் தாமதங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தாமதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளமையே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது













