Tag: தட்டுப்பாடு
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு ,அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.
மேலும், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கூறிய விடயங்களை தெரிவித்தார்.
நாட்டின் மாதாந்திர தேங்காய் தேவை 250 மில்லியன் என்றும், அதில் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கும், 100 மில்லியன் தேங்காய்கள் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டின் வருடாந்திர மொத்த தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் கொட்டைகளாக இருந்த போதிலும், கடந்த ஆண்டு அது 2,680 மில்லியன் கொட்டைகளாகக் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு தேங்காய்
உற்பத்தி 2,400 முதல் 2,600 மில்லியன் கொட்டைகளாகக் குறையும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200 மில்லியன் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக ஜயந்த சமரகோன் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு,இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணமாக விளங்கியது கடந்தகால ஜனாதிபதி என பாராளுமன்ற இடம் பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இலங்கை நாடெங்கும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என எம்பி ஒருவர் ஒருவர் முள்ளங்கி தள்ளினார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு காரணமாக விளங்கியது இவரது அரசு அது என்ன ஒரு குற்றம் சாட்டினார்.
இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இந்த சிவப்பு அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்ததாக எம்பி முழங்கினார்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அதிலிருந்து மீள முடியாத நிலையையும் அவரை உருவாக்கியவர் என்பது இவரது கூற்று.
இதனை அடுத்து எந்த தாக்குதல் சம்பவம் பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள காணொளிகளை பார்க்கும் நோக்குகின்ற பொழுது காணப்படுகிறது.
உப்புத் தட்டுப்பாடு
உப்புத் தட்டுப்பாடு
உப்புத் தட்டுப்பாடு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் உள்நாட்டு மற்றும் தொழில்துறை
தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதுள்ள தீர்வை விகிதத்தின்படி, 30,000 மெட்ரிக் டன் கச்சா அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இறக்குமதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப்
பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு எவ்வித சிக்கலும் இன்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும் என்றும், தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக்
கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் 111 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில்
அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
”மூன்று மாதங்களுக்கு முன்னர் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
அது தற்போது 111 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைவடையும்” என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யப் போதுமான நிதி உள்ளதா எனக் கேட்ட போது ” இலங்கை கடந்த வருடத்திலிருந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம்.
நாம் இப்போது அதை சரிசெய்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் நிதியை விடுவிப்பதில் சிறு சிக்கல்கள் இருக்கின்றன.
இருந்தாலும் திறைசேரியிலிருந்து மருந்துக் கொள்வனவுக்குப் போதுமான நிதியைப் பெற்று வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலைய மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரசாயன உரம், கிருமிநாசினி விலை உயர்வாலும் தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்களாக பெய்த மழையினாலும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி
உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிக விலை கொடுத்து மரக்கறிகள் கொள்வனவு
செய்வதற்கும் மரக்கறிகள் தேடி அலைய வேண்டியிருப்பதாகவும் அவ்வாறு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளை
வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு விற்பனை
செய்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் நுவரெலியா மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Featured
தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்
தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்
இலங்கை தமிழர் தாயாக பகுதியான வடக்கு பகுதியில் எரிபொருளுக்கு தட்டு பாடு இல்லை எனவும் இதனால்
மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார் .
ஈரான்,அமெரிக்கா முறுகல் உச்சம் பெற்ற நிலையில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .
மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகி அச்சம் கொள்ளாது இயல்பு வாழ்வுக்கு திரும்புமாறு வேண்டு கொள் விடுக்க பட்டுள்ளது





























