இலங்கையில் சமாதானப் பயணத்தை மேற்கொள்ளும் பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சமாதானப் பயணத்தை மேற்கொள்ளும் பிக்கு

இலங்கையில் சமாதானப் பயணத்தை மேற்கொள்ளும் பிக்கு

இலங்கையில் சமாதானப் பயணத்தை மேற்கொள்ளும் பிக்கு ,இலங்கையில் சமாதானப் பயணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பிக்குகள் வழிநடத்த உள்ளனர்

அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் வாஷிங்டன் வரை

அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் வாஷிங்டன் வரை 10 மாநிலங்களில் 110 நாட்கள் சமாதானப் பயணத்தை சமீபத்தில் நிறைவுசெய்த வணக்கத்திற்குரிய

பிக்குகள் குழுவின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள “சமாதானப் பயணத் திட்டத்திற்கு” அரச ஆதரவு வழங்குவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வணக்கத்திற்குரிய டாக்டர் மெல்பிட்டியே விமலகித்தி தேரர் தலைமை தாங்கினார். ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமநாயக்க இதில் கலந்துகொண்டார்.

திட்டங்களின்படி, அமெரிக்க சமாதானப் பயணத்தின் நிறுவனரான வணக்கத்திற்குரிய பன்னகர தேரர் தலைமையில் பன்னிரண்டு பிக்குகள்

ஏப்ரல் 21 அன்று இலங்கைக்கு வர உள்ளனர். இந்த உள்ளூர் சமாதானப் பயணம், மகா சங்கம் மற்றும் பக்தர்களின் பங்கேற்புடன், ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை ஏழு நாட்களுக்கு நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் உள்ள புனிதமான ஜெய ஸ்ரீ மகா போதியில் சமய அனுஷ்டானங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன்

மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களுடன்

தொடங்கும். மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களுடன் பெறப்பட்ட ஸ்ரீ மகா போதி கன்று, ஊர்வலம் முழுவதும் சடங்குபூர்வமாக எடுத்துச் செல்லப்படும்.

ருவன்வெலி மகா சேயாவில் சிறப்பு அனுசரிப்புகளுக்குப் பிறகு, அனுராதபுர மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுடன் சமாதானச் செய்தி பகிரப்படும்.

சங்ககத தட்சிணை வழங்கிய பின்னர், ஏப்ரல் 22 ஆம் தேதி காலை தம்புள்ளையிலிருந்து இந்த ஊர்வலம் மீண்டும் தொடங்கும். இந்த ஊர்வலம் நௌலா, மாத்தளை, கண்டி, கடுங்கன்னாவ, கேகாலை, தோலங்கமுவ,

கஜுகம, யக்கல, மஹாரா மற்றும் களனி உள்ளிட்ட பல பகுதிகள் வழியாகச் சென்று, ஏப்ரல் 28 ஆம் தேதி சுதந்திர சதுக்கத்தில் நிறைவடையும்.

நிகழ்ச்சியின் முடிவில், ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீ மகா போதி கன்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வருகை தந்த மகா சங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்.

தூய்மையான இலங்கை செயலகத்தின் ஆதரவுடன், பிக்குகளுக்குப் பிட்சை மற்றும் சிற்றுண்டி வழங்குதல், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற

அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

பிக்கு முன் மண்டியிட்ட அனுரா
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு முன் மண்டியிட்ட அனுரா

பிக்கு முன் மண்டியிட்ட அனுரா

பிக்கு முன் மண்டியிட்ட அனுரா ஜனாதிபதி அமரபுர மற்றும் ராமண்ண மகாநாயக்க தேரர்களிடமிருந்து புத்தாண்டு ஆசிகளைப் பெறுகிறார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இலங்கை அமரபுர மகா நிக்காய மற்றும் இலங்கை ராமண்ண மகா நிக்காயவின் பிரதான தேரர்களிடமிருந்து புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார்.

வெள்ளவத்தையில் உள்ள அமரபுர மகா நிக்காயவின் தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய

கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரரைச் சந்தித்தார்.

சந்திப்பின் போது, ​​தேரரின் நலம் விசாரித்த ஜனாதிபதி, ஒரு சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர், மகாநாயக்க தேரர் செத் பிரித் ஓதி, புத்தாண்டுக்கான ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.

ஜனாதிபதி திசாநாயக்க, மீரிகம, மினிஒலுவவில் உள்ள ஸ்ரீ வித்யாவாஸ் மகா பிரிவேனாவிற்கும் விஜயம் செய்தார், அங்கு அவர் ராமண்ண மகா

நிக்காயவின் பிரதான தேரர் அதிவணக்கத்திற்குரிய அக்கமஹா பண்டித மகுலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார்.

தேரரின் நலம் குறித்து விசாரித்த பின்னர்

தேரரின் நலம் குறித்து விசாரித்த பின்னர், தேரருடன் ஒரு சுருக்கமான கலந்துரையாடலை நடத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில், தலைமை தேரர் செத் பிரித் ஓதி, புத்தாண்டில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்நாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு ,அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் குறைந்தது 300 புத்த பிக்குகள் சிக்கித் தவிக்கின்றனர்: அமைச்சர்.

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில்

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிக்கும் 300 புத்த பிக்குகளை மீட்பதற்கான நடவடிக்கைகள்

நடைபெற்று வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.

வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கை

பல வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பிக்குவிற்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவிற்கு சிறை

பிக்குவிற்கு சிறை

பிக்குவிற்கு சிறை ,இனவாதம் பேசி மக்களுக்கு இடையில் சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய ஞான தேரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இஸ்லாமியர் தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வன்முறையில் ஈடுபட்ட ஞான தேரர் பிக்கு விற்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் மத மோதல்களையும் இன மோதல்களை வெளிப்படுத்த முனைவர் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு ஒன்பது மாத தின தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வீடியோ

நீதிமன்ற தீர்ப்புக்கு சமூக அளிக்காமல் மறைந்திருந்த இவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு இருந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதவான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் இதனால் தற்போது சிங்கள இனவாதிகள் கலக்கத்தில் உறைந்திருக்கின்றன.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ மறுத்து பிரிவினைகளை ஏற்படுத்த முனையும் இனவாதிகளுக்கு என்ன தீர்ப்பு ஒரு சாட்டையடியாக மாறியுள்ளது.

மக்கள் காணியை அபகரித்த பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் காணியை அபகரித்த பிக்கு

காணியை அபகரித்த பிக்கு

மக்கள் காணியை அபகரித்த பிக்கு ,திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர்

விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு

சிறுபோக நெற்செய்கை

மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் காணியை அபகரித்த பிக்கு

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும்

விவசாயக் காணிகள்

திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்பு த் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வர்த்தமானி அறிவித்தல்

2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா

கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்தனர்

பின்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரான பிக்கு 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்களை குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பிக்கு யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமடைந்ததையடுத்து பெற்றோர்கள் அவரை பிக்குவிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பிக்கு, சிறுவனை சில நாட்கள் அங்கேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என பெற்றோரிடம் கூறியதாகவும், அதன்படி சிறுவனை அங்கேயே தங்க வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இரட்டைர்களில் மற்றையவர் தனது சகோதரர் இல்லாமலேயே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் காரில் வீட்டுக்கு சென்று அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரான பிக்கு சிறுவர்கள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர்கள் தற்போது சிகிச்சைக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பௌத்த மதத்திற்கு எதிரியான பிக்கு கைது

பௌத்த மதத்திற்கு எதிரியான பிக்கு கைது

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்ற பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிக்கு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

சந்தேகநபரான பிக்கு நாளை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு .

வீடியோ வருகின்றனர்

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று

ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார்.

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடகோமடிய, கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான உத்தியோகத்தர் என்பதுடன், இவர் குறித்த பிக்குவின்

20 வயதுடைய சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த காதல் உறவை நிறுத்துமாறு பிக்குவால் பல தடவைகள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், கடந்த 16ஆம் திகதி குறித்த

பொலிஸ் உத்தியோகத்தர் பிக்குவின் சகோதரியின் வீட்டுக்குச் சென்ற போது, பிக்கு குறித்த உத்தியோகத்தருக்கு தொலைபேசி மூலம் அழைத்து தன்னை சந்திக்குமாறு அறிவித்திருந்தார்.

பின்னர் பல்லேகம கங்கொட வீதியில் உள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சந்தேக நபரான பிக்கு, தனது பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தெனியாய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

பௌத்த பிக்கு பொலிஸாரின் தொப்பியை, ஸ்டாரை கழட்டு கேடுகெட்ட வார்த்தைகளினால் திட்டும்போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார், அமைதியான முறையில் போராட வந்த எங்களை அடக்குவதற்கு

முற்படுவதானது இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்பதை வெளிப்படுத்துகின்றதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகளின் ஆக்கிரமிப்பினை தடுத்துநிறுத்துமாறு கோரி அப்பகுதியை சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 24 நாட்களாக போராடிவருகின்றனர்.

செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தருவதை முன்னிட்டு செங்கலடி-கொம்மாதுறை பகுதியில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

இதன்போது கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித்தடைகள் போடப்பட்டு நீர்பாய்ச்சும் இயந்திரம், கண்ணீப்புகை இயந்திரங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் வீதியை மறித்து போராடிமுடியாது எனவும் கோரிய நிலையிலேயே போராட்டமானது கடுமையாக மாறி பொலிஸாரின் தடையினை மீறிசெல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் இழுபறி நிலையேற்பட்ட அதேநேரம் தடையினை உடைத்துச்செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

போராட்டத்தின் போது தடையை உடைத்துச்செல்ல முற்பட்ட பொலிஸார் அவர்களை தடுத்த நிலையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.இதன்போது தடையினையுடைத்துச்செல்ல முற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்க தலைவி மீது பொலிஸார் தாக்குதல் முயற்சிகளை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் எம்.பிக்களான

ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் கால்நடை பண்ணையாளர்களும் சட்டத்தரணி சுகாஸ{டனும் வாய்கத்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதன் காரணமாக மாற்று வழியூடாக போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டன.

புல்மோட்டையில் பிக்கு அராஜகம்
Posted in இலங்கை செய்திகள்

புல்மோட்டையில் பிக்கு அராஜகம்

புல்மோட்டையில் பிக்கு அராஜகம்

பிக்கு ஒருவர் டோசர் இயந்திரங்களைக் கொண்டு தனது சகோதரனுடன் இணைந்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பவம் ஒன்று புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் இணைந்து புல்மோட்டை

பகுதியில், முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக அத்துமீறி அபகரித்து, அங்கே டோசர் இயந்திரங்களை கொண்டு காணிகளை அபகரிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக புல்மோட்டை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

புல்மோட்டையில் பிக்கு அராஜகம்

கடந்த வெள்ளிக்கிழமை (22) புல்மோட்டை பகுதியில் உள்ள புல்மோட்டை இல 01 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 06 முஸ்லிம் குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை, டோசர் இயந்திரங்களை கொண்டு அபகரிக்கும் நடவடிக்கைகளில் குறித்த பிக்கு ஈடுபட்டுள்ளார்.

இதனையறிந்த காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் சென்று அத்துமீறல், அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் காணிக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளன எனவும் பாரம்பரியமாக தாம் விவசாயம் செய்துவரும் நிலங்களை விட்டு வெளியேறுமாறும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்போது டோசர் இயந்திரத்தோடு அப்பகுதிக்கு வந்து அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரிசிமலை பௌத்த பிக்கு பனாமுரே திலகவங்ச, இந்த பகுதி பௌத்த விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவித்ததோடு, இந்த காணி வர்த்தமானியில் பௌத்த விகாரைக்கான இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதன்போது டோசர் இயந்திரத்தின் சாரதியான குறித்த பிக்குவின் சகோதரர் சம்பத் என்பவர் டோசர் இயந்திரத்தின் முன்பகுதியால் காணி அபகரிப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பெண்களை மோதும் விதமாக அச்சுறுத்தியுள்ளார்.

அவ்வேளை, டோசர் இயந்திரத்தின் முன்பகுதியால் மோதுண்டு காணி உரிமையாளரான பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சம்சுதீன் சுலைகா (42) என்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரிசிமலை பௌத்த பிக்குவின் ஆதரவில் பல்வேறு பௌத்த பிக்குகள் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து, பௌத்த விகாரைகளை அமைத்து வருவதோடு பௌத்த விகாரைகளுக்கு சொந்தமான காணிகள் என பல நூற்றுக்கணக்கான நிலங்களையும் அபகரித்து வருகின்றனர்.

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை

நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எட்டுப்பேரும் கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டனர் அதன்போதே நீதவான் ஷாமினிமா விஜேபண்டார மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் எட்டுப்பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்தனர். ஒருசாட்சியாளர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.

இந்நிலையில் முறைப்பாட்டார்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் இன்னும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்படவேண்டி உள்ளனர். ஆகையால், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவேண்டாம் என்றும் நீதிமன்றிடம் கேட்டுக்​கொண்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி தேரர் மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.