Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இதை சாப்பிட்டால் கொரனோ வைரஸ் பறந்து போகும் – பிரஞ்சில் வைரலாகும் video
இதை சாப்பிட்டால் கொரனோ வைரஸ் பறந்து போகும் – பிரஞ்சில் வைரலாகும் video
உலக மக்களை மிரள வைத்து கொண்டு இருக்கும் கொரனோ வைரஸ் நோயினை விரட்டிட இதனை சாப்பிட்டால் போதும் என Ivory Coas
அன்பர் ஒருவர் தனது கருத்தை பதிவு செய்து .செய்முறை விளக்கத்துடன் சமூக வலைதளத்தில் காணொளி பதிவிட்டுள்ளார்
அந்த காட்சியானது தற்பொழுது மில்லியன் மக்கள் பார்வையை கடந்து வைராலகி வருகிறது
இது பிரான்ஸ் ஊடங்களும் இதனை பிரசுரித்துள்ளன ,பிரான்ஸ் தெரிந்தவர்கள் இதனை செய்து பாருங்க .
தேசிக்காய்,உள்ளி,இஞ்சியை போட்டு அரைத்து சூடு தண்ணியில் போட்டு குடித்து வந்தா கொரனோ ஓடி போயிடுமாம்
நம்ம நித்தம் தேனிருக்குள் இஞ்சி ,கறுவா, போட்டு மூவேளை குடித்து வாரம் ,அப்டின்னா நம்மளை காப்பி அடித்து இருப்பாரோ …?

வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே
வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே
இலங்கை வன்னி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் வறுமை கோட்டுக்கு
கீழ் உள்ள அடையாள காணப்பட்ட குறிப்பிட பட்ட மக்களுக்கு தமிழ் ஊடக போராளிகள்
இணைந்து உதவிகளை வழங்கியுள்ளனர் .வவுனியா தொடர் வன்னி வரை இவர்கள் இந்த உதவும் உணவு வழங்கும் பணி இடம்பெற்று வருகிறது
அமைப்புக்கள் நிறுவனங்கள் இவ்விதம் வழங்குவது கண்டிருப்போம் ,முதன்முதலாக இந்த ஊடக போராளிகள் களத்தில் கால்
பதிக்கின்றனர் இது மகிழ்வா இல்லை அதன் பின்னால் அரசியலா ..? என்பதை காத்திருந்து பார்க்கலாம் .
எது எப்படியோ இவர்கள் உதவும் மன நிலைக்கு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்




துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
வெள்ளவத்தையில் துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
இலங்கை வெள்ளவத்தையில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாய் தர்க்கம் முற்றி இந்த கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது
காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவாவில மருத்துவ மனையில் அனுமதிக்க
பட்ட பொழுதும் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்,இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக கத்தி குத்த்து சம்பவங்கள் அதிகரித்து
செல்கின்றன ,இதனை கட்டு படுத்த முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

முப்படை, பொலிஸார் சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு
முப்படையினர், பொலிஸார் சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாராட்டியுள்ளார்.
யாழ் குடா நாட்டில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற நூற்றுக்கணக்கான முப்படையினர், விஷேட
பொலிஸ் அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸ் ஆகியோரை பாராட்டும் முகமாகவும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் முகமாகவும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள்,
யாழ்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டதோடு, தங்கள் சொந்த உயிருக்கான
ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல், பாராட்டத்தக்க மனிதாபிமான சேவைகளைச் செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.
கூட்டத்தின் மத்தியில் அவர் உரையாற்றுகையில், அவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு, அதிமேதகு
ஜனாதிபதியின் பாரம்பரிய இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தடுப்பு
நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள சவால்களை பற்றியும் விவரித்தார்.
“யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆபத்தான மாவட்டங்களில் உங்களால் மேற்கொண்ட
அர்ப்பணிப்பானது, சுகாதார அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து. பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பல்வேறு நிலைகளில் பல தொடர்புகள் இருந்தன, மேலும் அவர்கள் தங்கள் அறிவுக்கெட்டிய
வகையில் இல்லாமல் வைரஸை பரப்பியிருக்கலாம். அதேபோல், அந்த நபர்களில் பலர் தாங்கள் சென்ற இடங்கள் மற்றும் பற்றிய தகவல்களை மறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தமையினால்
, எங்கள் படைகளும் பொலிஸாரும் பலவழிகளில் செயல்பட வேண்டியிருந்தது. ஏனெனில். எங்கள் அர்ப்பணிப்புள்ள படையினரும் பொலிஸாரும் அவர்களின் 2 ஆவது, 3 ஆவது,மற்றும் 4
ஆவது கட்ட தொடர்புகளை சரியாக உறுதிப்படுத்த இரவும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது. அவர்களின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அனைத்து தொடர்பு
முறைகளையும் கண்காணித்து அல்லது கண்டறிய வேண்டியிருந்ன. உங்களால் கண்டறியப்பட்ட அனைத்து தொடர்புடைய தகவல்களும் ,எங்கள் புலனாய்வுத்துறை மற்றும்
பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டனர், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அனைத்து சிவில் அதிகாரிகளுக்கும் அவர்களின் சிறந்த பணிகளையும்
உதவிகளையும் தொடருமாறு கேட்டுக்கொண்ட அவர், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள்
மற்றும் யாழ் மக்களின் நலன் கருதி கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிராக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட
கடற்படை, விமானப்படை, விஷேடபொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ்
அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் பாதுகாப்பு செயலாளரின் உரையில் கலந்து கொண்டனர்.

பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட
செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்றுக் காலை (17) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி
புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக
குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர்,
வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்
சீனா அரசு இலங்கைக்கு தனது விசேட விமான மூலம் பீ சீ ஆர் இயந்திரங்கள் அனுப்பி வைத்துள்ளது
,இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெறும் பரஸ் பர இராயத்தந்திர ,நட்பு உறவுகளின்
அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது இவ்வாறு அனுப்பி
வைக்க பட்ட இயந்திரங்களை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது என்பதே வியப்பு
முன்னர் போலி கொரனோ கருவிகளை வழங்கியது ,அதன் பின்னர் இப்பொழுது
இலவசமாக இதனை வழங்கியுள்ளது ,சீனாவின் இரு முகத்தை இதன் மூலாம் கண்டு கொள்ள முடிகிறது

கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது
கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது
இலங்கையில் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட ஊரடங்கு
சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை அந்த கடை பிடித்தலை அலட்சிய
படுத்தி வீதியில் உலவி திரிந்த சுமார் 30,631 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் பல்லாயிரம் பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்
,அவர்கள் வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளன,தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருகிறது
மேலும் அதனை மீறி சென்றால் இவ்வாறான கைதுகள் இடம் பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கொரனோவால் பெற்றோர் இழந்த 3 பெண் பிள்ளைகளுக்கு 109 ஆயிரம் டொலர் வழங்கிய மக்கள்
கொரனோவால் பெற்றோர் இழந்த 3 பெண் பிள்ளைகளுக்கு 109 ஆயிரம் டொலர் வழங்கிய மக்கள்
கனடாவில் யாழ்பாணத்தை சேர்ந்த தம்பதிகள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர் .
இந்த பெரும் துயரில் ,அவர்களின் வயது வந்த மூன்று பெண் பிள்ளைகள் தவித்து வந்தனர் ,மிக மன உளைச்சலில் அந்த செல்வ குழந்தைகள் உள்ளனர் .
இதில் அவரது சிறுவயாது தோழி ஒருவர் நிதி சேகரிப்பை மேற்கொண்டார் ,அதன் ஊடாக இதுவரை 109 ஆயிரம் கனடிய டொலர்கள் சேகரிக்க பட்டுள்ளன
பிள்ளைகளின் எதிர்காலம் கருதி உலகம் முழுவதும் பரவி வாழும் அணைத்து இன மக்களும் இந்த பணத்தினை வழங்கி வருகின்றனர்
எனினும் இவ்வாறு கமிஷன் வழங்க படும் பணம் இவர்களுக்கு தேவை இல்லை என அவர் உறவினர் ஒருவர் தெரிவித்து தனது மன
குமுறல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் ,எனினும் அவர் அந்த தமிழ் சோதரியை வாழ்த்தியும் இருந்தார்
இவர்களது கோபம், அந்த உதயன் பத்திரிக்கை மீதே ,அதனால் கனடா தமிழர்களே கண்டு கொள்ளுங்கள் ,இன்று இவர்களுக்கு
,நாளை உங்களுக்கும் இந்த கும்பல் இந்த இழி செயலை செய்திட கூடும் ,இதனை முடிந்தவரை பரப்புங்கள் ,அந்த பத்திரிக்கையை புறக்கணியுங்கள்
கடைகளுக்கு பத்திரிகை விநியோகித்தவர் காலமாகி விட்டனர் ,எனவே உங்கள் கடையில் உள்ளவர்கள் கவனமாக இருங்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தியது தவறா ….?
இதனை தெரிவித்து விட்டார் என்பதற்காக பழிவாங்குமநோக்குடன் இந்த உதயன் பத்திரிகை இவ்வாறு இந்த குடும்ப உறவுகளை பழிவாங்கிட செய்துள்ளதா தெரிவிக்க படுகிறது
நாம் தமிழராய் நாம் இணைவோம் ,அடுத்தவன் துயரில் இன்பம் கொண்டு அந்த பெண் பிள்ளைகளின் உளவியலை சிதைக்கும் இவர்களை விரட்டியடிக்க வேண்டும்
பெற்றவரை இழந்த தவிப்பு அதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும் ,இவர்களுக்கு எங்கே இது புரிய போகிறது
தமிழா எழு இந்த பிள்ளைகளை அனைத்து கொள் ,எறும்பு உண்ண மாவில் கோலம் போட்ட தமிழா ,இவர்கள் வாழ்ந்திட ,உளவியல் சோர்வு அகற்ற இந்த செய்தியை பரப்பு ,
பணமல்ல இப்பொழுது தேவை இவர்களுக்கு மன அமைதியும் ,நிமிர்ந்து வாழும் மனோதிடத்தை வழங்க வேண்டும் ,இவர்களை தெரிந்த
உறவுகளை மன தைரியம் வழங்குங்கள் ,ஆதரவாக ஒரு மொழி பேசுங்கள் அது போதும் .மன்றாடி கேட்கிறோம் .கடவுள் உங்களை ஆசீர் வதிப்பார்
வீழ்ந்து கதறும்
விடலைகள் பாராய் – உள
சோர்வு அகற்றிட
சோகம் துடைப்பாய் …!
இந்த இணைப்பில் அழுத்தி பண சேகரிப்பு முழு விபரங்கள் பார்வையிடுக

இலங்கையில் கொரோனா நோயாளர் 241 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா நோயாளர் 241 ஆக அதிகரிப்பு
இன்றைய தினம் (2020.04.17) இது வரையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் மூவர் (3)
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட
வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று பரவுவதைதடுக்கும் மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 241 ஆகும்
இன்றைய தினத்தில் புதிவான மூன்று நோயாளர்கள்; புனானை தனிமைப்படுத்துல்
மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பெண்களாவார்கள்.
இதே போன்று இன்றைய தினம் சுமார் 530 பேருக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
பிரிட்டனில் பரவி அவரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த இருந்த சகோதரர்கள் பலியாகியுள்ளனர்
12 நாளுக்கு முன்னர் சகோதரர் பலியானார் ,அதனை அடுத்து தற்போது தம்பியும் இறந்துள்ளார்
தொடர்ந்து பிரிட்டனில் பல தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலினால் தினம் தோறும் இறந்த வண்ணம் உள்ளனர்
மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சிலர் தம்மை தாமே சுய தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்கியுள்து குறிப்பிட தக்கது

போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி
போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி
இலங்கை பலாங்கொடை பகுதியில் அதிக போதையில் வீடு வந்து தகராறு புரிந்த கணவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார் மனைவி
அன்பு செலுத்துதல் வேண்டும் தான் அதற்காக இப்படியுமா ..?அன்பை கொட்டுவது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .
நாள் தோறும் இவ்விதம் தொல்லை கொடுத்து வந்த கணவனை தாக்கிட காத்திருந்த மனைவி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார் போலும் .
பலத்த காயமடைந்த நிலையில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
ஊரடங்கு வேளையில் மது விற்க தடை விதிக்க பட்ட பொழுதும் கணவன் குடித்து வீடு வந்த வெறியாட்டம் போட்டதால் அன்பான மனைவி வேறு வழியின்றி இப்படி தாக்கி விட்டார் ,
கொரனோ வேளையிலும் குடியை விட மறுக்கும் நபர்களை இப்படி தாக்குவது சரிதான் போங்க …….
குடி மகன்களே கவனம் ,மண்டை உடைந்திட போகுது யாக்கிரதை ,

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ
நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்
என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

கொரனோ தமிழ் நோயாளியை வீட்டை வீட்டு வெளியே துரத்திய தமிழர் -லண்டனில் பட்டினியோடு பலியான தமிழ் வாலிபர்
கொரனோ தமிழ் நோயாளியை வீட்டை வீட்டு வெளியே துரத்திய தமிழர் -லண்டனில் பட்டினியோடு பலியான தமிழ் வாலிபர்
லண்டன் கரோ பகுதியில் இந்தியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ நோயில் சிக்கி பாலியாகியுள்ளார் ,இவர் டாக்சி ஊபர் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்
பயணிகளிடம் இருந்து நோய் தொற்று கடத்த பட்டு பாதிக்க பட்ட இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் ,
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் .இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளன.
இவரது இழப்பை அடுத்து குறித்த குடும்பத்திற்கு உதவிட ஆன்லைன் மூலம் பணம் சேகரிக்க படுகிறது ,
இதுவரை பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட பவுண்டுகள் சேர்க்க பட்டுள்ளன ,
அதாவது 13 லட்சம் இந்தியா ரூபாய்கள் மக்கள் வழங்கியுள்ளனர் ,தொடர்ந்து நிதி பங்களிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது
நான்கு மற்றும் ஆறு வயதுடைய அந்த பிள்ளைகள் எதிர்கால வாழ்வை கருதி மக்கள் இந்த நல்லுதவியை புரிந்த வண்ணம் உள்ளனர்
இவருக்கு நோயானது தொற்றியதை அறிந்த வீட்டு உரிமையாளர் அவரை வற்புறுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார் ,
யாருமே இவருக்கு இறுதி வேளையில் உதவிட முன் வரவில்லை
Rajesh was forced out of his apartment in Harrow & was starving in car for a short while before admitting himself to Northwick Park Hospital on 3rd
April. A week later he passed away with no one by his side, neither family nor his friends who were unaware of his situation until the hospital staff reached out during his final hours.
காருக்குள் மூன்று தினங்கள் பட்டினியோடு உறங்கிய அவர் , பின்னர் Northwick Park Hospital மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் ,அங்கேயே பரிதாபகரமாக இறந்தும் விட்டார்
கண்ணீரில் தவிக்கும் குடும்பத்திற்க்கு இந்த உதவிகள் சற்று மன ஆறுதலை தருவிக்கும் படியாக உள்ளது என அவர்களது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்
அந்த உதவிகளை பார்வையிடவோ ,வழங்கவோ விரும்பின் இதில் அழுத்துங்கள்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு 59,419 பேர் காத்திருப்பு
வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு 59,419 பேர் காத்திருப்பு
இலங்கையில் இருந்து வெளி நாடுகளுக்கு வேலை தேடி சென்றவர்களும்
பிற அலுவல்கள் நிமிர்த்தம் சென்றவர்களும் மீள நாடு திரும்பிடும் நோக்குடன்
வெளிநாட்டு தூதராலயங்களில் தமது பெயர்களை பதிவு செய்து காத்துள்ளனர்
இவர்ளை அழைத்து வர இலங்கை விமானங்கள் செல்ல தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
அரேபிய நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்
,தமது மக்களை விரைவில் தாம் தமது நாடு நோக்கி அழைத்து வருவோம் என அரசு மீள உறுதி அளித்துள்ளமை குறிப்பிட தக்கது

வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை
வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தற்கால நிகழ்வை அடுத்து அதனை செலுத்துவது பிற் போடுதல் காலம் வழங்க பட்டுள்ளது
இதற்குரிய வரையறையுடன் இந்த கால அவகாசம் வழங்க படுகிறது
இவ்வாறு கடன் பெற்றவர்கள் கீழ் வரும் உங்கள் பகுதியை தொடர்பு கொண்டு உரையாடி பணத்தினை பிற்போடலாம் என அரசு தெரிவித்துள்ளது
கொவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக கடன் மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்
வங்கி மேற்பார்வைத் திணைக்களம்
0112 477133
0112 477134
0112 477360
0112 477659
0112 398743
0112 398746
0112 398790
0112 398815
0112 398820
0112 398824
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
0112 477500
0112 477504
0112 477258
0112 477562
0112 477573
0112 398786
0112 398806
0112 477380
0112 477340
0112 477495
0112 398774
0112 477026

கொரனோ தொற்றால் 1, 630 பேர் தனிமை படுத்தல் – இராணுவத் தளபதி
கொரனோ தொற்றால் 1, 630 பேர் தனிமை படுத்தல் – இராணுவத் தளபதி
ஆயிரத்து 630 பேர் மத்திய நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மூவாயிரத்து 727 பேர் தனிப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
நாகலகன்வீதி பிரதேசம் தனிப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுதுவெல்ல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்கள் இந்தப்
பிரதேசத்திற்கு வந்திருந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
இலங்கை வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இரவு வேளை வீடடின்
கூரையை கழற்றி திருட வீட்டுக்குள் இறங்கிய நபரை பிடித்த மக்கள்
மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு பின்னர் காவல்துறையினரிடம் அவரை பிடித்து கொடுத்தனர்
திருடன் வருகையை கண்டு கூச்சலிட்ட மக்கள் அயலவர்களும் தகவல் வழங்கி அழைத்துள்ளனர்
அவ்வளவு தான் குவிந்த மக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து வெறி அடங்கும் வரை தாக்கிய பின்னர் காவல்துறையில் ஒப்படைத்தனர்
திருடர்கள் யாக்கிரதை ,மக்கள் உசார் .

பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்
குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது
தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கையின் கடல் பகுதி எங்கும் விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் மூலம் சிறப்பு கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்து விடுவார்கள்
என்ற அச்சமும் ,அதன் ஊடாக வைரஸ் நோயானது இலங்கைக்குள் பரப்ப பட்டு
விடும் என அஞ்சும் இலங்கை இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது
சீனாவில் இருந்தே ரசியாவுக்கு இந்த நோயானது தரைவழியாக கடத்த பட்டது
என்ற கருத்து பரவும் நிலையில் இலங்கை அரசும் அதன் முன்னோடி தடுப்பு நகர்வை மேற்கொண்டுள்ளது .

கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஊரடங்கு
பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை மக்கள் நட மாட்டங்கள் மற்றும்
திருடர்கள் கைவரிசையை தடுப்பதற்கு இராணுவத்தின் பீல்ட் பைக் படை பிரிவினர்
சுற்று காவல் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர் ,இவர்களுடன் இராணுவம் ,மற்றும் ;
போலீசாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர
இன்று பத்து மணி நேரம் ஊரடங்கு தளர்த்த பட்ட பொழுதும் அவை மீள நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது








